Monday, May 21, 2012

IPL 5: ஏழாவது வாரம்





"இந்த போட்டோவிற்குப் பொருத்தமான வசனம் எழுதுவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்" - வாரப் பத்திரிகைகளில் போட்டி நடத்தும் அளவுக்கு ஒரு பிரமாதமான போஸ் குடுத்த கிங் கானுக்கு நன்றி. பஞ்சடிக்கும் தமிழ் ஹீரோக்களே, உஷார்! ஏன்னா உங்களை மாதிரியே அவரும் கையைத் தூக்கி விரலை நீட்டி ஒரு ரப் லுக் குடுத்திருக்கார். கூடிய சீக்கிரம் ஷாருக்கானும் "டேய், நான் ரொம்ப அச்சா, எனக்கு முன்னாடி நீ ஒரு பச்சா" அப்படின்னு தமிழில் பன்ச் அடிக்கலாம்.

மற்றபடி மேட்ச் பிக்சிங், ஷாருக்கானின் குழாயடி சண்டை, லியூக்கின் பாலியல் புகார் விவகாரம், மும்பை ரேவ் பார்ட்டியில் பூனே வீரர்கள் சிக்கியதுன்னு கிரௌண்டுக்கு வெளியே அபரிமிதமான ஆக்ஷன் நடக்குது. எல்லாமே பிக்சிங்கா இருக்குமோன்னு ஒரு எண்ணம் பரவலா எல்லா ரசிகர்களுக்கும் வந்துட்டதால கிரிக்கெட் பார்க்கறோம்கற எண்ணம் போய் சீரியல் பார்க்கற பீலிங் வந்திடுச்சு.





டெல்லி:

போன வருஷம் பாட்டம் ஆப் தி டேபிள், இந்த வருஷம் டாப்ல - முன்னேற்றம்னா இதான். சீக்கிரம் உடம்பு சரியாகி வாங்க பாஸ். ஜெயவர்தனே பாவம், கேப்டன்சி பண்ண ரொம்ப கஷ்டப்படறாரு. மார்கல், நெகி, வருண், யாதவ்னு உங்க போலிங் அப்பப்போ அடி வாங்கினாலும் ஒட்டு மொத்தமா பட்டையை கிளப்புது. டெல்லியும் சென்னையும் பைனல்ஸ் ஆடினா அதை விட சூப்பர் மேட்ச் இருக்க முடியாது.





கொல்கத்தா:

உங்களை விட உங்க ஓனர் ரொம்ப நல்லா ஆடறாருப்பா. போன தடவை மாதிரி சொதப்பாம இந்த தடவையாச்சும் பைனல் வரப் பாருங்க. காலிஸ் விக்கெட் எடுக்கறது உங்க டீமுக்கு பெரிய பக்கபலம். மும்பையை 140 அடிக்க விடாம அமுக்கினது சூப்பரோ சூப்பர். எப்படியாச்சும் டெல்லியை ஜெயிச்சு பைனல் போயிடுங்க. ஒரு வேளை தோத்தீங்கன்னா மும்பை அல்லது CSK கிட்ட மோத வேண்டி வரும். ரெண்டு டீமும் செம கடுப்புல இருக்காங்க. ரெண்டு பேர்ல எவன் வந்தாலும் உங்களுக்கு திவசம் தான், ஜாக்கிரதை!






மும்பை:

மறுபடியும் சென்னை கூட மோதறா மாதிரி ஆயிடுச்சே? உங்ககிட்ட ரெண்டு தடவை அடி வாங்கின அந்த சிங்கத்தை இந்த தடவை எப்படி சமாளிக்கறீங்கன்னு பார்ப்போம். ராயல்ஸ் கூட பத்து விக்கெட்ல ஜெயிச்சது உங்களுக்கு ஒரு புதுத் தெம்பை குடுத்திருக்கும். சச்சின் சார், சுனில் நரைன் பந்துல செம தடவு தடவி அவுட் ஆனீங்களே , அந்த வீடியோவை எவ்ளோ தடவை போட்டுப் பார்த்தீங்க? ஸ்மித், போல்லார்ட்னு ரெண்டு டைனோசர் இருக்கறது கூடுதல் அட்வான்டேஜ்.






சென்னை:

அதிர்ஷ்டம், ப்ளூக், லக், மச்சம், OC, சந்துல சிந்து பாடறது, கேப்ல கடா வெட்டறது - இந்த வரிசையில் CSKவையும் சேர்த்தால் அது மிகையாகாது. அப்படி ஒரு ஓசி கிராக்கி. விராட் கோலி எந்த பாப் கட்டுக்கு ஏமாந்தாரோ, இல்லை மால்யா எந்த கெட்டிச்சட்னிக்கு ஆசைப்பட்டாரோன்னு தெரியலயே! இல்லேன்னா பெங்களுரு டெக்கன் கிட்ட தோக்கறதுக்கு வாய்ப்பே இல்லையே! எது எப்படியோ, தொடர்ந்து அஞ்சு வருஷம் செமி பைனல் வந்த டீம்னு பேர் வாங்கிட்டீங்க. இனிமேலாச்சும் ஒழுங்கா ஆடுங்கய்யா. மும்பை கிட்ட ரெண்டு கன்னத்திலும் நல்லா பழுக்க வாங்கினது போதும். ஒழுங்கு மரியாதையா ரிவென்ஜ் எடுக்கற வழியைப் பாருங்க.





பெங்களுரு:

நீ டெல்லி கூட 50க்கு மேல அடிக்கும்போதே நினைச்சேன், உங்க டீம் கண்டிப்பா வெளிய போயிடும்னு. ஏன்னா நீ எப்போ எங்க அடிச்சாலும் அங்க சீரீஸ் தோல்வி தான் - ஆஸ்திரேலியாவுல, ஆசியா கப்ல. கெயில் எவ்ளோ அடிக்கறானோ அவ்வளவும் போலிங்க்ல தாரை வார்க்கணும்னு முடிவு பண்ணிட்டே போலிங் போடுவீங்களா? சரக்கு அடிச்சோமா, சைடு டிஷ்ஷை நக்கினோமான்னு இல்லாம ஏன்யா உங்காளுங்க சில்மிஷம் பண்றாங்க? ஒண்ணு புரியுது, எந்த ஊர்க்காரனா இருந்தாலும் சரி, அடுத்தவன் போண்டாட்டிக்குத் தான் ஆட்டையைப் போடறானுங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும்னு அண்ணா சும்மாவா சொன்னாரு!



ராயல்ஸ்:

புதுப்பசங்களை நல்லா கட்டி மேய்ச்சதுக்கு முதல்ல உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட். இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம். எதிர் பார்த்த மாதிரியே டைட் சொதப்பிட்டான். கடைசி மேட்ச்ல ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாம போனது ரொம்ப மோசம். ஒரு வேளை விருப்பமே இல்லாம விளையாடினீங்களோ? வாயில ரெண்டு பக்கமும் ஏதோ ஒரு உருண்டை உருளுதே? ஜெய்ப்பூர் போய் பான் பராக் போட ஆரம்பிச்சிட்டீங்களா? IPLலில் என் எதிர்காலம் என்னன்னு தெரியலைன்னு சொல்லியிருக்கீங்க. காதோரம் வேற நரை தட்டிடுச்சு. அதனால அடுத்த வருஷம் கேப்டன் வேலையெல்லாம் விட்டுட்டு அறிவுரையாளரா மாறிடுங்க. உங்க ஒனருக்குப் பையன் பிறந்திருக்கானாமே? வாழ்த்துக்கள்.




பஞ்சாப்:

உங்களுக்கு ஆறாவது இடம் தான்னு நாங்க போன வாரமே சொன்னோமே, படிக்கலியா நீங்க? இருந்தாலும் பரவால்ல, இந்த தடவை கொஞ்சம் நல்லாவே உழைச்சீங்க. கடைசி ரெண்டு கேம்ல கில்லியைக் கொண்டு வந்தது தான் பிரச்சினையோ? பேசாம அவரை மென்டர் ஆக்கிட்டு ஹஸ்சியை நிரந்தர கேப்டனாக்கிடுங்க. அவானா, மந்தீப் சிங் மாதிரி இளசுகளுக்கு ஒரு வெளிச்சம் கிடைச்சிருக்கறது சந்தோஷமான விஷயம்.




டெக்கன் சார்ஜர்ஸ்:

நண்பேன்டா! அம்மா, காயத்ரியம்மா! நீ வாழ்க, உன் குலம் வாழ்க, உங்க டீம் வாழ்க. ராயல்சையும், பெங்களுரையும் தோற்கடிச்சு சென்னை வயித்துல பாலை வார்த்தீங்களே, நன்றி சொல்ல வார்த்தையே இல்லை போங்க - இதுக்கு நன்றிக் கடனா அடுத்த சீசன்ல உங்க கிட்ட ரெண்டு மேட்ச் தோத்தாலும் தகும். ஆனா உங்க டீம் இப்படியே இருந்திச்சு, அடுத்த வருஷம் ரொம்ப கஷ்டப்படுவீங்க. முதல்ல ஒரு நல்ல கேப்டனா போடுங்க. வெள்ளைக்கும் சங்குவுக்கும் செட் ஆவலைன்னு ரொம்பத் தெளிவாத் தெரியுது.




பூனே:
பன்ச் பாலா மாதிரி ரைஸ் ஆவீங்கன்னு பார்த்தா இப்படி பஞ்சர் ஆயிட்டீங்களே? போட்டி ஆரம்பிக்கும்போது கட்டதுரையா இருந்த நீங்க முடியும்போது கைப்புள்ளையா ஆனது பரிதாபம். ஏற்கனவே சொன்ன மாதிரி பெரிசா லட்சணமா அறிவுரை சொல்றதோட நிறுத்திக்கோங்க. செயல்படுத்தறேன்னு இறங்கினா இப்படித் தான் ரத்தகாவெல்லாம் வாங்க வேண்டி வரும். ஆக்ஷன் வேலையெல்லாம் அடுத்த வருஷம் யுவி பார்த்துக்குவான். யோவ், கிளார்க், ரெண்டு மேட்சுக்கு நடுவுல ஆஸ்திரேலியா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கியே, பயங்கரமான ஆளுய்யா!


காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:

வல்தாட்டி - சென்ற முறை எல்லோரையும் வெளுத்து வாங்கிய இவரது சாயம் இந்த முறை வெளுத்துவிட்டது.

சகீர் கான் - தலை மயிர் முதற்கொண்டு எல்லாத்தையும் மாற்றிப் பார்த்தும் ஒரு ஓவர் கூட ஒழுங்காகப் போட முடியவில்லை. சச்சின் ரிடையர் ஆகணும்னு சொல்ற பெரிய மனுஷங்களே, இந்த மாதிரி ஆளுங்களை கண்டுக்கவே மாட்டீங்களா?

ஹர்பஜன் - உங்களுக்கு மன்மோகன் சிங்கே பரவால்ல. அவராச்சும் அட் லீஸ்ட் மினிஸ்டர் மீடிங்க்ல ஒண்ணு ரெண்டு வார்த்தையாச்சும் பேசறாரு. உங்க டீம்ல உங்களைத் தவிர எல்லாரும் கூடிக்கூடிப் பேசி ப்ளான் போடறாங்க. அவங்க சொல்ற இடத்துல நீங்க போய் நின்னுக்கறீங்க. நீங்க தான் கேப்டன்னு பரிசளிப்பு விழாவின் போது தான் தெரிய வருது.

அஷ்வின் - கை தான் திரும்புதே ஒழிய பந்து கொஞ்சம் கூட திரும்ப மாட்டேங்குதே தலை? ஒரு வேளை செமி பைனல்ல உங்க திறமையை காட்டுவீங்களோ?.

முரளி கார்த்திக் - அப்படியே போயிடுங்க. இனிமே கமெண்டரில கெஸ்ட் வேஷம் மட்டும் தான் உங்களுக்கு.

பியுஷ் சாவ்லா:நீ போலிங் போட்டு நிமிர்றதுக்குள்ள பந்து பவுண்டரிக்குப் பறக்குது. தயவு செஞ்சு கிரிக்கெட்டை விட்டுப் போயிடுங்க. அது கிரிக்கெட்டுக்கு நல்லது.

பலிகடா ஆப் தி சீசன்:

ரஹானே - எவன் நல்லா ஆடினாலும் நமக்குப் பொறுக்காது, உடனே உசுப்பேத்தி அவனை நாறடிச்சிடுவோம். முதல் மூணு மேட்சிலேயே அடுத்த டெண்டுல்கர் இவர் தான்னு சொல்லி இந்த பச்சை மண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டாங்க. அவரும் அதை உண்மைன்னு நம்பி இன்னும் நல்லா ஆடணும்னு நினைச்சு சொதப்பி சிக்கி சீரழிஞ்சு நிக்கும் போது தான் மக்களோட திருவிளையாடல் அவருக்குத் தெரிய வருது.

லியூக், பெங்களுரு:

உங்க டீம் முதலாளி பொண்ணுங்க கூட அப்படி இப்படி இருக்கறதைப் பார்த்துட்டு உங்களுக்கும் அப்படி ஒரு ஆசை வந்திடுச்சு போல. அவர்கிட்ட சரக்கு இருக்குங்க. ஆனா நீங்க கூலிக்கு மாரடிக்க வந்துட்டு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யலாமா? சரி போகட்டும் விடுங்க. கோர்ட்ல பொண்ணு கையைப் புடிச்சு இழுத்தியான்னு கேப்பாங்க. என்ன கையப் புடிச்சு இழுத்தியான்னு ஜட்ஜ் கடுப்பாகற வரைக்கும் வடிவேலு ஸ்டைலில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருங்க. அப்போத் தான் மன நிலை சரியில்லைன்னு சொல்லி உங்களை பேக் பண்ணி அனுப்பிடுவாங்க.

மும்பை கிரிக்கெட் அசோசியேஷனுக்கு:

ஷாருக் பண்ணினது காமெடின்னா நீங்க அவருக்கு அஞ்சு வருஷ தடை போட்டீங்க பாருங்க, அது கீமடி. வான்கடே ஸ்டேடியம் என்ன கேட் ஆப் இந்தியாவா? வாரா வாரம் போய் டைம் பாஸ் பண்றதுக்கு? அந்த ஆளே வருஷத்துல ரெண்டு நாளோ மூணு நாளோ போகப் போறான். உங்க கடமை உணர்ச்சிக்கும் நியாய உணர்ச்சிக்கும் ஒரு அளவே இல்லையா மராத்திய மைந்தர்களே? பை தி பை, மேட்ச் பார்க்க வர்றவங்கள்ல பல பேர் சீயர் லீடர் பெண்களை தகாத வார்த்தைகளாலும் செய்கைகளாலும் ஈவ் டீசிங் பண்றாங்களே, அவங்களையெல்லாம் நீங்க ஒண்ணுமே செய்ய மாட்டீங்களா?

இந்த வார கேள்வி:

பஞ்சாப் வீரர் பணம் வாங்கினார், டெல்லி வீரர் பணம் வாங்கினார்னு சொல்றேளே, அந்தப் பணத்தைக் குடுக்கறவாளைப் பத்தி ஒரு செய்தியும் வரமாட்டேங்கறதே, அது ஏண்ணா?  இருங்க, ஷங்கர் சார் கிட்ட சொல்லி இதை மையமா வெச்சு ஒரு படம் பண்ணச் சொல்றேன்.

இந்த ஓவரில் 22 ரன் போகப் போகிறது என்று தெரிந்தும் உயிரை பணயம் வைத்து நெஞ்சை நிமித்தி சளைக்காம போலிங் போடறாங்களே, அவர்களுக்கு மரியாதை பண்ண வேண்டாமா? ஸோ, இது பௌலர்கள் வாரம்.

Jayaraman
New Delhi

1 comment:

  1. என்னைக்குமே நம்ம ஊருல காசு குடுதவனை ஒரு பய தப்பு சொல்ல மாட்டான். காசு வாங்கினவனை தான் புடிச்சி உலுக்குவாங்க. லஞ்சம் குடுக்காம என்னிக்காவது கவர்மென்ட் ஆபீஸ்ல நம்ம காரியம் ஆயிருக்கா?

    IPL franchises மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...