Saturday, July 21, 2012

டிஜிட்டல் பக்தி!!!




கோவிலுக்குப் போய் ரொம்ப நாளாச்சே என்றெண்ணிய குமார் தன் நண்பன் சுவாமிநாதனை அழைத்துக் கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த புகழ்பெற்ற கோவிலுக்குச் சென்றான். கோவிலுக்குச் சென்ற அவனுக்கு மகா ஆச்சர்யம். நாதனைப் பார்த்துக் கேட்டான், "என்ன மச்சி, கோவில் வாசலில் ஒரு கடை கண்ணி ஒண்ணுத்தையும் காணோம்?"

நாதன் நக்கலாக, "நீ கோவிலுக்கு வந்து பல வருஷம் ஆச்சு போலிருக்கு. அதான் லேட்டஸ்ட் நிலவரம் தெரியல. உள்ள வந்து பாரு" இருவரும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழையும்போதே ஒரு செக்யூரிட்டி செக் வருகிறது.

குமார், "அடேங்கப்பா, இங்கேர்ந்தே சோதனையா?"

நாதன், "இது பாதுகாப்பு சோதனை இல்ல. டிரஸ் கோட் சோதனை"

குமார், "டிரஸ் கோட்?"

நாதன், "பின்ன, ஒரு பப்புக்குப் போறதா இருந்தாக் கூட டிரஸ் கோட் இருக்கு. அது படி போகலேன்னா வாசல்ல இருக்கறவன் உள்ள விடமாட்டான். அப்படி இருக்கும்போது கோவில் புனிதமான இடம். இங்க இருக்கக் கூடாதா?

குமார் நக்கலாக, "ஏம்பா, கோவிலும் பப்பும் ஒண்ணா? இது மனசு சம்பந்தப்பட்ட மேட்டர்."

நாதன், "அப்படியா? நாளைக்கு உன் ஆருயிர் நண்பன் ஒருத்தன் பார்ட்டி வெச்சிருக்கான்ல. அதுக்கு பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு போ"

குமார் "என்னப்பா நீ, அதெல்லாம் கட்டிக்கிட்டு பார்ட்டிக்கு எப்படிப்பா?"

நாதன், "முடியாதுல்ல, அது மாதிரி தான் இங்கயும். அதுக்குத் தான் உன்னை வரும்போதே வேஷ்டி கட்டிக்கிட்டு வரச் சொன்னேன், நட"



முதலில் ஒரு கவுண்டரில் வரிசையில் நின்றனர். குமார், "இங்க எதுக்குடா நிக்கறோம்?"

நாதன், "பொறுமையா இருடா"

இவர்கள் முறை வந்தது. கவுண்டரில் இருந்தவர் கேட்டார் "எவ்வளவுக்கு சார் கார்ட் வேணும்?'

"500 ரூபாய்க்கு குடுங்க" நாதன் கார்டை ஸ்வைப் செய்தவாறே கவுண்டரில் இருந்தவரிடம், "சைட் வேலை செய்யல போலிருக்கு. ஆன்லைன்ல பே பண்ணப் பார்த்தேன். ஆனா ஆகலை"

கவுண்டரில் இருந்தவர், "ஆமாம் சார், காலையில் இருந்தே Payment Gateway Connectivity சரியா இல்லை. அதான். என்ன போன் சார் வெச்சிருக்கீங்க? டச் ஸ்க்ரீன் தானே?"

"ஆமாம்"

"குடுங்க, அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணிடறேன்"

குமார் ஆச்சர்யமாக "என்னடா நடக்குது இங்க?"

நாதன், "அது மச்சி, முன்னாடியெல்லாம் கோவிலுக்கு வர்றதா இருந்தா சில்லறையை வாரிக்கிட்டு வரணும். நோட்டாப் போடறதுக்கும் நமக்கு மனசு வராது. அதனால தான் இந்த கார்ட் சிஸ்டம். இப்ப பெரிய பெரிய Food Court போனா முன்னாடியே பணத்தைக் கட்டிட்டு அப்புறம் கடை கடையாப் போய் நமக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடறோம்ல, அது மாதிரி தான் இதுவும்"

கவுண்டரில் இருந்தவர், "உள்ள எங்க pay பண்றதா இருந்தாலும் அங்க இருக்கிற ரீடர் முன்னாடி இந்த அப்ளிகேஷனை காட்டினா போதும். பணம் டிடக்ட் ஆயிடும்" குமார் வாய் பிளந்தவாறே நாதனைத் தொடர்ந்தான்



நடைபாதையின் இருபுறமும் கடைகள் வரிசையாக இருந்தன. ஒரு கடைக்குள் நுழைகின்றனர். கடைக்காரர், "வாங்க சார் என்ன வேணும்?"

"ஒரு அர்ச்சனை, மாலை"

கடைக்காரர், "அர்ச்சனையில என்ன சார் டாப்பிங் வேணும்?"

குமார் திடுக்கிட்டு, "யோவ், பிசாவா ஆர்டர் பண்றோம்? டாப்பிங் பத்திப் பேசறே"

கடைக்காரார் சிரித்தவாறே, "சார் கோவில் பக்கம் ரொம்ப வருஷம் கழிச்சு வர்றாப் போல தெரியுதே?"

நாதன், "ஆமாங்க, வாழைப்பழத்துக்குப் பதிலா ஆப்பிள் போட்டுக்கோங்க. தேங்காய் வேண்டாம். எங்க வீட்ல எல்லாருக்கும் கொலஸ்டிரால். அதுக்குப் பதிலா இளநீர் குடுத்துடுங்க. விநாயகருக்கு மட்டும் ரெண்டு தேங்காய் வாங்கிக்கறேன். அதை நீங்க நேரா அன்னதானத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுங்க.

குமார் இடைமறித்து, "விநாயகருக்கு தேங்காய் விடல் போடணும்யா, நீ என்னடான்னா அன்னதானத்துக்கு அனுப்பச் சொல்றே?"

கடைக்காரர், "தேங்காயை உடைச்சா அதிலேர்ந்து சில்லு தெறிச்சு வெளிய விழுது. யார் காலிலாவது குத்தும். அது போக அதைப் பொறுக்கறதுக்கு ஒரு கூட்டம் முண்டியடிக்கும். இதெல்லாம் தேவையா? அதான் மாத்திட்டோம்.

கடைக்காரர் எல்லாவற்றையும் கணினியில் தட்டுகிறார்.

நாதன் ரீடர் முன்னால் போனைக் காட்டி பணம் செலுத்திவிட்டுப் புறப்பட்டான்.

குமார், "ஏம்பா, காசு குடுத்தியே, பொருள் வாங்கலை?"

கடைக்காரர், "ஸ்வைப் பண்ணும்போதே உங்க ஆர்டர் நம்பர் உள்ளே போயிடுச்சு சார். அங்க எல்லாம் தருவாங்க.."

நாதன், "ஆமாம்டா, போன்ல மெசேஜ் வந்திடுச்சு"

குமார், "யப்பா, டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்"



முதலில் விநாயகர் சன்னதி.

குமார், "நல்ல வேளை, இவரை எதுவும் மாத்தலை, அப்படியே தான் வெச்சிருக்காங்க."

இருவரும் விநாயகரை கும்பிட்டுவிட்டு நகர்கின்றனர். விநாயகர் சன்னதியில் இருந்த ரீடர் முன்பு செல்லைக் காட்டி ஐந்து ரூபாய் காணிக்கை செலுத்தினான்.

குமார், "ஓஹோ, உண்டியலுக்குப் பதிலா ரீடரா? கலக்கறீங்கப்பா. ஆமாம், எங்கப்பா விபூதி?"

நாதன், "ஒரே பாக்கெட் விபூதியை வேற வேற கிண்ணத்தில வெச்சு பிரசாதம்னு ஏமாத்தறீங்கன்னு கேலி பேசறீங்க. அதுவுமில்லாம பாதியை எடுத்துட்டு மீதியை சுவற்றிலோ இல்லை கீழயோ கொட்டறீங்க. எல்லாம் வேஸ்ட் ஆவுது. அதனால ஒரே ஒரு இடத்துல மட்டும் தான் இந்த சமாச்சாரம் கிடைக்கும்."

குமார், "அட, இத பார்றா"

வரிசையாக எல்லாக் குட்டி தெய்வங்களை தரிசித்த வண்ணம் இருவரும் செல்கின்றனர். பிரகார சீலிங் மற்றும் சுவர்களில் சித்திரம் மற்றும் சிலைகளுக்குப் பதிலாக LED திரைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அவற்றில் கடவுள்கள் மற்றும் அவர்களின் அடியார்களின் படங்களும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பும் விளம்பரங்கள் போல் சில வினாடிகள் நின்று பிறகு மாறிக் கொண்டிருக்கின்றன.

குமார், "என்னய்யா இது. சிலைகள் தானே கோவிலுக்கு அழகு. இங்க என்னடான்னா ஒரே LED திரைகளா இருக்கு"

நாதன், "இரண்டாம் நூற்றாண்டு சோழர் காலத்துச் சிலைன்னு சொன்னா மட்டும் நம்பிடப் போறியா? லாஜிக் கேட்பீங்க, ஆதாரம் கேட்பீங்க. அதான், எல்லா ஸ்க்ரீன்ஸ். குமார் திருதிருவென்று முழித்தவாறே நாதனுடன் நகர்ந்தான்.

இருவரும் மெயின் கடவுள் அருகே வருகின்றனர். அங்கே தரையில் எஸ்கலேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.



குமார், "டேய் என்னாங்கடா இது?"

நாதன், "வரிசையில நிக்கறதுக்கு நமக்கு பொறுமையும் இல்லை, காலில் தெம்பும் இல்லை. எல்லாம் மூட்டு வலி கேஸ் ஆயிட்டோம். ஜருகண்டி ஜருகண்டி சொல்லி அவங்களுக்கும் வாய் வலிக்குது. அதான் இந்த சிஸ்டம். இப்போ இதுல ஏறி உட்கார்ந்தீன்னா ஆட்டோமேட்டிக்கா நீ போய்த் தான் ஆகணும். சுவாமி கிட்ட போகும்போது கொஞ்சம் ஸ்பீட் குறையும். நீ அப்போ அலர்ட்டா இருந்து தரிசனம் பண்ணிக்க வேண்டியது தான்.

இருவரும் இருக்கையில் அமர்கின்றனர். மெயின் கடவுள் அருகே வரும் போது வேகம் குறைகிறது.

குமார், "ஏம்பா, இது கடவுள் தானா? இல்லை, இங்கயும் எதாச்சும் கிராபிக்ஸ் பண்ணிட்டீங்களா?'

நாதன், "சேச்சே, இவரை வெச்சுத்தானே இங்க எல்லாமே ஓடிக்கிட்டிருக்கு. அதனால இவரை எதுவும் செய்ய மாட்டோம்"

குருக்கள் இடுப்பில் ஸ்டைலாக ரீடரை சொருகிய வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். நாதன் அதில் இருபது ரூபாயைத் தேய்க்கிறான்.

தரிசித்து வெளியே வந்தவுடன் பிரசாதக் கூடம் வருகிறது. அங்கே உள்ள உதவியாளரிடம் நாதன் தன் மொபைல் நம்பரைச் சொல்லவும் அவர் அவனுக்குண்டான அர்ச்சனைப் பிரசாதத்தை எடுத்துக் கொடுக்கிறார்.

நாதன், "உனக்கு வேற எதாச்சும் பிரசாதம் வாங்கணுமா குமார்?"

குமார், "புளியோதரை கிடைக்குமா?"

உதவியாளர், "அதெல்லாம் இப்பப் போடறதில்ல சார். சுகர் ப்ரீ பொங்கல், எண்ணையில பொரிக்காம நெருப்புல சுட்ட வடை, ப்ரூட் சாலட், இந்த மாதிரி ஐட்டம்ஸ் தான் இருக்கு"

குமார், "அடப்பாவிகளா, நம்மாளுங்க கோவிலுக்கு வர்றதே பொங்கலும் புளியோதரையும் சாப்பிடத்தான். அதிலயும் கட்டிங்கா?"

நாதன், "எங்க பார்த்தாலும் Sugar, Acidity, அஜீரணக் கோளாறுன்னு ஒரே வியாதி மயம். அதான் இப்படி டயட் பிரசாதம் போடறாங்க"

குமார் பெருமூச்சு விட்டபடி, "சரி, ரெண்டு சுட்ட வடை சொல்லு, எப்படி இருக்குன்னு பார்க்கலாம்"

பிரசாதக் கூடையில் ஒரு சிறிய இலையில் விபூதி, குங்குமம் மற்றும் சந்தனம் பொட்டலம் கட்டி வைக்கப் பட்டிருக்கிறது. இருவரும் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர். பின்னர் வடை மற்றும் பிரசாதத்தில் இருந்த ஆப்பிளையும் இளநீரையும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். அப்பொழுது குமார், "அங்க என்னடா, ஏதோ கேம் ஷாப் மாதிரி இருக்கு"



நாதன், "அதுவா, கிட்டத்தட்ட கேம் ஷாப் மாதிரி தான். என்ன ஒண்ணு, கேமுக்குப் பதிலா அமர்நாத் யாத்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ் இந்த மாதிரி கோவில்களா வரும். அதுக்குப் பேரு வர்ச்சுவல் தர்ஷன். எப்படி கேம்ல பைக் ஓட்டற மாதிரி, கார் ஓட்டற மாதிரி பீல் பண்றோமோ, அதே மாதிரி இங்கயும் நேர்ல பார்க்கிற மாதிரி பீல் பண்ணலாம்"

குமார், "ஆமாம், அது என்ன ஹெட் போன்ல சில பேர் என்னமோ கேட்டுக்கிட்டிருக்காங்க?

"மியூசிக் ஷாப்ல இருக்கற மாதிரி இங்கயும் நீ சாம்பிளுக்கு சாமிப் பாட்டுக் கேட்கலாம். புடிச்சிருந்தா அங்கேயே உன் மொபைலில் டவுன்லோட் பண்ணிக்கலாம். பாட்டு மட்டுமில்லை, அங்கே சுவாமிப் படங்களுக்கும் தனியா மெனு இருக்கு. உனக்கு எதாவது சாமிப் படம் புடிச்சிருந்தா அதையும் டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த அப்ளிகேஷனைக் காண்பிச்சாப் போதும். இதிலேர்ந்து பணம் போயிடும்."

குமார், "இன்னிக்கு என் ராசி பலனுக்கு அதிர்ச்சின்னு எழுதியிருக்கும் போலிருக்கு"

வழக்கம் போல பிச்சைக்காரர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர்.

குமார், "என்ன மாறியும், இது மாறலையே"

நாதன், "இது மாறிட்டா அப்புறம் இந்தியாங்கற பீலிங் எப்படி வரும்"

பிச்சைக்காரரும் ரீடர் வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான் குமார்.

பிச்சைக்காரர், "எதுனா பார்த்துப் போடு சாமி, லோன்ல ரீடர் வாங்கியிருக்கேன். EMI கட்டணும்"

நாதன் அவரிடம் ஒரு பத்து ரூபாய்க்குத் தேய்க்கிறான்.

பிச்சைக்காரர் அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பிறகு அடுத்த ஆளை எதிர்பார்க்கிறார்.

பேசிக்கொண்டே இருவரும் முதல் கவுண்டரை வந்தடைகின்றனர். நாதன் தன் போனைக் குடுத்து மிச்சம் எவ்வளவு இருக்கிறதென்று செக் செய்கிறான்.

கவுண்டரில் இருந்தவர், "சார் மீதி 125 ரூபாய் இருக்கு. நீங்க கோவிலுக்குள்ள செலவு பண்ணின 375 ரூபாய்க்கு உண்டான Income Tax Rebate உங்க பேங்க் அகௌன்ட்ல கிரெடிட் ஆயிடுச்சு."

நாதன், "பாலன்ஸ் அப்படியே இருக்கட்டும், அடுத்த தடவை பயன்படுத்திக்கறேன்."

கவுண்டரில் இருந்தவர், "அப்படியா சார், ஒரு நிமிஷம் இருங்க, உங்க loyalty points update பண்ணிடறேன்" கணினியை சகட்டு மேனிக்குத் தட்டிவிட்டு சிறிது நேரம் திரையை உற்றுப் பார்க்கிறார். பிறகு, " சார் நீங்க இந்த தடவையையும் சேர்ந்து இந்த வருஷத்துல இது வரைக்கும் எட்டு முறை கோவிலுக்கு வந்திருக்கீங்க. மொத்தம் 2750 ரூபாய் செலவு பண்ணியிருக்கீங்க. அதுல 10%, அதாவது 275 ரூபாய் உங்களுக்கு கேஷ்பேக் ஆகியிருக்கு. இதையும் சேர்த்து உங்க அக்கௌண்ட்ல 400 ரூபாய் கிரெடிட் இருக்கு.

நாதன், "தேங்க்ஸ்" சொல்லிவிட்டு நகர்கிறான்.



குமார், "கோவிலுக்கு வந்ததுக்கு வருமான வரி விலக்கா?

"ஆமாம் மச்சி, கோவில் ஆபீஸ் ரூம் போய் செக் எழுதிக் குடுத்தாதான் தர்மமா? இப்படி கடைக்காரர் முதல் பிச்சைக்காரர் வரை எவ்ளோ பேருக்கு நாம மறைமுகமா இது நாள் வரைக்கும் உதவி பண்ணியிருப்போம்? இந்தக் கோவில் இல்லேன்னா அந்தக் கடைக்காரர் தான் இங்க கடை போடுவாரா? இல்லை அந்தப் பிச்சைக்காரர் தான் இங்க குத்த வைச்சு உட்காருவாரா? அதனால கோவில் வளாகத்திற்குள் நாம செய்யற ஒவ்வொரு செலவும் தர்மக் கணக்குல வரணும்னு வருமான வரித் துறை ரூல் போட்டிருக்காங்க. அதுக்காகத் தான் இந்த கார்ட் சிஸ்டமே. என்ன ஒண்ணு, இதுல நீ செலவு பண்ற எல்லாமே வெள்ளைப் பணமா இருக்கணும். கறுப்புப் பணம் செலவு பண்ணினா கொஞ்சம் சிக்கல் வரும். ஏன்னா உன்னோட மொத்த வரவு செலவு அரசாங்கத்தில பதிவாகிக்கிட்டிருக்கு. அப்புறம் உனக்கு நோட்டிஸ் வரும். ஆனா அதை வழக்கம் போல லஞ்சம் குடுத்து சரி பண்ணிடலாம்னு வெச்சுக்கோ"

குமார், "இதெல்லாம் ரொம்ப ஓவர்டா"

நாதன், "உலகம் அப்படி ஆயிடுச்சு மச்சி. கோவில் நடத்தறது கம்பெனி நடத்தற மாதிரி ஆயிடுச்சு. இந்த மாதிரியெல்லாம் பண்ணலேன்னா ஜனங்க வரமாட்டேங்கறாங்க."

குமார், "என்ன மச்சி சொல்றே? ஜனங்க கோவிலுக்கு வர மாட்டேங்கறாங்களா?

நாதன், "ஆமாம் மச்சி, நாட்டுல நடக்கற அநியாயம், அராஜகம், ஊழல், வறட்சி, பசி, பெருகி வரும் வியாதி, முழு வியாபாரமாகிவிட்ட கல்வி மற்றும் மருத்துவம், மகன் அப்பாவைக் கொல்றது, தாத்தாவே பேரனைக் கொல்றது, பிச்சையெடுக்க வைக்கறதுக்காக குழந்தைகளைத் திருடறது, எல்லாத்துக்கும் மேலா கடவுள் பேரைச் சொல்லி நடக்கிற கொடுமைகள் - இதையெல்லாம் பார்த்துப் பார்த்து மக்களுக்கு கடவுள் நிஜமாவே இருக்காரான்னு சந்தேகம் வந்திடுச்சு.அதனால் கோவிலுக்குப் போய் எதுக்கு நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க்கணும்னு யாரும் வர்றதில்ல. So, ஜனங்களை ரெகுலரா கோவிலுக்கு வரவழைக்கறதுக்காக இப்படி லாயல்டி பாயிண்ட்ஸ், அது இதுன்னு பண்ண வேண்டியதா இருக்கு.

குமார் வருத்தம் கலந்த புன்னகையுடன் "வாஸ்தவம் தான், இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு கோவிலுக்கு வந்த மாதிரியே இல்லை, ஏதோ ஷாப்பிங் மாலுக்கு வந்த மாதிரி இருக்கு"



நாதன், "என்னப்பா பண்றது, என்னிக்கு நாம கடவுள் கிட்ட பேரம் பேச ஆரம்பிச்சோமோ அன்னிக்கே கோவில் கடையா மாறிடுச்சு. பாஸ் பண்ணிவிடு, பத்து ரூபாய் போடறேன், சீட் வாங்கிக் கொடு, ஆயிரம் ரூபாய் தர்றேன், வேலை வாங்கிக் கொடு, மொட்டை போடறேன், கல்யாணம் பண்ணி வை, அன்னதானம் பண்றேன்னு கடவுள் கிட்ட டீல் பேசிப் பேசி நாமளும் வியாபாரியா மாறி அவரையும் வியாபாரியா மாத்திட்டோம். சரி விடு, நாம வந்த வேலை முடிஞ்சுது. வா வீட்டுக்குப் போவோம்" இருவரும் கிளம்ப எத்தனிக்கும் போது குமார் யதேச்சையாக சைடில் பார்க்கிறான். அங்கே "மண் சோறு சாப்பிடும் இடம்" என்ற போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. உடனே நக்கலாக, "எவ்ளோ அட்வான்சாப் போனாலும் இந்தப் பழக்கத்தையெல்லாம் விட மாட்டீங்க போலிருக்கே?"

நாதன், " உண்மை தான், ஆனா அங்க கொஞ்சம் உன்னிச்சுக் கவனி"

குமார் சற்று உன்னித்துக் கவனிக்கிறான். அங்கே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மண் சோறு சாப்பிடுகின்றனர். சிலர் மஞ்சள் உடைகளில், பலர் மாடர்ன் உடைகளில்.

குமார்,"என்ன கொடுமை நாதன் சார் இது?"

நாதன், "அவங்கல்லாம் மென்பொருள் வல்லுனர்கள். கம்பியூட்டர் தான் உலகம்னு ஆயிட்டதால எல்லாரும் கம்பியூட்டர் பட்டதாரிங்களாயிட்டாங்க. ஆனா பாவம், வேலை தான் கிடைக்க மாட்டேங்குது. பென்ச்ல உட்கார்த்தி வைச்சது போக இப்பல்லாம் பல பேர் தரையில உட்கார்ற நிலைமைக்கு ஆளாயிட்டாங்க. அந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்கல்லாம் வேலை கிடைச்சா மண் சோறு சாப்பிடறேன்னு வேண்டிக்கறாங்க. சில பேர் முதல்ல மண் சோறு சாப்பிட்டு விட்டு அப்புறம் கடவுளை வேலை வாங்கிக் கொடுன்னு மிரட்டறாங்க.

குமார், "கம்பியூட்டருக்கும் மண் சோறு சாப்பிடறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?"

நாதன், "அட அற்பப் பதரே, நீயும் ஒரு மென்பொருள் வல்லுநர் தானே, மென்பொருள் ப்ரோக்ராமை எதுல எழுதறீங்க?

குமார் "சிலிகன் சிப்ல"

"நாதன், "அந்த சிப்பே மண்ணை கம்ப்ரெஸ் பண்ணி உருவாக்கறது தான். மண் சோறு சாப்பிட்டா அந்த மண் இவங்களுக்கு சோறு போடும்னு ஒரு லேட்டஸ்ட் ஐதீகம். இதான் கொள்கை விளக்கம், புரிஞ்சுதா?"

குமார், "அடச்சே, இது எனக்குத் தெரியாம போச்சே, சரி வந்தது வந்துட்டோம். நானும் போய் ஒரு ப்ளேட் மண் சோறு சாப்பிடறேன்."

"நீயா? எதுக்குடா?"

குமார், "இல்லை மச்சி, ரொம்ப நாளா வெளிநாட்டு அசைன்மென்ட் ஒண்ணு கைக்கும் எட்டாம வாய்க்கும் எட்டாம இழுத்தடிக்குது. அதான் மண் சோறு சாப்பிட்டா கடவுள் கருணை காட்டுவாரான்னு பார்க்கலாமேன்னு......இங்கயே வெயிட் பண்ணு மச்சி, இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு ஓடுகிறான்.

நாதன், "போடா போ, உங்களை எல்லாம் லட்சம் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாது"

(ஆடி மாசம் பக்தி மாசமாச்சேன்னு நினைச்சிக்கிட்டு ஏதோ மனசில பட்டதை எழுதிட்டேன். எதாச்சும் பிழை இருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுட்டுங்க. இதையெல்லாம் மனசில வெச்சிக்கிட்டு பழிவாங்கிடாதீங்க கடவுள்களே, எதுவா இருந்தாலும் வழக்கம் போல பேசித் தீர்த்துக்குவோம்)

Jayaraman
New Delhi

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மேலே சொன்ன கற்பனைக் கதை கூடிய விரைவில் நிஜமாகவே நடக்கும் எனத் தோன்றுகிறது. எனவே, முன் அனுமதியின்றி இதை யாரும் எங்கும் எதிலும் நகலெடுக்க வேண்டாம் (அதாங்க, Control C and Control V) எனக் கேட்டுக் கொள்கிறேன் (இது அதிகப் பிரசங்கித்தனமா, தன்னம்பிக்கையா அல்லது தலைக்கனமா???). This article is owned by crazycricketlover.blogspot.com

Wednesday, July 18, 2012

who is the KING OF TEST CRICKET

The other day, my friend Balaji casually asked me to take a guess on the Man of the Match Awards won by Sachin Tendulkar in Test Cricket.

Considering Tendulkar played about 200 matches, I took a guess of 25 MoM awards, assuming he would have been instrumental the least 40% of India Draws and Victories. Although, inside my heart I felt 25 is a very humble number.

My friend replied “You would be stumped to know the results”.

Are you already taking a guess on the Man of the Match awards won by Sachin Tendulkar in Test Cricket?

As he mentioned, I was totally stumped to know the result. The result actually lured us to analyze, the number of MoM awards won by Tendulkar's contemporaries in Indian Cricket and World Cricket. Here is the look at the stats.


Sachin Tendulkar has won only 14 MoM awards in 188 Test matches. Out of which only 5 were on the winning cause. Anyways, the idea is not prove Tendulkar any inferior, but only to emphasize Man of Match Awards are very difficult to earn in Test Cricket. By the way, Tendulkar has 63 MoM awards in ODI’s.

Again, we were totally surprised to see not a single cricketer has managed more than 25 MoM awards in Test Cricket yet. With the exception of Kallis, MoM awards were predominantly dominated by Bowlers (rightfully).

It is also interesting to see all MoM’s won by Ambrose, Steve Waugh and Sehwag resulted in the Team winning the match. While, Warne, Murali and Kumble’s MoM performances resulted largely on the winning side (above 85%).

On the contrary the two greats, Lara and Tendulkar’s Man of the Match Awards mostly resulted in draws compared to winning causes.

Don’t read too much into it. Stats is a B&$@H. It can be manipulated the way we want.

But in this case, it did prove a point. Kallis is the King of Cricket. By the way, Kallis scored his last century in England in Test Cricket only 14 years ago.

Dinesh
Cricket Lover

Sunday, July 15, 2012

பில்லா - 2 விமர்சனம்

ஓவரா பில்ட் அப் குடுத்து ஒரு படம் ஊத்திக்கிட்டா அதை விட குஜாலான மேட்டர் வேற எதுவும் இருக்க முடியாது. இதோ, லேட்டஸ்ட் பில்லாவை சில பேர் எப்படி கலாய்க்கறாங்கன்னு பார்ப்போமா?

விஜய்:

மூச்சுக்கு முன்னூறு தடவை உங்க ரசிகர்கள் தல அஜித், தல அஜித்னு சொல்றாளே, அஜித்ங்கறது உங்க பேரு, தலங்கறது நீங்க வாங்கின டிகிரியா? ஹீரோ வழிபாடு வேண்டாம்னு சொல்ற நீங்களே இப்படி டைட்டில் போட்டுக்கிட்டு அலப்பற பண்றது நியாயமா? நான் நண்பன் மூலமா மசாலாவிலேர்ந்து கரையேறிட்டேன், நீங்க எப்போ ஏறப் போறேள்?

விக்ரம்:

அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் புடிக்காது. அறுவையான படம்னா இந்த அருளுக்குப் புடிக்காது. மசாலாப் படம்கற பேர்ல மொக்கை போட்டா எவனா இருந்தாலும் வெட்டுவேன், எவனா இருந்தாலும் வெட்டுவேன் - இது படம் இல்லை,. ப்ளேடு.

சூர்யா:

மொக்கையை காலேஜில பார்த்திருப்பே, வீட்டு காம்பௌண்ட்ல பார்த்திருப்பே, ரோட்ல பார்த்திருப்பே, பார்க்ல பார்த்திருப்பே, ஆனா தியேட்டர்ல பார்த்திருக்கியா? சினிமாங்கற பேர்ல ரெண்டு மணி நேரம் டார்ச்சர் பண்ணி பார்த்திருக்கியா? ஓங்கி அடிக்கற ஒவ்வொரு பன்ச்சும் ஒன்றரை டன் தலைவலியைக் குடுக்கும், இன்னிக்கே டிக்கெட் வாங்கித் தர்றேன், பார்க்கறியா, பார்க்கறியா, பார்க்கறியா?

கமல்:

ஒரு நல்ல படத்துக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சமாச்சாரமும் இந்தப் படத்துக்குக் கிடைச்சிருக்கே, அது எப்படி? நான் இது மோசமான படம்னு சொல்ல மாட்டேன், ஆனா நல்ல படமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்வேன். அஜித், நீங்க நல்லவரா, கெட்டவரா?

ரஜினி:
ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். ரசிகர்களுக்கு அஜித் ஆண்டவன் மாதிரி. அதான் இந்த படத்தின் மூலமா சோதிச்சிட்டாரு. கவலைப்படாதீங்க ரசிகர்களே, கண்டிப்பா உங்க ஆண்டவன் உங்களை கை விட மாட்டார். அடுத்த படம் நல்லபடியா வர அந்த அருணாச்சலனை வேண்டிக்கறேன்.

வைரமுத்து:

வழக்கமாக தியேட்டர் காலியாக இருந்தால் "ஈ ஓட்டுகிறார்கள்" என்று கிண்டலாகச் சொல்வது தமிழ் மரபு. ஆனால் "ஈ' என்ற படம் இந்த பில்லாவை ஓட்டிவிட்டதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். முயற்சியின் மறுபெயர் அஜித். இந்த முறை தோற்றதால் வீண் முயற்சி ஆகிவிட்டது. அடுத்த படத்தில் அது வெற்றிபெற்று விடாமுயற்சியாக மாற வாழ்த்துக்கள்.

 விவேக்;

உடம்புக்குத் தல முக்கியம் தான். அதுக்காக கை, கால், கிட்னி, இதயம் எல்லா வேஸ்ட்னு ஆகிடாது. அது மாதிரி ஒரு படத்தில் தல இருக்கறதாலேயே அது வெற்றிப் படம் ஆயிடாது. திரைக்கதை, பாட்டு, இசைன்னு மத்த உறுப்புகளும் ஒழுங்கா இருந்தாத்தான் உடம்புக்கு மரியாதை. மொத்தத்தில் ஆபரேஷன் வெற்றி, ஆனா பேஷன்ட் மரணம்னு ஆகிப் போச்சு.

வடிவேலு:

வீட்ல சும்மாத்தான் சாமி இருக்கேன், ப்ரீயா வேணாலும் நடிச்சுத் தர்றேன், என்னை வெச்சு ஒரு காமெடி ட்ராக் சேர்த்துக்குங்கன்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன், கேட்டானா அந்த சில்வண்டு டைரக்டர். இந்தப் படத்துக்கு காமெடி பீஸ் தேவையில்லைன்னு சொல்லி என்னிய ரிஜெக்ட் பண்ணிட்டான். இப்போ படமே காமெடி பீசா மாறி ஊரே சிரிக்கற அளவுக்கு நாறிப் போயிடுச்சு.

நமிதா:

அஜித் மச்சான் நல்லா நடிச்சிருக்கு. அவரை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா படம் என்னை கண்டபடி கடிச்சிருக்கு. வீட்டுக்குப் போய் டெட்டனஸ் இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்.

சந்தானம்:

"நண்பனா இருக்கறதுக்கு தகுதி வேண்டாம். ஆனா எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்" - படத்துல நீங்க சொல்றது இது. ஆனா மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா தல, "கேங்ஸ்டெர் படம் பார்க்கறதுக்கு எந்த தகுதியும் வேணாம், ஆனா அதை எடுக்கறதுக்கு ஒரு தகுதி வேணும்னு சொல்றாங்க"

விஜயகாந்த்:

அம்மா ஆட்சியிலும் சோனியாவின் கொடுங்கோலாட்சியிலும் ஏற்கனவே மக்கள் அவதிப்பட்டுக்கிட்டிருக்காங்க. இதுக்கு நடுவுல இந்த மாதிரி படமெல்லாம் வந்தா மக்கள் என்ன தான் செய்வாங்க? எங்க போவாங்க? இதுக்கு ஒரே தீர்வு. பில்லா - 3 படத்தில நான் ஹீரோவா நடிக்கறது தான். மக்களே என்ன சொல்றீங்க?

ஆஸ்கர் ரவிச்சந்திரன்:

எவ்ளோ செலவு பண்ணி படத்தை ரிலீஸ் பண்ணினேண்டா! அத்தனையும் வீணாப் போச்சுடா. யாரைக் கேட்டாலும் தல படமா, நல்லா ஓடும், நல்லா ஓடும்னு சொன்னதை வெச்சு இருந்த ஒரே ஒரு சுமாரான படத்தையும் உடைப்பில போட்டுட்டேன். இப்போ நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு ஒரு குறும்படம் எடுக்கணும்னாக் கூட என்கிட்டே காசு இல்லடா.

கார்த்தி:

என்ன தல சார், சௌக்கியமா? நல்ல வேளை நீங்க சகுனியோட இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணலை. இல்லேன்னா உங்களுக்கு டெபாசிட் கூட கிடைச்சிருக்காது போலிருக்கே.

ஷங்கர்:

சுஜாதா சார் பாணியில சொல்லணும்னா கண்ணு தெரியாதவனுக்கு காகிள்ஸ் குடுத்த மாதிரி ஆயிடுச்சு. ஓட்டையான ஸ்க்ரீன்ப்ளேவை வெச்சிக்கிட்டு அதுக்கு நீங்க என்ன தான் அஜித் மாதிரி காஸ்ட்லி கோட் மாட்டினாலும் நிக்காது. மாஸ் ஹீரோங்கறவர் மசாலாவிலேர்ந்து வர்ற மணம் மாதிரி. மணம் ரசிகனை சுண்டி இழுக்கும். ஆனா ருசி தான் அவனை தொடர்ந்து சாப்பிட வைக்கும். இல்லேன்னா டேஸ்ட் பண்ணிட்டு துப்பிட்டு போயிடுவான்.

அஜித் ரசிகன்:

வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சகஜம். நீ வீரன் தல. சுத்தமான தமிழ் வீரன். நீ கண்டிப்பா எழுந்து வருவே. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

சாதாரண ரசிகன்:

போஸ்டர் முழுக்க ரத்த விளாறா இருக்கும்போதே சுதாரிச்சிருக்க வேண்டாமா? படத்தில அஜித் துப்பாக்கியிலேர்ந்து வர்ற ஒவ்வொரு குண்டும் நேரா நம்மளைத் தாக்கிடுச்சே!! யப்பா டேய், யார்ரா அங்க. கொஞ்சம் அம்ருதாஞ்சன் தொழிற்சாலையில என்னை டிராப் பண்ணிடுங்கப்பா. தலைவலி மண்டயப் பொளக்குது. நேராப் போய் மருந்து தயாராகற பாய்லர்ல போய் தலைய விட்டாத் தான் இந்த தலைவலி போகும் போலிருக்கு.

கடைசியா இதுக்குத் தல என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போமா?

மங்காத்தா வெற்றிப் படம். நான் குதிக்கல. அதே சமயம் இந்தப் படம் பிளாப் ஆயிட்டதால நான் துவண்டு போகவும் மாட்டேன். நான் எப்பவுமே இறங்கிப் போறவன் இல்லை, ஏறிப் போறவன். நான் எப்பவுமே நானாத் தான் இருக்கேன். நான் அலட்டிக்கல. நீங்களும் அலட்டிக்காதீங்க. அடுத்த சண்டே வீட்ல ப்ரீயா இருப்பீங்களா? இருந்தா சொல்லுங்க, பிரியாணி கொண்டு வர்றேன். என் கையால நானே செஞ்சது.

Jayaraman
New Delhi

Thursday, July 12, 2012

கோடீஸ்வரனும் 13வது கேள்வியும்



சூர்யா நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் 25 லட்சத்துக்கான 13வது கேள்வி மிகவும் கோக்குமாக்காக உள்ளது (அது சரி, சும்மா வருவாளா சுகுமாரி?) . அக்பரின் மூன்றாவது மனைவியின் தம்பி பெயர் என்ன, காந்தி மதுரைக்கு வந்தபோது எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிட்டார் - இது மாதிரியான வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்டு நல்லா ஆடறவங்களை பேக் பண்ணி அனுப்பிடறாங்க. முதல் சீசன் முடியப்போகிற இந்த நேரத்தில நம்ம பங்குக்கு நாமளும் சில பிரபலங்களை ஆட விட்டு, இல்லை இல்லை, ஓட விட்டு வேடிக்கை பார்ப்போம். இந்த கேள்விக்கு அவங்க அட் லீஸ்ட் அரை மணி நேரமாச்சும் யோசிச்சே ஆகணும்.

செஹ்வாக்:

இதில் உங்களுக்கு மிகவும் தொல்லை தருவது எது?

1) தோள் பட்டை காயம்
2) பத்து வருஷமாக கடுகளவும் காலை நகர்த்தாமல் ஆடுவது
3) எவ்வளவு முக்கினாலும் கேப்டனாக முடியாதது
4) தோனி

அஜித்:

எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?

1) குடும்பம்
2) சினிமா
3) ரேஸ்
4) பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தில்லாக டெர்ரர் பேட்டிகள் குடுப்பது




மன்மோகன்:
பின்வருவனவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பட்டப்பெயர் எது?

1) ஊமைக்கோட்டான்
2) சோனியாவின் ஜால்ரா
3) கையாலாகாதவர்
4) ஜடம்


சச்சின்:

பின்வரும் குற்றச்சாட்டுகளில் எது மிகவும் பிரபலம்?

1) சச்சின் நூறு அடிச்சா டீம் விளங்காது
2) சச்சின் சாதனைக்காக மட்டுமே ஆடுபவர்
3) இன்னமும் ரிடையர் ஆகாமல் இளைய தலைமுறைக்கு பிரச்சினை பண்ணுபவர்
4) கோடி கோடியாக சம்பாதித்த பிறகும் அரசாங்கத்திடம் வரி விலக்கு கேட்பது

கமலஹாசன்:

உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்:

1) ஹீரோயின் உதட்டை பதம் பார்ப்பது
2) நண்பர்களை வறுபுறுத்தி ஓசியில் நடிக்க வைப்பது
3) ஹாலிவுட் படங்களை தமிழ்ப்படுத்துவது
4) வித்யாசம் என்ற பெயரில் ஒரிஜினல் முகத்தைக் காட்ட மறுப்பது




பிசிசிஐ ஸ்ரீனிவாசன்:

உங்கள் ரத்தக்கொதிப்பை அதிகமாக்குபவர் யார்?

1) அஜய் மாக்கன்
2) ஜகன் மோகன் ரெட்டி
3) சிபிஐ
4) சென்னை சூப்பர் கிங்க்ஸ்


விஜய்:

நீங்கள் மறக்க நினைக்கும் படம் எது?

1) குருவி
2) வில்லு
3) அழகிய தமிழ்மகன்
4) சச்சின்

அஜ்மல் கசாப்:

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துணைபுரியும் நாடு எது?

1) அமெரிக்கா
2) சீனா
3) நேபால்
4) பங்களாதேஷ்





விக்ரம்:

இதில் உங்களுக்குச் சம்பந்தமில்லாதது என்ன?

1) மசாலா ஹீரோ
2) ஊனமுற்றவனாக நடிப்பது
3) ஹீரோவுக்கு எடுப்பாக வருவது
4) என்ன வித்யாசம் காட்டினாலும் பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து படங்கள் பல்டி அடிப்பது

தோனி:

இதில் உங்களுக்கு மிகவும் பழக்கமான விஷயம் எது?

1) பைக் ஓட்டுவது
2) கிரிக்கெட்டில் அரசியல் பண்ணுவது
3) அடிக்கடி கிரிக்கெட்டை மறப்பது
4) தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்பது

நித்தி:

உங்களைப் பரவசப்படுத்துவது எது?

1) ரஞ்சிதா
2) ஆதீனம்
3) கோடிகளில் சொத்து
4) மக்கள் தொடர்ந்தும் கொடுக்கும் ஆதரவு





ஆமிர் கான்:

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

1) சினிமாவில் நடிப்பது
2) டிவியில் நடிப்பது
3) சோஷலிசம் பேசுவது
4) மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துவது


கருணாநிதி:

உங்களுக்குப் பிறகு திமுகவின் தலைவராக யார் வருவார்?

1) ஸ்டாலின்
2) அழகிரி
3) கனிமொழி
4) அன்பழகன்

ஷாருக் கான்:

இதில் உங்களுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் யார்?

1) கஜோல்
2) ராணி முகர்ஜி
3) பிரியங்கா சோப்ரா
4) கரன் ஜோஹர்



ஏனைய கான் மற்றும் இதர அள்ளக்கை நடிகர்களுக்கு:

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

1) குடித்துவிட்டு காரை ஓட்டி யாரையாவது சாவடிப்பது
2) டிவி நிகழ்ச்சிகளில் காசு குடுத்து குத்தாட்டம் போடுவது
3) முன்ஜென்மம், மறுஜென்மம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது
4) முன்னாள் நண்பர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சம்பந்தமே இல்லாமல் கண்ணீர் விடுவது


சோனியா காந்தி:

நீங்க யாருக்காக ஊழல் செய்கிறீர்கள்?

1) இத்தாலி குடும்பத்துக்காக
2) மருமகன் வதேராவுக்காக
3) மகன் ராகுலுக்காக
4) காங்கிரஸ் கட்சிக்காக

சூர்யா:

நீங்கள் அடிக்கடி செய்வது எது?

1) விழாக்களில் நமஸ்கரிப்பது
2) என்ன பேசுவதென்று தெரியாமல் காமெராவைப் பார்த்து முழிப்பது
3) சொந்தப் பணத்தில் படமெடுத்து அதை நல்ல ரேட்டுக்கு விற்றுவிடுவது
4) இயலாதவர்களுக்கு உதவி செய்வது


தனியார் தொலைக்காட்சிகளுக்கு:

இவற்றில் மக்களை அதிகம் டார்ச்சர் செய்யும் நிகழ்ச்சி எது?

1) மனை மற்றும் டிவி ஷாப்பிங் விளம்பரங்கள்
2) இரண்டு மணி நேரப் படத்தை விளம்பரங்கள் போட்டு ஐந்து மணி நேரமாக ஓட்டுவது
3) கலை மற்றும் விருது நிகழ்ச்சிகளை ரெகார்ட் தேயும் வரை மறு ஒளிபரப்பு செய்வது
4) வீணாப் போன ஹிந்தி சீரியல்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்புவது

இந்தியக் குடிமகன்:

உங்களை மிகவும் பாதிப்பது எது?

1) எரிபொருள் விலையேற்றம்
2) உணவுப்பொருள் விலையேற்றம்
3) லஞ்சம் ஊழல்
4) கழுத்தறுக்கும் மழை

என்ன தான் வியாபாரமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமா சில பேர் வாழ்க்கையை நல்ல விதமா மாற்றி அமைச்சதற்கும், ஆதரவில்லாம கஷ்டப்படற நிறைய பேருக்கு உதவிகள் குவிய காரணமா இருந்ததற்கும், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கும் விஜய் டிவிக்கு நன்றி. நம்ம மக்களுக்கு வெறும் புத்தக அறிவு தான் அதிகமாயிருக்கு. பொது அறிவு அநியாயத்திற்குக் குறைவா இருக்கு. அதிலும் தமிழறிவு சூன்யம். அட, தமிழறிவு தான் இல்லை, பிரியங்கா காந்திக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் கூடவா வித்யாசம் தெரியாது? நினைக்கும்போதே புல்லரிக்குது.

வாழ்க ஆங்கிலம், வளர்க தமிழ் மக்கள். சூர்யா, மைண்ட்ல வெச்சிருக்கோம், பட் உங்க கிட்ட நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கறோம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (சேர்ந்தே இருப்பது தமிழனும் ஆங்கிலமும் - பிரிக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது).

Jayaraman
New Delhi

Thursday, July 5, 2012

எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணும்!!


தேர்வு அறை. ரமேஷ் மிகவும் பதட்டமாக அமர்ந்திருந்தான். இது வரை 4 -5 இடம் பார்த்தாகி விட்டது. ஒன்றும் செட் ஆகவில்லை. இந்த இடமாவது அமைய வேண்டுமே என்று மனதில் கவலை. அடுத்தது அவனைத் தான் அழைப்பார்கள். இவனுக்கு முன்னால் சென்ற ஏழு பேரும் போன வேகத்தில் வெளியே வந்துவிட்டார்கள். அதிலும் கடைசியாக வெளியே வந்தவன் சும்மா இல்லாமல் "கேள்விகள் எல்லாம் செம tough பாஸ், தேறுவது ரொம்ப கஷ்டம்" என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான்.

கலக்கத்தில் நாக்கு மிகவும் வறண்டு போகவே, தண்ணீர் குடிக்க நினைத்து சீட்டை விட்டு எழவும் அவனை உள்ளே அழைத்தார்கள். பீர் போல பொங்கிய வியர்வையை துடைத்துக் கொண்டு, வேகமாக தலைவாரி, தொண்டையை செருமிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

மிகவும் மாடர்னாக இருந்த பெண்மணி இவனை அமருமாறு சைகை செய்தாள்.

"ரமேஷ்.... பெயர் கொஞ்சம் ஓல்ட் பேஷனா இருக்கே"

ரமேஷ் "என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே" என்று நினைத்துக் கொண்டே "ஆனா எல்லாரும் என்னை ராமின்னு தான் கூப்பிடுவாங்க"

"ஹ்ம்ம்...சரி, உங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க"

"நான் இஞ்சினீரிங் படிக்கறேன், பைனல் இயர் முடிக்கப் போறேன். போன வாரம் நடந்த கேம்பஸ் தேர்வில கூட செலெக்ட் ஆயிருக்கேன்."

பெண்மணி குறுக்கிட்டு, "நான் கேக்கறது உங்க பெர்சனாலிட்டி பத்தி. அதாவது ரமேஷ் ஒரு தனி மனிதனா எப்படிப்பட்ட ஆளுன்னு"

ரமேஷ், "நான் ரொம்ப ஜோவியலான ஆளு, மொக்கை ஜோக், தத்துவம்னு சும்மா அடிச்சிக்கிட்டே இருப்பேன்"

"எங்கே, ஒரு மொக்கை போடுங்க பார்க்கலாம்"

"என் சரக்கு உனக்கு போதையாவும், ஆனா உன் போதை எனக்கு சரக்காவாது"

"நாட் பேட்"

ரமேஷின் கண்களில் சற்றே ஒளி தெரிந்தது.

"உங்க ஹேபிட்ஸ்?"

"எந்த மாதிரி ஹேபிட்ஸ்? ஸ்மோகிங்?"

"அதுவும் தான்"

"ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு. வாரம் ஒரு முறை பீர் அடிப்பேன்"

"பீர் தனியா அடிப்பீங்களா அல்லது நண்பர்களோடவா?"

"பிரெண்ட்ஸ் கூடத் தான்"

"பெண் நண்பர்கள் அந்தக் கூட்டத்தில இருப்பாங்களா?"

"இல்லை, ஆண்கள் கூடத் தான். பெண்கள் முன்னாடி நான் சரக்கடிக்கரதில்ல"

"ஒரு வேளை அப்படி அடிக்கற நிலைமை வந்தா கூச்சப்படாம அவங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆபர் பண்ணுவீங்களா?"

"கண்டிப்பா, ஆனா நான் அப்படிப்பட்ட நிலைமைக்குள்ள சிக்கிக்க மாட்டேன்"

"அது ஏன்?"

"லேடீஸ் முன்னாடி குடிச்சா சரியா வராது"

"அதான் ஏன்?"

"நான் குடிக்கறதே போதைக்கு, அவங்களைப் பார்த்தா மைன்ட் அலெர்ட் ஆயிடும்."

"ஓகே, குடிச்சிட்டு வண்டி ஓட்டுவீங்களா?"

"இல்லை, பிரெண்ட் வீட்லேயே தூங்கிடுவேன்"

"ஏன், பயமா?"

"ஆமாம், உயிரோட இருந்தாத்தானே இன்னும் நிறைய நாள் ஜாலியா இருக்க முடியும்"

"ஹ்ம்ம்..பைக்ல சுமாரா எவ்ளோ ஸ்பீட் போவீங்க?"

"ரோட்டைப் பொறுத்து - அதிகபட்சம் 70"

"ஸ்பீட் பிரேக்கர் வந்தா?"

"சுத்தமா ஸ்லோ பண்ணிடுவேன். சடார்னு ஏத்தினா முதுகெலும்பு பாதிக்கும்"

"பைக்ல போயிக்கிட்டிருக்கீங்க, திடீர்னு மழை வருது. என்ன செய்வீங்க?"

"உடனே ஓரங்கட்டிடுவேன், பக்கத்துல எதாவது டீக்கடை இருந்தா சூடா பஜ்ஜி டீ சாப்பிடுவேன்"

"மழையில நனைய மாட்டீங்களா?"

"அய்யய்யோ, உடனே ஜலதோஷம் புடிச்சிக்கும்"

"ஹ்ம்ம்...என்ன போன் வெச்சிருக்கீங்க?"

ரமேஷ் தன் போனைக் காட்டுகிறான்.

"டச் ஸ்க்ரீன் இல்லையா?"

"இது தான் ரொம்ப வசதியா இருக்கு. டச் ஸ்க்ரீன் போன் கை தவறி விழுந்தா நொறுங்கிடுது "

"எவ்ளோ சினிமா பார்ப்பீங்க?

"ஒரு மாசத்துல ஆறு சினிமா பார்ப்பேன்"

பெண்மணி ஆச்சர்யத்துடன், "6 தடவை தியேட்டருக்குப் போவீங்களா?"

"எல்லாம் விசிடி டிவிடி தான். எந்திரன் மாதிரி பிரம்மாண்டமான படம் எதாவது வந்தா தியேட்டருக்குப் போவேன்"

"அப்படி தியேட்டருக்குப் போகும்போது எவ்ளோ செலவு பண்ணுவீங்க?"

"படம் போறதுக்கு முன்னாடி வீட்ல இல்லேன்னா ஹோட்டலில் நல்லா சாப்பிட்டுருவேன். ஏன்னா அப்போத்தான் தியேட்டர்ல பசிக்காது. அப்படியே பசிச்சாலும் அதிகபட்சம் ஒரு காபி அல்லது கூல் ட்ரிங்க்ஸ் அவ்ளோ தான். தியேட்டருக்குள்ள என்ன விலை விக்கறாங்க!"

"உங்களுக்குத் தெரிஞ்ச லேடீஸ் காஸ்டியூம்ஸ் பேரு சொல்லுங்க"

ரமேஷ், "சேலை, சுடிதார், ஜீன்ஸ், டாப், குர்தா, மிடி, ஸ்கர்ட், ஹ்ம்ம்... அவ்ளோ தான்"

"இது வரைக்கும் காவல் நிலையம், வம்பு தும்பு, அடிதடி, எதாவது சந்திச்சிருக்கீங்களா?"

"அந்த வாடையே ஆகாதுங்க. எதுக்குக் கேக்கறீங்க? நான் யோக்கியனான்னு தெரிஞ்சுக்கவா?

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீங்களும் நானும் ஒண்ணா ஊர் சுத்தும்போது உங்க மேல பொறாமைப்பட்டு உங்களை சில பேர் தாக்க வரலாம். ஏன், எனக்கே கூட நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர் உங்களை ஆளை வெச்சு அடிக்கலாம். அதுக்கெல்லாம் உங்களுக்குத் திராணி வேண்டாமா? அதுக்குத் தான்"

ரமேஷின் முழி பிதுங்கிகிறது.


பெண்மணி சிறிது நேரம் யோசிக்கிறாள்.

ரமேஷ் பொறுக்க மாட்டாமல், "என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?"

பெண்மணி, "பாய் பிரெண்டா இருக்கறதுக்கான ஒரு தகுதியும் உங்களுக்கு இல்லை"

ரமேஷ் கலவரமாகி, "எதனால அப்படிச் சொல்றீங்க?"

"என் கூட அரை மணி நேரமா பேசிக்கிட்டிருக்கீங்க, ஆனா இது வரைக்கும் என் டிரெஸ்ஸைப் பற்றியோ, என் ஹேர் ஸ்டைலைப் பற்றியோ நீங்க ஒண்ணும் சொல்லவே இல்லை. உங்களை கல்யாணம் வேணா பண்ணிக்கலாம். ஆனா அதுக்கு எனக்கு இன்னும் வயசு இருக்கு. நீங்க போயிட்டு ஒரு நாலு வருஷம் கழிச்சு வாங்க"

ரமேஷ் சோகமாகி,"கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க"

"என்னய்யா கன்சிடர் பண்றது? ஒரு பொண்ணு பார்க்க வர்றவங்க கூட பூ பழம் இனிப்புன்னு வாங்கிட்டு வர்றாங்க. நீங்க என்னடான்னா அட் லீஸ்ட் ஒரு பொக்கே கூட கொண்டு வராம வெறும் கையோட வந்திருக்கீங்க"

ரமேஷ், "ஒரு வேளை செலெக்ட் ஆயிட்டேன்னா உங்களுக்கு உடனே ஒரு பொக்கே குடுத்து ட்ரீட் குடுக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன்"

பெண்மணி, "அதென்ன ஒரு வேளை? அப்படின்னா உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா?"

ரமேஷ் பதற்றமாகி, "அப்படி இல்லை.."

"வேற எப்படி ராமி? தன்னம்பிக்கை இல்லாத ஆள் கூட நான் எப்படி சுத்தறது? ஐ ஆம் சாரி. நீங்க போகலாம்" என்று கூறி முடிக்கவும் அவரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார் "ஹாய் ரமேஷ், எப்படிடா இருக்கே? நானா? இல்லை இல்லை, ஆக்சுவலி உன் கூட ஆறு மாசமா சுத்தி போரடிச்சிடுச்சு. அதனால வேற ஒரு ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். என்னது? நீ ரீ-அப்ளை பண்ணப் போறியா? அனுபவசாலியாச்சே! கண்டிப்பா உனக்கு முன்னுரிமை உண்டு. இன்னிக்கா? கொஞ்சம் பிசி தான். இன்னும் ஒரு கேண்டிடேட் இருக்கான்னு நினைக்கறேன். முடிச்சிட்டு சொல்றேன், லவ் யூ, பை". பிறகு நிமிர்ந்து நம்ம ரமேஷைப் பார்க்கிறாள். "நீங்க இன்னும் போகலியா சார்?" போய்யா, போ... போயிட்டு நாலு வருஷம் கழிச்சு வா. அதுக்குள்ளே பாரின் இல்லேன்னா மல்டிநேஷனல் கம்பெனில ஒரு நல்ல வேலையில சேர்ந்துடு.


ரமேஷ், "ஒரே ஒரு கேள்வி, இப்படி அடாவடி பண்றீங்களே? இது உங்களுக்கே அடுக்குமா?"


பெண்மணி நக்கலாக, "நீங்க பண்ணாத அடாவடியா நாங்க பண்றோம்? எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் எங்களைப் போட்டு நசுக்கத் தான் போறீங்க. அதான் காற்றுள்ள போதே தூற்றிக்கறோம். இதான் கொள்கை விளக்கம், புரிஞ்சுதா? கிளம்பு"

சோகமாக வெளியே வரும் ரமேஷைப் பார்த்து அடுத்ததாகக் காத்திருக்கும் நபர், "என்ன பாஸ், என்ன சொல்றாங்க?"

ரமேஷ் வெறுப்பாக, "எல்லாம் ஐ வாஷ் பாஸ், ஏற்கனவே ஆளை பிக்ஸ் பண்ணிட்டாங்க."

"அப்படியா சொல்றீங்க? இப்ப என்ன பாஸ் பண்றது?"

ரமேஷ், "நாம என்ன சார் செய்ய முடியும்? எல்லாம் நம்ம பெரிசுங்க பண்ணின கூத்து. கள்ளிப்பால் ஊத்தி பெண் குழந்தைகளை எல்லாம் கொன்னுட்டானுங்க. அதனால அவங்க எண்ணிக்கை கம்மியாயிடுச்சு. நாம அதிகமாயிட்டோம். இப்ப நாம ஆள் கிடைக்காம அவஸ்தைப்படறோம். இப்படியே போச்சுன்னா நாம் எல்லாரும் "அவன்" ஆயிட வேண்டியது தான்"

கேள்வி கேட்ட நபர் சோகமாகவும், ரமேஷ் ஜாலியாக, "இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க பாஸ், நாம வழக்கம்போல மூக்கு முட்ட குடுச்சிட்டு பிரியாணி சாப்பிடுவோம். முடிஞ்சா, "அழகான பாதகியே, என் நெஞ்சை நொறுக்கிய க்ராதகியே" அப்படின்னு ஒரு லவ் பெயிலியர் சாங் பாடுவோம். அப்படியாச்சும் இவங்களுக்கு நம்ம மேல இரக்கம் வருதான்னு பார்க்கலாம்"

". இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டுச் செல்கின்றனர்.





பெண்களை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கமல்ல. டிமாண்ட் உள்ளவர்கள் அதிகாரம் செலுத்துவது இயல்பு. ஆனால் மேலே சொன்ன கற்பனைக் கதை நிஜமாகும் வாய்ப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தாய்ப்பால் தவிர வேற எந்தப் பாலையும் யாருக்கும் குடுக்காதீங்கன்னு தாழ்மையுடன் கேட்டுக்கறேன்.

Jayaraman
New Delhi

Wednesday, June 27, 2012

இதைப் படிக்காதீங்க!


என்ன தான் விமர்சகர்கள் பருத்திவீரனின் சமீபத்திய படத்தைப் போட்டுக் கிழித்தாலும் பருத்தி வீரனின் மார்க்கெட்டிங் யுத்தியினால் தேவையான அளவு கல்லா கட்டிவிட்டதாக விநியோகஸ்தர் வட்டம் தெரிவிக்கிறது. தனது யுத்தியின் மூலம் எப்படியும் படத்தை வெற்றிபெற வைத்து விடுவார் என்பதால் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து கமென்டரி மன்னனின் சமீபத்திய பேட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை வறுத்து எடுத்திருக்கிறார். அவருக்கு போதுமான அளவு கமென்டரி வாய்ப்பு தரப்படாததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. ஐசிசிக்கு வேண்டியவர் என்பதால் அவரை சமாதனப்படுத்தும் விதமாக வரவிருக்கும் தொடர்களில் அவரை சேர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

டென்னிஸ் வீரர்களின் குழாயடி சண்டைக்குக் காரணம் சம்பளமே என்று தெரிய வந்துள்ளது. மூத்தவருக்கு செல்வாக்கு இருப்பதால் தகுதிக்கு மீறிய சம்பளத்தை கொடுக்கும் அசோசியேஷன் ஏனையோருக்கு அதில் பாதியைக் கூட தர மறுப்பதாக இளையவர்கள் புலம்புகின்றனர். இது காலம் காலமாக நடந்து வருவதாகவும் ஆனால் இந்த முறை வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து தள்ளிப் போகும் இரண்டாம் பாகப் படத்தினால் தலை மிகவும் நொந்து போயிருக்கிறார். பாடல்கள் சொதப்பியது போதாதென்று ரிலீசும் தள்ளிப் போவதால் படத்தின் வெற்றி குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதாகத் தகவல்.

உலக நாயகனின் புதிய படத்தைப் பற்றி என்ன தான் திரைப்பட விழாவிலும் விருது விழாக்களிலும் பிரதமாகப் பேசினாலும், அவரின் முந்தைய அவதாரப் படத்தின் இரண்டாம் பாகம் போல அமைந்திருப்பதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். நின்றாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் இந்த வயதில் இவருக்கு நாட்டியம் தேவையா என்றும் கிண்டலடிக்கின்றனர்.

கூடிய விரைவில் இளைய காந்தி பிரதமராக அறிவிக்கப் படலாம் என்று டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே நிதி அமைச்சரை ஜனாதிபதி களத்தில் இறக்கி விட்டிருப்பதாகப் பேசப்படுகிறது.
ஊரே காறித் துப்பும் போதும் மன்மோஹனர் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் தொடர்ந்து அமைதி காத்து வருவது எரிச்சலை அளித்தாலும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக சாப்பாட்டில் துளி அளவு கூட உப்பு சேர்த்துக் கொள்ளாததே இதன் ரகசியம் என்று ரேஸ் கோர்ஸ் சமையல்காரர் நக்கலடிக்கிறார்.

நட்சத்திர டிவியின் கோடீஸ்வர நிகழ்ச்சிக்குப் போதுமான வருவாய் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லையாம். சூரிய நடிகர் இயற்கையாகப் பேசாமல் சினிமா வசனம் போல் பேசுவதாலும், டைமிங் தெரியாமல் மொக்கை போடுவதாலும் மக்கள் எரிச்சலடைந்து சேனல் மாற்றி விடுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கு வேறு யாரைப் போடுவதென்று இப்பொழுதே யோசித்து வருகின்றனர் சேனல்காரர்கள்.

நானும் கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று வீம்புக்கு நிகழ்ச்சி நடத்தியதில் சூரிய தொலைகாட்சி மிகவும் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறதாம். பங்கேற்க ஆள் கிடைக்காமல் சீரியல் நடிகர்களை வரவழைத்து பொழுது போக்குவதாகவும் கூடுதல் தகவல்.

சிங்கம் சிறுத்தை என அனைத்துப் படங்களும் ஹிந்தியில் வெற்றி பெறுவது இங்குள்ளவர்களை மிகவும் உற்சாகப் படுத்தியிருக்கிறது. இது போக ஹிந்தித் தொலைக்காட்சிகளிலும் தென்னிந்திய டப்பிங் படங்களுக்கு வரவேற்பு கூடியிருப்பதால் இனி வட இந்தியர்களையும் கவரும் வண்ணம் கதைக் களம் மற்றும் நடிகைகளைப் போடுவதென்று நம்மவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிங் கானின் அணி தனியார் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வங்காள அரசு அனைத்து வீரர்களுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்ததன் உண்மைப் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது. போடப்பட்ட சங்கிலிகள் அனைத்தும் போலி என்றும் சொர்ணாக்கா தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவே அப்படி செய்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். சங்கிலிக்குப் பதிலாக வீரர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இது கிங் கானுக்கு முன்னமே தெரியுமென்றும் இதிலும் அவர் கணிசமான தொகையை அக்காவிடம் இருந்து கமிஷன் அடித்திருப்பதாகவும் நெருங்கியவர்கள் கூறுகின்றனர்

முட்டாள் கானின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் குறைவதாக சேனல் புலம்பினாலும் சம்பந்தப்பட்ட அனைவரின் பாக்கெட் நிரம்பிவிட்டதாம். நிகழ்ச்சி நிஜமாகவே மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக மார்க்கெட்டிங் நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. குவிந்து வரும் SMS மற்றும் நிதியுதவியே இதற்கு சாட்சி என சொல்லப்படுகிறது. ஹ்ம்ம். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தால் சரி.

வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் நரேந்திரரும் குமாரரும் குடுமி சண்டை போடுவது தாமரைக் கட்சியை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 2014 வரைக்கும் கட்சி உயிருடன் இருக்குமா என்றே தெரியவில்லை, இவர்கள் ஏன் இப்போதிருந்தே அடித்துக் கொள்கிறார்கள் என்று கட்சியின் உண்மை விசுவாசிகள் எள்ளி நகையாடுகின்றனர்.

மதுரையைக் கைப்பற்றிய சாமியாரின் அடுத்த இலக்கு காஞ்சிபுரமாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வருவதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். சாமியார் விஷயத்தில் அம்மா சும்மா இருப்பதில் பக்தர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

புயல் மீண்டும் திரைக்கு வர வேண்டும் என்று விவேகம் கூறியிருப்பதில் எல்லோருக்கும் வியப்பு. ஆனால் "சொச்சமிச்சம் மிச்சசொச்சத்துக்குஆதரவாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று விவேகம் காதுபட கலாய்க்கின்றனர் லொள்ளு க்ரூப்பைச் சேர்ந்தவர்கள்.

என்ன யோசிக்கறீங்க? இதெல்லாம் ஒரு ஆர்டிகிள்னு ஏண்டா படிச்சோம்னு தலையைப் பிச்சிக்கறீங்களா? நாங்க தான் முதல்லயே சொன்னோம்ல இதைப் படிக்காதீங்கன்னு. நம்மாளுங்க எவன் சொல் பேச்சு கேக்கறீங்க!!

Jayaraman
New Delhi

Monday, June 25, 2012

its time for a sweet 16

Phew…thankfully not much cricket going around. I’m sure cricket buffs like me must be thanking BCCI for allowing us to spend valuable times with family, friends and possibly exploring other entertainment opportunities. In the meantime, cricket columnists and experts are running intense debates as which form of the game is under severe threat – the ODI’s or Tests?

As long as there is no over dosage or meaningless cricket exhibited, every form of the game is safe. Just as we speak meaningless cricket, here we go, India take on Sri Lanka for a 5 match ODI series and a T20 match in July 2012. Probably, a gesture from BCCI to compensate Sri Lankan Board for not allowing its players to participate in their T20 league. Since Test Cricket is not feasible revenue generating option and the number of T20’s played in a calendar year has restrictions, India takes on Sri Lanka in an ODI series!!! By the way, I wonder who is going to watch India – Sri Lanka encounters. For a poor turnout, the pundits will get another chance to blame the format.

To me, Test Cricket remains ultimate Test; ODI’s provide useful opportunity to evaluate a player’s talent/temperament (in others words breeding ground for the litmus test) and T20’s provide ultimate entertainment for the audience. All formats demand sustenance for the good of the game and there are takers for each variety. For each format to bring optimal revenue, every calendar year should limit to 14 Tests (7 Home, 7 Away), 25 One Day Internationals (10 Home, 10 Away, 5 dedicated to the development of Cricket in Associated Nations), a World Cup in 4 years and T20’s should be restricted to club level with a World T20 every 2 years. In all, a year should comprise not more than 125-150 days of cricket.

Somewhere, in other part of the world, India A lost to West Indies A (1-2) in the Tests. Considering majority of the India A players has more International exposure over their counterparts, it is a disappointing loss. However, India A fought better than Team India outside subcontinent is the consoling factor. But, the bottom line remains same. India A or India, games don’t go past 3rd day (first test against WI A was an exception) is the cruel reality. Chetashwar Pujara was the lone star, probably a lone candidate too to fill the shoes of Dravid. A century performance would have been a nice icing and rendered solidarity to his case. Rahane was the biggest disappointment while Mukund was a disaster. Rohit Sharma surely let go off the glorious opportunity to seal a Test birth. Let us see what is in store for the A team on the Tour of New Zealand in Sep-Oct 2012. I wish Rohit Sharma & Rahane put a better show here to make a case for reckoning against England Tests.

The performance of A Team at the Caribbean shores should urge the selectors to look beyond the options available. Teen Debutants are an option to ponder. In the past, India managed to reap rich dividends from Teen entrants as Sachin Tendulkar, Harbhajan Singh, Yuvraj Singh, Irfan Pathan, Suresh Raina etc., However players like Parthiv Patel disappointed too. But the success of majority surely overwhelms the minority. When we talk about Teen options, Vijay Zol name appears top of the list.

If Dravid is the master of temperament, he scores about 200 runs in 2 days. While Lara scores double the amount of runs in the same amount of time with equal temperament. Though I did not witness Zol’s 451 personally, I could visualize the innings studded with stroke play coupled with Dravid’s temperament. I know I’m using some big names for reference, but it is only an analogy to make an inference. Outside that mammoth 451 he went to make few more big tons to exhibit his appetite for batting long.  Anyways, Zol being in the squad for the England & Australia Tests should only do more good to him than harm. I excluded New Zealand series here as I assume Zol could be in Australia to represent India Under19 in the World Cup. The moment has arrived to mix a kid among youth in search of name after a Dravid or Tendulkar or Laxman. Time the selectors wear a thinking cap.

Kevin Pieterson retiring from One Day cricket must have surprised many. Since the retirement came out primarily on difference of opinion grounds with the board, it is only a matter of time, before he comes out of retirement. 

Bottom line: There was a time cricketers used to prolong their career only to end up leading wicket taker/run scorer. These days’ players limit their career for a prolonged pie from a %$#@ Premier League.

Dinesh
Cricket Lover

Sunday, June 17, 2012

நீங்களும் ஆகலாம் ஜனாதிபதி!!!






இன்றைய தேதிக்கு சூடான மேட்டர்னா அது ஜனாதிபதி தேர்தல் தான், இவர் வருவார், அவர் வருவார்னு ஏகப்பட்ட புரளிகள், கணிப்புகள். என்ன தான் கூட்டணிக் கட்சிகள் நடுவுல புகுந்து கலாய்ச்சாலும் சோனியா மேடம் சொல்லப்போறது தான் பைனல். இந்த சூழ்நிலையில் ஏன் சில பிரபலங்களும் போட்டியிடக் கூடாதுன்னு நாம யோசிச்சோம்.

முதல்ல வடிவேலு இன்டர்வியூவிற்குப் போறாரு, சோனியா மேடமும் மன்மோகன் சிங்கும் உட்கார்ந்திருக்காங்க:

சோனியா, "எந்த நம்பிக்கையில நீங்க இந்த பதவிக்கு வரணும்னு ஆசைப்படறீங்க?"

வடிவேலு, "அது வந்தும்மா, ஜனாதிபதி பதவிங்கறது ரொம்ப கண்ணியமான பதவி"

சோனியா, "அதனால தான் கேக்கறேன், நீங்க ஏன் வரணும்னு நினைக்கறீங்க? தேர்தல்ல ரொம்ப அசிங்கமாப் பேசி வாங்கிக் கட்டிக்கிட்ட ஆளு தானே நீங்க?"

வடிவேலு மனசுக்குள், "அடடா, நம்ம வீக்னெஸ் அதுக்குள்ள இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா! சமாளிப்போம்"

சோனியா, "என்ன யோசிக்கறீங்க?"

வடிவேலு, "ஒண்ணும் இல்லை மேடம், இதுக்கு முன்னாடி இருந்தவங்கல்லாம் படிச்சவங்க, பெரிய மனுஷங்க. என்னை மாதிரி வெள்ளந்தியான ஆளுங்க யாரும் இந்த பதவிக்கு வந்ததில்ல"

சோனியா லேசாக முறைத்துவிட்டு , "யாரு நீங்களா? சரி மேல சொல்லுங்க"






வடிவேலு, (என்ன இந்தம்மா குறுகுறுன்னு பார்க்குது?) "அப்துல் கலாம் ஐயா பதவியில இருந்தப்போ ஊர் ஊராப் போய் பள்ளிக்கூடக் குழந்தைகளோட பேசினாரு. நான் ஒரு அதி பயங்கர காமெடி பீசுன்னு அகில உலகத்துக்கும் தெரியும். நான் பதவிக்கு வந்தேன்னா மக்கள் என்னை பார்த்து சிரிப்பாங்க. மகிழ்ச்சியா இருப்பாங்க. மனுஷப் பய வாழும்போது சந்தோஷமா வாழ வேண்டாமா? இப்போ உங்க ஆட்சியில ஒரு நல்லதும் நடக்க மாட்டேங்குது, பெட்ரோல் ஏறுதுங்கறாங்க, ரூபாய் இறங்குதுங்கறாங்க, யார் பிரதமர்னே தெரியலைன்னும் சில பேர் சொல்றாங்க..."

மன்மோகன் பல்லை நறநறவென்று கடிக்கிறார்.

சோனியா கடுப்பாகி, "அதுக்கு?"

வடிவேலு, "இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுல ஒரு சாதாரண மனுஷனுக்கு கொஞ்சமாச்சும் சந்தோஷத்தைக் குடுக்க வேண்டாமா? அது நம்ம கடமை இல்லையா? இப்போ நான் ஜனாதிபதி ஆகி மக்களை சந்திக்கப் போனேன்னா ஒரு நாலஞ்சு டயலாக் அடிச்சு விடுவேன், மக்கள் அதைக் கேட்டு சிரிப்பாங்க. அப்படியே பேஸ்புக், ட்விட்டர்னு எல்லாத்துலயும் போடுவாங்க. அடடே, இவ்ளோ ஜாலியான ஜனாதிபதியான்னு எல்லாரும் உங்களைத் தானே மேடம் பாராட்டுவாங்க. மத்தபடி நான் என்னிக்குமே உங்க வீட்டு நாயாத் தான் இருப்பேன். அது போக ஆப்ரிக்கா மாதிரி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போனேன்னா நமக்கு நல்ல பிஸ்னெஸ் கிடைக்கும்"

சோனியா, "எப்படி?"

"அவிங்க பயங்கர கறுப்பா இருக்காங்க, நான் கறுப்பா பயங்கரமா இருக்கேன், ரெண்டு பேருக்கும் நல்லா மேட்ச் ஆவும்"

சோனியா, "பரவாயில்லையே, நல்ல ஐடியா தான்"

வடிவேலு, "அது மட்டுமில்ல மேடம், வெள்ளைக்கார நாடுகளுக்குப் போனாலும் அவங்களுக்கு மத்தியில நான் தனியாத் தெரிவேன்ல, ஒரு கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிட்டார்னு எல்லாரும் புகழுவாங்க. இதெல்லாம் உங்களுக்குப் பெருமை தானே மேடம்?

சோனியா, "சரி நீங்க போகலாம், சொல்லி அனுப்பறோம்"

வடிவேலு, "ரொம்ப நன்றி மேடம்" பிறகு மன்மோஹனைக் காட்டி "மேடம் யாரு இவரு, நான் வந்ததிலேர்ந்து பார்க்கறேன், ஒண்ணுமே பேசாம சும்மாவே உட்கார்ந்திருக்காரு"

சோனியா, "இவர் தாம்பா நம்ம நாட்டுப் பிரதமர்"

வடிவேலு, "அவரா நீ? சொல்லவே இல்ல"

மன்மோகன், "என்னது நான் தான் பிரதமரா? என்கிட்டே யாரும் சொல்லவே இல்லையே"

வடிவேலு ஷாக்காகி, "இந்த வேலைக்கு உன்னை தப்பா எடுத்திருக்காங்க. ஒரு வேளை நான் ஜனாதிபதி ஆயிட்டேன்னா நீங்க எனக்கு ஒத்தாசையா உதவி ஜனாதிபதி ஆயிடுங்க, ரெண்டு பேரும் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கலாம், சர்தார்ஜி-மதராசி காம்பினேஷன் நல்லா வொர்க் அவுட் ஆகும், வர்ர்ட்டா?"

சோனியா, "அடுத்து யாரப்பா? உள்ளே வாங்க"





நெத்தி நிறைய பொட்டுடன் நித்தி உள்ளே வருகிறார். "வணக்கம்" பிறகு ஹாலை சுற்று முற்றும் பார்த்தபடி "கதவைத் திறந்து வையுங்கள், காற்று வரட்டும்"

சோனியா, "நீங்களா?"

நித்தி, "நானே தான், பெங்களுரு நீதிமன்றத்திலிருந்து நேராக இங்கு தான் வருகிறேன்"

சோனியா, "எந்த தைரியத்துல இங்க வந்தீங்க? உங்க மேல ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் இருக்கே?"

நித்தி, "புகார்களும் வழக்குகளும் எல்லார் மேலும் இருக்கிறது. உங்கள் மேலும் போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு 25 ஆண்டுகளாக இருக்கிறது."

"அது என் பேர்ல இல்லை, என் கணவர் பேர்ல"

நித்தி சிரித்தவாறே, "மனைவி கணவனில் சரி பாதி என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்"

திடுக்கிடும் சோனியா பிறகு சுதாரித்துக் கொண்டு, "நீங்க ஜனாதிபதி ஆனா என்ன செய்வீங்க?"

நித்தி, "அமைதி, சாந்தி"

மன்மோகன், "இவர்களெல்லாம் உங்க பெண் சீடர்களா?"

நித்தி தெய்வீகச் சிரிப்புடன், "பிள்ளாய், அமைதி என்றால் உலக அமைதி, சாந்தி என்றால் மனச்சாந்தி"

சோனியா, "கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா?"

நித்தி மீண்டும் சிரிப்புடன், "எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, போர், அமைதியின்மை, வன்முறை. இதற்கு ஒரே தீர்வு ஆன்மிகம். ஆன்மிகம் மனதை ஒருங்கிணைக்கும். உலகில் அமைதியை நிலைநாட்டும். ஆன்மீகத்தின் மூலம் தர்மம் தழைக்கும். ரஞ்சிதம் பிழைக்கும்"

மன்மோகன், "ரஞ்சிதமா? உங்க கூட இருந்தாங்களே, அவங்களா?"

நித்தி, "அதாவது மனோரஞ்சிதம், அப்படியென்றால் மகிழ்ச்சி"

சோனியா, "இருந்தாலும் உங்களை கன்சிடர் பண்ண முடியாது. அந்த ஆபாச வீடியோ உங்கள் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்ணிடுச்சு"





நித்தி, "உங்கள் மனதில் கெட்ட எண்ணம் இருந்தால் நீங்கள் பார்க்கிற எல்லாமே கெட்டதாகத் தான் தெரியும். நானும் என் சீடரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யாரோ எங்களுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோ அது. துறவியாக வேண்டுமானால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும், மறக்க வேண்டும், மூடியிருக்கும் கதவுகளை, அதாவது மனக்கதவுகளை திறக்க வேண்டும். அந்த சீடரின் மனதில் சிற்சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் நீக்கி அவற்றையெல்லாம் துறந்து, அவர்களை ஒரு முழு துறவியாக்கும் ஒரு பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தது உங்களுக்கு ஆபாசமாகத் தெரிகிறது."

சோனியா மெய் மறந்து நித்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் மன்மோகன் மனசுக்குள், "போற போக்கைப் பார்த்தா இந்த அம்மாவும் இவரோட சேர்ந்துடும் போலிருக்கே"

நித்தி, "எதையுமே மூடினால் தான் ஆபத்து. மூடியிருக்கும் வரை ஆர்வம் இருக்கும். ஆர்வம் இருந்தால் ஆசை வரும். ஆசை மனதை அலை பாய வைக்கும். அலை பாயும் மனது திடமான முடிவுகளை ஒரு நாளும் எடுக்காது. அது உங்கள் அறிவையும் வேலை செய்ய விடாது. அறிவில்லாதவர்கள் தவறான வழிக்குச் செல்வார்கள். தவறான வழிக்குச் சென்றால் தண்டனை உண்டு. ஆகா, எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எல்லாவற்றையும் மூடி வைப்பது தான். அதனால் தான் வந்தவுடனே சொன்னேன், கதவுகளைத் திறங்கள், காற்று வரட்டும் என்று.

சோனியா, "சுவாமி, உங்களுக்கு என்னால் இந்த பதவியைத் தரமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுதே என்னை உங்கள் சீடர் ஆக்கிக் கொள்ளுங்கள். எங்கே என் காவி உடை? எங்கே என் ருத்ராட்சம்?"

மன்மோகன், "மேடம் கண்ட்ரோல் கண்ட்ரோல். அப்புறம் இதான் சாக்குன்னு RSSம் பிஜேபியும் இந்து மதத்தை நீங்க இழிவுபடுத்தறீங்கன்னு புதுசா ஒரு பூதத்தை கிளப்புவாங்க. இருக்கற தலைவலி போதாதா? ஐயா நித்தி, நீங்க கிளம்புங்க, சொல்லி அனுப்பறோம்"

நித்தி அதே தெய்வீகச் சிரிப்புடன், "நினைவிருக்கட்டும். எதையுமே மூடக் கூடாது"

மன்மோகன், "அதை நாங்க பார்த்துக்கறோம், இப்போ நீங்க மூடிக்கிட்டுப் போங்க"

பிறகு சோனியாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவிற்குக் கொண்டு வருகிறார். பெல்லை அழுத்தி அடுத்த ஆளை உள்ளே அனுப்புமாறு சொல்கிறார்.

சம்மக் சல்லோ பாடல் ஒலிக்கிறது.

சோனியா, "மை காட், மன்மோகன் ஜி, அவன் தான் வர்றான் போலிருக்கு"




எதிர்பார்த்தது போல் ஷாருக் கான் என்ட்ரீ ஆகிறார். "ஹெலோ சோனியாஜி, ஹெலோ மன்மோகன் ஜி, உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்தேஜி"

மன்மோகன் மனசுக்குள், "என்ன தீர்மானத்தோட இங்க வந்திருக்கான்னு தெரியலையே!"

சோனியா, "உங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு இந்த பதவிக்கு வர ஆசைப்படறீங்க?"

ஷாருக் கான், "ஹிஹிஏய், ஆசைகள் பெரிசா இருக்கணும், கனவுகள் பெரிசா இருக்கணும். அப்போத் தான் முன்னேற முடியும்"

சோனியா, "பட் இது பேராசையா இல்ல இருக்கு"

ஷாருக் கான் வழக்கமான சிரிப்பை சிரிக்க ஆரம்பிக்கவும், மன்மோகன் குறுக்கிட்டு "எந்த வார்த்தை பேசறதா இருந்தாலும் சம்பந்தமே இல்லாம முதல்ல சிரிக்கறதுன்னு எதாவது அக்ரீமென்ட் போட்டிருக்கியா?"

ஷாருக் கான் சற்று சீரியசாகி, "கலைஞர்கள் தான் ஒரு நாட்டின் உண்மையான தூதுவர்கள். அதனால தான் நான் இந்தப் பதவிக்கு வரணும்னு ஆசைப்படறேன்"

சோனியா, வந்து என்ன செய்வீங்க?"

ஷாருக் கான், "ஊர் ஊராப் போவேன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவேன், இந்தியாவின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்புவேன், விளம்பரத்துக்கு விளம்பரம், பணத்துக்குப் பணம்"

மன்மோகன், "கூடவே பிரியங்காவையும் கூட்டிட்டுப் போவியா?"

ஷாருக் கான், "மிஸ்டர் வதேராவுக்கு ஆட்சேபனை இல்லேன்னா தாராளமா கூட்டிட்டுப் போவேன்"

மன்மோகன் குழம்பவும், சோனியா டென்ஷனாகி, "ப்ரோ, அவர் பிரியங்கா சோப்ராவைச் சொல்றார். என் பொண்ணை இல்ல."

ஷாருக் கான், "ஐ ஆம் சாரி, பை தி பை, எனக்கு எந்த சோப்ராவையும் தெரியாது - யாஷ் சோப்ராவை தவிர"

சோனியா, "வேற என்ன செய்வீங்க?"

ஷாருக் கான், "இப்போ இருக்கற பிசிசிஐ ஆளுங்களுக்கு பணம் சம்பாதிக்கத் தெரியுது, ஆனால் செலிபரேட் பண்ணத் தெரியல. அதனால இந்தியன் கிரிக்கெட் டீமையும் நானே வாங்கிடுவேன். உள்ளூர் சீரிஸ் ஜெயிச்சாக்கூட ஒரு வாரத்துக்குக் கொண்டாட்டம் தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் டிரக்ல ஊர்வலம் போவோம். எல்லாரையும் ஜனாதிபதி மாளிகைக்குக் கூப்பிட்டு பரம் வீர் சக்ரா விருது வழங்குவேன், ஏன்னா அவர்களும் வீரர்கள் தான், மைதானமும் போர்க்களம் தான்"

மன்மோகன், "ஐயா, முதல்ல கிளம்புங்க, செலெக்ட் ஆனீங்கன்னா தபால் வரும்"

ஷாருக் கான் சிரித்துக் கொண்டே, "கிங் கான் ஜனாதிபதி போஸ்ட் லே ஜாயேங்கே" என்று அர்த்தமே இல்லாமல் பன்ச் அடித்து விட்டு செல்கிறார்.

மன்மோகன், "மேடம், இன்னிக்கு இதோட நிறுத்திக்குவோம்"

சோனியா, "இன்னும் ஒரே ஒரு ஆள் தான் பாக்கி, அவரையும் பார்த்துடுவோம்"

மன்மோகன், "யாருப்பா அங்க, சீக்கிரம் வாங்க"







கேப்டன் உள்ளே வருகிறார் - வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, கண்ணாடி சகிதம். "நமஸ்தே சோனியாஜி, நமஸ்தே மன்மோகன் ஜி"

மன்மோகன், "அடேடே, மதராசி ஹிந்தியில நல்லாவே நமஸ்தே சொல்றியே?"

விஜயகாந்த், "எல்லா மொழியையும் நாங்க மதிப்போம், வலுக்கட்டாயமா திணிச்சா ஏறி மிதிப்போம்"

சோனியா, "சரி உட்காருங்க, அந்த கண்ணாடியைக் கொஞ்சம் கழட்டுங்க. ரூம்ல தானே இருக்கீங்க"

விஜயகாந்த் கண்ணாடியைக் கழட்டவும் சோனியா அவரது செக்கச் சிவந்த கண்களைப் பார்த்து டர்ர்ர் ஆகிறார். "ப்ரோ, நீங்க கண்ணாடியை மாட்டிக்கோங்க"

மன்மோகன், "ஏங்க கேப்டன்ஜி, உள்ளூர்லேயே நீங்க தாளம் போடறீங்களே, மத்தியில வந்தா எப்படி சமாளிப்பீங்க?"

விஜயகாந்த் ஆத்திரமாகி, "இப்படி குட்டிகுட்டித் தானேடா தமிழனை வளர விடாம வெச்சிருக்கீங்க, வடநாட்டுக்காரன் குண்டூசி கண்டுபிடிச்சாக் கூட கொண்டாடறீங்க, எங்க ஊர் GD நாயுடு எண்ணற்ற பொருட்களைக் கண்டுபிடிச்சிருக்காரு, அவருக்கு எதாச்சும் அங்கீகாரம் குடுத்திருக்கீங்களா?'

சோனியா மன்மொஹனிடம், "நீங்க என்ன கேட்டீங்க, இவர் என்ன பேசறாரு?"

மன்மோகன், "அவர் அப்படித்தான், பாவம் இன்னும் காமெரா முனாடி நிக்கறோம்னு நினைச்சிக்கிட்டிருக்காரு"

விஜயகாந்த், "அங்க என்ன சதித்திட்டம் தீட்டறீங்க?"

சோனியா, "ஓகே கேப்டன், நீங்க இந்த பதவிக்கு வந்தா என்ன செய்வீங்க?"

விஜயகாந்த், "இந்தியாவுல மொத்தம் 545 எம்பிக்கள் இருக்காங்க. அதுல 56 பேர் கேபினட் மந்திரிங்க. இந்த 56 பேருக்குக் கீழ வேலை செய்யறதுக்கு 1782 ஐஏஸ், 2301 ஐபிஎஸ், 821 ஐஎப்ஸ் அதிகாரிங்க இருக்காங்க. மொத்தம் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் 476 மாவட்டங்கள் 910 பேரூராட்சிகள், 2981 நகராட்சிகள் மற்றும் 3871 பஞ்சாயத்துங்க இருக்கு."

மன்மோகன், "அப்படியா? எனக்கே சரியா தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கறது நல்ல விஷயம் தான். ஆமாம், இப்போ எதுக்கு இந்த புள்ளி விவரத்தை சொல்றீங்க?"

விஜயகாந்த், "இந்த அத்தனை இடத்துலயும் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களை பதவியை விட்டுத் தூக்கப் போறேன்"

சோனியாவுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.

மன்மோகன், "தூக்கிட்டு?"

விஜயகாந்த், "இந்தியா முழுக்க குடியரசுத் தலைவர் ஆட்சி தான்"

சோனியா, "இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, அதை மறக்காதீங்க"

விஜயகாந்த், "தெரியும் மேடம், இன்னொன்னும் தெரியும், மன்னராட்சி நடந்தபோதும் சரி, இப்ப மக்களாட்சி நடக்கிற போதும் சரி, மக்களுக்கு எப்பவுமே அது ஒரு மரண ஆட்சியாத் தான் இருந்திருக்கு. எங்க பார்த்தாலும் அராஜகம், அடக்குமுறை, ஊழல், லஞ்சம் " அவரின் கண்ணாடியைத் தாண்டி கண்கள் சிவக்கிறது.





மன்மோகன், "யோவ், கறுப்புக் கண்ணாடி சிவப்புக் கண்ணாடியா மாறுதுய்யா, கண்ட்ரோல்"

சோனியா,"உங்க கண்ணு ஏன் சார் அடிக்கடி நெருப்பு மாதிரி ஆயிடுது?"

விஜயகாந்த் குரல் தழுதழுக்க, "இது கோபம் இல்லை மேடம், நம்ம நாட்டு ஏழை மக்களோட வயித்துல எரியற நெருப்பு மேடம். ஹுண்டாய் வெச்சிருக்கறவன் ஹோண்டா கார் வாங்கி ஜிலுன்னு பான்டா குடிக்கறான்.. ஆனா சைக்கிள்ல போறவனால ஒரு போண்டா கூட வாங்கித் திங்க முடியல"

விஜயகாந்தின் பேச்சைக்கேட்டு மன்மோகன் கண் கலங்குகிறார்.

ட்ராக் மாறுவதை கவனிக்கும் சோனியா, "ஓகே கேப்டன் ஜி, நீங்க போகலாம், உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்"

விஜயகாந்த் எகத்தாளமாக, "அதான் சொல்லிட்டீங்களே மேடம், பிரணாப் தான் உங்க வேட்பாளர்னு. முதல்லயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தேவையே இல்லாம ஒரு மீட்டிங் போட்டு அதுல எல்லாரையும் கருத்து சொல்லுங்கன்னு மொக்கை போடறது தான் உங்க கட்சியோட ஸ்டைல்னு இந்தியாவுல இருக்கற 120 கோடி பேருக்கும் நல்லாவே தெரியும். இந்தியா முதல்ல வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்திச்சு, இப்போ ஒரு வெள்ளைக்காரிகிட்ட அடிமையா இருக்கு. மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். அதுல ஜனநாயகம் மீண்டும் மலரும், நான் வர்றேன் மேடம், வீ வில் மீட், வில் மீட், மீட்" என்று சொல்லி விட்டு ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியபடி வீர நடை போட்டுச் செல்கிறார். பின்னணியில் "அந்த வானத்தைப் போல மனம் படைச்ச நல்லவனே" என்ற பாடல் ஒலிக்கிறது.

சோனியா மன்மோஹனிடம், "என்ன ஜி, இப்படி சொல்லிட்டுப் போறாரு?"

மன்மோகன், "அவரை விடுங்க, BP ஜாஸ்தி ஆயிருக்கும். நீங்க வாங்க. நமக்கு நிறைய வேலை இருக்கு - பிரணாப்புக்கு ஆதரவு திரட்டணும், கலாமை வித்ட்ரா பண்ண வைக்கணும், மம்தாவுக்கு ஐஸ் வைக்கணும், முலாயமுக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணணும், மாயாவதி மேல இருக்கற கேஸ் விஷயமா ஜட்ஜ் கிட்ட பேசி கரெக்ட் பண்ணணும்,"

சோனியா நெகிழ்ச்சியாக, "என்னால உங்களுக்குத் தான் எவ்வளவு அவமானம், உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபமே வரலியா?"

மன்மோகன், "நான் உங்க உண்மையான விசுவாசி மேடம், நீங்களும் உங்க குடும்பமும் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து சேர்த்துக்கணும். நாங்க இதே மாதிரி வழக்கம்போல உங்களுக்கு அடிமையா இருந்து சேவகம் பண்ணணும். அதான் மேடம் என் கனவு" என்று சொல்லிவிட்டு எழுச்சியுடன் செல்கிறார்.







சீக்கிரம் எதாச்சும் கிரிக்கெட் டோர்னமென்ட் ஸ்டார்ட் பண்ணுங்கப்பா! இல்லேன்னா இந்த கண்றாவியெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியதா இருக்கு!

Jayaraman
New Delhi

Sunday, June 10, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!! பாகம் - 2

பாகம் 1



சூர்யா ஆப்ஷன் சொல்லி முடிப்பதற்குள் ஷாருக் ஆத்திரமடைந்து முன்னாள் இருக்கும் ஸ்க்ரீனை கையால் ஓங்கி அடிக்கிறார். LCD திரையில் நிறைய விரிசல்கள் ஏற்படுகின்றன. மேலும் கடுப்பாகி தலையால் அதை டிச்சிங் செய்து சுக்கு நூறாக உடைக்கிறார். கையிலும் தலையும் லேசாக ரத்தம் வருகிறது.

சூர்யா மிகவும் பதற்றமாகி, "என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? வாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலாம்"

ஸ்டூடியோவே கலவரமாகிறது.

ஷாருக் சிரித்துக்கொண்டே, "பயப்படாதீங்க, ஐ ஆம் ஆல்ரைட். அது என்னவோ தெரியல, அவன் பேரைக் கேட்டாலே என்னமோ ஆயிடுது. சரி விடுங்க, இதுவும் நல்லது தான். என் மூஞ்சில ரத்த காயம் இருந்தா எனக்கு செண்டிமெண்டா வொர்க் அவுட் ஆவும் - ஆப்ஷன் எ சல்மான் கான் லாக் பண்ணுங்க"

சூர்யா "சரியான பதில், 160000 உங்களோடது"

ஷாருக்கிற்கு வேறு திரை வைக்கப்படுகிறது.

சூர்யா, "ஒரு நிமிஷம் நான் பதறிட்டேன், ஆனா நீங்க செம கூலா இருக்கீங்களே, எப்படி?"

ஷாருக், "ஐ ஆம் ஆல்வேஸ் கூல் யூ நோ"

சூர்யா, "அடுத்த கேள்வி 320000 ரூபாய்க்கு, இதோ:

இவற்றில் மிகவும் அறுவையான திரைப்படம் எது?

A) ரா ஒன்
B) டர்ர்
C) மெய்ன் ஹூன் னா
D) டான் - 2

ஷாருக், "ரொம்ப சிக்கலான கேள்வியாச்சே, லைப் லைன் யூஸ் பண்றேன்"

சூர்யா, "மணியண்ணே நில்லுங்க. எந்த லைப் லைன் வேணும்?"

"50-50"

"மிஸ்டர் ஜீனியஸ், ரெண்டு தவறான பதில்களை நீக்கிடுங்க"

திரையிலிருந்து ஆப்ஷன் B மற்றும் C காணாமல் போகிறது

ஷாருக், "பிக்ஸ் ஆப்ஷன் D டான் -2"

சூர்யா "நிச்சயமாவா?"

ஷாருக், "கண்டிப்பா, என்னாலேயே முழுப்படத்தையும் பார்க்க முடியல"

சூர்யா, "சரியான விடை, 320000 ஜெயிச்சிருக்கீங்க. இது உறுதிப்பணம்"

எல்லோரும் கை தட்டுகின்றனர்




சூர்யா, "எப்படி உங்களால உங்க படத்துக்கு இப்படி ஒரு ப்ரோமோஷன் பண்ண முடியுது? நான் ஸ்டாப்பா ஓடிக்கிட்டே இருக்கீங்களே?"

ஷாருக், "வாங்கறோம்ல தம்பி, அதுமட்டுமில்லாம இப்பல்லாம் படம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடியே காசு பார்க்க வேண்டியிருக்கு. ஏன்னா முதல் ஷோ முடியறதுக்கு முன்னாடியே திருட்டு விசிடி வந்திடுது, இல்லேன்னா நெட்ல வந்துடுது"

சூர்யா, "நீங்க சொல்றது பெரிய உண்மை. திருட்டு விசிடி அந்த அளவுக்குப் பெரிய தலைவலியா இருக்கு. பிறகு மக்களைப் பார்த்து, "நேயர்களே, தயவு செய்து தியேட்டர்ல போய்ப் பாருங்க, திருட்டு விசிடிக்கு ஆதரவு குடுக்காதீங்க. அடுத்த கேள்வி 640000 ரூபாய்க்கு, இதோ:

இவற்றில் டைரக்டர் மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் எது?"

A) 3 இடியட்ஸ்
B) தபங்
C) தில் ஸே
D) கம்பெனி

ஷாருக் சற்றும் தாமதியாமல், "தில் ஸே, பிக்ஸ் இட்"

சூர்யா, "தப்பா இருக்காது, 640000 ஜெயிச்சிட்டீங்க"

எல்லோரும் கை தட்டிய பிறகு ஷாருக், "மணி சார் கூட வொர்க் பண்ணினது பெரிய எக்ஸ்பீரியன்ஸ். மறக்கவே முடியாது. அதுவும் லடாக் ஷூட்டிங் எல்லாம் இப்ப நினைச்சாலும் மெய் சிலிர்க்குது"

சூர்யா, "கண்டிப்பா, என்னோட முதல் படம் அவர் டைரக்ட் பண்ணல, ஆனா ப்ரடியூஸ் பண்ணினார், . ஸோ, நானும் அவர் டைரக்ஷன்ல நடிக்கறதுக்கு ரொம்ப ஆவலா இருக்கேன்"

ஷாருக், "யா யா யா.. ஜீனியஸ்"

சூர்யா, "தொடர்ந்து விளையாடுவோம். 1250000 ரூபாய்க்கான கேள்வி, இதோ:"

இவர்களில் தற்போதைய பிரதமர் யார்?

A) சோனியா காந்தி
B) மன்மோகன் சிங்
C) பிரணாப்
D) மம்தா

ஷாருக் சற்றும் யோசிக்காமல், "நான் லைப் லைன் யூஸ் பண்ண விரும்பறேன் - போன் எ பிரெண்ட்"

சூர்யா, "ஓகே, உங்க பிரெண்ட்ஸ் யாரெல்லாம் இருக்காங்கன்னு பார்க்கலாமா?"

திரையில், கரன் ஜோஹர், சாஜித் கான் மற்றும் ரிதேஷ் தேஷ்முக்கின் நம்பர்கள் பளிச்சிடுகின்றன.

ஷாருக், "கரன் ஜோஹருக்கு போன் போடுங்க - நோக்கியா போன் தானே யூஸ் பண்றீங்க? பிராண்டிங் ரொம்ப முக்கியம்"

கரன் ஜோஹர் எடுத்துப் பேசுகிறார். சூர்யா எல்லாவற்றையும் விளக்குகிறார்.




ஷாருக், "கரன், நம்ம நாட்டுல இப்ப யாரு பிரதமரா இருக்காங்க? சோனியா, மன்மோகன், மம்தா, பிரணாப்"

கரன், "சோனியா மேடம் ரொம்ப பவர்புல், ஆனா அவங்க பதவியில இல்லை, மம்தா பிரணாப் ரெண்டு பேரும் அடிக்கடி டிவியில சத்தமா பேசறாங்க. ஸோ, மன்மோஹனாத்தான் இருக்கணும்.

ஷாருக், "ஹே தேங்க்ஸ் buddy, ஜெயிச்சிட்டு நேரா அங்க தான் வருவேன், வீ வில் பார்டி ஹார்ட்"

கரன், "பை"

ஷாருக், "பிக்ஸ் மன்மோகன்"

சூர்யா, "ஜீனியஸ், ஆப்ஷன் B பிக்ஸ் பண்ணுங்க - சரியான விடை 1250000 உங்களுடையதா ஆக்கியிருக்கீங்க"

பலத்த கரகோஷம் கிளம்புகிறது.

சூர்யா, "மன்மோகன் சிங் இந்தியாவின் தற்போதைய பிரதமர். தொடர்ந்து எட்டு வருஷங்களா இந்தியப் பிரதமரா இருந்து வருகிறார். 1991ல புதிய கொள்கைகள் மூலம் இந்தியாவுக்கு ஒரு புதிய முகத்தைக் குடுத்தவர். இப்பொழுது அதே கொள்கைகள் மூலம் நம்ம நாட்டை மறுபடியும் 1991க்கே திருப்பி அழைச்சிக்கிட்டுப் போறதுல மிகவும் முனைப்பா செயல்பட்டுக்கிட்டிருக்கார்"

ஷாருக், "ஒஹ் அப்படியா, நல்ல தகவல் குடுத்தீங்க"

சூர்யா, "அடுத்த கேள்வி, 25 லட்சத்துக்கானது, இதோ:

"இவர்களில் யார் கிங் கான் என்று அழைக்கப்படுபவர்?

A) ஷாருக் கான்
B) அமீர் கான்
C) அர்பாஸ் கான்
D) அம்ஜத் கான்

ஷாருக் மர்மப் புன்னகையுடன், "எனக்கு விடை தெரியும். இருந்தாலும் லைப் லைன் யூஸ் பண்ண விரும்பறேன் - ஆடியன்ஸ் போல்"

சூர்யா, "ஏன் சார், விடை தெரிஞ்சா லாக் பண்ணலாமே?"

ஷாருக், "இந்த கேள்விக்கு மக்கள் பதில் சொன்னாத்தான் பொருத்தமா இருக்கும்"

சூர்யா, "ஓகே ஆடியன்ஸ், உங்களுக்கான நேரம் ஆரம்பிக்குது. கவனமா வோட் பண்ணுங்க"

நேரம் முடிகிறது. திரையில் அதிகபட்ச விழுக்காடு ஆப்ஷன் A ஷாருக்கானிற்குக் கிடைத்திருப்பதாகப் காட்டுகிறது.

ஷாருக், "மக்களோட தீர்ப்புக்குத் தலை வணங்கறேன். அதையே லாக் பண்ணிடுங்க"

சூர்யா, "மிகச் சரி. 25 லட்சம் உங்களுடையது"




கைதட்டலும் விசிலுமாய் ஸ்டூடியோவே களை கட்டுகிறது.


சூர்யா, "அடுத்த கேள்வி, ஐம்பது லட்சத்துக்கானது. இதோ:

இவர்களில் "bhai" என்று செல்லமாக அழைக்கபடுபவர் யார்?

A) தாவூத்
B) அபு சலேம்
C) சோட்டா ஷகீல்
D) சோட்டா ராஜன்

ஷாருக் முதலில் திடுக்கிடுகிறார். பிறகு மனதிற்குள் "பய புள்ள, சமயம் பார்த்து காலை வாரறானே? இதுக்குச் சரியான பதில் சொன்னா நாளைக்கு நம்ம வீட்டு வாசலில் சிபிஐ விசாரணைக்கு வந்து நிக்குமே . பேசாம் எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்". தொண்டையை லேசாகக் செருமிக் கொண்டு, "நான் குவிட் பண்றேன்"

சூர்யா, "ஏன் சார், பதில் தெரியலையா? இல்லை, குழப்பமா இருக்கா?"

ஷாருக் சூர்யாவைக் கூப்பிட்டு ரகசியமாக, "யோவ், ஏன்யா இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு பட்டனைப் போட்டு விடறீங்க? போலிஸ் வந்து என்னை ஆப்படிக்கறதுக்கா?"

சூர்யா புரிந்து கொண்டவராக, "25 லட்சம் ஜெயிச்சிருக்கார், குவிட் பண்றார். ப்ளீஸ்"

சூர்யா சிடி யூனியன் பேங்க் செக் எடுத்து கையெழுத்திடப் போகிறார். ஷாருக் குறுக்கிட்டு, "ICICI பேங்க் இல்லையா? சரி பரவால்ல, இந்த பேங்க் ஆளுங்களை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க. என் கூட அக்ரீமென்ட் போட்டாத்தான் இந்த செக்கை அவங்க பாங்க்ல டெபாசிட் பண்ணுவேன்"

சூர்யா ஒரு வினாடி அப்படியே ஷாக் ஆகிறார். பிறகு சுதாரித்துக் கொண்டு, " கிங் கான் இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியில 25 லட்சம் ஜெயிசிருக்கர். ஒரு "cause"க்காக விளையாடியிருக்கார்"

ஷாருக் சற்றே குழம்பியபடி, "ஆமாம், அடிக்கடி cause causeனு சொல்றியே? என்ன உன் கணக்கு?"

"சூர்யா, "நீங்க ஜெயிச்ச இந்தப் பணம் ஏழை மாணவர்கள் படிப்புக்கு உதவும்"

ஷாருக், "ஒஹ், நீ இங்கிலீஷ் "cause" பத்தி சொல்லிக்கிட்டிருந்தியா, நான் தமிழ் காசுன்னுல்ல இவ்ளோ நேரம் நினைச்சிக்கிட்டிருந்தேன்."

சூர்யா, "என்ன சார் இப்படிப் பேசறீங்க? பாவம் சார், ஏழைங்க சார், கல்வி சார்" லேசாகக் கண் கலங்குகிறார்.

ஷாருக் சற்றும் மதிக்காமல்,"தம்பி, இந்த டகால்ட்டி வேலையெல்லாம் இங்க வேணாம். நீயும் உன் தம்பியும் சம்பாதிக்கறதுல பத்து பெர்சென்ட் டொனேட் பண்ணினாலே ஒரு ஸ்கூல் நடத்திடலாம். இதுல என்னை மாதிரி வர்றவன் போறவன் கிட்ட வேற அடிப்பீங்களா?" அதுமட்டுமில்ல, தர்மத்துக்கு எந்தக் காரணமும் இருக்கக் கூடாது. காரணம் இருந்தால் அது தர்மமாகாதுன்னு குர்ரான்ல சொல்லியிருக்கு.எப்போ எங்கே தர்மம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். இப்போ ஒழுங்கு மரியாதையா செக்கை எடு"

சூர்யா டென்ஷனானாலும் சமாளித்தபடியே செக்கை வழங்குகிறார். ஷாருக் அதை ஸ்டைலாக வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்கிறார்.

சூர்யா, "சரி சார், இப்போ இந்தப் பணத்தை வெச்சு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"

ஷாருக், " இவ்ளோ பெரிய தொகை ஜெயிச்சிருக்கோம், அதைக் கொண்டாட வேண்டாமா? நாங்க எல்லாரும் இங்கேர்ந்து மும்பைக்கு ஓபன் டிரக்ல போகப் போறோம். வழி நெடுக பாட்டு கூத்து கும்மாளம், கலை நிகழ்ச்சி, KKRக்கு பாராட்டு விழான்னு அமர்க்களம் பண்ணப் போறோம்"

சூர்யா ஆச்சர்யப்பட்டு, "சார், அதுக்கு நீங்க ஜெயிச்சதை விட இரண்டு மூணு மடங்கு பணம் செலவு ஆகுமே?"

ஷாருக், "ஆகட்டுமே, வாழ்க்கையை அனுபவிக்கணும் தம்பி, சம்பாதிக்கறதை செலவு பண்ணணும், செலவு பண்றதுக்காக சம்பாதிக்கணும், அதான் ஷாருக் பாலிசி"

சூர்யா விக்கித்து நிற்கிறார்.

ஷாருக் சற்றும் சளைக்காமல், "கமான் கேர்ல்ஸ், I need a hug" மறுபடியும் எல்லோரும் அவரை சூழ்ந்து கொள்கின்றனர். பின்னணியில் அதே "சம்மக் சல்லோ"பாடல் ஒலிக்கிறது. எல்லோரும் ஆடியபடி வெளியே செல்கின்றனர்.

Jayaraman
New Delhi

Monday, June 4, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!! பாகம் - 1


வணக்கம் நேயர்களே, இது உங்கள் அபிமான "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி. என்னதான் நான் மொக்கை போட்டாலும் அதையெல்லாம் தாங்கிக்கிட்டு எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர்றீங்க. அதுக்கு உங்கள் எல்லாருக்கும் நன்றி" என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்ய எத்தனிக்கிறார், அந்த நேரத்தில் டைரக்டர் "ஐயா, இது அவார்ட் பங்க்ஷன் இல்லை, கொஞ்சம் அடக்கி வாசிங்க என்று அறிவுறுத்தவும் சுதாரித்துக் கொண்டு, "இன்னிக்கு நம்மளோட விளையாடப் போறவர், ஒரு பிரபலம். அதாவது எந்தப் பிரபலமும் இந்த அளவுக்கு பிரபலமாகியிருக்க முடியாது, அந்த அளவுக்குப் பிரபலம். பார்ப்பதற்குக் க்ராக் மாதிரி இருந்தாலும் தன்னுடைய நடவடிக்கைகளால் எல்லோர் மனதிலும் ப்ரேக் போடுபவர். இவர் பெயருக்கு "ராஜாவின் முகம்" என்றொரு அர்த்தம் உண்டு.

கான்ட்ரோவர்சியின் செல்லப் பிள்ளை, மீடியாவின் தத்துப்பிள்ளை - ஆடியன்ஸ், ப்ளீஸ் வெல்கம் பாலிவுட்டின் கிங் ஷாருக் கான்"

அப்பொழுது திடீரென ஸ்டூடியோவின் அனைத்து விளக்குகளும் அணைகின்றன. புகை மண்டலம் உருவாகிறது. பின்னணியில் "சம்மக் சல்லோ" பாடல் ஒலிக்கிறது. மேலிருந்து ஒரு ஒளி கீழ் நோக்கிப் பாய்கிறது. அதன் நடுவில் ஒரு கயிறு தென்படுகிறது. சூர்யா கொஞ்சம் அண்ணாந்து பார்க்கவும் ஒருவர் ஒரு கையில் IPL கோப்பை, மறு கையில் கயிறு என மலைக்கள்ளன் MGR ஸ்டைலில் கயிற்றைப் பிடித்தபடி கழுத்தை ஆட்டியபடி இறங்குகிறார். அவர் கீழே இறங்கவும் எல்லா விளக்குகளும் ஒளிர்கின்றன.

சூர்யா, "வணக்கம் சார், இவ்ளோ பெரிய ஸ்டார், எங்க ப்ரோக்ராமுக்கு வந்தது பெரிய சந்தோஷம். அதுவும் ஒரு பெரிய "cause"க்காக விளையாட வந்திருக்கீங்க.

ஷாருக்கான், "ஹெஏய், காசுன்னாதான் நான் எங்கயுமே வருவேன். ஐ லைக் இட் யூ நோ. நான் எப்பவுமே ஜனங்களின் கலைஞன், எங்க கூட்டம் இருந்தாலும் நான் இருப்பேன், நான் எங்க இருந்தாலும் அங்க கூட்டம் இருக்கும், யூ நோ"

சூர்யா, "சரி வாங்க சார் விளையாடலாம்"

ஷாருக், "ஒரு நிமிஷம், ஹே கேர்ல்ஸ், எல்லோரும் என்னை ஒரு தடவை ஹக் பண்ணுங்க, அப்போத்தான் என்னால விளையாட முடியும்". வழக்கம் போல ஒரு கும்பலே வந்து அவருடன் ஒட்டிக் கொள்கிறது.

பிறகு ஷாருக் சீட்டை நோக்கி நடக்கவும் சற்றே தடுமாறுகிறார். உடனே சூர்யா, "ஸ்டூடியோவுக்குள்ள எதுக்கு சார் ரேபான் க்ளாஸ்? கழட்டுங்க"

ஷாருக், "கழட்டறதா? விளம்பரம் தம்பி, எப்பொழுதும் போட்டுக்கிட்டே இருக்கணும். அதுக்குத் தான் அஞ்சு கோடி குடுக்கறான். கரண்ட் போனாலும் நான் கண்ணாடியக் கழட்டமாட்டேன்"

தட்டுத் தடுமாறி சீட்டில் உட்கார்கிறார். முன்னால் லெனோவோ LCD திரை ஒளிர்கிறது, "இந்தக் கம்பெனியோட எனக்கு அக்ரீமென்ட் இல்லையே, போகும்போது போன் நம்பர் குடுங்க, இன்னும் ஒரு இரண்டு கோடி தேத்திடணும்"

சூர்யா மனதுக்குள், "இவன் நம்மள விட உஷாரா இருப்பான் போலிருக்கே". பிறகு சிரித்துக்கொண்டே, "பயங்கர தமாஷான ஆளு சார் நீங்க. ஜோக் அடிச்சிக்கிட்டே இருக்கீங்க"

ஷாருக், "ஜோக்கா? இரு போகும்போது கவனிச்சுக்கறேன்"

சூர்யா, "இன்னைய தேதிக்கு நீங்க தான் ஹாட் டாபிக், IPL வெற்றிக்காக நீங்க கல்கத்தாவில் நடத்திய திருவிழாவைப் பார்த்து எல்லாரும் வாய் பிளந்து நிக்கறாங்க"

ஷாருக், "அதுக்குக் காரணம் ரஜினி சார் தான், அவர் சிவாஜி படத்துல சொல்ற "பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல" டயலாக் என்னை ரொம்பவே மோடிவேட் பண்ணிடுச்சு. அதான் என் பேரைக் கேட்டாலும் எல்லாருக்கும் சும்மா அதிரணும்னு முடிவு பண்ணித் தான் எந்த வேலையும் செய்வேன்"

ரஜினி பேரைக் கேட்டதும் எல்லோரும் கை தட்டுகின்றனர். அது தனக்குத் தான் என நினைத்துக் கொண்டு தேர்தல் வேட்பாளர் போல் கையை எல்லாப் பக்கமும் ஆட்டுகிறார்.

சூர்யா, "சரி சார், விளையாட ஆரம்பிப்போமா? ரூல்ஸ் எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன்.."

ஷாருக், "யா யா யா,,,,மொத்தம் 15 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் பைசா டபிள் ஆவும், மூணு லைப் லைன், கூடவே மணியண்ணன் வருவாரு - - இதானே? "

எல்லோரும் வியந்து கை தட்டுகின்றனர்.

ஷாருக், "சூர்யா, ரொம்ப தாகமா இருக்கு, இளநீர் கிடைக்குமா?"

"இருக்கே, ஆனா நீங்க ஸ்ப்ரைட் தானே குடுப்பீங்க?"

"அது விளம்பரத்துல மட்டும் தான். ஒண்ணு செய்ங்க, இளநீரை ஸ்ப்ரைட் பாட்டிலில் ஊத்திக் குடுத்துடுங்க - ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் "

சூர்யா பேஜாராகி பார்க்கவும், ஷாருக், " கமான் யா, இதெல்லாம் பிசினெஸ் நேக், கேள்வியை ஸ்டார்ட் பண்ணு"

சூர்யா, "ஆயிரம் ரூபாய்க்கான முதல் கேள்வி, இதோ உங்கள் முன்னால்"

"கோடிட்ட இடத்தை நிரப்புக - இட்லிக்கு ________, இல்லாங்காட்டி பட்டினி - உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) சாம்பார்
B) மிளகாய்பொடி
C) தொக்கு
D) சட்னி

ஷாருக் சற்றும் யோசிக்காமல், "பிக்ஸ் சட்னி"

சூர்யா 'சரியான விடை, 1000 உங்களுடையது - இட்லி சட்னி சாப்பிட்டிருக்கீங்களா?

ஷாருக், "நிறைய, ஐ லவ் சவுத் இந்தியன் ஐட்டம்ஸ். அதுவும் கெளரி செஞ்ச இட்லின்னா இன்னிக்கெல்லாம் சாப்பிடலாம்

சூர்யா, "அவ்ளோ ருசியா இருக்குமா?"

ஷாருக், "அவ்ளோ ரப்பர் மாதிரி இருக்கும். முழுசா சாப்பிட ஒரு நாள் வேணும்"

கெளரி ஷாருக்கை செல்லமாக முறைக்கவும் ஷாருக், "சாரி, இப்படித் தான் உண்மையைப் பேசி அடிக்கடி வம்புல மாட்டிக்கறேன்"

சூர்யா புன்முறுவலுடன், "அடுத்த கேள்வி 2000 ரூபாய்க்கு, இதோ: சென்னையிலிருந்து டெல்லி 2000km தொலைவில் உள்ளது. அப்படியானால் டெல்லியிலிருந்து சென்னை எவ்வளவு தூரத்தில் உள்ளது? உங்க ஆப்ஷன்ஸ்:
A) 2000
B) 3000
C) 4000
D) 1000

ஷாருக், "ஹெஹெஹ், பிக்ஸ் ஆப்ஷன் A 2000"

சூர்யா, "சரியான விடை, 2000 உங்களுடையது"

ஷாருக் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே பெருமையாகப் பார்க்கிறார்.

சூர்யா, "5000 ரூபாய்க்கான மூன்றாவது கேள்வி இதோ: இவர்களில் யார் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர்? உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) கமலஹாசன்
B) ரஜினிகாந்த்
C) அமிதாப் பச்சன்
D) ஷாருக் கான்

ஷாருக், "இதெல்லாம் ஒரு கேள்வியா? ரஜினி ரஜினி ரஜினி தான்"

சூர்யா, "சரியான பதில், 5000 உங்களுடையது"

சூர்யா, "10000 ரூபாய்க்கான நான்காவது கேள்வி இதோ:IPL அணியான KKR என்பதன் விரிவாக்கம் என்ன? உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) கான்பூர் கைட் ரைடர்ஸ்
B) கல்கத்தா கிட்ஸ் ரைடர்ஸ்
C) காளி கோலா ரைடர்ஸ்
D) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷாருக், சிரித்துக்கொண்டே, "ஆப்ஷன் D தவிர வேற எதுவும் சரியா இருக்க முடியாது. பிக்ஸ் இட்"

சூர்யா, "உறுதிப்பணம் 10000 ரூபாய் உங்களுடையது" எல்லோரும் கை தட்டுகின்றனர். வழக்கம் போல எல்லோரையும் பார்த்து கை அசைக்கிறார் ஷாருக்.


சூர்யா நேயர்களைப் பார்த்து, "கிங் கான் ஷாருக்குடன் இன்னிக்கு விளையாடிக்கிட்டிருக்கோம். 10000 ஜெயிச்சிருக்கார். டக்கு டக்குன்னு பதில் அடிச்சிக்கிட்டே இருக்காரு" பிறகு ஷாருக்கைப் பார்த்து, "உங்க குடும்பம் கூட இங்க வந்திருக்காங்க போலிருக்கு?'

ஷாருக், "யா யா யா, என் குடும்பம், என் டீம், எல்லாரும் வந்திருக்காங்க. அங்க பாருங்க. கவுதம் இங்க கூட பேடைக் கழட்டாம உட்கார்ந்திருக்காரு"

சூர்யா, "ஹாய், கவுதம், என்ன இங்கயும் அதே செண்டிமெண்டா?"

கவுதம், "யா, கல்கத்தா டீம் எங்கும் எதிலும் தோற்கக் கூடாது"

சூர்யா ஷாருக்கைப் பார்த்து, "ஒரு விஷயம் சொல்லுங்க, IPL போட்டி ஒரு தனியார் போட்டி. அதில ஜெயிச்சதுக்கு இப்படி ஒரு அமளி தேவையா?"

ஷாருக், "ஒரு வேளை நான் தோத்திருந்தா உங்க ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்? ஷாருக் டீம் சுத்த வேஸ்ட்னு நினைச்சிருப்பீங்க. அதிகாரமுள்ள டீமெல்லாம் ஒவ்வொரு தடவையும் எதாவது பண்ணி அட் லீஸ்ட் செமி பைனல் வரைக்குமாச்சும் வந்துடறாங்க. நாலு வருஷமா நாங்க பட்ட வலியும் வேதனையும் எங்களுக்குத் தான் தெரியும். அதை உங்களால புரிஞ்சுக்க முடியாது" லேசாகக் கண் கலங்குகிறார். பிறகு சுதாரித்துக் கொண்டு, "பாருங்க, நான் சாதாரண மனுஷன். கோபம், அழுகை. சிரிப்பு எல்லாம் எனக்கும் உண்டு. எனக்கு எதையும் மறைக்கத் தெரியாது"

சூர்யா சிறிது நேரம் அவரை உற்றுப் பார்க்கிறார், பிறகு கை தட்டுகிறார். மக்களும் கை தட்டுகின்றனர்.

சூர்யா, "அடுத்த கேள்விக்குப் போவோமா? அடுத்த கேள்வி 20000 ரூபாய்க்கு. இதோ:

இவற்றில் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் எது?
A) டெல்லி
B) சென்னை
C) பெங்களுரு
D) மும்பை

ஷாருக் சற்றும் தயங்காமல், "மும்பை...மேரி... ஜான்... ப்ளீஸ் லாக் ஆப்ஷன் D"

சூர்யா, "சரியான பதில், 20000 உங்களுடையது"

ஷாருக் சூர்யாவிடம் ரகசியமாக, "உங்க காமெராக்காரர் கிட்ட என் போன், வாட்ச் எல்லாத்தையும் அப்பப்ப க்ளோசப் எடுக்கச் சொல்லுங்க. இல்லேன்னா அக்ரீமென்ட் கான்ஸல் ஆயிடும்.

சூர்யா யாரிடமோ சைகை காட்டுகிறார். அவரும் புரிந்த மாதிரி தலை ஆட்டுகிறார்.

சூர்யா, "அடுத்த கேள்வி, 40000 ரூபாய்க்கு, இதோ உங்கள் திரையில்:

இவற்றில் ரசகுல்லாவிற்குப் புகழ்பெற்ற நகரம் எது?
A) மைலாப்பூர்
B) மாம்பலம்
C) தாம்பரம்
D) கொல்கத்தா

ஷாருக், "கடைசி ஆப்ஷனை பிக்ஸ் பண்ணிடுங்க"

சூர்யா, "சரியான விடை 40000 உங்களுடையது"

ஷாருக், "என்னா மேன் எல்லாம் சில்லரைக் கேள்வியா இருக்கு"

சூர்யா, "நீங்க ஒரு "cause "க்காக விளையாடறீங்க. அதனால எவ்ளோ நிறைய ஜெயிக்கறீங்களோ அவ்ளோ நல்லது"

ஷாருக், "ஆமாமாம், காசு எப்பவுமே நல்லது தான்"

சூர்யா, "80000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி இதோ:

"பாரிஸ் நகரம் எந்த நாட்டில் உள்ளது?"
A) லண்டன்
B) இந்தியா
C) பிரான்ஸ்
D) அமெரிக்கா

ஷாருக், "ஹிஹிஹெய், ஸில்லி பாய், பிரான்ஸ் லாக் கரோ"

சூர்யா, "சரியான பதில், 80000 உங்களோடது"

மறுபடியும் ஒரு ரவுண்டு கை ஆட்டல் - கோணல் சிரிப்புடன்.

சூர்யா, "இன்னொரு விஷயம் கேக்கணும், மும்பை ஸ்டேடியம்ல என்னா தான் சார் நடந்தது? அப் கோர்ஸ் அதுக்கு நீங்க சென்னையில மன்னிப்பும் கேட்டீங்க "

ஷாருக், தலையைக் கோதியவாறே, "நான் எந்த தப்பும் பண்ணல. என் கூட வாக்குவாதம் பண்ணியவர் என்னைவிட வயசில பெரியவர், அதனால மன்னிப்பு கேட்டேன். இல்லேன்னா நானாவது மன்னிப்பு கேட்கறதாவது?? ரா ஒன் மாதிரி படம் எடுத்ததற்கே நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கல, இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டர்"

சூர்யா, "ஒரு விஷயம் நான் கவனிச்சிருக்கேன், எந்நேரமும் மீடியா உங்களை சுத்தியே இருக்கு"

ஷாருக் ,"அதை அவாய்ட் பண்ண முடியாது. எங்களுக்கு அவங்க வேணும் அவங்களுக்கு எங்களை மாதிரி செலிப்ரிடிஸ் வேணும். ஐஸ்வர்யா ராய் உண்டானதுக்கும் பிரேக்கிங் நியூஸ் போட்டாங்க, இப்போ அவங்க குண்டானதுக்கும் பிரேக்கிங் நியூஸ் போடறாங்க."

மக்களிடையே பலத்த கரகோஷம் கிளம்புகிறது.

சூர்யா, "சரி சார், அடுத்த கேள்விக்குப் போவோம். 160000 ரூபாய்க்கானது, இதோ உங்கள் திரையில்:

இவர்களில் யாருடன் உங்களுக்கு, அதாவது நடிகர் ஷாருக்கானிற்கு வெறுப்பு அதிகம்?
A) சல்மான் கான்
B)...

அப்பொழுது திடீரென ஒரு சத்தம், சூர்யா பதறிபோய் "ஐயோ சார், என்ன காரியம் பண்ணிட்டீங்க?"

ஷாருக் என்ன செய்தார்? நடந்தது என்ன? அடுத்த எபிசோடில்....



Related Posts Plugin for WordPress, Blogger...