எந்த நேரத்தில் படையெடுப்புன்னு பேரு வெச்சோமோ தெரியல, புறமுதுகிட்டு ஓடி வராத குறையா நம்மாளுங்க அடி வாங்கறாங்க. அதனால தோனியின் ஒரு பேட்டியோட இதை முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம். (தோனியின் பேச்சு வடிவேலு பேசுவது போல் இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)
"வணக்கம் தோனி, ஆமாம், என்ன இப்படி அடி வாங்கியிருக்கீங்க?"
தோனி, "அட நீ வேறப்பா, அடியை நான் என்ன அமௌண்டைக் குடுத்தா வாங்கிட்டு வர்றேன், அடிக்காதீங்க அடிக்காதீங்கன்னு எல்லார் கால்லயும் விழுந்தேன். கால்ல விழுந்தது பயபக்கிகளுக்கு வசதியாப் போயிடுச்சு. வேணாம் வேணாம்னு சொன்னாக்கூட நிறுத்தாம நிறைச்சு அடிச்சு சாணியப் பூரா பிதுக்கி எடுத்துட்டாங்க
"இருந்தாலும் எப்படி சார் இப்படி அடி வாங்கறீங்க?"
"அதனால தானே எல்லாரும் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்றீங்க"
"அடுத்து எங்க சார் அடி வாங்கப் போறீங்க?"
தோனி, "என்னய்யா நக்கலா?"
"சாரி சார், அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"
தோனி, "அதான் ஒண்ணும் பண்ண முடியாதபடி சோலிய முடிச்சிட்டாங்களே, மிச்சத்தையும் அவங்களே முடிச்சிடுவாங்க"
"இலங்கையையாச்சும் ஜெயிப்போமா?"
தோனி, "ஜெயிக்கறதா? அவனவன் என்ன மூடுல இருக்கான்னு எவனுக்குத் தெரியுது. இனிமே எவன் உசிருக்கும் உத்திரவாதம் இல்லை. நாங்க இப்போ இருக்கற நிலைமைக்கு சென்னை ரைனோஸ் கூட ஆடினாலும் தோத்துடுவோம்"
"வேற யாருக்காச்சும் கேப்டன்சி குடுத்தா எனக்கு சந்தோசம்னு சொல்லியிருக்கீங்களே?"
தோனி,"அப்படி சொன்னாலாச்சும் எவனாச்சும் சிக்குவானான்னு பாக்கறேன். ஒருத்தனும் வரமாட்டேங்கறான். அவ்வளவு ஏங்க, காறித் துப்பினாலும் பரவால்லைன்னு ரிக்கி பாண்டிங் கிட்ட கூட கேட்டுப் பார்த்துட்டேன் . அந்த ஆள் கூட அரண்டு ஓடறான். என்ன செய்ய?"
"மூத்த வீரர்கள் ஓய்வு பெறப் போவதாக ஒரு செய்தி வந்திச்சே?"
"இந்த சீரிஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ஒரு பெருசு நான் போறேன்னு சொல்லிச்சு. ஆனா விட்டாங்களா நம்மாளுங்க? நல்ல வாயை நாற வாய் கெடுத்த மாதிரி டீம் பேரும் கெட்டு அந்தாள் பேரும் கெட்டுப் போச்சு. கபில்தேவ்லேர்ந்து கங்கூலி வரைக்கும் அவமானப் பட்டுத் தான் டீமை விட்டுப் போயிருக்காங்க"
"அதனால தான் நீங்க முன் கூட்டியே சொல்லிட்டீங்களா - 2015ல நான் விளையாடுவேன்னான்னு தெரியலைன்னு?"
" அட ஆமாங்க, இப்பவே கண்ணு படபடங்குது, கால் வெடவெடங்குது, தலை கிறுகிறுங்குது - எந்நேரமும் திக்குதிக்குன்னு இருக்கு. பேசாம எல்லாத்தையும் வித்துட்டு ராஞ்சி பக்கம் ஜாம்ஷெட்பூர் பக்கம் போயிடலாமான்னு பாக்கறேன்"
"டெஸ்ட் மேட்ச் உங்களுக்கு ஒத்து வரலைன்னு இப்பவாச்சும் உங்களுக்கு புரியுதா?"
"புரிஞ்சிடுச்சுப்பா புரிஞ்சிடுச்சுப்பா. ஆரம்பத்துலயே ஒருத்தன் சொன்னான், இது உனக்கு சரிப்படாதுன்னு. அப்பவே சுதாரிச்சிருந்தா இப்படி மூஞ்சி முகறையெல்லாம் வீங்கி ரத்த விளாறா ஆயிருக்காது. நம்மாளுங்க எவன் சொல் பேச்சு கேக்கறான். பட்டாத் தான் தெரியுது"
"சரி விடுங்க சார், இனிமேத்தான் உங்களுக்கு மேட்சே இல்லையே. இதை விட்டா IPL, அப்புறம் செப்டம்பர்ல தானே மேட்ச்?
தோனி, "அப்படியா? சொல்லவே இல்லை!?"
"என்ன சார், ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறீங்க?"
தோனி, "நம்ம கிட்ட எங்க தம்பி கலந்து பேசறாங்க? அவங்களா ஒரு புரோகிராம் போடறாங்க. போய் ஆடுங்கடான்னு டிக்கெட்டைக் கையில குடுத்து வண்டியில ஏத்திடறாங்க . போற இடத்துல எல்லாம் எதிரணி கிட்ட அடியையும் மீடியா கிட்ட கடியையும் வாங்கறதால என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது. எல்லா ஏரியாவும் மூத்திர சந்தாவே இருக்கு நமக்கு"
"ரிக்கி பாண்டிங்கும் கிளார்க்கும் உங்களுக்குப் பாராட்டு விழா நடத்தப் போறதா ஒரு பேச்சு அடிபடுதே?"
"அவங்க மட்டுமா? ஸ்ட்ராசும் குக்கும் கூட நமக்கு பாராட்டு விழா எடுக்கப் போறதா பேசிக்கறாங்க. எல்லாருக்கும் பாரபட்சம் பாக்காம உதவறது இந்தியனோட குணம். அந்த வகையில ஒரு இந்தியனா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. இன்னொரு விஷயம் தம்பி, எப்படி இங்கிலாந்து நம்ம கிட்ட தேடி வந்து அடி வாங்கிக்கிட்டுப் போனாங்களோ, அதே மாதிரி இவங்களும் இந்தியாவுக்கு வந்து எதிர்விருந்து செய்யறேன்னு சொல்லியிருக்காக"
"ஒரு நாள் தொடரிலாவது சச்சின் செஞ்சுரி அடிப்பாரா?"
தோனி,"நான் டீம் செஞ்சுரி அடிக்குமான்னு கவலையில இருக்கேன், நீ சச்சின் பத்தி கேக்கறே"
"என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?, நம்ம ODI டீம் ஸ்ட்ராங் தான் சார்"
தோனி,"இன்னுமாய்யா எங்களை நம்பறீங்க? இப்படித் தான் அவர் அடிப்பாரு, இவர் அடிப்பாருன்னு எல்லா மேட்சும் நம்பி இறங்கினேன். கடைசியில டங்குவாரு அறுந்தது தான் மிச்சம். அதுலயும் நான் வாங்கினது டபுள் கொட்டு"
"ஒரு வேளை நம்ம டீம் செலெக்ஷன் சரியில்லையோ?"
"டீமெல்லாம் நல்ல டீம் தான். நமக்கு நேரம் சரியில்லை. மைதானத்துல இறங்கினாலே செய்வினை வெச்ச மாதிரி கையும் காலும் ஒரு சைடா வாங்குது"
"உங்களுக்கு மேலிடத்திலேர்ந்து நிறைய ப்ரெஷர் இருக்குமே? உங்களை குடைஞ்சு எடுத்திருப்பாங்களே? "
"அதெல்லாம் ஒரு குடைச்சலும் கிடையாது. நடந்த அவமானத்துல அவங்களுக்கும் பங்கு இருக்குல்ல"
"அப்போ இனிமே டீம்ல நிறைய மாற்றம் வரும்னு சொல்லுங்க"
"இனிமே மாத்தி என்ன ஆவப்போவுது? அதான் காரியம் பண்ணி எள்ளும் தண்ணியும் தெளிச்சிட்டாங்களே"
"ஒரு மேட்ச்ல கூட ரோஹித் ஷர்மாவுக்கு நீங்க வாய்ப்பே குடுக்கலையே?"
"இது கேள்வி. அது என் கேட்ட நேரம் தம்பி, இந்த பாழாப் போன புத்திக்கு உறைக்கவே இல்லை"
"அது சரி, நீங்க ஏதோ திராட்சைத் தோட்டம் வாங்கியிருக்கீங்களாமே?"
"யோவ், சுத்திப் பார்க்கத் தான்யா போனேன், அதுக்குள்ள வாங்கிட்டேன்னு சொல்றீங்க"
"அதுக்கில்ல சார், நீங்க மால்யாவோட பிராந்திக்கு விளம்பரம் பண்றீங்கல்ல, அதான்"
"அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? வர வர ரொம்ப ஓவராப் போறீங்க"
"இந்த நிலைமையிலும் உங்களால எப்படி சார் விளம்பரப் படத்தில நடிக்க முடியுது?"
"அதெல்லாம் மூணு மாசம் முன்னாடி ஷூட்டிங் பண்ணினது. எவ்ளோ சொல்லியும் கேக்காம ஒளிபரப்ப ஆரம்பிச்சுட்டாங்க நன்னாறிப் பசங்க"
"அப்புறம் இன்னொரு கேள்வி.."
"யோவ் யோவ் யோவ், நிறுத்துய்யா, வந்ததிலேர்ந்து திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வியாக் கேட்டு கொல்றியே? நான் உன்னை கேக்கறேன், அடிபட்டவனைப் பாக்க வரும்போது ஒரு ஆரஞ்சு, ஆப்பிள், ஹார்லிக்ஸ் பாட்டில் இதெல்லாம் வாங்கிட்டு வரணும்னு தெரியாதா? மனுஷன்னா நெஞ்சுல கொஞ்சமாச்சும் ஈரம் வேணும்யா, எப்படா தப்பு பண்ணுவான்னு பாத்துக்கிட்டே இருக்க வேண்டியது, பண்ணினவுடனே மைக் செட்டைத் தூக்கிட்டு வந்துட வேண்டியது - இதெல்லாம் ஒரு பொழைப்பு"
"எங்களுக்கு அவமானமா இருக்குங்க. இந்த வீணாப் போன ஆட்டத்தைப் பாக்கறதுக்காக காலையில அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சு எழுந்திருக்கோம். தெரிஞ்சுக்கோங்க"
தோனி, "படிக்கற காலத்துல என்னிக்காச்சும் அஞ்சு மணிக்கு எழுந்திருக்கியா? உங்களை மாதிரி தெருவுக்கு நூறு கிறுக்குப் பயலுவ இருக்கறதால தான் வாரியம் காசு காசுன்னு கிக்கிறுப்பா அலையுது. இவனுங்க சம்பாரிக்கறதுக்கு நாங்க டபிள் ஷிப்ட் பண்ண வேண்டியதா இருக்கு. கொஞ்ச நாளைக்கு இந்த பாழாப் போன விளையாட்டைப் பாக்காம இருங்கய்யா. நம்ம டீமுக்கு நல்லது"
"அப்படியா?"
"அப்படித் தான்"
"அப்போ அடுத்த ரெண்டு T20 மற்றும் ODIல தோல்வி தான்னு சொல்லுங்க"
" ஸ்ஸ்ஸ்....அப்பா...., இப்பவே கண்ணை கட்டுதே! ஏன்யா,இன்னும் விளக்கமா வேற சொல்லணுமா? ஏற்கனவே மெல்போர்ன்ல மண்டை காஞ்சு போய், சிட்னில சட்னியாகி, பெர்த்ல பார்ட் பார்ட்டா பிரிஞ்சு அடிலைடுல ஆட்டம் கண்டு போய் ஓரஞ்சாரமா ஒதுங்கியிருக்கோம். தொடர்ந்து எட்டு டெஸ்ட் மேட்ச்ல உதை வாங்கி ஸ்பேர் பார்ட்ஸ் முழுக்க டேமேஜ் ஆகிக் கிடக்கு. இதுல இவங்களுக்கு T20ல வேற ஆடி ஜெயிக்கணுமாம். அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் ஜெயிக்க முடியாது - வரலாறு காணாத தோல்வின்னு இப்பவே தலைப்பு போட்டுக்கடா என் பில்லாக்கு"
Jayaraman
New Delhi