Tuesday, April 2, 2013

IPL – 6 | டரியல் தொடங்கட்டும்




ஆரம்பமே அலைக்கழிப்பு என்பது போல் இலங்கை வீரர்கள் பிரச்சினையுடனே ஆரம்பித்திருக்கிறது இந்த வருட IPL. போதாக்குறைக்கு வழக்கம் போல மொக்கைத் தனமான தொடக்க விழா நிகழ்ச்சி வேறு. IPL ஒலிம்பிக் அல்ல என்று இவர்களுக்கு எப்பொழுது தான் புரியப் போகிறதோ?

ஷாருக், கத்ரீனா, தீபிகா போன்ற, காலைக் கொஞ்சம் கூட நகர்த்தத் தெரியாதவர்களை வைத்து கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்ற எண்ணம் யாருடையதோ? அடுத்த முறையாவது இந்த சினிமாக்காரங்களையும் வெள்ளைக்கார நடனக் கலைஞர்களையும் ஓரங்கட்டிவிட்டு இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இந்தியர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துங்கள் ஐயா.

கரெக்டா IPL ஆரம்பிக்கிற அன்னிக்கு தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படுது. அப்போ மாணவர்களின் ஈழப் போராட்டம் அவ்வளவு தானா? அப்படி இருக்காது என்று நம்புவோம்.

இலங்கை வீரர்களை விளையாட வேண்டாமென்று ரணதுங்கா வேண்டுகோள் விடுக்கிறார். அவரை யாரும் கண்டுகொண்டதாகக் கூட தெரியவில்லை. மூன்று அணிகளுக்கு இலங்கை வீரர்கள் தான் கேப்டனாக இருக்கிறார்கள்.

பெப்சி ஸ்பான்சர் செய்வதனால் பல வண்ணமயமான மாற்றங்களை இந்த வருடம் எதிர்பார்க்கலாம். சமீபத்திய ஹோலி மற்றும் IPL கலந்த விளம்பரம் இதற்கு ஒரு சரியான முன்னோட்டம்.

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஹர்பஜன் ஆட வேண்டிய தர்மசங்கடமான நிலைமை. இருந்தாலும் "மேடத்தின்" தயவு ஹர்பஜனுக்கு இருப்பதால் இதை பெரிது படுத்தத் தேவையில்லை.

சன் ரைசர்ஸ் ஜெர்சி கலர் சகிக்கவில்லை. கலாநிதி சார், இப்படி சொதப்பிட்டீங்களே? சன் டிவி ரேஞ்சுக்கு பளபளன்னு போட்டிருக்க வேண்டாமா?

சென்னை அணியின் முக்கிய வீரர்கள் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் நன்றாக விளையாடியதன் மூலம் நல்ல மூடில் இருப்பார்கள். குறிப்பாக ஜடேஜா எல்லோராலும் கவனிக்கப்படும் வீரராக இருப்பார்.

கொஹ்லியும் கம்பீரும் வழக்கம்போல் நெக்கலாக இருப்பது தொடக்க விழாவிலேயே தெரிந்தது. அது தன்னம்பிக்கையா அல்லது தலைக்கனமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதுகு வலி மூட்டு வலி, பார்வைக்குறைவு, காது கேளாமை - செஹ்வாக் சார், அவசியம் கிரிக்கெட் விளையாடித்தான் ஆகணுமா?

யுவராஜின் பரிதாப வோட்டை நம்பித்தான் பூனே வாரியர்ஸ் களம் இறங்குகின்றனர். புவனேஸ்வர் குமார் போன்ற இளைஞர்கள் தான் இந்த அணியைக் காப்பாற்ற வேண்டும்.

கிங்க்ஸ் XI பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஏதோ வழி தெரியாமல் வந்தவர்களைப் போல் ஓரமாக ஒதுங்கி இருக்காமல் இந்தப் போட்டியில் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

முடிவாக, போட்டி தொடங்கப்போகிற இந்த தருணத்தில் கேப்டன்களின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்?

கம்பீர் - எப்படியாச்சும் ஒரு பாலையாவது எட்ஜ் வாங்காமல் புல் ப்ளேடில் ஆடிடணும். இப்போதைக்கு அது தான் வேணும். கப்பெல்லாம் அப்புறம் தான்.

கொஹ்லி - மேட்சை விடுங்க, கம்பெனி இருக்கற நிலைமைக்கு வெள்ளை தாடி ஒழுங்கா பேமென்ட் பண்ணுமான்னு தெரியலையே?

பான்டிங் - இங்கேயாச்சும் கொஞ்சம் ஒழுங்கா இருக்கணும். இல்லேன்னா சர்தார்ஜி பழைய கடுப்புல மேடம் கிட்ட போட்டுக் குடுத்தாலும் குடுத்துடுவான்.

மஹேலா / ஆன்ஜெலோ மேத்தியூஸ் - இந்த டீமுக்கு கேப்டன் ரொம்ப தேவையா? பேசாம ரணதுங்க சொன்ன மாதிரி விளையாட மாட்டேன்னு சொல்லிட்டு ஊருக்குப் போயிடலாமா?

கில்க்ரிஸ்ட் / திராவிட் - எவ்வளவு முக்கினாலும் நடக்க மாட்டேங்குதே? வயசு வேற ஏறிக்கிட்டே போகுது. இந்த வருஷமாச்சும் ஆத்தா கண்ணைத் திறக்குதான்னு பாப்போம்.

சங்கக்கரா - கொஞ்சமாச்சும் ஒழுங்கா ஆடியே ஆகணும். இல்லேன்னா அவ்வளவு தான், கலாநிதி சார் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கிளீனர் வேலை குடுத்தே கொன்னுடுவார்.

தோனி - என்னது? IPL ஆரம்பிச்சிடுச்சா? சரி சரி, செமி பைனல் வரைக்கும் "அங்கிள்" ரூட் கிளியர் பண்ணிக் குடுத்துடுவார். அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...