சென்னை:
பஞ்சாப் பரோட்டாவுக்கு முன்னாடி உங்க கொத்து பரோட்டா எடுபடலையே? போதாகுறைக்கு செஹ்வாக் , கம்பீர்னு ரெண்டு பேர் கிட்டயும் உதை - அடுத்த ரவுண்டிலாவது பழி வாங்குவீங்களா? சுத்தமா ஸ்பின்னே எடுக்காத பிட்சில எதுக்குங்க நாலு ஸ்பின்னர்? அஷ்வின் கண்ணகி சிலையிலிருந்து போட்டாத்தான் பந்து திரும்பும் போல. ரன் அவுட் நம்ம டீம்ல இருக்கற தொத்து வியாதியா?. முந்தா நாள் வந்த ஹஸ்ஸியையும் அது விட்டு வைக்கலை. கமல் சாரே எடுத்துட்டார், நீங்க எப்போ விஸ்வரூபம் எடுக்கப் போறீங்க?அதுக்குள்ளே டோர்னமென்ட் முடிஞ்சிடப் போகுது. அப்புறம், விளையாடும்போது கொஞ்சமாச்சும் சிரிங்கய்யா, ஏதோ எழவு வீட்டுக்கு வந்த மாதிரி மூஞ்சியை வெச்சுக்கிட்டு ஆடினா விளங்கின மாதிரி தான்.
மும்பை:
அப்பிராணி டெக்கன் சார்ஜரை ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோஷப்படறீங்க போலிருக்கு? டெல்லி கிட்ட ரெண்டு கன்னத்திலும் மாறி மாறி வாங்கினது மறந்து போச்சா? ஹர்பஜன், இந்த வருஷத்துக்கான மட்டமான கேப்டன் அவார்ட் அனேகமா உங்களுக்குத் தான். உங்க டீம் செமி பைனல் வந்தா அது கண்டிப்பா திறமையினால இருக்காது. சச்சின் சார், அதான் பாராளுமன்றத்துல சீட் குடுத்துட்டாங்களே, இப்பவாச்சும்.....என்னது? உங்க பையனோட சேர்ந்து இந்திய அணிக்காக ஓபனிங் இறங்கணும்கறது உங்க கனவா? ரைட்டு விடுங்க.
பஞ்சாப்:
நல்லாத்தான்யா ஆடறீங்க. ஆனா எவ்ளோ ஆடினாலும் உங்களுக்கு அதிகபட்சம் ஆறாவது இடம் தான் கிடைக்கும்னு நினைக்கறேன். பியுஷ் சாவ்லா இல்லேன்னா பிரவீன் குமார்ல யாரையாச்சும் ஒருத்தரை உட்காத்தி வைங்க. எல்லா பயலும் அவங்க பந்தை நாயடி பேயடி அடிக்கறான்.
கொல்கத்தா:
தொடர்ந்து ஜெயிச்சு இப்படியெல்லாம் அதிர்ச்சி கொடுக்காதீங்க கம்பீர், ஷாருக்கானுக்கு நெஞ்சு வலிக்கப் போவுது. ஆனா நீங்க ஆடினாத்தான் மேட்ச் ஜெயிக்கறீங்க. நீங்க சீக்கிரம் அவுட் ஆயிட்டா பின்னாடியே எல்லாரும் போயிடறாங்க. இது நல்ல அறிகுறி இல்லை. ஏம்பா யூசுப், வாயில வெச்சிருக்கற பான் பராக்கை எப்பப்பா துப்புவே? எந்நேரமும் போட்டு கொதப்பிக்கிட்டே இருக்கியே. காலிஸ் சார், எங்கேர்ந்து சார் கேர்ல்ப்ரெண்டை பிடிக்கறீங்க? சோலிக்கு நடுவில ஜாலி பண்றீங்க போல.
பெங்களுரு:
11 மணிக் காட்சிப் படம் மாதிரி ஆயிடுச்சு உங்க டீம். போஸ்டர் மட்டும் தான் கிளுகிளுப்பா இருக்கு. உள்ளே பார்த்தா ஒண்ணுமே இல்லையே?. தீயா வேலை செய்யணும் கண்ணுங்களா! இல்லேன்னா பில்போத்ரி தான். டிவில்லியர்ஸ் மற்றும் கெயில்னு ரெண்டு அரக்கர்கள் இருக்கற பயத்துல எதிர் அணி எல்லாம் உங்க போலர்களை போட்டு பார்க்கறது மிகவும் பரிதாபம். சகீர் கான் முடி மாதிரியே அவர் போடற பந்தையும் பஞ்சு பஞ்சா பிச்சு எடுக்கறாங்க. ஹர்ஷல் படேல் நிலைமையோ மிகவும் கவலைக்கிடம். மிஸ்டர் விராட், அம்பயர் கூட சண்டையெல்லாம் நல்லாத்தான் போடறீங்க. ஆனாலும் 20 ரன் தாண்டமாட்டேன்னு அடம் பிடிக்கறீங்களே? IPL வரலாற்றிலேயே இருபது ரன்னுக்கு மேல அடிக்காத மெக்கல்லம் உங்களுக்கெதிரா 40 ரன் அடிச்சது மகாக் கேவலம். மைதானத்துக்கு வர்றதுக்கு முன்னாடி உங்க முதலாளி மூஞ்சியை ஒரு முறை மனசில நினைங்க. அவரைப் பார்த்தா பாவமா இல்ல??
பூனே வாரியர்ஸ்:
எல்லாரும் உதைச்சு அனுப்பிய டெக்கான் கிட்ட நீங்க தொடர்ந்து உதை வாங்கினது கொஞ்சம் நெருடலா இருக்கு. கங்கூலி சார், உங்க போலிங் பிரம்மாஸ்திரம் மாதிரி. ஒரு தடவை தான் வேலை செய்யும். அடிக்கடி ட்ரை பண்ணாதீங்க. என்னாச்சு பார்த்தீங்கல்ல, வைட் உங்களை நல்லா வாஷ் பண்ணிட்டு போயிட்டான்.உங்களுக்கும் க்ளார்க்குக்கும் ஏதோ கசமுசாவாமே? உண்மையா?
ராயல்ஸ்:
ஒரு பேச்சுக்கு நீங்க ஒரு ஹீரோன்னு சொல்லிட்டோம். அதுக்காக வில்லன் கிட்ட மூணு அடி வாங்கின பிறகு தான் திருப்பி அடிப்பீங்களா? அதான் தொடர்ந்து நாலு உதை வாங்கியாச்சே. அதுவும் செஹ்வாக் அடிச்ச அடியில வாய் முதற்கொண்டு வெளிய சொல்ல முடியாத இடம் வரைக்கும் ரத்தம் வந்திருக்கும்னு நினைக்கறேன். இனிமேலாச்சும் திருப்பி அடிங்க ஜாம்மீ. ரஹானே மாதிரி துடிப்பான இளைஞர்களின் உழைப்பு வீணாப் போகறதை பார்க்க முடியல. உங்க ஓனர் வேற முழுகாம இருக்காங்க. ஒரேயடியா தோத்து புள்ளத்தாச்சி பொம்பளை சாபத்துக்கு ஆளாகிடாதீங்க.
டேர்டெவில்ஸ்:
பொன்னியின் செல்வன்ல வர்ற பழுவேட்டரைய்யர் பிரதர்ஸ் மாதிரி நீங்களும் பீட்டர்சன்னும் எதிர் அணி போலிங்கை இப்படி சகதி ஆடறீங்களே! செஹ்வாக், நீங்க அடிக்கறதைப் பார்த்தா ரஸ்னா குடிச்சிட்டு அடிக்கற மாதிரி தெரியலையே? எப்படியோ, ரஸ்னா கம்பெனிக்குக் கொண்டாட்டம் தான். செமி பைனல் அல்மோஸ்ட் நிச்சயமாயிடுச்சு. அப்படியே கப் ஜெயிச்சு எல்லாருக்கும் ஒரு ஷாக் குடுங்க. குறிப்பா ஏழாம் நம்பருக்கு தெனாவட்டு கொஞ்சம் குறையும்.
டெக்கான் சார்ஜர்ஸ்:
நம்பிக்கைத் துரோகிங்களா!!! உங்களை நம்பித் தானேய்யா அவனவன் நாலு பாயின்ட் கிடைக்கும்னு நம்பி உட்கார்ந்திருக்கான்.
நீங்க இப்படி ஜெர்க் குடுத்தா என்னய்யா அர்த்தம்? ஆனாலும் கல்கத்தாவுக்கு ஆறு பாலுக்கு ஒரு ரன் தேவைங்கற நிலைமைல நீங்க ரெண்டு நிமிஷம் டீம் மீட்டிங் போட்டு பீல்டிங் செட்டப் பண்ணினது வரலாறு காணாத அநியாயம். அவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க "ஐ திங்"
பண்ணியும் டுமினி வைடு போட்டு உங்க மூஞ்சியில கரியை பூசிட்டார். இருந்தாலும் அஞ்சு பாயின்ட் எடுத்தது பெரிய சாதனை தான். எதுக்கும் தொடர்ச்சியா மகேஷ் பாபு படம் பாருங்க. அப்போ தான் நல்லா பொங்க முடியும். இல்லேன்னா எல்லாரும் சேர்ந்து உங்களை பொங்கல் பண்ணி படையல் வெச்சுட்டுப் போயிடுவாங்க.
சோனி டிவிக்கு:
முக்கால் வாசி நேரம் அடுத்த மேட்ச்சுக்கான விளம்பரம், இல்லேன்னா உங்க க்ரூப் சானல்களில் வர்ற டிவி சீரியலுக்கான விளம்பரம் - விளம்பர நிமிடங்கள் ஒண்ணும் சரியா விற்பனையாகலையோ? ப்ரேக் ஏண்டா வருதுன்னு ஆயிடுது. கிரௌன்ட்ல சீர் லீடர் ஆடறாங்க ஓகே, ஸ்டூடியோவுக்குள்ள எதுக்கு ஒரு ஆறு பேர் அரையும் குறையுமா ஆடறாங்க? ஜடேஜா, கவாஸ்கர் மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் டென்ஷன்ல நாக்கு ரோலிங் ஆவுதுல்ல!. வைரமுத்து சார், மொழி பெயர்ப்பாளரை வெச்சுக்கிட்டு சித்து சொல்றதெல்லாம் தமிழாக்கம் பண்ணிக்கோங்க. சூப்பரா ஹிந்தில பன்ச் அடிக்கறார். கள்ளிக்காட்டு இதிகாசம் மாதிரி கில்லிக்காட்டு இதிகாசம் போட்டுடலாம்.
ஹர்ஷா போக்ளேவின் ஹிந்தி கமெண்டரி. ஆங்கிலப்படத்தை ஆங்கிலத்திலேயே டப்பிங் பண்ணிப் பார்க்கற மாதிரி ஒரு ரெண்டுங்கெட்டான் பீலிங். ஸ்டூடியோவுக்குள்ள உட்கார்ந்தது போதும் சார். மைதானத்துக்குப் போங்க.
(எவ்வளவு கேவலமா ஆடினாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்து சப்போர்ட் செய்யும்
முதலாளிகளுக்கு மரியாதை)
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment