பூனே:
யோவ் தாதா, நீ ஒரு பெரிய மனுஷன்னு நம்பி பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சா நீ இருக்கற பருப்பை பூரா நோண்டி எடுத்து வெளிய போடறியே? யூத்துக்கும், யூத் மாதிரி இருக்கறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குன்னு இப்பவாச்சும் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன். கண்டிப்பா உங்களால குனிஞ்சு பந்தை பொறுக்க முடியாதுன்னு எல்லா பயலுக்கும் தெரிஞ்சிருக்கு. உங்க கையில குடுத்துட்டு அநாயாசமா ரெண்டு ரன் ஓடறாங்க. கேப்டன்சி தான் உங்க பலம். அதுவே சொதப்பும்போது டீசெண்டா கழண்டிக்கறது தான் பெரிய மனுஷத்தனம். ஆனது ஆயிடுச்சு, அடுத்த வருஷமாச்சும் கமெண்டரி சொன்னோமா, காசு சம்பாதிச்சோமா, நடுவுல சோனி டிவில வர்ற பொண்ணுங்களை சைட் அடிச்சோமான்னு இருங்க. அதை விட்டுட்டு "நானும் ப்ளேயர் தான், நானும் வீரன் தான்" அப்படின்னு கடுப்பேத்தாதீங்க மை லார்ட்.
கொல்கத்தா:
பிராவோ கடைசி பந்துல சிக்ஸ் அடிச்ச அதிர்ச்சியிலேர்ந்து இன்னனும் மீளலை போலிருக்கு? அதென்ன சென்னைக்கெதிரான மேட்ச்ல மட்டும் பாலாஜியை எறக்கறீங்க? சென்னையோட வீக்னெஸ் அவருக்குத் தெரியும்கற எண்ணமா? பாலாஜியோட வீக்னெஸ் என்னன்னு அவங்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியுமே மிஸ்டர் கம்பீர்! ஒரு வேளை அடுத்த மேட்ச் மும்பைகிட்ட தோத்தீங்கன்னா உங்க தலையெழுத்தை நிர்ணயிப்பவர் தாதா தான், ஞாபகம் வெச்சுக்கோங்க.
டெக்கன் சார்ஜர்ஸ்:
இந்த உலகத்திலேயே இருபது ஓவர்ல 190 ரன் அசால்ட்டா அடிச்சுட்டு ஜஸ்ட்-லைக்-தட் தோக்கறது நீங்களாத்தான் இருக்கும். மிஸ்டர் சங்கு, ஒரு நாள் போல வரிசையா தோத்துட்டு அதுக்கு வெக்கமில்லாம விளக்கம் வேற குடுக்கறீங்களே, போரடிக்கல? அடுத்த ரெண்டு மேட்ச்ல தயவு செஞ்சு தலையைக் காட்டாதீங்க. அப்படியே இலங்கைக்கு கள்ளத் தோணியில போயிடுங்க. உங்க டீம் இருக்கற ரேஞ்சுக்கு எவன் வேணா கேப்டனா இருக்கலாம் – செத்த கிளிக்கு கூண்டெதுக்கு? ஷிகர், பஞ்சாபும் பூனேவும் உங்களை இழுக்கறதில ஆர்வமா இருக்காங்களாமே, உண்மையா?
டெல்லி:
மிச்சம் இருக்கற மூணு மேட்ச்ல ஒண்ணு ஜெயிச்சாலும் உங்களுக்கு பெர்த் கன்பார்ம் ஆயிடும்.சென்னை கிட்ட தோத்தது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. நீங்களும் வார்னரும் அவுட் ஆயிட்டா உங்க டீம் என்ன கதிக்கு ஆளாகுதுன்னு இப்ப உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும். பார்த்து சூதானமா நடந்துக்குங்க.
ராயல்ஸ்:
நீங்க செமி பைனல் வர்றது கஷ்டம் தான். எதாச்சும் மிராக்கிள் கண்டிப்பா நடந்தே ஆகணும். இருந்தாலும் உங்களது சூப்பர் டீம். சென்னை கிட்ட தோத்திருக்க வேண்டாம். அனேகமா டிராவிட் அடுத்த IPL ஆடறது சந்தேகம் தான். கமெண்டரியில சேர்த்துப்பாங்களான்னு தெரியல. ஆனால் கோச் பதவி நிச்சயம்.
சென்னை:
ஒரு மேட்ச் கூட ஒழுங்காவே ஜெயிக்க மாட்டீங்களா? இல்லை, இப்படி கடைசி பால் வரைக்கும் மேட்சை கொண்டு போறதுக்குத் தனியா பேமென்ட் எதாவது தர்றாங்களா? ஒவ்வொரு மேட்சும் குப்பு குப்புன்னு வேர்க்குதே ஒழிய காய்ந்த பாடா இல்லையே? நீங்க மட்டும் செமி பைனல் வந்துட்டீங்க, அவனவன் கடுப்பாயிடுவான். எல்லாரும் ஹார்ட் வொர்க் பண்ணி பைனல் வர்றாங்க. நீங்க ஸ்மார்ட் வொர்க் பண்றீங்க. எவ்ளோ தூரம் வேலைக்காவுதுன்னு பார்ப்போம்.
மும்பை:
சென்னைக்குத் தம்பி நான் தான்னு அவங்களை மாதிரியே கடைசி வரைக்கும் இழுத்து விளையாடறீங்களே! மிச்சம் இருக்கற ரெண்டு மேட்ச்ல ஒண்ணு ஜெயிச்சாலும் நீங்க safe தான். ஆனா நீங்க செமி பைனல் எல்லாம் ஜெயிப்பீங்கன்னு தோணலை. டெண்டுல்கர் சீக்கிரம் அவுட் ஆகறது செண்டிமெண்டா வொர்க் ஆவுது. அப்படியே மெயின்டைன் பண்ணச் சொல்லுங்க. ஏன்னா இனிமே என்ன அடிச்சாலும் ஆரஞ்சு கேப்பெல்லாம் கிடைக்காது (என்னது? அவர் ரெகார்டுக்காக விளையாடறவர் இல்லையா? சரிங்க)
பஞ்சாப்:
ரெண்டு மேட்ச் டெல்லி கூட, ஒரு மேட்ச் சென்னை கூடன்னு கொஞ்சம் சிக்கலான நிலைமையில தான் இருக்கீங்க. இதைத் தாண்டி செமி பைனல் வந்தீங்கன்னா அது உழைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியா இருக்கும். உங்க டீம்ல இருக்கற சில பேர் ஸ்டிங் ஆபரேஷன்ல மாட்டியிருக்கறது உங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனா அப்படி எதுவும் இருக்காதுன்னு நம்பறோம். டேவிட் ஹஸ்ஸி மாஞ்சு மாஞ்சு கேப்டன்சி பண்றாரு, ஆனா எல்லாரும் கில்லியை ஏன் புகழறீங்கன்னு புரியல. ஒரு வேளை அவர் ஆடாததே டீமுக்குச் செய்யற பெரிய உதவியோ?
பெங்களுரு:
முக்கியமான மேட்ச்ல பச்சை டிரஸ் போடாதீங்கன்னு போன வருஷமே சொன்னோமே, மறந்துட்டீங்களா? இப்படி மும்பைகிட்ட தர்ம அடி வாங்கிட்டீங்களே! சுற்றுப் புறச் சூழலை பாதுக்காக்கப் போய் இப்ப உங்க சூழலில் மாசு படிஞ்சிடுச்சு பார்த்தீங்களா? அடுத்த ரெண்டு மேட்சும் ஜெயிச்சே ஆகணும் தம்பிங்களா. விராட் கோலி தான் இந்திய அணியோட அடுத்த கேப்டன்னு அடிச்சுச் சொல்லலாம் - அந்த அளவுக்கு பேட்டிங் படு கேவலம். வினய் குமாரெல்லாம் ஒரு ஆளுன்னு டீம்ல வெச்சிருக்கீங்களே, விளங்கின மாதிரி தான். டெல்லி கிட்ட உங்க பாச்சா (அதாவது கெயில் மற்றும் டிவில்லியர்ஸ், மத்தவங்களை நாங்க கணக்குல சேர்க்கறதே இல்லை) பலிக்குதான்னு பார்க்கலாம்.
சோனி டிவிக்கு: ஏதோ அஞ்சாறு பொண்ணுங்களை ரெகார்ட் டான்ஸ் மாதிரி ஸ்டூடியோவுக்குள்ள ஆட விட்டுக்கிட்டிருந்தீங்க ஓகே, இப்ப என்னடான்னா இங்கிலாந்து பெண்கள் டீம்ல விளையாடிய ஒரு பெங்காலி அம்மணியை கமெண்டரியில சேர்த்திருக்கீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? அந்தம்மா டெமி மூர் ஸ்டைலில் தொடை தெரியற மாதிரி கால் மேல கால் போட்டு உட்கார்றதும், தேவையே இல்லாம குனிஞ்சு குனிஞ்சு பேசறதுமா பட்டையைக் கிளப்புது. எதுக்கும் பக்கத்துல உட்கார்ற ஆம்பளைங்கள வார்ன் பண்ணி வைங்க. இல்லேன்னா இவங்க பாட்டுக்கு பந்து பேட்டுன்னு எதையாச்சும் எக்குத்தப்பா பேசப் போய் அந்த அம்மா டபிள் மீனிங்க்ல பேசறதா நினைச்சுக்கிட்டு உங்க மேல பாலியல் புகார் பண்ணிடப் போறாங்க.
தாய் மண்ணே வணக்கம் - கிரிக்கெட்டின் தாயான மைதானத்தை மறக்கலாமா? அதனால இது மைதான வாரம் (அப்பாடா, அன்னையர் தினத்தையும் கவர் பண்ணியாச்சு!)
Jayaraman
New Delhi
Hi Dinesh,
ReplyDeleteI think that India has better managed the IPL spot fixing saga than Pakistan. Ofcourse India had more privileges given the power it enjoys in the ICC but still they were more intelligent in handling the situation without letting it blow out of proportion. I have made a simple comparison of the two events on my blog and would welcome your comments.
Regards,
Cricblogger