"ஒலி ஒளி அமைத்துக் கொடுத்த மாரியப்பனுக்கு நன்றி, மேடை அலங்காரம், நாற்காலிகள் தந்தருளிய குமாரசாமிக்கு நன்றி, மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் போட்ட செந்திலுக்கு நன்றி" - லோக்கல் திருவிழாக்களில் இந்த மாதிரி நன்றியுரை சகஜம். IPLலிலும் இதே ஸ்டைலை கடைபிடிக்கறாங்க. மனப்பாடம் செய்த மாதிரி "சிட்டி, ஹீரோ, வோடபோன், DLF..." - அதுவும் லேட்டஸ்ட் கார்பன் டேப்லட்ல பார்த்துப் படிக்கறாங்க. குறிப்பா சிறப்பு விருந்தினர் பேரைப் படிக்கும்போது ஏன்தான் இப்படிக் கொலவெறியோட கடிச்சுத் துப்பறாங்களோ? அதிலும் அந்த அண்டாவாயன் டேனி மாரிசனின் பேச்சு, இந்த மாதிரி ஆளையெல்லாம் ஏம்பா வெளிய நடமாட விடறீங்க??
பெங்களுரு:
டேனியல், தயவு செஞ்சு கேப்டன் வேலையை வேற யாருக்காச்சும் குடுத்துட்டு வெறும் போலரா இருங்கன்னு சொல்லி வாயை மூடலை, முட்டைக் கண்ணனுக்கு தூக்கிக் குடுத்திட்டீங்க. ஆனா அவன் தான் அதுக்குச் சரியான ஆளு. பேட்டிங் சரியா இல்லை, பௌலிங் போட்டு நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான், பீல்டிங் மட்டும் கொஞ்சம் சுமாரா பண்ணுறான் - எந்த வேலையும் தெரியாதவன் தானே மேனேஜரா இருக்க முடியும்?. ஏம்பா கெயில், உனக்கு ஏதோ இருதயம் வீக்காமே? அப்படியா? நீ அடிக்கற சிக்ஸ்ல போலர்களுக்குத் தான் மாரடைப்பு வருது. மேட்சுக்கு ஒரு பால் கிரௌண்டுக்கு வெளிய போற மாதிரி அடிக்கணும்னு எதாச்சும் நேர்த்திக்கடனா இல்லை பெட் கட்டியிருக்கியா? ஆனா நீ பரவால்லப்பா, உங்க டீம்ல டிவில்லியர்ஸ்னு ஒருத்தன் இருக்கான் பாரு, என்னா அடி!
டெல்லி:
அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணி டாப்ல வந்துட்டீங்க. தயவு செஞ்சு டெய்லரை ஓரங்கட்டுங்க. டெஸ்ட் மேட்ச் மாதிரி விளையாடறான். முடிஞ்சா நீங்க ஒரு மேட்ச் ஆடாதீங்க. அப்போ தான் நீங்க இல்லாம உங்க டீம் எப்படி ஆடுதுன்னு தெரியவரும். இல்லேன்னா செமி பைனல்ஸ்ல சில்லறை வார்றது நிச்சயம்.
புனே:
பாவங்க நீங்க, கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும் எதிரா நடந்த மேட்சை ஏதோ உலக மகா யுத்தம் மாதிரி பில்ட் அப் குடுத்து எல்லா பயலும் உங்களை உசுப்பேத்தி இப்படி ரணகளம் பண்ணிட்டாங்களே! மூட்டை முடிச்செல்லாம் கட்டி வைச்சுட்டு கடைசி ப்ளைட்ல டிக்கெட் போட்டுடுங்க. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் - கேப்டனா இல்லை, கோச்சா!. ஏம்பா ஸ்மித், பார்க்கறதுக்கு மென்டல் மாதிரி இருந்தாலும் இப்படிப் பறந்து பறந்து பீல்டிங் பண்றியே!
கொல்கத்தா:
நான் சொல்லலை? நீங்க அடிச்சாதான் உங்க டீம் ஜெயிக்குதுன்னு. சுனில் இன்னும் எவ்ளோ நாளைக்கு பார்ம்ல இருக்கார்னு பாப்போம். ஒரு வேளை உங்க டீம் செமி பைனல் வந்தா முதல் அடி அவருக்குத் தான். கங்கூலியை (யாருங்க அதை பூனே டீம்னு சொல்றாங்க?) ஜெயிச்சு உங்க முதலாளியை குஷிப்படுத்தினீங்களே, எதாச்சும் ஊக்கத் தொகை கொடுத்தாரா?
மும்பை:
நீங்க கேவலமா ஆடினீங்க, புனே ரொம்பக் கேவலமா ஆடினாங்க. ஆனால் உங்களுக்கு லக் நிறையவே இருக்கு. பெரிசு வேற பார்ம்ல வந்திருச்சு. சென்னைக்கு எதிரா ரொம்ப நிதானமா ஆடி சிங்கம் என்னிக்குமே சிங்கம்தான்னு ப்ரூவ் பண்ணிட்டாரு. இருந்தாலும் ஹர்பஜன் இருக்கற வரைக்கும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. பார்க்கலாம்!
பஞ்சாப்:
தலை மாறினவுடனே தலையெழுத்தே மாறிடுச்சே! இருந்தாலும் பெங்களுரு மேட்ச்ல அந்த 3 ரன் அவுட் அனாவசியம். ஒரு வேளை முந்தின மேட்ச் சென்னை கூட இருந்ததால அவங்களோட வியாதி உங்களுக்கும் பரவிடுச்சோ? விராட் கோலி மாதிரி ஆளுங்களையெல்லாம் ஏம்பா 40 ரன் அடிக்க விடறீங்க? அவன் நாலு ரன் அடிச்சாலே 40௦ நாளுக்குக் குதிப்பான். நீங்க ஜெயிக்கற ஒவ்வொரு மேட்சும் கண்டிப்பா தோனிக்கு வயித்துல புளியைக் கரைக்கும். நீங்க ஆடறதை விட உங்க ஓனர் ப்ரீத்தி ஜம்ப் பண்றது கொள்ளை அழகு (என்னதான் குதிச்சாலும் அம்மணிக்கு உடம்பு மட்டும் குறையவே மாட்டேங்குது -இருந்தாலும் நல்லாத்தான் இருக்காங்க, ஹிஹி)
சென்னை:
எல்லா சீசனிலும் உங்க பொழைப்பு நித்யகண்டம் பூரண ஆயுசாவே இருக்கே! கடைசி பந்து வரைக்கும் இழுக்காதீங்கன்னு சொன்னேனே, கேட்டீங்களா? மும்பைக்காரன் சோற்றிலும் சேற்றிலும் மாறி மாறி அடிச்சிட்டான். ஆனா தாயில்லாப் புள்ளையை அடிச்சு ரெண்டு பாயின்ட் தேத்திட்டீங்க. இனிமேத்தாண்டி இருக்கு க்ளைமாக்ஸ். சாஹா, ஜகாதி ரெண்டு பேரையும் எதுக்குய்யா டீம்ல வெச்சிருக்கீங்க? வேற ஆளை போடுங்கப்பா! உங்க மேல நம்பிக்கை குறைஞ்சுகிட்டே வர்றதால பைனல்ஸ் சென்னையை விட்டு வெளிய போகப்போவுது, தெரியுமா உங்களுக்கு?
ராயல்ஸ்:
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா. வெல்கம் பேக். உங்களுக்கும் பஞ்சாபுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு சென்னை ரொம்பவே முழிக்குது. வாட்சன் மற்றும் டைட் வந்திருக்கறது நல்ல விஷயம் தான். ஆனா ரெண்டு பேரும் சரியான சொதப்பல் பேர்வழிங்க, அதிலும் டைட் வாரி வழங்க ஆரம்பிச்சான்னா கர்ணனையே மிஞ்சிடுவான், மைன்ட் இட்.
டெக்கன் சார்ஜர்ஸ்:
அப்புறம் என்ன விஷயம்? எல்லாரும் சார்மினார், கோல்கொண்டா, ராமோஜி பிலிம் சிட்டி எல்லாம் நல்லா சுத்திப் பாருங்க. ரெண்டு ப்ளேட் பிரியாணி, குழந்தைகளுக்கு கராச்சி பிஸ்கட், பொண்டாட்டிக்கு முத்து மாலை, பேர்ல் ஜுவல்லரி செட் இதெல்லாம் வாங்கிக்கோங்க. எதுக்கா? கிரிக்கெட்ல தான் இல்லைன்னு ஆயிடுச்சே, அட் லீஸ்ட் குடும்பத்தையாச்சும் குஷிப் படுத்துங்க. ஏண்டாப்பா ஸ்டெய்ன், உங்க டீம் 180+ அடிச்சா நீயும் அதுக்குச் சமமா வாரி வழங்கறே, உங்க டீம் 150க்கு கீழ அடிச்சா ரொம்பப் பிரமாதமா போலிங் போடறே, இது என்ன கணக்கு? உன்னை உக்காத்தி வைச்சதுல தப்பே இல்லை. என்ன, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி ஆயிடுச்சு.
எல்லா டீமுக்கும்:
19 வது ஓவரை மெயின் போலர் கிட்டக் குடுத்துட்டு கடைசி ஓவரை மட்டும் ஏம்பா கத்துக்குட்டிங்க கிட்ட குடுக்கறீங்க? அவங்களும் ரிஸ்க் எடுத்துப் பழகணும்கற நல்ல எண்ணமா இல்லை ஒட்டு மொத்த கேரியரை குழி தோண்டிப் புதைக்கறதுக்கான ப்ளானா?
இது பீல்டர்கள் வாரம் - பேட்ஸ்மேன் வளைச்சு வளைச்சு அடிக்கற பந்தை இந்த வேகாத வெயில்ல விரட்டி விரட்டி பொறுக்கறதுன்னா சும்மாவா?
Jayaraman
New Delhi

No comments:
Post a Comment