Tuesday, May 29, 2012

the cricket's SUPER BOWL


It is not there yet, but it will be in some years from now when the Finals of IPL will turn into a Super Bowl of cricketing fraternity. It will be “The Day” when the whole of India shut itself to witness the marquee match while the rest of the world interested to know the outcome, if not catch the action live in the odd hours of their respective time zone. For now, the end of IPL 2012 already left a void in many of our daily lives. The critics who slammed the event a long, exhaustive and boring (including the writer) must have realized it will remain a 2 month extravaganza, and the cricketing world should learn to organize their International Cricket Calendar to 10 months only (excluding the months of April and May).

The Big Finale
At last, Dhoni’s & Co were brought back to earth when they failed to defend the target of 190. It was heartening to see a relatively unknown Manvinder Bisla display steely nerves in this mammoth run chase. He definitely seems to be a good alternative to Dhoni in the short formats of the game. I’m sure his performances are going to be closely monitored in the domestic circuit alongside Parthiv Patel and Wridhiman Saha for the national glove job (if ever the need arises). Captain Gambir, deserves a bow for carrying his team all the way and snatch the Championship from the Super Kings.

However, Gambir’s post match statement “It is the team that makes a successful captain and not the captain that makes a successful team” must have irked many. From the outset it definitely appears to be directed towards Dhoni (not sure if Ganguly is included too). Does Gambir really know what a Clive Lloyd or Imran Khan or Ranatunga or Sourav Ganguly did to their sides? For a moment, let us buy Gambir’s statement. In that case, does he mean to say the Test Squad (included Gambir) that represented India in England and Australia was a rank bad one? Wake up Gambir!!! Because you won a trophy, doesn’t mean you get to talk all you want.

At the same time, it is disappointing to see Sourav Ganguly openly back Gautam Gambir for the Top Job in Test cricket. Gambir’s record as a member of Test Team that plays outside subcontinent is very much debatable. I won’t be surprised if Dhoni has equal or better record as batsman compared to Gambir in Test Cricket (played outside subcontinent).  Just out of curiosity, I did the analysis myself to see both their numbers in the Test Matches played at South Africa, England and Australia recently. Against South Africa Gambir scored 242 runs in 4 innings at an average of 60, while Dhoni scored 179 in 5 innings at an average of 36. Against England, Gambir scored 102 in 6 innings at an average of 17 and Dhoni scored 220 in 8 innings at an average of 31. Against Australia Gambir scored 181 runs at an average of 23 in 8 innings and Dhoni scored 102 runs in 6 innings at an average of 20. Overall average of Gambir is 33 compared to Dhoni’s 29 in same number of Matches. Inference: Gambir as specialist batsman did not do anything commendable compared to Dhoni the Wicketkeeper-Batsman.

Captain Cool, appeared cool despite the defeat, but the loss must have wrinkled badly inside him. After all, somebody can survive jealousy, not the curses of the loyal cricket fans.

After a lot of cricket in the past 2 years, it is real break for the Indian Cricket Team and fans for the next 2 months or so. Following the break, India take on New Zealand at home in August, World T20 in September, England Tour of India for 4 Tests and 5 ODIs, finally Australia’s Tour to India for Test and ODI’s to conclude the season.
Unless nothing compelling, I spare you from reading my blogs.

See you later.

Dinesh
Cricket Lover

Monday, May 28, 2012

IPL 5: திருவிழா முடிந்தது



எல்லாம் வல்ல இறைவா!! அடுத்த IPL வரை வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் ஷாருக் கான் அடிக்கும் குட்டிக் கரணங்களையும் இன்ன பிற தேவையில்லாத சேஷ்டைகளையும் தாங்கிக் கொள்ளும் மன வலிமையைத் தந்தருள்வாயாக.

தொடர்ந்து 54 நாட்களாக நடைபெற்று வந்த கிரிக்கெட் கோடைத் திருவிழா ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. எதிர்பார்த்தது போல் கல்கத்தா அணி வெற்று பெற்றுவிட்டது (IPL அதிகாரபூர்வ வெப்சைட்டில் வியாழக்கிழமையே CSK vs. KKR தான் பைனல்ஸ் என்று போட்டு விட்டார்கள்) . இரண்டு மாதங்கள் நன்றாக பொழுதை ஒட்டிய நமக்கு இப்பொழுது திடீரென்று வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போன்ற உணர்வு. சரி விடுங்க, தோனி, விராட், ஹர்பஜன், ராயினா மாதிரி நாமளும் புட்பால் விளையாட வேண்டியது தான்.


கொல்கத்தா:
ஆழ்ந்த அனுதாபங்கள். பின்னே? இனிமே "Defending Champions " என்று சொல்லியே உங்கள் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறார்கள். கம்பீர், நீங்க நாலு வருஷமா நாய் படாத பாடு பட்டுத் தான் இந்த தடவை ஜெயிச்சிருக்கீங்க. அதுக்காக நல்ல அணி தான் நல்ல கேப்டனை உருவாக்கும், நல்ல கேப்டனால் நல்ல அணியை உருவாக்க முடியாதுன்னெல்லாம் ஏன் சார் தேவையில்லாம வாயை விடறீங்க? உங்களுக்கு கடுப்பு கங்கூலி மீதா அல்லது தோனி மீதா? உன் மேல இருந்த மரியாதையே போச்சுப்பா. அது சரி, முதலாளி எவ்வழி, தொழிலாளி அவ்வழி. அப்புறம், உங்க முதலாளியை உற்சாக பானத்தை அளவா அடிக்கச் சொல்லுங்க. ஏதோ அந்தப் பெரியவர் கையப் புடிச்சு தடுத்தாரு. இல்லேன்னா உங்க ஆளு உணர்ச்சிவசப்பட்டு முதல் மாடியிலேர்ந்து குதிச்சு கிங்கா மிங்கா ஆயிருப்பாரு. மறக்காம இந்த வெற்றியை பூனம் பாண்டேவுக்கு டெடிகேட் பண்ணிடுங்கப்பா.

சென்னை:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆசியா கப், IPL - நல்லாவே பார்ம்ல இருக்கீங்க தோனி. நீங்க செமி பைனலுக்கு வந்ததே ஓசியில. அதனால பைனல்ஸ் தோத்ததெல்லாம் உங்களை பெரிசா பாதிச்சிருக்காது. ஆனா வழக்கமா நீங்க வாங்கற Fair Play அவார்டும் உங்கள் கையை விட்டுப் போனது தான் பேரதிர்ச்சியா இருக்கு. மக்களே கூட நீங்க ஜெயிக்கணும்னு நினைக்கலை. ஏன்னா இங்கிலாந்து கிட்டயும் ஆஸ்திரேலியா கிட்டயும் மாறி மாறி அடி வாங்கிட்டு வந்த உங்களுக்கு IPL கேக்குதான்னு அவ்ளோ கடுப்பு. இருந்தாலும் அஞ்சு வருஷமா மொக்கை போலிங்கை நம்பி செமி பைனல் வரைக்கும் வர்றீங்க பாருங்க, அங்க தான் நீங்க நிக்கறீங்க. ஆமாம், உங்க ஓனர், அதாம்பா அந்த கண்ணாடி போட்டவரு, இந்த தடவை ஒரு மேட்ச்ல கூட அவரை பார்க்க முடியலையே?



டெல்லி:
வீரு பாய், இந்த ரேஞ்சுல கேப்டன்சி பண்ணினீங்கன்னா ரஞ்சி டீமுகுக் கூட உங்களை கேப்டனா போட மாட்டாங்க. செம பிக்சிங்க்னு எல்லாருக்கும் சந்தேகம் வர்ற அளவுக்கு சென்னை மேட்ச்ல ஏகப்பட்ட குளறுபடி பண்ணிட்டீங்க. ரொம்ப நம்பிக்கையோட இருந்தோம், இப்படி ஏமாத்திட்டீங்களே? என்னவோ போங்க.

மும்பை:
எதிர்பார்த்த மாதிரியே சொதப்பினதுக்கு நன்றி. இன்னும் பயிற்சி வேண்டுமோ? தோனி அடிச்ச அடியில அப்படியே ஷாக் ஆகி நின்னிட்டீங்க போலிருக்கு. அம்பானி ரொம்ப கறார் பேர்வழி. போட்ட முதலுக்கு ரிட்டர்ன் வரலேன்னா அந்த ஆள் என்ன வேணா செய்வாரு, ஜாக்கிரதை!



மற்ற டீமைப் பற்றி நிறைய அலசிட்டோம். ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல. மந்தீப் சிங், சுனில் நரைன், ராயல்ஸ் டீம் இவங்களுக்கெல்லாம் சரியான அவார்ட் குடுத்து நல்ல பேர் வாங்கிட்டாங்க. மீடியா வழக்கம் போல் இன்னும் ஒரு வாரத்திற்கு வெற்றி பெற்றவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் - நாளைய நாயகன், நிரந்தர தளபதி, கிங், டான் ஆப் கிரிக்கெட் போன்ற பட்டங்களோடு. இந்த வேளையில், சில புரியாத புதிர்களுக்கும் கேள்விகளுக்கும் விடை காண வேண்டியது அவசியமாகிறது- குறிப்பாக CSKவை குறிவைக்கும் கேள்விகளுக்கு:

கேள்வி - அது எப்படி சென்னை அணியினர் கடைசி ரெண்டு மேட்ச் மட்டும் அபரிமிதமாக ஆடி இறுதிப் போட்டிக்குள் நுழைய முடிந்தது?

பதில் - யோவ், அந்த ரெண்டு மேட்ச்ல ஒழுங்கா ஆடினாத்தான்யா இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பெயிலாகும் மாணவன் இறுதித் தேர்வில் பாஸ் ஆவதில்லையா, அது மாதிரி தான். விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி.

கேள்வி - அது எப்படி ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணிகள் சொல்லி வைத்தாற் போல் தோற்று சென்னைக்கு வழிவிட்டனர்? ஒரு வேளை பிக்சிங்காக இருக்குமோ?

பதில் - CSK மேல உங்களுக்கு ஏன் சார் இப்படி ஒரு கொலைவெறி? பூனே வாரியர் மாதிரி மொக்கை டீம்னு நினைச்சுட்டீங்களா? ஹஸ்ஸி, ராயினா, அஷ்வின் மாதிரி நல்ல ப்ளேயர்ஸ் அங்கேயும் இருக்காங்க. அவங்களும் பாதிக்குப் பாதி மேட்ச் ஜெயிச்சிருக்காங்க. நீங்க சொன்ன மூன்று அணிகளும் வெற்றிக்காக ஏங்கும் அணிகள். குறைந்த பட்சம் செமி பைனலிலாவது இடம் பிடிக்க வேண்டுமென்று தவம் கிடக்கும் அணிகள். அவர்கள் பிக்சிங்கிற்கு அடி பணி வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் ராயல்ஸ் லலித் மோடியின் கண்டுபிடிப்பு. பிசிசிஐ, மன்னிக்கவும், CSK கண்டிப்பாக அவர்களுடன் சமரசத்தில் ஈடுபடாது.



கேள்வி - CSKவுக்கு பிசிசிஐயின் அருள் எப்பொழுதும் உண்டு. அதனால் தான் நான்கு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைய முடிந்தது. அது பிசிசிஐயின் செல்லம்.

பதில் - அப்போ ஏன் சார் பைனல்ஸ் ஜெயிக்கல? ஆனால் இந்த கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. ஸ்ரீநிவாசன் பிசிசிஐ தலைவராக இருப்பதால் அந்த நிழல் CSK மீது படிவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் அவர்கள் பதினாறு மேட்சும் ஜெயிச்சிருக்கலாமே? மற்ற எல்லோரிடமும் வெற்றி தோல்வி என்று மாறி மாறி சந்தித்தவர்கள் மும்பையிடம் இரண்டு முறை தோற்க வேண்டிய அவசியம் என்ன? உங்கள் லாஜிக் படி பார்த்தால் ராயல்ஸ் முதல் எடிஷனை வென்றதும் பிக்சிங் தான். ஏனெனில் ராயல்ஸ் அப்போதைய IPL கமிஷனர் லலித் மோடியின் மறைமுக அணி.

கேள்வி - டெல்லி அணியினர் கண்டிப்பாகக் காசு வாங்கிவிட்டனர். இல்லையென்றால் மார்கல் போன்ற வீரரை முக்கியமான ஆட்டத்தில் சேர்க்காமல் இருப்பார்களா?

பதில் - முட்டாள்தனமாகத்தான் இருக்கிறது. ஆனால் மார்கெல்லை சேர்த்து அதற்குப் பதிலாக மஹேலாவையோ அல்லது ரஸ்ஸலையோ உட்கார்த்தி வைத்தாலும் நீங்கள் இதே கேள்வியைத் தான் கேட்பீர்கள். லீக் ஆட்டங்களில் பிரமாதமாக ஆடி கடைசி கட்டத்தில் சொதப்புவது டெல்லி அணிக்கொன்றும் புதிதல்ல. பரிசளிப்பு விழாவின் போது தோனியும் வீருவும் பத்து ஆடி விலகி நின்றே பேசியது, சம்பிரதாயத்திற்காக முகத்தைக் கூட பார்க்காமல் கை குலுக்கிக் கொண்டது போன்ற சம்பவங்கள் மூலம் அவர்கள் இருவருக்குமிடையே வாய்க்காத் தகராறு மிகவும் முற்றி விட்டதென்பதை உணர முடிந்தது. அப்படி இருக்கும்போது யார் வல்லவன் என்று நிரூபிக்க முயலுவார்களே ஒழிய பிக்சிங் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அவர்களைப் போன்ற மானங்கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது.



இன்னும் இதே பாணியில் பல கேள்விகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது சென்னை ஜெயிப்பது யாருக்கும் பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. அதற்கு காரணம் யார்? தோனியா? ஸ்ரீநிவாசனா? அல்லது வட இந்தியர்களுக்கு இருக்கும் "மதராசி" என்ற மனப்பான்மையா? தெரியவில்லை. CSK ஜெயித்தால் பிக்சிங் என்று சொல்பவர்கள் தோற்றால் மட்டும் "இந்தப் பசங்களுக்குத் திமிரு, நல்லா வேணும், தோனி சரியான வேஸ்ட், அவன் எங்க போனாலும் தோல்வி தான்" என்று கூறுவது வேதனை கலந்த வேடிக்கை..

ஆனால் மேற்கண்ட கேள்விகளுக்கு மக்களைக் குறை கூற முடியாது. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ பிக்சிங் என்ற கண்ணாடி அவர்களுக்கு அணிவிக்கப் பட்டுவிட்டது. தயவு செய்து அந்த கண்ணாடியைக் கழட்டி விட்டு கிரிக்கெட்டை பாருங்கள். இல்லையென்றால் மஞ்சக்காமாலை வந்தவனுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரிவது போல் உங்களுக்கும் எல்லாமே தவறாகத் தான் தெரியும்.

அடுத்த முக்கியமான விஷயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் நிதி உதவி. மிகவும் நல்ல விஷயம். வரவேற்கிறோம். ஆனால் அங்கேயும் உங்கள் அதிகார புத்தியைக் காட்டுவது அவசியமில்லாத ஒன்று. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் போன்ற ஏழைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்த நீங்கள் கீர்த்தி ஆசாத், கபில் தேவ் போன்றவர்களுக்கு அந்த நிதி உதவியை மறுப்பதன் மூலம் என்ன சாதித்து விடப் போகிறீர்கள்? தயவு செய்து கொஞ்சம் பெரிய மனுஷத்தனமாக நடந்துகொள்ளுங்கள். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கோப்பையை வாங்கித் தந்த கேப்டன் கபில் தேவ். ஆனால் அவரை 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் கூட பார்க்கும் வாய்ப்பை மறுத்தது சிறுபிள்ளைத்தனமே அன்றி வேறில்லை. குறைந்த பட்சம் IPL இறுதிப் போட்டியில் அவரை அழைத்து அவருக்கான தொகையைக் கொடுத்து வெற்றிக் கோப்பையை அவர் கையாலேயே குடுக்க வைத்திருந்தால் உங்கள் மீதான களங்கம் அனைத்தும் துடைக்கப்பட்டிருக்குமே? அந்த அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் கபிலின் விருப்பம். ஏனென்றால் அவர் உங்கள் மீது போட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கபில் இன்னா செய்தவராகவே இருக்கட்டும். நீங்கள் ஏன் அவர் நாண நன்னயம் செய்யக்கூடாது?



கடைசியாக ஒரு விஷயம், பெட்ரோல் விலையேற்றம், உணவுப் பொருட்கள் விலையேற்றம், ஊழல் செய்யும் மந்திரிகள், சுட்டெரிக்கும் வெயில், பவர் கட், டெங்கு, மலேரியா, வேலை நிரந்தரமின்மை, குடிநீர் தட்டுப்பாடு, சுகாதாரமில்லாத மருத்துவமனைகளில் இறக்கும் பிறந்த குழந்தைகள், கலப்பட சரக்கு, வெந்நீர் போல இருக்கும் பீர், தினசரி டிராபிக் ஜாம், பெண்களுக்கெதிரான தொடரும் பாலியல் கொடுமைகள் - இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு நடுவில் 600-700 ரூபாய் செலவழித்து டிக்கெட் வாங்கி, மேற்கொண்டு மைதானத்தில் மினரல் வாட்டருக்கும் நொறுக்குத்தீனிக்கும் 500-600 செலவழித்து மேட்ச் பார்க்கும் எங்களைப் போன்ற சாதாரண ரசிகர்களின் மகிழ்ச்சியிலும் வயிற்றிலும் மேட்ச் பிக்சிங் என்ற மண்ணை அள்ளிப் போடாதீர்கள். அது பிக்சிங்காகவே இருந்துவிட்டுப் போகட்டும், தயவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம். கிரிக்கெட்டின் மீதும் வீரர்களின் மீதும் நாங்கள் இன்னும் நிறைய அன்பு, மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதை தயவு செய்து குலைக்காதீர்கள். எது செஞ்சாலும் பார்த்து செய்ங்க, எங்களுக்குத் தெரியாம செய்ங்க.

என்ன பாக்கறீங்க? இந்த வாரம் மட்டுமல்ல, கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எல்லா வாரமும் நம்ம வாரம் தான். நாம ஆதரவு கொடுக்கலேன்னா சச்சின் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல லஞ்ச பாக்ஸ் எடுத்துக்கிட்டு ஏதோ ஒரு ஆபீசுக்கு போயிட்டு இருந்திருப்பாரு, தோனி அதே ட்ரெயின்ல டிக்கெட் கிழிச்சிக்கிட்டு இருந்திருப்பாரு. கெத்தா காலரை தூக்கி விடுங்க பாஸு.

கடைசியா ஒரு நேயர் லைன்ல வர்றார்,

ஹெலோ... என்ன சார்? டோர்னமென்ட் சீக்கிரம் முடிஞ்சிடுச்சா? இன்னும் ஒரு மாசம் நீட்டிச்சா நல்லாருக்குமா? "ரெண்டும் மாசம் கிரிக்கெட்டா? சரியான பைத்தியக்காரனுங்க" அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாடி சொன்னீங்களே? ஒஹ், ஒரு ப்ளோவுல சும்மா சொல்லிட்டீங்களா? சரி விடுங்க, ஸ்ரீனி கிட்ட சொல்லி நம்ம செலிப்ரிட்டி லீக்ல பைனல்ஸ் வர்ற ரெண்டு டீமையும் IPLல் சேர்த்துக்க சொல்லிட்டாப் போச்சு. 11 டீம், 110 மேட்ச். போட்டியை இன்னும் ஒரு இரண்டு வாரத்துக்கு இழுத்துடலாம். நடக்குமான்னு கேக்கறீங்களா? இது IPL பாஸ், இங்க எதுவும் நடக்கும்.

Jayaraman
New Delhi

Friday, May 25, 2012

If Mumbai fell like Rupee to $, Delhi fell like Facebook stocks!!!

The Purple Cap Morne Morkel is dropped for Andre Russell in a Semi Final clash? An all rounder like Irfan Pathan rested (cited injury grounds) for someone who know who Sunny Gupta? If Irfan is seriously injured, it is interesting the news did not surface anywhere in the past 4 days. Also, it is hard to believe an unfamiliar face making debut in a crunch game as this. However, nothing explains the logic of Morne Morkel rested. To me, Morne takes his spot first, remaining 10 fights for the next. And then, winning the toss and sending the opposition to bat is the best gift you can offer your counterpart. Finally, Sehwag demoting himself in the run chase, when the required run rate is over 11 is the biggest joke of the year. To sum it up, Delhi tactics warrants a probe. However, I'm not taking away any credit from Murali Vijay. It is a superlative performance to deliver a century in a playoff clash. If a player fails all season but sizzles in playoffs, more than happy to take it.

Anyways, a month ago, I wrote this piece on some of the captains who are either or may prove to be an Occupational Hazard for their sides in this IPL. And now we review, all those names mentioned (Sangakara, Daniel Vettori, Harbhajan Singh, Sehwag and Saurav Ganguly) have only lived up to the statement. However, Bangalore did replace Vettori with Kohli midway, but then the damage done prior was beyond repair.

Also, in one of my earlier posts titled IPL Time, I openly challenged, “How Dhoni can win this year’s Championship?” In 48 hours from now, I will have the answers. To confess, I’ve more or less started believing the Cup is written CSK all over it, unless there is a twist in store. Having got Knight Riders to qualify for the finals of IPL 2012, Gambir pretty much affirmed his leadership qualities. Now, we feel he got a raw deal. Unless he settles his difference with Dhoni quickly, the Vice Captaincy is not coming back anytime soon. And for Gambir to consider himself a deputy to Dhoni in all forms of the game, he should seriously consider occupying the spot to be vacated by Laxman in the near future. Either ways, Rahane’s technique is more than adequate to compensate the southpaw at the top of the order.

This IPL has thrown few wonderful talents and some of them could potentially make it to the squad that represents India in the World T20 at Sri Lanka in September 2012. Ajinkya Rahane, Mandeep Singh and Awana are my bets to make the cut. However the bowling quadrant is likely to experience significant changes considering Zaheer deserves to be rested, Vinay Kumar deserves to be dropped and Harbhajan Singh deserves to continue the exile. It is a long road ahead and we shall worry when we get there.

So, India gears up for the final of IPL 2012. Technically both teams have equal chance to win, but I perceive the outcome to be in favor of Chennai Super Kings.

Bottom line: Times, I wonder who bid to win this edition of IPL?


West Indies Vs England
From 138/6 to 306/6, this is Test Cricket at best. Sammy and Samuels please take a bow. I’m still trying to forget 8-0. Let me know if you already did.

Dinesh
Cricket Lover

Thursday, May 24, 2012

சச்சின் மனம் திறக்கிறார்...



எப்பப் பார்த்தாலும் நம்ம சச்சின் மேல எதாச்சும் குறை சொல்றதே சில பேருக்கு வேலையா இருக்கு. நம்ம மாஸ்டர் எதுக்கும் பதில் சொல்லாம சைலண்டா இருக்கறது அதைவிட கடுப்பா இருக்கு. எப்படியும் அவரை நேர்ல சந்திச்சு சில கேள்விகளுக்கு பதில் வாங்கிடணும்னு முடிவு பண்ணி மும்பை போனோம். ஒரு வழியா அடிச்சு புடிச்சு அப்பாயின்ட்மென்ட் வாங்கி... இதோ சச்சினின் மனம் திறந்த பேட்டி - அவரது புதிய வீட்டிலிருந்து:

சச்சின், "தைரியமா உள்ள வந்து உக்காருங்க, இந்த வீட்டுக்குண்டான எல்லா அனுமதியும் முறைப்படி வாங்கிட்டேன்"

"உங்களை ரொம்ப அறுக்க மாட்டோம், சில கேள்விகள், அதுக்கு உங்களோட தெளிவான பதில்கள், அவ்ளோ தான் சார்"

"கேளுங்க கேளுங்க"

முதல் கேள்வி...சச்சின் 100 அடிச்சா அந்த மேட்ச் விளங்காது - இது எல்லாரும் பரவலா பேசற ஒரு விஷயம், நீங்க இதை எப்படிப் பாக்கறீங்க?

சிரித்துக் கொண்டே..."என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே மக்களோட எதிர்பார்ப்பு தான். மக்கள் என்னோட உழைப்பு வீணாப் போகக்கூடாதுன்னு நினைக்கறாங்க. ஆனா அவங்க நினைச்சதுக்கு எதிர்மாறா நடக்கும்போது அவங்க எதிர்பார்ப்பு எனக்கெதிரா திரும்பிடுது. இந்தியா ஆடற எல்லா மேட்சிலேயும் நான் 200 அடிச்சு வின் பண்ணிக் குடுக்கணும்னு எதிர்பாக்கறாங்க. அது எப்படிங்க முடியும்? மற்ற டீம்லேயும் இதே மாதிரி நடக்குது. வேர்ல்ட் கப் காலிறுதியில பாண்டிங் நூறு அடிச்சாரு, ஆனா அவங்க தோத்தாங்க, பைனல்ஸ்ல ஜெயவர்த்தனே நூறு அடிச்சாரு. அவங்களும் தோத்தாங்க. இப்போ நடந்த சாம்பியன்ஸ் லீகல கூட வார்னர் செஞ்சுரி அடிச்சும் அவங்க டீம் தோத்துப் போச்சு. ஒரு பௌலர் அஞ்சு விக்கெட் எடுத்தும் அவங்க டீம் தோத்துப்போன கதை இருக்கு. தனிப்பட்ட ஒரு ஆளோட திறமைக்கும் டீம் வெற்றிக்கும் ஏன் முடிச்சுப் போடறாங்கன்னு புரியல. கிரிக்கெட்டும் கால்பந்து மாதிரி ஒரு டீம் கேம் தான். அதை ஏன் மக்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்கன்னு தெரியல"



ரெண்டாவது....சச்சின் நல்ல பேட்ஸ்மேன், ஆனா மேட்ச்வின்னர் கிடையாது

"எப்படியெல்லாம் யோசிச்சு கேள்வி கேக்கறாங்க? இண்டர்நெட்ல சச்சின் அப்படின்னு அடிச்சா நான் இதுவரைக்கும் கிரிக்கெட்ல என்ன பண்ணியிருக்கேன், எனக்கு எது ஸ்ட்ராங் எது வீக்குன்னு டக்குனு கிடைச்சிடும். அதனால நான் அந்த ஏரியாவுக்குப் போக விரும்பலை.
மக்கள் என்ன எதிர்பாக்கறாங்கன்னா, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரா ஆஸ்திரேலியாவுல ஆடணும். அவங்க ஒரு 400௦௦ ரன் டார்கெட் செட் பண்ணிட்டு நம்மள ஆட விடணும், நான் முதல்லேர்ந்து கடைசி வின்னிங் ஷாட் வரைக்கும் நின்னு செஞ்சுரி அடிக்கணும். எல்லா பௌலர்களையும் பாரபட்சம் பாக்காம அடிச்சு விளாசணும், Man of the match , Man of the series எல்லாமே நான் தான் வாங்கணும். இதுல வேடிக்கை என்னன்னா அவங்க ஆசைப்பட்ட மாதிரி நான் எல்லாம் பண்ணினாலும் "அவ்ளோதாம்பா, இனிமே அடுத்த 10 மேட்சுக்கு இவர் ஆடமாட்டாரு" அப்படின்னு கொஞ்சம் கூட கூசாம சொல்லிட்டு போயிடுவாங்க. என்னத்த சொல்ல போங்க!


3.....இந்த வீடு சம்பந்தப்பட்ட விவகாரம் ....

நான் எதுவும் சட்டத்துக்குப் புறம்பா செய்யலை. ஒரு வீட்டுக்குக் குடி போகறதுக்கு முன்னாடி முனிசிபாலிடி கிட்டேர்ந்து Occupation Certificate வாங்கணும். நான் வாங்கலை. ஆனா நான் வெறும் பூஜை மட்டும் தான் செய்யபோறேன், சாமான்கள் எதுவும் வீட்டுக்குள்ள ஏத்தமட்டேன்னு அவங்களுக்கு எழுதிக்குடுத்துட்டு தான் பூஜை பண்ணினேன். இதுல என்னால அரசாங்கத்துக்கு எந்த இழப்பும் இல்லைன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும். பெனால்டி தள்ளுபடி பண்ணினது அரசாங்கத்தோட முடிவு. Btw, என்னோட பழைய வீட்டைக் கூட நான் திருப்பிக் குடுத்துட்டேன்.ஆனா கொஞ்சம் தாமதமாக் குடுக்க வேண்டியதாயிடுச்சு. அதுல ஒரு சின்ன வருத்தம் எனக்கு இப்பவும் இருக்கு. சீக்கிரமே குடுத்திருந்தா வேற ஒரு கஷ்டப்படற திறமையான வீரருக்கு ரொம்ப உபயோகமா இருந்திருக்கும்.



4.....பெர்ராரி காருக்கு கஸ்டம் டியூடி தள்ளுபடி செஞ்சது...

ஆக்சுவலா இந்த மேட்டரை நான் சரியா கவனிக்காம விட்டுட்டேன். அரசாங்கம் எனக்குத் தர்ற மரியாதைன்னு நினைச்சு அதை தட்டிக் கழிக்காம ஏத்துக்கிட்டேன். இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களும் என்னை ஒரு வழிகாட்டியா பார்க்கும்போது நான் முன்னுதாரணமா இருந்திருக்கலாம். இனிமே சரி பண்ணிக்கறேன்.

5.....அக்தர் போலிங்குக்கு நான் பயப்படறேனா?

ஆக்சுவலா இது ஒரு ரெண்டும்கெட்டான் கேள்வி. பதில் சொன்னா நான் சின்னவனாயிடுவேன். சொல்லலேன்னா அவர் பெரிய ஆளாயிடுவார். வழக்கமா மைதானத்துக்குள்ள ஸ்லெட்ஜிங் நடக்கும். இவர் வெளியேயும் பண்றாரு. அவங்க பண்ற தீவிரவாதத்துல இதுவும் ஒரு வகை போலிருக்கு. But jokes apart, பௌலர்களின் திறமைக்கு நான் எப்பவுமே மரியாதை குடுத்திருக்கேன். அதுக்காக அவங்களுக்கு பயப்படறதா அர்த்தமில்லை. பயந்தா பேட் பிடிக்க முடியாது. In fact, அக்தரைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. ஏன்னா வேகம் இருக்கற அளவுக்கு விவேகம் இல்லை அவர்கிட்ட. கிரிக்கெட்லயும் அவருக்கு இனிமே இடமில்லை. பௌலிங் கோச்சாக் கூட அவரை எடுப்பாங்களான்னா சந்தேகம் தான். அதனால கடைசி முயற்சியா இப்படி ஒரு புத்தகம் போட்டுப் பொழச்சுக்கோன்னு அவருக்கு யாராச்சும் யோசனை சொல்லியிருப்பாங்க போல. அக்தர் பொழைக்கறதுக்கு சச்சின், டிராவிட், கங்கூலி மாதிரியான இந்தியர்கள் வேண்டியிருக்கு. நமக்கு எல்லாரையும் வாழ வெச்சுத்தான் பழக்கம். அழிக்கத் தெரியாது. அதனால அவரும் பொழச்சுக்கட்டும்(சிரிக்கிறார்)



6.....சாம்பியன்ஸ் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகமூட்டியது...

நானும் இதைப் பத்தி பத்திரிகைகள்ல படிச்சேன். ஒரு விஷயம் சொல்லுங்க, நீங்க ஒரு கம்பெனில வேலை செய்யறீங்கன்னா அந்த கம்பெனில இருக்கற வரைக்கும் அவங்களுக்கு விசுவாசமா இருக்கணுமா இல்லையா?. நான் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு உற்சாகமூட்டியதும் அது மாதிரி தான். அதுக்குப் போய் நான் ஏதோ பெரிய தேசத்துரோகம் பண்ணிட்ட மாதிரி பேசறது ரொம்ப வேதனையா இருக்கு. இங்கிலாந்து டூர் போகும்போதே நான் ஜுரத்தோட தான் போனேன். போதாக்குறைக்கு காலில் வேற அடி பட்டிடுச்சு. ஒரு பக்கம் ரசிகர்களோட நூறாவது செஞ்சுரி எதிர்பார்ப்பு, இன்னொரு பக்கம் இனிமே நமக்கு இங்கிலாந்துல டெஸ்ட் விளையாடற பாக்கியம் கிடைக்குமான்னு ஒரு கிரிக்கெட் வீரனா, ரசிகனா எனக்குள்ள இருந்த ஏக்கம் - அப்போ எவ்வளவு வலியும் வேதனையும் நான் அனுபவிச்சேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் (குரல் கம்முகிறது).

இனிமே அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்று நினைத்து கிளம்ப எத்தனித்தோம்.

"எங்க கிளம்பிட்டீங்க, உக்காருங்க" என்று சொல்லி விட்டு தொடர்ந்தார்.

"மேலே கேட்ட எல்லா கேள்விக்கும் பால் தாக்கரே ஸ்டைலில் "நான் ஒரு மராட்டியன், மராட்டியன் வளர்றது யாருக்கும் பொறுக்கலை" அப்படீன்னு ஒரே வரியில் பதில் சொல்லியிருக்கலாம். ஆனா நான் முதல்ல இந்தியன், அப்புறம் தான் மராட்டியன், ஹிந்து, சாய்பாபா பக்தன் எல்லாம். நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே மக்களோட எதிர்பார்ப்பு தான். அவங்க நினைக்கும்போது நான் செஞ்சுரி அடிக்கணும், அவங்க நினைக்கும்போது நான் ரிடையர் ஆகணும் - மைதானத்துல மட்டும் தான் நான் ரன் மெஷின். மற்றபடி, நானும் சாதாரண மனுஷன் தான்"



"சரி சார், எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களோட கேள்விகளுக்கெல்லாம் நிதானமா பதில் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, வர்றோம்"

சச்சின், "ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், நான் கிரிக்கெட்டின் கடவுளான்னு தெரியாது. ஆனா கண்டிப்பா தேசத்துரோகி மட்டும் இல்லை. இதை மட்டும் உங்க வாசகர்களுக்கு அழுத்தமா சொல்லிடுங்க

Jayaraman
New Delhi

Wednesday, May 23, 2012

MI went down like Indian Rupee to $


You can’t phrase a better headline than this to explain the Mumbai Indians run chase against Chennai Super Kings in the Eliminator of IPL 2012. Thanks to cricinfo commentary for the heading. And there is simply no better opposition than CSK to challenge any side in IPL, especially in playoff scenario. The Daredevils now face the litmus test in the Virtual Semi Final clash at Chennai.

It is my personal opinion that Mumbai should have played Pollard up the order (ahead of Franklin or even at No.3 ahead of Sharma). By any means Franklin and Dinesh Karthik are out of form and it would have made more sense to leverage on the pyrotechnics of Pollard, especially in this big run chase.

Tendulkar or Harbhajan it simply did not change their fortune in this IPL. And, MI will have to live with the Chokers Tag for yet another season.

Chennai Vs Delhi
Coming to the next big game before the finals, both teams have won one game apiece at home. And now, Delhi taking on Chennai at Chennai, it is advantage Super Kings without an element of doubt. Already message must have been sent to curators to prepare a slow surface so as the pace trio of Morkel, Yadav and Aaron don’t find any purchase. I think Sehwag must be seriously contemplating to choose Nadeem for Aaron or Vander Merwe for Taylor. The latter is an unlikely scenario. Either ways, the attack is very much one dimensional with all the three spinners being left arm orthodox. Also Sehwag has the added pressure of hiding/bowling 4 overs of Irfan Pathan. Unless Viru bowls himself, Delhi seriously lacks variety in attack. To keep the left hand right hand combination going, Sehwag should consider promoting Irfan Pathan up the order. Again, Sehwag don’t read too much into an opposition or match situations is known phenomenon.

From the home side perspective, Vijay and Raina are suicide weapons at the top of the order. Both the guys failing consistently is only adding pressure to the middle order. It is time Dhoni consider promoting Albie Morkel to No.3 and bring down Suresh Raina. Again, not sure Dhoni will be willing to experiment at this stage. Knowing Dhoni, he would not fear to do any trial if his hunch backs it.

Bottom line: WHISTLE PODU time!!!

Dinesh
Cricket Lover

Tuesday, May 22, 2012

Is it Fixed???

55 runs required of 33 balls with 6 wickets in hand, Delhi was truly on course to win the Qualifier against Knight Riders in IPL 2012. Especially those wickets in hand included the big names of Irfan Pathan and Ross Taylor. Some of the good finishers of the game currently in business. As Jayawardene got out at this point, shockingly a relatively unknown Pawan Negi walked into the crease ahead of Pathan or Taylor. I did not believe or want to believe all along that games in IPL are fixed. Now, I’m forced to doubt my beliefs.

In one of my earlier columns, I’ve mentioned how games get fixed at the elementary level. You don’t see somebody dropping a catch deliberately or a batsman getting himself out purposefully or a bowler bowling barrage of rank bad deliveries. Simply, the star players of the side will be benched to get the result in favor of the opposition. Negi walking into the crease ahead of Taylor and Pathan reminded me the old age style of fixing.

Sehwag & Co may have some points for defense such as Irfan Pathan was injured while bowling (but he finished his quota of overs) and Ross Taylor’s form may not be the best bet on the turning track etc., However, any of these reasons are far from satisfactory. I’m sure somebody could even be asking why Venugopala Rao batted ahead of Taylor or Pathan. As a matter of fact Pathan could have been a better choice ahead of of even Venugopala Rao in that situation keeping the left hand right hand combination going. Irfan Pathan also has a Test Hundred to back his credentials to bat ahead of Rao. I did not watch the post match presentation and so I’m not sure if anybody inquired about these strange tactics to Sehwag.

Earlier, 3 teams had relatively simple task to outclass third placed Mumbai Indians and the fourth placed Chennai Super Kings. But all these teams failed so lamely is worth the suspicion.

Bottom line: Are IPL games fixed?

Dinesh
Cricket Lover

Monday, May 21, 2012

IPL 5: ஏழாவது வாரம்





"இந்த போட்டோவிற்குப் பொருத்தமான வசனம் எழுதுவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்" - வாரப் பத்திரிகைகளில் போட்டி நடத்தும் அளவுக்கு ஒரு பிரமாதமான போஸ் குடுத்த கிங் கானுக்கு நன்றி. பஞ்சடிக்கும் தமிழ் ஹீரோக்களே, உஷார்! ஏன்னா உங்களை மாதிரியே அவரும் கையைத் தூக்கி விரலை நீட்டி ஒரு ரப் லுக் குடுத்திருக்கார். கூடிய சீக்கிரம் ஷாருக்கானும் "டேய், நான் ரொம்ப அச்சா, எனக்கு முன்னாடி நீ ஒரு பச்சா" அப்படின்னு தமிழில் பன்ச் அடிக்கலாம்.

மற்றபடி மேட்ச் பிக்சிங், ஷாருக்கானின் குழாயடி சண்டை, லியூக்கின் பாலியல் புகார் விவகாரம், மும்பை ரேவ் பார்ட்டியில் பூனே வீரர்கள் சிக்கியதுன்னு கிரௌண்டுக்கு வெளியே அபரிமிதமான ஆக்ஷன் நடக்குது. எல்லாமே பிக்சிங்கா இருக்குமோன்னு ஒரு எண்ணம் பரவலா எல்லா ரசிகர்களுக்கும் வந்துட்டதால கிரிக்கெட் பார்க்கறோம்கற எண்ணம் போய் சீரியல் பார்க்கற பீலிங் வந்திடுச்சு.





டெல்லி:

போன வருஷம் பாட்டம் ஆப் தி டேபிள், இந்த வருஷம் டாப்ல - முன்னேற்றம்னா இதான். சீக்கிரம் உடம்பு சரியாகி வாங்க பாஸ். ஜெயவர்தனே பாவம், கேப்டன்சி பண்ண ரொம்ப கஷ்டப்படறாரு. மார்கல், நெகி, வருண், யாதவ்னு உங்க போலிங் அப்பப்போ அடி வாங்கினாலும் ஒட்டு மொத்தமா பட்டையை கிளப்புது. டெல்லியும் சென்னையும் பைனல்ஸ் ஆடினா அதை விட சூப்பர் மேட்ச் இருக்க முடியாது.





கொல்கத்தா:

உங்களை விட உங்க ஓனர் ரொம்ப நல்லா ஆடறாருப்பா. போன தடவை மாதிரி சொதப்பாம இந்த தடவையாச்சும் பைனல் வரப் பாருங்க. காலிஸ் விக்கெட் எடுக்கறது உங்க டீமுக்கு பெரிய பக்கபலம். மும்பையை 140 அடிக்க விடாம அமுக்கினது சூப்பரோ சூப்பர். எப்படியாச்சும் டெல்லியை ஜெயிச்சு பைனல் போயிடுங்க. ஒரு வேளை தோத்தீங்கன்னா மும்பை அல்லது CSK கிட்ட மோத வேண்டி வரும். ரெண்டு டீமும் செம கடுப்புல இருக்காங்க. ரெண்டு பேர்ல எவன் வந்தாலும் உங்களுக்கு திவசம் தான், ஜாக்கிரதை!






மும்பை:

மறுபடியும் சென்னை கூட மோதறா மாதிரி ஆயிடுச்சே? உங்ககிட்ட ரெண்டு தடவை அடி வாங்கின அந்த சிங்கத்தை இந்த தடவை எப்படி சமாளிக்கறீங்கன்னு பார்ப்போம். ராயல்ஸ் கூட பத்து விக்கெட்ல ஜெயிச்சது உங்களுக்கு ஒரு புதுத் தெம்பை குடுத்திருக்கும். சச்சின் சார், சுனில் நரைன் பந்துல செம தடவு தடவி அவுட் ஆனீங்களே , அந்த வீடியோவை எவ்ளோ தடவை போட்டுப் பார்த்தீங்க? ஸ்மித், போல்லார்ட்னு ரெண்டு டைனோசர் இருக்கறது கூடுதல் அட்வான்டேஜ்.






சென்னை:

அதிர்ஷ்டம், ப்ளூக், லக், மச்சம், OC, சந்துல சிந்து பாடறது, கேப்ல கடா வெட்டறது - இந்த வரிசையில் CSKவையும் சேர்த்தால் அது மிகையாகாது. அப்படி ஒரு ஓசி கிராக்கி. விராட் கோலி எந்த பாப் கட்டுக்கு ஏமாந்தாரோ, இல்லை மால்யா எந்த கெட்டிச்சட்னிக்கு ஆசைப்பட்டாரோன்னு தெரியலயே! இல்லேன்னா பெங்களுரு டெக்கன் கிட்ட தோக்கறதுக்கு வாய்ப்பே இல்லையே! எது எப்படியோ, தொடர்ந்து அஞ்சு வருஷம் செமி பைனல் வந்த டீம்னு பேர் வாங்கிட்டீங்க. இனிமேலாச்சும் ஒழுங்கா ஆடுங்கய்யா. மும்பை கிட்ட ரெண்டு கன்னத்திலும் நல்லா பழுக்க வாங்கினது போதும். ஒழுங்கு மரியாதையா ரிவென்ஜ் எடுக்கற வழியைப் பாருங்க.





பெங்களுரு:

நீ டெல்லி கூட 50க்கு மேல அடிக்கும்போதே நினைச்சேன், உங்க டீம் கண்டிப்பா வெளிய போயிடும்னு. ஏன்னா நீ எப்போ எங்க அடிச்சாலும் அங்க சீரீஸ் தோல்வி தான் - ஆஸ்திரேலியாவுல, ஆசியா கப்ல. கெயில் எவ்ளோ அடிக்கறானோ அவ்வளவும் போலிங்க்ல தாரை வார்க்கணும்னு முடிவு பண்ணிட்டே போலிங் போடுவீங்களா? சரக்கு அடிச்சோமா, சைடு டிஷ்ஷை நக்கினோமான்னு இல்லாம ஏன்யா உங்காளுங்க சில்மிஷம் பண்றாங்க? ஒண்ணு புரியுது, எந்த ஊர்க்காரனா இருந்தாலும் சரி, அடுத்தவன் போண்டாட்டிக்குத் தான் ஆட்டையைப் போடறானுங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும்னு அண்ணா சும்மாவா சொன்னாரு!



ராயல்ஸ்:

புதுப்பசங்களை நல்லா கட்டி மேய்ச்சதுக்கு முதல்ல உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட். இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம். எதிர் பார்த்த மாதிரியே டைட் சொதப்பிட்டான். கடைசி மேட்ச்ல ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாம போனது ரொம்ப மோசம். ஒரு வேளை விருப்பமே இல்லாம விளையாடினீங்களோ? வாயில ரெண்டு பக்கமும் ஏதோ ஒரு உருண்டை உருளுதே? ஜெய்ப்பூர் போய் பான் பராக் போட ஆரம்பிச்சிட்டீங்களா? IPLலில் என் எதிர்காலம் என்னன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கீங்க. காதோரம் வேற நரை தட்டிடுச்சு. அதனால அடுத்த வருஷம் கேப்டன் வேலையெல்லாம் விட்டுட்டு அறிவுரையாளரா மாறிடுங்க. உங்க ஒனருக்குப் பையன் பிறந்திருக்கானாமே? வாழ்த்துக்கள்.




பஞ்சாப்:

உங்களுக்கு ஆறாவது இடம் தான்னு நாங்க போன வாரமே சொன்னோமே, படிக்கலியா நீங்க? இருந்தாலும் பரவால்ல, இந்த தடவை கொஞ்சம் நல்லாவே உழைச்சீங்க. கடைசி ரெண்டு கேம்ல கில்லியைக் கொண்டு வந்தது தான் பிரச்சினையோ? பேசாம அவரை மென்டர் ஆக்கிட்டு ஹஸ்சியை நிரந்தர கேப்டனாக்கிடுங்க. அவானா, மந்தீப் சிங் மாதிரி இளசுகளுக்கு ஒரு வெளிச்சம் கிடைச்சிருக்கறது சந்தோஷமான விஷயம்.




டெக்கன் சார்ஜர்ஸ்:

நண்பேன்டா! அம்மா, காயத்ரியம்மா! நீ வாழ்க, உன் குலம் வாழ்க, உங்க டீம் வாழ்க. ராயல்சையும், பெங்களுரையும் தோற்கடிச்சு சென்னை வயித்துல பாலை வார்த்தீங்களே, நன்றி சொல்ல வார்த்தையே இல்லை போங்க - இதுக்கு நன்றிக் கடனா அடுத்த சீசன்ல உங்க கிட்ட ரெண்டு மேட்ச் தோத்தாலும் தகும். ஆனா உங்க டீம் இப்படியே இருந்திச்சு, அடுத்த வருஷம் ரொம்ப கஷ்டப்படுவீங்க. முதல்ல ஒரு நல்ல கேப்டனா போடுங்க. வெள்ளைக்கும் சங்குவுக்கும் செட் ஆவலைன்னு ரொம்பத் தெளிவாத் தெரியுது.




பூனே:
பன்ச் பாலா மாதிரி ரைஸ் ஆவீங்கன்னு பார்த்தா இப்படி பஞ்சர் ஆயிட்டீங்களே? போட்டி ஆரம்பிக்கும்போது கட்டதுரையா இருந்த நீங்க முடியும்போது கைப்புள்ளையா ஆனது பரிதாபம். ஏற்கனவே சொன்ன மாதிரி பெரிசா லட்சணமா அறிவுரை சொல்றதோட நிறுத்திக்கோங்க. செயல்படுத்தறேன்னு இறங்கினா இப்படித் தான் ரத்தகாவெல்லாம் வாங்க வேண்டி வரும். ஆக்ஷன் வேலையெல்லாம் அடுத்த வருஷம் யுவி பார்த்துக்குவான். யோவ், கிளார்க், ரெண்டு மேட்சுக்கு நடுவுல ஆஸ்திரேலியா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கியே, பயங்கரமான ஆளுய்யா!


காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:

வல்தாட்டி - சென்ற முறை எல்லோரையும் வெளுத்து வாங்கிய இவரது சாயம் இந்த முறை வெளுத்துவிட்டது.

சகீர் கான் - தலை மயிர் முதற்கொண்டு எல்லாத்தையும் மாற்றிப் பார்த்தும் ஒரு ஓவர் கூட ஒழுங்காகப் போட முடியவில்லை. சச்சின் ரிடையர் ஆகணும்னு சொல்ற பெரிய மனுஷங்களே, இந்த மாதிரி ஆளுங்களை கண்டுக்கவே மாட்டீங்களா?

ஹர்பஜன் - உங்களுக்கு மன்மோகன் சிங்கே பரவால்ல. அவராச்சும் அட் லீஸ்ட் மினிஸ்டர் மீடிங்க்ல ஒண்ணு ரெண்டு வார்த்தையாச்சும் பேசறாரு. உங்க டீம்ல உங்களைத் தவிர எல்லாரும் கூடிக்கூடிப் பேசி ப்ளான் போடறாங்க. அவங்க சொல்ற இடத்துல நீங்க போய் நின்னுக்கறீங்க. நீங்க தான் கேப்டன்னு பரிசளிப்பு விழாவின் போது தான் தெரிய வருது.

அஷ்வின் - கை தான் திரும்புதே ஒழிய பந்து கொஞ்சம் கூட திரும்ப மாட்டேங்குதே தலை? ஒரு வேளை செமி பைனல்ல உங்க திறமையை காட்டுவீங்களோ?.

முரளி கார்த்திக் - அப்படியே போயிடுங்க. இனிமே கமெண்டரில கெஸ்ட் வேஷம் மட்டும் தான் உங்களுக்கு.

பியுஷ் சாவ்லா:நீ போலிங் போட்டு நிமிர்றதுக்குள்ள பந்து பவுண்டரிக்குப் பறக்குது. தயவு செஞ்சு கிரிக்கெட்டை விட்டுப் போயிடுங்க. அது கிரிக்கெட்டுக்கு நல்லது.

பலிகடா ஆப் தி சீசன்:

ரஹானே - எவன் நல்லா ஆடினாலும் நமக்குப் பொறுக்காது, உடனே உசுப்பேத்தி அவனை நாறடிச்சிடுவோம். முதல் மூணு மேட்சிலேயே அடுத்த டெண்டுல்கர் இவர் தான்னு சொல்லி இந்த பச்சை மண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டாங்க. அவரும் அதை உண்மைன்னு நம்பி இன்னும் நல்லா ஆடணும்னு நினைச்சு சொதப்பி சிக்கி சீரழிஞ்சு நிக்கும் போது தான் மக்களோட திருவிளையாடல் அவருக்குத் தெரிய வருது.

லியூக், பெங்களுரு:

உங்க டீம் முதலாளி பொண்ணுங்க கூட அப்படி இப்படி இருக்கறதைப் பார்த்துட்டு உங்களுக்கும் அப்படி ஒரு ஆசை வந்திடுச்சு போல. அவர்கிட்ட சரக்கு இருக்குங்க. ஆனா நீங்க கூலிக்கு மாரடிக்க வந்துட்டு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யலாமா? சரி போகட்டும் விடுங்க. கோர்ட்ல பொண்ணு கையைப் புடிச்சு இழுத்தியான்னு கேப்பாங்க. என்ன கையப் புடிச்சு இழுத்தியான்னு ஜட்ஜ் கடுப்பாகற வரைக்கும் வடிவேலு ஸ்டைலில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருங்க. அப்போத் தான் மன நிலை சரியில்லைன்னு சொல்லி உங்களை பேக் பண்ணி அனுப்பிடுவாங்க.

மும்பை கிரிக்கெட் அசோசியேஷனுக்கு:

ஷாருக் பண்ணினது காமெடின்னா நீங்க அவருக்கு அஞ்சு வருஷ தடை போட்டீங்க பாருங்க, அது கீமடி. வான்கடே ஸ்டேடியம் என்ன கேட் ஆப் இந்தியாவா? வாரா வாரம் போய் டைம் பாஸ் பண்றதுக்கு? அந்த ஆளே வருஷத்துல ரெண்டு நாளோ மூணு நாளோ போகப் போறான். உங்க கடமை உணர்ச்சிக்கும் நியாய உணர்ச்சிக்கும் ஒரு அளவே இல்லையா மராத்திய மைந்தர்களே? பை தி பை, மேட்ச் பார்க்க வர்றவங்கள்ல பல பேர் சீயர் லீடர் பெண்களை தகாத வார்த்தைகளாலும் செய்கைகளாலும் ஈவ் டீசிங் பண்றாங்களே, அவங்களையெல்லாம் நீங்க ஒண்ணுமே செய்ய மாட்டீங்களா?

இந்த வார கேள்வி:

பஞ்சாப் வீரர் பணம் வாங்கினார், டெல்லி வீரர் பணம் வாங்கினார்னு சொல்றேளே, அந்தப் பணத்தைக் குடுக்கறவாளைப் பத்தி ஒரு செய்தியும் வரமாட்டேங்கறதே, அது ஏண்ணா?  இருங்க, ஷங்கர் சார் கிட்ட சொல்லி இதை மையமா வெச்சு ஒரு படம் பண்ணச் சொல்றேன்.

இந்த ஓவரில் 22 ரன் போகப் போகிறது என்று தெரிந்தும் உயிரை பணயம் வைத்து நெஞ்சை நிமித்தி சளைக்காம போலிங் போடறாங்களே, அவர்களுக்கு மரியாதை பண்ண வேண்டாமா? ஸோ, இது பௌலர்கள் வாரம்.

Jayaraman
New Delhi

The carnival is coming to an end...

After so much of battle for a spot in the top 4, lots of permutations and combinations popping out every day on how each team could still claim a place, the penultimate week of cricket in IPL was a big letdown!!!

Three teams had the chance to go past the fourth placed Chennai Super Kings or even the third placed Mumbai Indians during the week 7 of IPL. Punjab had to win 2 out of their last 3 games, Rajasthan had to win 2 out of 2 and Bangalore had to win only 1. Surprisingly all these teams fizzled and fizzled badly is only an understatement. Anyways, it proved right per the predictions made at the start of the tournament. It is the big boys game and all these Rajasthans, Punjabs, Punes and Deccans can only imagine giving a fight rather dream a title win. But these teams don’t have to feel any low considering there are only 9 teams that play in IPL and they play twice against each other during league stages, out of which top 4 get to play yet again (once  or twice) before THE END.

So, what is special when Delhi takes on Knight Riders for the first Qualifier?
Nothing special except it is a playoff game with an opportunity for both teams to comeback despite a loss here. Both won one game against the other and importantly lost their home games. This time they will be battling in a neutral venue. On paper Delhi is a stronger batting unit, while Knight Riders have the mystery of Sunil Narine to tackle all the issues in only 4 overs. Knight Riders beat Delhi when they fielded Sunil Narine. I think they will also field Merchant De Lange to add to the element of surprise. But that will also put them in tough spot to choose between McCullum and Shakib Al Hasan. Considering the nature of the wicket they should choose Shakib but that will put their batting even more vulnerable. But fortune favors the brave, not sure what will be Gambir’s call. Surely time has arrived to promote DB Das up the order. If I were to pick my favorite for the game, it will be Dilli hai mere yaar.

So, what is special when Chennai takes on Mumbai during the Eliminator?
Mumbai Indians have beaten Chennai Super Kings both home and away during the league stages. However, that alone does not make them firm favorites considering their batting vows exhibited so far in the tournament. The good news is they are taking on CSK in a batter friendly surface of Bangalore. Though the opening combo of Smith and Tendulkar (I expected Tendulkar and Dinesh Karthik to open this game) fired against Royals, it is only a temporary solution to the perennial problem they have been dealing the whole season. If the same combo come again, I won’t be surprised Dhoni operating a left spinner right from the start of the innings. On paper, it could be advantage Mumbai, but I’ve no guts to bet against Dhoni’s luck. By any means, Dhoni’s CSK are a more worthy opponents to take on Delhi or Knight Riders in the Virtual Semi Finals. Again, this year around, Chennai Fortress doesn’t seem to be the same for home team if and when they qualify for this virutal second Semi Finals.

Ajinkya Rahane, Mandeep Singh, Parvinder Awana, Gurukeerat, Chandila, Shahbaz Nadeem, Pawan Negi, Debrata Das, Mayank Agarwal are some of the domestic talents who made a name for themselves this IPL season.

Sunil Naraine is the lone new recruit to create big impact from the foreigners list.

Yusuf Pathan, Irfan Pathan, Manoj Tiwary, Ravindra Jadeja, Virat Kohli, Murali Vijay, Badrinath, Ashwin, Dinesh Karthik, Sourab Tiwary, Suresh Raina, Valthaty, Harbhajan Singh, Piyush Chawla, Vinay Kumar, Dhoni, Sourav Ganguly were the big let downs from the Indian circuit.

Sangakara, Ross Taylor, Clarke, Jayawardene were a pale shadow of themselves this IPL.

Sad to see talents like Chandimal, Tamim Iqbal, Doug Bracewell, Andre Russell remain bench warmers majority or the whole season.

Bottom line: The carnival is coming to an END

Dinesh
Cricket Lover

Friday, May 18, 2012

the HULK in IPL

Dr. Bruce Banner’s sole objective is to keep the days without incidents. By “incident” means, his alter ego tears out and cause mayhem. Though the audience craves for the single look of HULK, Dr. Banner’s purpose doesn’t change. IPL pretty much reminds HULK. The fans appetite may have been served by a Shah Rukh Khan’s scuffle with MCA Security Guards or Luke Pomersbach assault on a woman and her fiancé or the sting operation that blew the whistle on player attempting to negotiate deals or the rave party where few players detained on charges of consuming banned substances etc., However, the management of IPL simply doesn’t have a choice but to keep these incidents low to none. Unless BCCI intends to sell IPL for audience cravings.

Every follower of IPL has brains to understand that some players are overpaid than the contractual obligation. Everyone also recognize that it is the system at fault and not the player or the franchise. A player of Gayle is worth only half million dollars is the biggest joke. A seasoned domestic pro like Ambati Rayudu can command only 30 Lakh Rupees is a statement for laughter therapy. And there is no way Ambati Rayudu is going to play for India (we all know the reasons) that will improve his stakes. Then there is a sting operation that only reveals what we already know to happen somewhere behind doors. In my books, it does not put the players or franchise ill for negotiating deals (I don’t intend match/spot fixing here, when I use the word deal). At the end of the day, no player here in IPL is playing for pride (country) or a franchise working hard day and night for the development of cricket in India. Everyone involved including the board does this for money. Unearthing new talents, improving the economy, providing entertainment values, creating job opportunities are only byproducts. It is a pure business model and BCCI should allow the business end of it to flourish. Probably the whistle blower is a perfect opportunity to revisit the framework.

BCCI dictating the price tag of a first class cricketer doesn’t sound logical in the prevailing scenario considering the Supply Vs Demand issue. BCCI may argue that they are keeping the hunger alive for these cricketers to represent the nation. At the end of the day, we already witness half the West Indian side playing here in IPL rather their country, the Sri Lankan players altered their England Tour Itinerary few years ago to play IPL and some International Cricketers retired early for a pie here. A conflict of interest exhibited by some sect of players in the same league does not send right signal to the first class cricketers that BCCI is trying to protect. Also no price tag policy for foreign imports with same first class background adds up the disparity.

On the contrary, renowned stars like Brian Lara, VVS Laxman, Sourav Ganguly only bite dust in the auctions despite the International background. That proves representing the country alone is not an incentive for the player to command money in IPL. Even the potential India cricketers as Chetashwar Pujara, Wriddhiman Saha, Abinav Mukund are found to be bench warmers for their franchises some years now. That pretty much explains, the format requires a different skill and the tournament operates under a different business model. These are perfect pointers to lift the cap on first class cricketers which will potentially curb the occurrence of murky dealings in the future. In Dr. Banner’s term, an opportunity to keep the incidents low.

If/when the cap is lifted for first class players; some sect might argue the same to be a huge deterrent for the aspiration to become India cricketer. At the end of the day even the fans fail to turn up (England & West Indies series) to support their national team, but throng the stadiums to shore up their IPL franchises. So, what is the big deal in serving the nation?

There will be concerns for this cap lift as the gap will start wider between the strong and weak clubs. But, it is the cost to pay to keep the system clean.

The day the weaker franchise gets the right to choose the first draft pick and sell the player in the subsequent trading window handsomely and transparently, can only bring sanity to the business model.

Someday, fans like me will learn to shift our loyalties from the national side to our franchises. Until then, there is always the failure of Super Kings/Knight Riders to soothe our souls. (You know why). Even this attitude will fade out in the following generations.

Dinesh
Cricket Lover

Wednesday, May 16, 2012

A drama without curtains...

At the start of this season, we pretty much knew that there will be an off field drama which would draw the necessary attention to spice up the Indian Premier League. Back then we didn’t know what it would be, except we were sure to have one. Please, read IPL Time, if you were to know what happened in the previous editions.

Thanks to the sting operation that puts IPL on spotlight in the international arena for non field cricket related actions. More than the previous years, this season’s drama quiet matched the global trend. Not to any surprise, no big fish caught except some name less cricketers as Shalabh Srivastava, Amit Yadav, Abhinav Bali, TP Sudhindra, Mohnish Mishra are suspended alleging corruption charges. I’m sure none of these cricketers would have gone on to make a name for themselves in the world cricket purely for their cricketing skills. Thus they also become a scapegoat, in other words a target for such sting operations. Just two days before the news broke out IPL employed an independent Anti Corruption Unit to monitor the league. It is too much an irony that the team has a case to solve soon they assumed role. It happens only in India.

Since the players involved were formerly associated with ICL, there is a speculation that this could be an ICL initiative to shun IPL. In other words, ICL employed its soldiers to take revenge for the injustice done to them. Anyways, we have an able team to solve the mystery.

So what do we make out this Soap Opera?
Lots of times, IPL remind TV soaps. Usually the TV soaps ride by the pulse of the audience. You should see the pattern in IPL too. After 3 years of continuous failure, here we witness ascendance of Knight Riders with a new leader in command. Chennai Super Kings caught off guard most of the season peak at the right moment to keep the puzzle intact “How could Dhoni Boys do it again?” A star studded Mumbai line up struggle the entire season to win some of the elementary games and still fancy a spot in the top 4. There are the weak links as Rajasthan & Punjab who amaze the audience with logic defying cricket to keep the competition afloat. Then there is a customary Deccan whose only purpose is to get beaten by any and everyone in the league.

Do some of these things really mean to happen or it happens because the audience pulse demanded it? No way, I intend to say games are fixed. I only say, without a script, without a screenplay, the action still mirror TV Soaps. Probably the reason IPL is sold as CRICKETAINMENT. An ideal entertainment with International Flavor, High Production Values, Glamour Pigeons, Powerful Bosses, Raw Emotions, Large Audience, Heroes, Villains, Comedians, Sentiments, Suspense, Crime, Vengeance etc., packaged with the game of cricket.

Dinesh
Cricket Lover

Tuesday, May 15, 2012

IPL 5: ஆறாவது வாரம்


"த்ரில்" வெற்றி - அநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் இந்த வார்த்தையை நிரந்தரமா பிரிண்ட் பண்ணி வெச்சிருப்பாங்கன்னு நினைக்கறேன். "என்னோட பத்து வருஷ சர்வீஸ்ல இந்த மாதிரி ஒரு கொலையை நான் பார்த்ததே இல்லை" அப்படின்னு சினிமாவுல போஸ்ட்மார்ட்டம் பண்ற டாக்டர் சொல்ற மாதிரி சொல்லலாம், அந்த அளவுக்கு வரலாறு காணாத ஆக்ஷன்! இனி வரும் 10 நாட்களும் இவ்வாறே இருக்குமென்பதால் பலஹீனமான இதயம் உள்ளவர்கள் வழக்கம் போல சீரியல் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



பூனே:
யோவ் தாதா, நீ ஒரு பெரிய மனுஷன்னு நம்பி பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சா நீ இருக்கற பருப்பை பூரா நோண்டி எடுத்து வெளிய போடறியே? யூத்துக்கும், யூத் மாதிரி இருக்கறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குன்னு இப்பவாச்சும் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன். கண்டிப்பா உங்களால குனிஞ்சு பந்தை பொறுக்க முடியாதுன்னு எல்லா பயலுக்கும் தெரிஞ்சிருக்கு. உங்க கையில குடுத்துட்டு அநாயாசமா ரெண்டு ரன் ஓடறாங்க. கேப்டன்சி தான் உங்க பலம். அதுவே சொதப்பும்போது டீசெண்டா கழண்டிக்கறது தான் பெரிய மனுஷத்தனம். ஆனது ஆயிடுச்சு, அடுத்த வருஷமாச்சும் கமெண்டரி சொன்னோமா, காசு சம்பாதிச்சோமா, நடுவுல சோனி டிவில வர்ற பொண்ணுங்களை சைட் அடிச்சோமான்னு இருங்க. அதை விட்டுட்டு "நானும் ப்ளேயர் தான், நானும் வீரன் தான்" அப்படின்னு கடுப்பேத்தாதீங்க மை லார்ட்.




கொல்கத்தா:
பிராவோ கடைசி பந்துல சிக்ஸ் அடிச்ச அதிர்ச்சியிலேர்ந்து இன்னனும் மீளலை போலிருக்கு? அதென்ன சென்னைக்கெதிரான மேட்ச்ல மட்டும் பாலாஜியை எறக்கறீங்க? சென்னையோட வீக்னெஸ் அவருக்குத் தெரியும்கற எண்ணமா? பாலாஜியோட வீக்னெஸ் என்னன்னு அவங்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியுமே மிஸ்டர் கம்பீர்! ஒரு வேளை அடுத்த மேட்ச் மும்பைகிட்ட தோத்தீங்கன்னா உங்க தலையெழுத்தை நிர்ணயிப்பவர் தாதா தான், ஞாபகம் வெச்சுக்கோங்க.



டெக்கன் சார்ஜர்ஸ்:
இந்த உலகத்திலேயே இருபது ஓவர்ல 190 ரன் அசால்ட்டா அடிச்சுட்டு ஜஸ்ட்-லைக்-தட் தோக்கறது நீங்களாத்தான் இருக்கும். மிஸ்டர் சங்கு, ஒரு நாள் போல வரிசையா தோத்துட்டு அதுக்கு வெக்கமில்லாம விளக்கம் வேற குடுக்கறீங்களே, போரடிக்கல? அடுத்த ரெண்டு மேட்ச்ல தயவு செஞ்சு தலையைக் காட்டாதீங்க. அப்படியே இலங்கைக்கு கள்ளத் தோணியில போயிடுங்க. உங்க டீம் இருக்கற ரேஞ்சுக்கு எவன் வேணா கேப்டனா இருக்கலாம் – செத்த கிளிக்கு கூண்டெதுக்கு? ஷிகர், பஞ்சாபும் பூனேவும் உங்களை இழுக்கறதில ஆர்வமா இருக்காங்களாமே, உண்மையா?



டெல்லி:
மிச்சம் இருக்கற மூணு மேட்ச்ல ஒண்ணு ஜெயிச்சாலும் உங்களுக்கு பெர்த் கன்பார்ம் ஆயிடும்.சென்னை கிட்ட தோத்தது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. நீங்களும் வார்னரும் அவுட் ஆயிட்டா உங்க டீம் என்ன கதிக்கு ஆளாகுதுன்னு இப்ப உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும். பார்த்து சூதானமா நடந்துக்குங்க.




ராயல்ஸ்:
நீங்க செமி பைனல் வர்றது கஷ்டம் தான். எதாச்சும் மிராக்கிள் கண்டிப்பா நடந்தே ஆகணும். இருந்தாலும் உங்களது சூப்பர் டீம். சென்னை கிட்ட தோத்திருக்க வேண்டாம். அனேகமா டிராவிட் அடுத்த IPL ஆடறது சந்தேகம் தான். கமெண்டரியில சேர்த்துப்பாங்களான்னு தெரியல. ஆனால் கோச் பதவி நிச்சயம்.


சென்னை:
ஒரு மேட்ச் கூட ஒழுங்காவே ஜெயிக்க மாட்டீங்களா? இல்லை, இப்படி கடைசி பால் வரைக்கும் மேட்சை கொண்டு போறதுக்குத் தனியா பேமென்ட் எதாவது தர்றாங்களா? ஒவ்வொரு மேட்சும் குப்பு குப்புன்னு வேர்க்குதே ஒழிய காய்ந்த பாடா இல்லையே? நீங்க மட்டும் செமி பைனல் வந்துட்டீங்க, அவனவன் கடுப்பாயிடுவான். எல்லாரும் ஹார்ட் வொர்க் பண்ணி பைனல் வர்றாங்க. நீங்க ஸ்மார்ட் வொர்க் பண்றீங்க. எவ்ளோ தூரம் வேலைக்காவுதுன்னு பார்ப்போம்.




மும்பை:
சென்னைக்குத் தம்பி நான் தான்னு அவங்களை மாதிரியே கடைசி வரைக்கும் இழுத்து விளையாடறீங்களே! மிச்சம் இருக்கற ரெண்டு மேட்ச்ல ஒண்ணு ஜெயிச்சாலும் நீங்க safe தான். ஆனா நீங்க செமி பைனல் எல்லாம் ஜெயிப்பீங்கன்னு தோணலை. டெண்டுல்கர் சீக்கிரம் அவுட் ஆகறது செண்டிமெண்டா வொர்க் ஆவுது. அப்படியே மெயின்டைன் பண்ணச் சொல்லுங்க. ஏன்னா இனிமே என்ன அடிச்சாலும் ஆரஞ்சு கேப்பெல்லாம் கிடைக்காது (என்னது? அவர் ரெகார்டுக்காக விளையாடறவர் இல்லையா? சரிங்க)



பஞ்சாப்:
ரெண்டு மேட்ச் டெல்லி கூட, ஒரு மேட்ச் சென்னை கூடன்னு கொஞ்சம் சிக்கலான நிலைமையில தான் இருக்கீங்க. இதைத் தாண்டி செமி பைனல் வந்தீங்கன்னா அது உழைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியா இருக்கும். உங்க டீம்ல இருக்கற சில பேர் ஸ்டிங் ஆபரேஷன்ல மாட்டியிருக்கறது உங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனா அப்படி எதுவும் இருக்காதுன்னு நம்பறோம். டேவிட் ஹஸ்ஸி மாஞ்சு மாஞ்சு கேப்டன்சி பண்றாரு, ஆனா எல்லாரும் கில்லியை ஏன் புகழறீங்கன்னு புரியல. ஒரு வேளை அவர் ஆடாததே டீமுக்குச் செய்யற பெரிய உதவியோ?




பெங்களுரு:
முக்கியமான மேட்ச்ல பச்சை டிரஸ் போடாதீங்கன்னு போன வருஷமே சொன்னோமே, மறந்துட்டீங்களா? இப்படி மும்பைகிட்ட தர்ம அடி வாங்கிட்டீங்களே! சுற்றுப் புறச் சூழலை பாதுக்காக்கப் போய் இப்ப உங்க சூழலில் மாசு படிஞ்சிடுச்சு பார்த்தீங்களா? அடுத்த ரெண்டு மேட்சும் ஜெயிச்சே ஆகணும் தம்பிங்களா. விராட் கோலி தான் இந்திய அணியோட அடுத்த கேப்டன்னு அடிச்சுச் சொல்லலாம் - அந்த அளவுக்கு பேட்டிங் படு கேவலம். வினய் குமாரெல்லாம் ஒரு ஆளுன்னு டீம்ல வெச்சிருக்கீங்களே, விளங்கின மாதிரி தான். டெல்லி கிட்ட உங்க பாச்சா (அதாவது கெயில் மற்றும் டிவில்லியர்ஸ், மத்தவங்களை நாங்க கணக்குல சேர்க்கறதே இல்லை) பலிக்குதான்னு பார்க்கலாம்.

சோனி டிவிக்கு: ஏதோ அஞ்சாறு பொண்ணுங்களை ரெகார்ட் டான்ஸ் மாதிரி ஸ்டூடியோவுக்குள்ள ஆட விட்டுக்கிட்டிருந்தீங்க ஓகே, இப்ப என்னடான்னா இங்கிலாந்து பெண்கள் டீம்ல விளையாடிய ஒரு பெங்காலி அம்மணியை கமெண்டரியில சேர்த்திருக்கீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? அந்தம்மா டெமி மூர் ஸ்டைலில் தொடை தெரியற மாதிரி கால் மேல கால் போட்டு உட்கார்றதும், தேவையே இல்லாம குனிஞ்சு குனிஞ்சு பேசறதுமா பட்டையைக் கிளப்புது. எதுக்கும் பக்கத்துல உட்கார்ற ஆம்பளைங்கள வார்ன் பண்ணி வைங்க. இல்லேன்னா இவங்க பாட்டுக்கு பந்து பேட்டுன்னு எதையாச்சும் எக்குத்தப்பா பேசப் போய் அந்த அம்மா டபிள் மீனிங்க்ல பேசறதா நினைச்சுக்கிட்டு உங்க மேல பாலியல் புகார் பண்ணிடப் போறாங்க.

தாய் மண்ணே வணக்கம் - கிரிக்கெட்டின் தாயான மைதானத்தை மறக்கலாமா? அதனால இது மைதான வாரம் (அப்பாடா, அன்னையர் தினத்தையும் கவர் பண்ணியாச்சு!)

Jayaraman
New Delhi

Monday, May 14, 2012

DADA DOWN... NOT OUT and the race continues...

When it looked like 2 teams have made it to the playoffs (Knight Riders and Delhi Daredevils) a week ago, the race seems to be far from over, the least for Knight Riders. The point’s table is now extremely intriguing with 7 teams still have it in them to claim a spot in the top 4. This is probably the situation the organizers have been craving all along to sell the INDIAN PREMIER LEAGUE. Well, they sold it this time.

Teams              Mat      Won     Lost     Pts        Net RR
Delhi                13        9          4          18        +0.729
Mumbai           14        9          5          18        -0.056
Knight Riders   14        8          5          17        +0.390
Chennai           15        8          6          17        +0.214
Bangalore        14        7          6          15        -0.072
Rajasthan         14        7          7          14        +0.335
Punjab             13        7          6          14        -0.270

More than anybody, the fortune of Knight Riders keeps me hooked up. Knight Riders are left to play Mumbai Indians and Pune Warriors. One victory from any of these games will seal the deal. But, imagine if they lose to Mumbai, guess who will script their fate in the play offs??? Hahahahaha. I’m dying to see the reaction of Shah Rukh Khan when DADA brings down his world crumbling. At this time, I wish to keep my emotions subtle and hopes low as disappointments are part and parcel of Indian fans life.

Chennai Super Kings are left to play their last match against Punjab. A win here confirms a spot in playoffs; a defeat is curtains for the 2 year dream run.

Mumbai Indians are left to play Knight Riders and Rajasthan Royals. If they lose both these games, chances for a spot in the playoffs would turn slim. Then they can curse the negative run rate piled all along. Hope this is unlikely scenario considering their bowling resources are better than anyone else. I personally anticipate them to beat Knight Riders to confirm their status straight away and keep the tournament alive for other contenders.

Already a Himalayan climb is getting even bigger as Punjab takes on Delhi, Chennai and Delhi in the games ahead. More than making a case for themselves, their name sounds a sense of relief in the opposition camps of Delhi and Chennai.

If there is one team that is allowed to lose all their remaining games and still make a case for contention, then it is Delhi Daredevils. Thanks to their supremely higher Net Run Rate. Delhi is due to play Punjab, Bangalore and Punjab in that order. Logically they should win one out of the 3 and prospects look good in Punjab encounters.

Then the Gaylo-Bangalore is due to play Delhi and Deccan. They are most likely to win one out of these two games. Again, their bowling is found seriously wanting. Unless Dilshan and Gayle don’t turn to be serious bowling options, the likes of Zaheer Khan, Vinay Kumar, Harshal Patel are most likely to cause doomsday.

Not, but not the least, the heartthrob of this IPL - Rajasthan Royals. They are due to play Chargers and Mumbai Indians. On paper they should be able to beat Chargers and technically stand a better chance to beat Mumbai, if and only if Mumbai beat Knight Riders and take the pedal off the gas.

I wish to make my predictions and like to see how the points table ends up. Rajasthan to win remaining two, Chennai to win their last one, Delhi to win one out of 3 (against Punjab), Mumbai to win one out of two (against Knight Riders), Bangalore to win one out of two (against Delhi), Punjab to win one out of 3 (against Delhi) and Knight Riders none. In this scenario the current points table would finish something like this.

Teams              Mat      Won     Lost     Pts        Net RR
Delhi                16        10        6          20        +
Mumbai           16        10        6          20        -
Chennai           16        9          6          19        +
Royals             16        9          7          18        +
Knight Riders   16        8          7          17        +
Bangalore        16        8          7          17        -
Punjab             16        8          8          16        -

Mumbai and Rajasthan remained my favorites for top 4. Wish it stays that way. Let’s see if I have to cut a sorry figure at a later point. Hope to see DADA scripts the fate of Knight Riders. But then we also know nothing ever happens in life as we like to see.

Bottom line: A revenge to be unleashed in the DADA style.

Dinesh
Cricket Lover
Related Posts Plugin for WordPress, Blogger...