Pages

Wednesday, September 7, 2011

இந்தியா படு தோல்வி - பிரபலங்களின் குமுறல்கள்


நானும் எத்தனை தடவை தான் தோத்ததுக்கு காரணம் சொல்றதுன்னு தோனி ரொம்பவும் வருத்தப் பட்டதால சில பிரபலங்கள் அவருக்குப் பதிலா பேட்டி குடுக்கறாங்க:

கமல்:
இதைத் தோல்வி என்று சொல்வதை விட படிப்பினை என்று சொல்வது மேலானது. இந்தப் படிப்பினை என் அஸ்திவாரத்துக்கு மேலும் உறுதி சேர்க்கும் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் கர்வமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்

ரஜினி:
கடமைச் செய் பலனை எதிர்பாராதே அப்படின்னு பகவான் கிருஷ்ணா சொல்லியிருக்கார். நாங்க அதைத் தான் செஞ்சுகிட்டு வர்றோம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி கிடைக்கறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கறது கிடைக்காது" - எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்சா

வைகோ:
இதை நான் விளையாட்டாகப் பார்க்கவில்லை. ஆங்கிலேயன் அன்று பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி நம்மை 200 வருடங்கள் அடிமைகளாக வைத்திருந்தான். இன்று அதே ஆங்கிலேயன் அவர்கள் அணியில் இந்தியர்களை சேர்த்துக்கொண்டு நமக்கெதிராக ஆட வைத்து நம்மை வீழ்த்தி விட்டான். இந்தியர்கள் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

வடிவேலு:
அவங்க கேவலமா ஆடுவாங்க, நாங்க ரொம்பக் கேவலமா ஆடுவோம், இதை எங்களுக்குள்ள ஒரு ஜாலியாவே எடுத்துக்குவோம். அதுவுமில்லாம யார் அவிங்க? எல்லாம் பெரியப்பா மவன் சித்தப்பா மவன் தானுங்களே? அண்ணன் தம்பி சண்டையெல்லாம் நீங்க பெரிசு பண்ணாதீங்கப்பு, என்ன, வழக்கமா அப்பர் லோயர் மிடில்னு அடிப்பாங்க, இந்த தடவை கழுத்தைச் சேர்த்து திருப்பி ஒட்டு மொத்த சோலிய முடிச்சிட்டாய்ங்க.

மன்மோகன் சிங்:
நான் தான் கேப்டன், அதுல சந்தேகமில்லை. அதுக்காக கொஹ்லி சரியா விளையாடலை, ஷர்மா சரியா விளையாடலைன்னா நான் பொறுப்பாக முடியாது. நாங்களும் ஜெயிக்கணும்னு தான் நினைக்கறோம், ஆனா எதையும் மேலிடத்துல பேசித் தான் முடிவு பண்ண முடியும். ஏன்னா இந்தியா ஒரு குடியரசு நாடு.

விஜய்:
என் ரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே............ஏய்............... யார்ரா அது?.............சைலன்ஸ்.........................

அஜித்:
எல்லா மேட்சும் விளையாடச் சொல்லி எங்களை சில அதிகாரிங்க வற்புறுத்தறாங்க. எங்களுக்கு விருப்பமில்லேன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க. அதன் விளைவு தான் அது................ஸாரி... இது.

அன்னா ஹசாரே:
வீரர்கள் அனைவரும் லோக்பால் பில்லுக்காக உண்ணா விரதம் இருந்ததுல டயர்ட் ஆயிட்டாங்க. அதனால தான் தோத்துட்டோம். ஏன்னா எங்களுக்கு நாடு தான் முக்கியம்.

விவேக்:
அடப்பாவிகளா, நானே அடிமைப்பெண் MGR மாதிரி ஓஞ்சு போய் உக்காந்திருக்கேன். நீங்க என்னாடான்னா பேப்பரும் பேனாவுமா வந்து பேட்டிக்கு நிக்கறீங்க. உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையாடா?

அப்துல் கலாம்:
இந்திய இளைஞர்கள் இந்தியா - 2020 பற்றி கனவு காண்கிறார்கள், அதனால இந்த மாதிரி சின்னச் சின்ன சறுக்கல்கள் ஏற்படுவது நார்மல் தான். இந்த இடத்தில திருக்குறள் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் - "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்"

நீயா நானா கோபிநாத்:
இதைப் பற்றி நான் மட்டுமே பேசினா அது ஒருதலைப்பட்சமா போயிடும். அதனால இங்க வந்திருக்கற நிருபர்கள் நீங்க ரெண்டு அணியா பிரிஞ்சு விவாதம் பண்ணினா ஒரு சுமுகமான தீர்வு கிடைக்கும் - தோல்விக்குக் காரணம் வீரர்களா அல்லது பிசிசிஐயா? ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்ந்து பேசுவோம் நீயா நானா...

சிம்பு:
என்கிட்டே இருக்கற கெட்ட பழக்கம் என்னன்னா எனக்கு பொய் பேசத் தெரியாது. சத்தியமா எனக்கு கிரிக்கெட் தெரியாதுங்க. அதான் உண்மை. நீங்க எப்படி வேணா நினைச்சுக்கோங்க. எனக்கு கிரிக்கெட் ரொம்ப புடிக்கும். ஆனா கிரிக்கெட்டுக்குத் தான் என்னைப் பிடிக்கலை. அது என் தப்பில்லையே?

பாரதிராஜா:
நாங்க தான் வேர்ல்ட் கப் வாங்கினோம்னு உலகத்துக்கே தெரியும். என்னைப் பார்த்து "Who is he?" அப்படின்னு கேக்கறான் இந்த பறங்கித் தலையன். i am completely disturbed.. அப்படியே ஸ்டன் ஆயிட்டேன்

விஜயகுமார்:
இருநூறு வருசமா நம்மளை ஆட்டிப் படிச்ச இந்த மேல்சாதிக்காரப் பசங்க கிரிக்கெட்லயும் நம்மளை அடக்கப் பாக்கறாங்க. அட, தாயும் சேலையும் ஒண்ணா இருந்தாலும் வாயும் வயிறும் வேறடா, இந்த நாட்டாமைக்கு எப்பவுமே நாயம் ஒண்ணுதாண்டா முக்கியம். தேவையில்லாம சின்னப் பசங்களை அடிச்சு காயம் பண்ணி ஊருக்கு அனுப்பிச்ச இவங்களை நான் 100 வருஷத்துக்கு ஊரை விட்டுத் தள்ளி வைக்கறேன், அவங்களோட யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாது, குறிப்பா நெட்சில கூட காஜ் போடக் கூடாது. மீறி யாராச்சும் விளையாடினா, அவங்களையும் தள்ளி வெச்சிடுவேன்

ஷங்கர்:
என்ன கேட்டீங்க? மிகப் பெரிய தோல்வியா? தோல்வி ஒண்ணும் பனியன் சைஸ் இல்லீங்க, விளைவைப் பாருங்க. எல்லாமே படு கேவலம் தான்.

கிரிக்கெட்டைக் கண்ட்ரோல் பண்ண பிசிசிஐ இருக்கு ஆனா அந்த பிசிசிஐயை யாரு கண்ட்ரோல் பண்றது - அப்படிங்கற ஒரு வரி தான் மொத்த மேட்டரே.

மக்கள் மேட்ச் பாக்க ஸ்டேடியம்ல டிக்கெட் வாங்கறாங்களே, அந்த காசுல தானே பிசிசிஐ வாழுது? அப்போ பிசிசிஐ ஏன் RTI சட்டத்துக்குள்ள வரக்கூடாதுன்னு நான் தட்டிக் கேக்கப் போய்த் தான் இன்னிக்கு இப்படி நிலைமை.

இந்தியா டெஸ்ட் விளையாடற நாடுகள்ல ஒரு முக்கியமான நாடு. அந்த அணியில டெஸ்ட் விளையாட யாரும் இல்லேன்னா அது டெஸ்ட் பார்மேட்டுக்கே ஆப்பு வைக்கற மாதிரி. அதைத் தான் பிசிசிஐ பண்ண நினைக்கறாங்க. அப்போ தானே T20 நல்லா வியாபாரம் ஆவும். ஏன்னா இன்ஸ்டன்ட் பைசாவாச்சே? இதுக்கு ஐசிசியும் உடந்தை. ஏன்னா சரத் பவார் தானே அங்கயும் தலைவர். இது இப்படியே போச்சுன்னா வருங்காலத்துல மங்காத்தாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் வித்யாசம் இல்லாம போயிடும்

பிசிசிஐ IPL franchise கிட்ட காசு வாங்கிட்டு எல்லா வீரர்களையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லச் சொல்லி இந்தியாவுக்குத் திரும்ப அழைச்சுக்கறாங்க. இது பத்தாதுன்னு ரவி ஷாஸ்த்ரி, கவாஸ்கர் மாதிரியான ஆளுங்களுக்கு மறைமுகமா காசு குடுத்து சரி கட்டி வெச்சிருக்காங்க.

இங்க எல்லாருக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியுதோ இல்லையோ, அதை வெச்சு அரசியல் பண்ணவும் காசு பண்ணவும் நல்ல தெரிஞ்சு வெச்சிருக்காங்க.

இன்னொரு அந்நியன் அவதாரம் எடுத்தாதான் அம்பி மாதிரி அப்பாவியா இருக்கற ரசிகர்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

Jayaraman
New Delhi

4 comments:

  1. super appu. especially the pieces of MMS, Vijay and Ajith.....

    ReplyDelete
  2. Romba nandri Giri, Webby & Arun. Idhu madhiri innum neriya matter namma blog la irukku. Padichu rasinga. Mudinja unga friends kkum refer pannunga.

    ReplyDelete