Showing posts with label Superstar Rajnikanth. Show all posts
Showing posts with label Superstar Rajnikanth. Show all posts

Thursday, December 15, 2011

சூப்பர் ஸ்டார்: 62ல் 26 - பிறந்த நாள் ஸ்பெஷல் (பாகம் 2)




தலைவருடனான நமது பெங்களூரு பயணம் தொடர்கிறது...

தலைவர், "புராணம் இதிகாசம் தொடங்கி இன்னிக்கு இருக்கற மாடர்ன் உலகம் வரைக்கும் எப்பவுமே இருக்கற ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வி "அறிவா இல்லே மனசா?, அஞ்ஞானமா இல்லே விஞ்ஞானமா? மனுஷனா இல்லே கடவுளா?" இதை பேஸ் பண்ணித் தான் கோச்சடையான் இருக்கப்போவுது”

நாம் சற்றே குழம்பிய நிலையில், "என்ன சார், இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க?"

"நீங்க ஒன் லைன் தானே கேட்டீங்க, அதான் சொன்னேன். See, இது ஒரு பிரம்மாண்டமான படம். எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டா அப்புறம் படம் பாக்கற இன்டெரெஸ்ட் போயிடும்"
"ஓகே சார்"

தலைவர், "அது சரி, இந்தப் படம் பத்திக் கேள்விப்பட்டதும் உங்களுக்கென்ன தோணிச்சு?"

"கிட்டத்தட்ட நீங்க சொன்ன மாதிரி தான். பட் இன்னும் நிறைய கற்பனை பண்ணியிருந்தோம்"

"எப்படி? கொஞ்சம் சொல்லுங்க"

"ஒரு பொக்கிஷம். ஆனா அதோட மதிப்பும் ஆபத்தும் தெரியாமலேயே ஒரு குடும்பம் அதை பாதுகாத்துக்கிட்டு வராங்க.அந்தப் பொக்கிஷத்தோட மதிப்பு தெரிஞ்ச, அதை வியாபாரமாக்கத் துடிக்கற ஒரு அறிவியல் க்ரூப்பும், அதோட வரலாறும் ஆபத்தும் தெரிஞ்ச ஒரு மாந்த்ரீக க்ரூப்பும் அந்தக் குடும்பத்துக்குள்ள கலக்கறாங்க. அதனால ஏற்படற திருப்பங்கள், பிரச்சினைகள் ஒரு பக்கம். இதுக்கு நடுவுல அந்தப் பொக்கிஷத்தையும் அந்தக் குடும்பத்தையும் ஒரு மாய மனிதன் சரியான நேரத்துல அப்பப்போ வந்து காக்கறார். ஒரு பிரம்மாண்டமான க்ளைமாக்ஸ். ஆனாலும் அந்தப் பொக்கிஷத்தை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்தாத்தான் அதோட ஆபத்து குறையும் - இங்கேர்ந்து ராணாவுக்கு லீட் எடுக்கலாம். அந்த மாய மனிதன், அறிவியல் க்ரூப், மாந்த்ரீக க்ரூப், அந்த அப்பாவிக் குடும்பம் - இதெல்லாம் பிளாஷ்பேக் மாதிரி வரிசையாக் காட்டாம முன்னும் பின்னுமாக் காட்டலாம்.

தலைவர், "நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் டெவெலப் பண்ணினா நல்லா வரும் போலிருக்கே, ரவி கிட்ட பேசறேன்"



“அந்த மாய மனிதன் தான் கோச்சடையான். அவருக்கும் ராணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு ஹிஸ்டாரிக் ட்ராக்ல மெயின் கதைக்கு இணையா கொண்டு போகலாம். கிட்டத்தட்ட மூணு கதை இணையா போவும் இந்தப் படத்துல. தமிழ சினிமாவுல யாரும் பண்ணாதது. இது வரைக்கும் வந்ததெல்லாம் மூணு கதையை ஒரு புள்ளியில இணைப்பாங்க. ஆனா எல்லாக் கதையம் தனித்தனியாத் தான் வரும். நம்ம சொல்றது கொஞ்சம் வித்யாசமா இருக்கும்"

"இண்டரெஸ்டிங், கண்டிப்பா ரவி கிட்ட பேசறேன்" அதற்குள் தலைவர் போன் ஒலிக்கிறது. காலர் டியூனாக தனுஷின் கொலைவெறி.

"ரவி, சொல்லுங்க, வந்துக்கிட்டே இருக்கேன், btw , வழியில சில புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. நமக்கு சில நல்ல பாயின்ட்சும் கிடைச்சிருக்கு. வி வில் டிஸ்கஸ்"

அவர் போன் பேசி முடித்ததும் நாம், "நீங்களும் கொலைவெறி ரசிகராயிட்டீங்களா?"

"ஐயோ அதை ஏன் கேக்கறீங்க, ரொம்ப நாள் கழிச்சு நான் ஒரு பாட்டை மறுபடி மறுபடி கேக்கறேன். தனுஷ்னால இல்லை, நிஜமாவே நல்ல சாங். வேர்ல்ட் பூரா பாப்புலராயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்"

"ஆமாம் சார். முதல்ல சாதாரணமாத் தான் ஸ்ப்ரெட் ஆச்சு. ஆனா தனுஷ் உங்க மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச பிறகு உங்களை மாதிரியே புல் ஸ்பீட்ல பரவிடுச்சு"

சிறிய வெட்கத்துடன், "எல்லாம் God's கிரேஸ்"



நாம் இறங்கும் இடம் வருவது தெரிந்தது. "நாங்க இறங்க வேண்டிய இடம் வரப்போவுது. கடைசியா ஒரு கேள்வி, இன்றைய தேதியில வாழ்க்கைன்னா என்ன சார்?"

"பெரிய பெரிய மகான்கள், ஆச்சார்யாக்கள் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. என்கிட்டே கேக்கறீங்களே?"

"கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நீங்க தான் சார் குரு. அதுவுமில்லாம அவங்க சொல்றது புரியாது. நீங்க சொல்றது புரியும்"

வழக்கமான யோசனைக்குப் பிறகு, " இன்னிக்கு, வாழ்க்கைன்னா, பீக் ட்ராபிக்ல கார் ஓட்டற மாதிரி. ரொம்ப ரிஸ்கி அண்ட் சாலெஞ்ஜிங். நீங்க ஒரு நல்ல டிரைவரா இருக்கணும், ரூல்ஸ் தெரிஞ்சிருக்கணும் - அதாவது ஆன்மா, புத்தி ரெண்டும் கிளீனா இருக்கணும். அப்புறம் வண்டி, அதாவது உங்க உடம்பு நல்ல கண்டீஷன்ல வெச்சுக்கணும் - மெயின்டைன் பண்ணி, தொடச்சு, ஆயில் போட்டு, சும்மா கன் மாதிரி. நீங்க ஓட்டும்போது பின்னாடிலேர்ந்து யாராச்சும் உங்க மேல மோதுவாங்க, ரோடு சரியிருக்காது, இல்லேன்னா உங்களுக்கு வழி தெரியாது - அதான் உங்க வாழ்க்கையில நடக்கற எதிர்பாராத சம்பவங்கள். அந்த மாதிரி நேரங்கள்ல தான் ஸ்டெடியா, நிலைகுலைஞ்சு போகாம பிரச்சினையை சமாளிச்சு, நாம் போக வேண்டிய இடத்துக்கு கரெக்டாப் போகணும். பென்ஸ்ல போறவன் பெரிய ஆள், மாருதில போறவன் சின்ன ஆள் - இதெல்லாம் நம்மளை நாமே அழிச்சிக்க உருவாக்கினது. கார் எதுவா இருந்தாலும் டயர்ல காத்தும் டாங்கில பெட்ரோலும் இருக்கற வரைக்கும் தான் மதிப்பு. இந்த உண்மையை நாம அடிக்கடி மறந்துடறோம். அது தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். எப்படியாவது சீக்கிரம் முன்னுக்குப் போயிடணும்னு சில பேர் போவாங்க. அவங்களை ட்ராபிக் இன்ஸ்பெக்டர், ஐ மீன் கடவுள் பாத்துப்பாரு."



எங்களை இறக்கி விட்டுவிட்டு சூப்பர் ஸ்டாரின் கார் விரைந்தது. இறங்கிய பிறகு தான் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மறந்து விட்டோம் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால் அவரை வாழ்த்த நமக்கு வயதில்லை, அவரை வணங்கினால் அவரை அன்னியப்படுத்துவது போல் ஆகிவிடும்.

"தலைவா" என்று வாய் அவரை அழைத்தாலும் மனம் அவரை ஒரு நண்பர் ஸ்தானத்தில் தான் வைத்திருகிறது. இப்பவும் துருதுருன்னு எனர்ஜெடிக்கா இருக்கறவரை எப்படிங்க பெரிசுன்னு சொல்ல முடியும்??

பின் குறிப்பு:
தலைவரின் அடுத்த வருட பிறந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதிலிருந்தே உற்சாகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. சும்மாவா? 12 -12 -12 ஆச்சே!!!

Jayaraman
New Delhi

Thursday, December 8, 2011

சூப்பர் ஸ்டார்: 62ல் 26 - பிறந்த நாள் ஸ்பெஷல் (பாகம் 1)



சென்னை - பெங்களூரு ஹைவே.

அலுவலக விஷயமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தோம். இளைப்பாறுவதற்காக ஒரு டாபாவில் வண்டியை நிறுத்திவிட்டு டீ மற்றும் பக்கோடாவுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தோம். இரண்டு பெஞ்சு தள்ளி ஒருவர் மிகவும் நிதானமாக, ஸ்டைலாக டீ அருந்திக் கொண்டிருப்பதை கவனித்தோம். வயதான தோற்றம் ஆனால் வசீகரப் பார்வை. மிகவும் பரிச்சயமானவர் போலத் தோன்றவே உற்று நோக்கினோம். அட... நம்ம சூப்பர் ஸ்டார். உடனே அவர் அருகே சென்று "என்ன சார், நீங்க எப்படி இங்க? கனவு மாதிரி இருக்கு சார்"

தனக்கே உரித்தான புன்முறுவலுடன், "பிரெண்ட்ஸ், சத்தம் போடாதீங்க, அப்புறம் கூட்டம் கூடிடும். வெளியே என் வண்டி பக்கத்துல போய் நில்லுங்க. அங்கே பேசுவோம்".

தலைவர் பேச்சை தட்ட முடியுமா? காரை நோக்கி நகர்ந்தோம்.

அவர் டீ குடித்து முடித்தவுடன் கடைப் பையன் க்ளாசை எடுக்க வந்தான். அவனைப் பார்த்து, "என்னடா, படிக்கறியா இல்லை முழு நேரமும் இங்கயே வேலை செய்யறியா?"

அந்தப் பையன், "இங்கே சாயந்திரம் தான் வேலை செய்யறேன். நீங்க சொன்ன மாதிரி காலையில பள்ளிக்கூடம் தான் சார் போறேன்,"

ரஜினி, 'வெரி குட். லக்ஷ்மி தேவை. ஆனா அதைப் பாதுகாக்க சரஸ்வதி ரொம்ப முக்கியம். புரிஞ்சுதா!"

அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவர் யாரிடமோ பதற்றமாக போனில் பேசுவதை கவனித்தோம். விசாரித்ததில் அவர் குடும்பத்தில் யாருக்கோ உடம்பு சரியில்லையென்றும் அவர் உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றும் அறிந்தோம். ஒரு பக்கம் டிரைவர், இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் - என்ன செய்வது என்று யோசித்துகொண்டிருந்த போது தலைவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் எங்கள் மூவரையும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். பிறகு, "என்ன எதாச்சும் பிரச்சினையா? சொல்லுங்க, முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்" என்றார். அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். சற்றும் தயங்காமல் "நான் பெங்களூர் தான் போறேன். நீங்க வேணும்னா என் கூடவே வாங்களேன், உங்களை மாதிரி யூத் கூட பேசினா எனக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்க டிரைவர் அவர் வீட்டுக்குப் போகட்டும் - என்ன சொல்றீங்க?"

அவனவன் தலைவரைப் பாக்கறதுக்கு வீட்டு வாசலில் தவம் இருக்கான், கரும்பு தின்னக் கூலியா? உடனே தலையாட்டினோம். பேச்சு காரினுள் தொடர்கிறது. அவரே ஆரம்பித்தார்.

"நீங்க என்ன பண்றீங்க?"

நாம், "முழுநேரமா கிரேசி கிரிக்கெட் லவ்வர்னு ஒரு ப்ளாக்ல கிரிக்கெட் மற்றும் பல விஷயங்களைப் பத்தி அப்பப்போ எதாச்சும் எழுதுவோம். பகுதி நேரமா ஒரு கம்பெனியில வேலை பாக்கறோம்.

ரஜினி, "ஒஹ்! நானும் சச்சினும் சந்திக்கற மாதிரி ஒரு ஆர்டிகிள் எழுதினீங்களே, அதுவா?"

"நீங்க படிச்சிருக்கீங்களா?"

"முழுசா படிக்க முடியல, பட் சத்யா எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி வெச்சிருக்கார். இட் வாஸ் குட். அப்பப்போ இதோ, (ஐபேடைக் காட்டுகிறார்) இதுல ஸ்டோர் பண்ணி வெச்சிடுவான். எப்போ டைம் கிடைக்குதோ படிப்பேன்.

"நீங்க நிஜமாவே லேட்டஸ்ட் தான் சார்"

"ஐயோ அதெல்லாம் இல்லை. பட் இது ஆபரேட் பண்றது எப்படின்னு என் பேரன் தான் எனக்கு சொல்லித் தரான். ஹி இஸ் தி லேட்டஸ்ட்"

"இப்போ நீங்க முழுசா குணமாயிட்டீங்களா சார்? நீங்க ஆஸ்பத்திரியில இருக்கறப்போ என்னல்லாமோ வதந்தி SMS அனுப்பிச்சு கலவரம் பண்ணிட்டாங்க"

சிரித்துக் கொண்டே, "யா, அது ரொம்ப funny. In fact, நான் செத்துப் போயிட்டேன்னு எனக்கே ஒருத்தர் மெசெஜ் அனுப்பியிருந்தார், இது எப்படி இருக்கு? ஹஹஹா." அவரது ஸ்டைலான சிரிப்புக்குப் பிறகு அவரே தொடர்கிறார்.



"ஜோக்ஸ் அபார்ட், எந்திரன் வெற்றிக்கு வைத்த திருஷ்டிப் பொட்டுன்னு தான் அதை எடுத்துக்கணும். பட் இப்போ நான் முழுசா fit ஆயிட்டேன். கோச்சடையான்ல ரெண்டு மூணு ஹீரோயின் இருந்தாக் கூட டூயட் பாட நான் ரெடி. ஹஹஹா" - மீண்டும் அதே ஸ்டைல் சிரிப்பு.

உங்ககிட்ட நிறைய விஷயங்களைப் பற்றிக் கேக்கணும். கேக்கலாமா?

"ஷ்யூர் ஷ்யூர்"

ராணா ஏன் சார் டிராப் பண்ணிட்டீங்க?"

"சிறிது நேரம் யோசிக்கிறார். பிறகு தொடர்கிறார் "சொல்லப் போனா அது கொஞ்சம் பெரிய கதை - ஹனுமான் வால் மாதிரி. ஆக்சுவலா சுல்தான் எவ்வளவோ பிரமாதமா எடுத்தும் திருப்தி இல்லை. டயத்துக்கு முடியாம ரொம்ப இழுத்தடிச்சிடிச்சு. ரொம்ப கேப் விழுந்திடுமோன்னு நினைச்சு ராணா ஆரம்பிச்சோம். பட் முதல் நாளே எனக்கு உடம்பு சரியில்லாம போய், - உங்களுக்குத் தான் மீதிக்கதை தெரியுமே? அப்புறம், சிங்கப்பூர்ல நான் இருக்கும்போது ஒரு நாள் ரவி போன் பண்ணினார். "என்ன சார், முதல் நாளே இப்படி ஆயிடுச்சு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து எவ்ளோ ஹிட் குடுத்திருக்கோம், எப்பவும் இப்படி ஆனதில்ல, இது ஏதோ கடவுள் நமக்கு குடுக்கற எச்சரிக்கை மணி மாதிரி இருக்கு, நாம் இதை ஓரமா வெச்சுட்டு வேற ஒரு கதை பண்ணினா என்ன" அப்படின்னு சொன்னாரு. எனக்கு அது சரின்னு பட்டிச்சு. நீங்க ரெடி பண்ணி வைங்க. நான் வந்ததும் ஒரு ரஷ் பார்த்துட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொன்னேன். சென்னை வந்த பிறகு ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். கோச்சடையான் வொர்க் அவுட் ஆகும்னு கான்பிடென்ட்டா தோணிச்சு. ஸ்டார்ட் பண்ணிட்டோம். பட் ஆண்டவன் ஆசீர்வாதத்தோட ராணா கண்டிப்பா வரும்"

"எங்களுக்கென்னமோ அந்த தீபிகா படுகோனே ராசி சரியில்லையோன்னு தோணுது சார். பாருங்களேன், யுவராஜ் கூட சுத்தினாங்க, அவர் அழிஞ்சு போயிட்டார், ஹிந்தி நடிகர் ரன்பீர் கூட இருந்தாங்க. அவரும் ஏறக்குறைய அழியற மாதிரி ஆயிட்டார். அப்புறம் சித்தார்த் மால்யா கூட சேர்ந்தாங்க, கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் கடன்ல மூழ்கிடுச்சு. இப்போ ராணாவுல உங்க கூட அவங்க நடிக்கறதா இருந்திச்சு, நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிட்டீங்க. பார்த்து சார், ஜாக்கிரதையா இருங்க"

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, "இந்த மாதிரி நீங்க பேசலாம், நான் பேச முடியாது. அதுவுமில்லாம நல்ல நேரம் கெட்ட நேரம்னு எல்லாருக்கும் அவன் (வானை நோக்கி கை காட்டுகிறார்) டைம் டேபிள் போட்டு வெச்சிருக்கான். அது இவரால வந்திச்சு அவரால வந்திச்சுன்னு சொல்றதெல்லாம் சரியில்ல. மனுஷன் வெறும் கருவி தானே. சுவிட்ச் அவர் (கை மறுபடியும் மேலே) கையில இருக்கு"


"சரியா சொன்னீங்க சார். சரி சார், இப்போ தமிழ் சினிமா எப்படி இருக்குன்னு நினைக்கறீங்க?"

"ரொம்ப நல்லா இருக்கு. நிறைய நியூ faces, நியூ டைரக்டர்ஸ், ஸ்டோரி,..... நல்லாருக்கு. மைனா, ஆடுகளம், இப்போ ஏழாம் அறிவு - சந்தோஷமா இருக்கு"

"உங்களுக்கு அந்த மாதிரி எளிமையான படம் பண்ணனும்னு ஆசை இருக்கா சார்?"

"நிறைய இருக்கு, ஆனா எப்போன்னு தெரியல"

"இது எல்லாரும் கேக்கற கேள்வி தான். உங்களுக்கப்புறம் அடுத்த சூப்பர் ஸ்டார்னு நீங்க யாரை சார் நினைக்கறீங்க?"

"அதெல்லாம் மக்கள் நம்ம மேல இருக்கற அன்புல குடுக்கறது. வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது, போனாலும் தடுக்க முடியாது"

"சரி, கமலுக்கு அடுத்தபடியா யார் இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?"

"அதை கமல்ஜி தான் சொல்லணும். ஹஹஹா"

"இருந்தாலும் ஒரு சின்ன கெஸ்ஸ், சூர்யா, விக்ரம்..?

"ஸீ, சூர்யா விக்ரம் இவங்கல்லாம் அழகான எழுத்து, ஐ மீன் வேர்ட்ஸ். பட் கமல் வந்து.... என்ன சொல்றது...ஒரு டிக்ஷனரி மாதிரி. இந்த எல்லா எழுத்தும் அந்த டிக்ஷனரிக்குள்ள நீங்க பாக்கலாம். பட் நீங்க அவர்கிட்ட இந்த கேள்வி கேட்டீங்கன்னா அவர் சிவாஜியை டிக்ஷனரின்னு சொல்வார். தட் இஸ் கமல்"

முதல்லயே கேக்கணும்னு நினைச்சோம், நீங்க எப்படி சார் இந்தப் பக்கம்? பெங்களூருல கோச்சடையான் ஷூட்டிங்கா?"

"இல்ல, ஸ்டோரி டிஸ்கஷன்."

"படம் எப்படி சார் வந்துக்கிட்டிருக்கு?"

" இன்னும் முழு ஸ்கிரிப்ட் ரெடி ஆகல. பட் கான்செப்ட் நல்லா டெவெலப் ஆகியிருக்கு. நிறைய டெக்னிகல் விஷயங்கள் இருக்கறதால டைரக்டர் ஷங்கர் கிட்ட கூட நான் இதைப் பத்திப் பேசினேன். பிகாஸ் ஹி இஸ் வெரி குட் அட் இட் யு நோ. ரொம்ப பிரமாதமா இருக்கு சார். எந்திரன் பார்ட் 2 மாதிரியே இருக்குன்னு சொன்னார். ஐ ஆம் ஹாப்பி."



"எந்த மாதிரி கதையா இருக்கும் சார்?"

"எந்த மாதிரியா இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?"

"வித்யாசமா, வெரைட்டியா, லேட்டஸ்டா.."

"எல்லாமே உண்டு. லேட்டஸ்டா இருக்கும். ஆனா லேட் ஆகாது. "

"3Dல எடுக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?"

அதான் சொன்னேனே, லேட்டஸ்டா இருக்கும்னு, சினிமா நிறைய வளர்ந்திடுச்சு. முன்னாடி மாதிரி பூஜை போட்டோம், ஏவிஎம் இல்லேன்னா விஜயா ஸ்டூடியோவுல செட் போட்டோம்னு எடுக்கற சமாச்சாரம் இல்லை. சினிமா ஒரு டெக்னாலஜி மாதிரி ஆயிடுச்சு.

"இருந்தாலும் கதை ஒன் லைன் சொல்ல முடியுமா?

"சொல்லிட்டாப் போச்சு"

சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வரி..... அடுத்த வாரம்.

Jayaraman
New Delhi

Thursday, July 28, 2011

சூப்பர் ஸ்டார் - சச்சின் அதிரடி சந்திப்பு



சாதனை மன்னன் ஸ்டைல் மன்னனை சந்தித்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல்:

வணக்கம் ரஜினிஜி,

ஓ, வாங்க வாங்க மிஸ்டர் கிரிக்கெட்.

சச்சின் முகம் சிவக்கிறது, அதே நேரத்தில் மெல்லிய சிரிப்பும்

(இருவரும் ஆரத் தழுவிக்கொள்கின்றனர், பின்னர் இருவரும் அமர்ந்து உரையாடத் துவங்குகின்றனர்)

சச்சின் துவங்குகிறார், " இப்போ எப்படி இருக்கீங்க?"

"சொல்றேன், அதுக்கு முன்னாடி என்ன சாப்பிடறீங்க?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்"

"நோ நோ, யு ஆர் மை கெஸ்ட், மணி, இங்க வாங்க"

"சார்"

"ரெண்டு கிரீன் டீ, அப்புறம் கொஞ்சம் dry fruits"

"ஓகே சார்"

"நல்லா இருக்கேன், நிறைய இம்ப்ரூவ் ஆயிருக்கேன், ஆண்டவன் மனசு வெச்சா அடுத்த மாசத்துலேர்ந்து ராணா ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடுவேன்"

ஆண்டவன் மனசு வெச்சாவா? அப்போ உன் வாழ்க்கை உன் கையில்னு சொன்னீங்களே? அது?

இப்பவும் அதான் சொல்றேன், நம்ம வாழ்க்கை நம்ம கையில, ஆனா நாம ஆண்டவன் கையில

நல்லாத்தான் பேசறீங்க

"இந்தியனாச்சே, ஹஹஹஹா"

டீ வருகிறது, இருவரும் அருந்துகின்றனர்

உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?

Definitely, வேர்ல்ட் கப் பைனல்ஸ் மும்பைல பார்த்தேனே! அமேசிங் மேட்ச்!!

சச்சின் சிரித்துக்கொண்டே, "நீங்க இருந்ததால தான் நாங்க ஜெயிச்சோம்னு வேற நிறைய பேர் சொன்னாங்க"

"ஹஹஹா" "இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்"

இந்தியன் கிரிக்கெட்ல உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?

"சேவாக், டிராவிட், ம்ம்ம்....தோனி - ஹி இஸ் கிரிக்கெட் சாணக்யா"

"அப்போ என்னைப் பிடிக்காதா?"

"ஐயோ வம்புல மாட்டி விட்டுடாதீங்க, நான் சொன்னது உங்களைத் தவிர, I like all players, young blood like raina, ashwin, ..

எல்லாம் csk ஆளுங்களா சொல்றீங்க?"

தமிழனாச்சே, ஹஹஹஹா"

நீங்க என் படம் ஏதாவது பார்த்திருக்கீங்களா?

of course, எந்திரன். எந்திரன் மாதிரி ஒரு வித்யாசமான படம் பண்ணணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?

வித்யாசமான படமான்னு எனக்குத் தெரியல, ஏன்னா, அதுல நான் வழக்கமா பண்ற எல்லா சமாச்சாரங்களும் இருக்கு, பட் ரோபோ பண்ற மாதிரி இருக்கும்.

அதான் ஏன்னு கேக்கறேன்? ரஜினியாவே பண்ணியிருக்கலாமே?

See, என்னோட தீவிர ரசிகர்கள்னு பார்த்தீங்கன்னா அவங்க ஒரு 30 -40 வயசு க்ரூப்ல இருப்பாங்க. அதுவும் family people . நான் இன்னும் சினிமாவுல நிலைச்சு இருக்கணும்னா புதுசா ரசிகர்களை உருவாக்கணும். அடுத்த தலைமுறையை டார்கெட் பண்ணணும். அவங்களுக்கு புடிச்ச மாதிரி, புரியற மாதிரி படம் பண்ணணும். இதை ஒரு முக்கியமான காரணமா சொல்வேன், personally speaking . இப்போ நான் பண்ணப் போற ராணாவில் கூட இந்த மாதிரி ஐட்டம்ஸ் இருக்கு

ரஜினி கேட்கிறார் "நீங்க எப்படி இந்த வயதிலும் அதே திறமையோட விளையாடறீங்க?"

"சார், எனக்கு 38 வயசு தான் ஆவுது"

"பட் இந்த வயசில கிரௌன்ட்ல போய் நின்னு ஒரு நாள் முழுக்க விளையாடறதுன்னா - இட்ஸ் நாட் ஜோக்"

"நான் இஷ்டப்பட்டு பண்றேன் சார், வேலை செய்யறவனுக்குத் தான் retirement , நான் கிரிக்கெட்டை வேலையா செய்யறதில்லை. Moreover, I take lot of inspiration from everyone. Even you have inspired me a lot.

"நானா? எப்படி?"

உங்களோட ஹீரோயினா நடிச்ச நடிகைங்க எல்லாம் உங்களுக்கு அக்காவா, தங்கச்சியா, அண்ணியா, ஏன், அம்மாவா கூட நடிச்சிட்டாங்க, ஆனா நீங்க மட்டும் இன்னும் ஹீரோவாவே நடிக்கறீங்க. அது கூட ஒரு இன்ஸ்பிரேஷன் தான்.

"well said well said" ரஜினி மெய் சிலிர்க்கிறார். ""புத்தி, knowledge, அதான்,... உண்மையான சொத்து, சந்தோஷம் எல்லாமே"

நீங்க கூடத் தான் இந்த வயதிலும் ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய்னு ஆட்டம் போடறீங்க

"ஐயோ, 60 வயசுல சினிமாவுல ஆட்டம் போடலாம், நிஜத்துல தான் ஆட்டம் போடக் கூடாது."

"இருந்தாலும் உங்களுக்கு ஒரு மாதிரியா இருக்காதா?"

"அமித்ஜிக்கும் அபிஷேக் பச்சனுக்கும் தான் ஒரு மாதிரியா இருக்கும், நமக்கென்ன போச்சு? ஆ... இது எப்படி இருக்கு!"

நீங்க யாரை போட்டியாளரா நினைக்கறீங்க?

" என்னைத் தான் "

"எப்படி"

என்னுடைய முந்தைய படங்கள் தான் எனக்கு போட்டி. முன்னாடியெல்லாம் நான் வாழ்க்கையில எதாச்சும் சாதிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு வெற்றிப் படங்கள் குடுத்தேன், இப்போ நான் ஒரு வியாபாரப் பொருளா ஆயிட்டேன், என்னை நம்பி பெரிய வர்த்தகமே நடக்குது, சினிமாவுல ஈடுபட்டிருக்கற பல குடும்பங்கள் பொழைக்குது, அதுக்காக நான் ஹிட் குடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். ராணா எந்திரனை விட பெரிசா வந்தாத் தான் மரியாதை, புகழ், பணம் எல்லாமே, இல்லேன்னா வீட்டுக்குப் போக சொல்லிடுவாங்க

உங்களைக் கூடவா?

உங்களையும் சேர்த்து தான் சொல்றேன், நீங்களும் நானும் கிட்டத் தட்ட ஒரே கேஸ் தான். நீங்க இப்போ இங்கிலாந்து டூர்ல சரியா விளையாடலைன்னா உங்க மதிப்பு குறைய வாய்ப்பு இருக்கு.

ஆமாங்க, ஏற்கனவே ரொம்ப ஓவர் பில்ட் அப் பண்ணி முதல் டெஸ்ட் சொதப்பிட்டாங்க. எனக்கு வேற உடம்பு சரியில்லாம போயிடுச்சு

மேற்கொண்டு கிரிக்கெட்ல என்ன சாதிக்கலாம்னு இருக்கீங்க? எந்த record எடுத்துப் பார்த்தாலும் உங்க பேர் இருக்கு.

சாதனைகள் தானா அமையுது, நானா யோசிச்சு எதுவும் செய்யறதில்ல. எனக்குத் தெரிஞ்சது கிரிக்கெட் ஒண்ணு தான். முடிஞ்ச வரைக்கும் நல்லபடியா கிரிக்கெட் விளையாடிட்டு நல்ல பேரோட போயிடணும்.

நான் கூட இப்ப நிறைய படங்கள் பண்றதில்ல, வருஷத்துக்கு மூணு படம் பண்ணிக்கிட்டிருந்தேன், இப்போ 3 வருஷத்துக்கு ஒரு படம் பண்றேன். நமக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதே!!!

பாலிவுட்ல யார் ஸ்டார்னு பெரிய போட்டியே நடக்குது. பட் நீங்க எப்படி இவ்ளோ வருஷமா சூப்பர் ஸ்டாரா இருக்கீங்க? எனக்காச்சும் அடுத்த தலைமுறை பிரஷர் இருக்கு, உங்களுக்கு அது கூட இல்ல. உங்க படம் வருதுன்னா முன்னாடி ரெண்டு மாசம், பின்னாடி ரெண்டு மாசம் எந்தப் படமும் ரிலீஸ் ஆகறதில்ல.

"எல்லாம் ஆண்டவன் அருள், கொஞ்சம் உழைப்பு, நம்பிக்கை, அவ்ளோ தான், கடவுள் நம்பிக்கை இல்லேன்னா அதிர்ஷ்டம்னு வெச்சுக்கலாம்

"என்ன சார், வடா பாவ்க்கு ரெசிபி சொல்ற மாதிரி சொல்றீங்க"

"வேறென்னங்க சொல்ல, உங்களை மாதிரி கடுமையா பயிற்சி பண்ணி, ,... அது என்ன சொல்றது, அப்டியே ஒரு தவம் மாதிரி எல்லாம் செஞ்சு நான் வரலை. , நான் பாட்டுக்கு ஜாலியா விசிலடிச்சிக்கிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நல்ல நண்பர் அறிவுரை சொன்னாரு, சினிமாவுல முயற்சி செஞ்சேன், சான்ஸ் கிடைச்சுது, அப்ப கூட நான் இவ்ளோ பெரிசா வரணும்னு எல்லாம் யோசிச்சதே கிடையாது. தினசரி கொஞ்சம் பீருக்கும் அப்புறம் கொஞ்சம் சோறுக்கும் வழி பொறந்தாப் போதும்னு தான் இருந்தேன். ஆனா இன்னிக்கு உலக அழகி என் கூட நடிக்கற அளவுக்கு ஒரு பெரிய நடிகனா வளர்ந்திருக்கேன். நான் இதுவரைக்கும் சொல்லிக்கற மாதிரி எந்த அவார்டும் வாங்கினது இல்ல, ஒரு நடிகனுக்குண்டான எந்த தகுதியும் என்கிட்டே கிடையாது. அப்படின்னா இது கடவுள் அருள் தானே?

அப்போ மனுஷனுக்கு லக் முக்கியம்னு சொல்றீங்களா?

கண்டிப்பா. நீங்களே பாக்கலாம், லார்ட்ஸ்ல சச்சின் செஞ்சுரி அடிக்கலைன்னு தான் பேசறாங்களே தவிர டிராவிட் அடிச்ச செஞ்சுரியப் பத்தி யாரும் பேசறதில்ல. என்ன சொல்ல வர்றேன்னா உங்க அளவுக்கு அவருக்கு மாஸ் கிடைக்கல.Though he is as qualified as you are .

Rajini,” BTW, உங்களுக்கு ஆன்மீகத்துல எப்படி ஈடுபாடு வந்தது?”

எல்லாம் சின்ன வயசுப் பழக்கம் தான். அது ஒரு சப்போர்ட், நமக்கு நாமே மோடிவேட் பண்ணிக்கற மாதிரி.

பட் ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லணும், நீங்க ஆடும் போது நாடே உங்களுக்காக வேண்டுது. அது ரொம்பப் பெரிய விஷயம், In fact , நிறைய தடவை பொறமை கூட பட்டிருக்கேன், என்னதான் பெரிய ஸ்டாரா இருந்தாலும் இப்படி ஒரு கெளரவம் எனக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.

"நீங்க ரொம்ப புகழறீங்க"

No No, Its true, yeaaah,

சரி சார், நான் கிளம்பறேன், ஆல் தி பெஸ்ட், நெக்ஸ்ட் டைம் நீங்க ஹிமாலயாஸ் போகும்போது சொல்லுங்க சார், நானும் உங்க கூட வரேன், எனக்கும் அந்த அனுபவம் வேணும்

கண்டிப்பா கண்டிப்பா, ஒரு நிமிஷம் சச்சின், (ரஜினி அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதை சச்சினுக்கு அளிக்கிறார்). "இது பகவத் கீதை பற்றிய ஒரு புதிய புத்தகம், சின்மயானந்தா எழுதியது, நீங்க கண்டிப்பா படிக்கணும். you will definitely feel the essence of god. its a must read book.

Thank you very much, வர்றேன் சார்,

Rajini, "எப்ப ரிடையர் ஆகலாம்னு இருக்கீங்க?"

சச்சின் திரும்பி, நீங்க எப்ப அரசியலுக்கு வரலாம்னு இருக்கீங்க?

மறுபடியும் trademark சிரிப்பு.


Jayaraman
New Delhi
Related Posts Plugin for WordPress, Blogger...