Thursday, July 12, 2012

கோடீஸ்வரனும் 13வது கேள்வியும்சூர்யா நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் 25 லட்சத்துக்கான 13வது கேள்வி மிகவும் கோக்குமாக்காக உள்ளது (அது சரி, சும்மா வருவாளா சுகுமாரி?) . அக்பரின் மூன்றாவது மனைவியின் தம்பி பெயர் என்ன, காந்தி மதுரைக்கு வந்தபோது எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிட்டார் - இது மாதிரியான வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்டு நல்லா ஆடறவங்களை பேக் பண்ணி அனுப்பிடறாங்க. முதல் சீசன் முடியப்போகிற இந்த நேரத்தில நம்ம பங்குக்கு நாமளும் சில பிரபலங்களை ஆட விட்டு, இல்லை இல்லை, ஓட விட்டு வேடிக்கை பார்ப்போம். இந்த கேள்விக்கு அவங்க அட் லீஸ்ட் அரை மணி நேரமாச்சும் யோசிச்சே ஆகணும்.

செஹ்வாக்:

இதில் உங்களுக்கு மிகவும் தொல்லை தருவது எது?

1) தோள் பட்டை காயம்
2) பத்து வருஷமாக கடுகளவும் காலை நகர்த்தாமல் ஆடுவது
3) எவ்வளவு முக்கினாலும் கேப்டனாக முடியாதது
4) தோனி

அஜித்:

எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?

1) குடும்பம்
2) சினிமா
3) ரேஸ்
4) பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தில்லாக டெர்ரர் பேட்டிகள் குடுப்பது
மன்மோகன்:
பின்வருவனவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பட்டப்பெயர் எது?

1) ஊமைக்கோட்டான்
2) சோனியாவின் ஜால்ரா
3) கையாலாகாதவர்
4) ஜடம்


சச்சின்:

பின்வரும் குற்றச்சாட்டுகளில் எது மிகவும் பிரபலம்?

1) சச்சின் நூறு அடிச்சா டீம் விளங்காது
2) சச்சின் சாதனைக்காக மட்டுமே ஆடுபவர்
3) இன்னமும் ரிடையர் ஆகாமல் இளைய தலைமுறைக்கு பிரச்சினை பண்ணுபவர்
4) கோடி கோடியாக சம்பாதித்த பிறகும் அரசாங்கத்திடம் வரி விலக்கு கேட்பது

கமலஹாசன்:

உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்:

1) ஹீரோயின் உதட்டை பதம் பார்ப்பது
2) நண்பர்களை வறுபுறுத்தி ஓசியில் நடிக்க வைப்பது
3) ஹாலிவுட் படங்களை தமிழ்ப்படுத்துவது
4) வித்யாசம் என்ற பெயரில் ஒரிஜினல் முகத்தைக் காட்ட மறுப்பது
பிசிசிஐ ஸ்ரீனிவாசன்:

உங்கள் ரத்தக்கொதிப்பை அதிகமாக்குபவர் யார்?

1) அஜய் மாக்கன்
2) ஜகன் மோகன் ரெட்டி
3) சிபிஐ
4) சென்னை சூப்பர் கிங்க்ஸ்


விஜய்:

நீங்கள் மறக்க நினைக்கும் படம் எது?

1) குருவி
2) வில்லு
3) அழகிய தமிழ்மகன்
4) சச்சின்

அஜ்மல் கசாப்:

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துணைபுரியும் நாடு எது?

1) அமெரிக்கா
2) சீனா
3) நேபால்
4) பங்களாதேஷ்

விக்ரம்:

இதில் உங்களுக்குச் சம்பந்தமில்லாதது என்ன?

1) மசாலா ஹீரோ
2) ஊனமுற்றவனாக நடிப்பது
3) ஹீரோவுக்கு எடுப்பாக வருவது
4) என்ன வித்யாசம் காட்டினாலும் பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து படங்கள் பல்டி அடிப்பது

தோனி:

இதில் உங்களுக்கு மிகவும் பழக்கமான விஷயம் எது?

1) பைக் ஓட்டுவது
2) கிரிக்கெட்டில் அரசியல் பண்ணுவது
3) அடிக்கடி கிரிக்கெட்டை மறப்பது
4) தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்பது

நித்தி:

உங்களைப் பரவசப்படுத்துவது எது?

1) ரஞ்சிதா
2) ஆதீனம்
3) கோடிகளில் சொத்து
4) மக்கள் தொடர்ந்தும் கொடுக்கும் ஆதரவு

ஆமிர் கான்:

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

1) சினிமாவில் நடிப்பது
2) டிவியில் நடிப்பது
3) சோஷலிசம் பேசுவது
4) மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துவது


கருணாநிதி:

உங்களுக்குப் பிறகு திமுகவின் தலைவராக யார் வருவார்?

1) ஸ்டாலின்
2) அழகிரி
3) கனிமொழி
4) அன்பழகன்

ஷாருக் கான்:

இதில் உங்களுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் யார்?

1) கஜோல்
2) ராணி முகர்ஜி
3) பிரியங்கா சோப்ரா
4) கரன் ஜோஹர்ஏனைய கான் மற்றும் இதர அள்ளக்கை நடிகர்களுக்கு:

உங்களின் பொழுதுபோக்கு என்ன?

1) குடித்துவிட்டு காரை ஓட்டி யாரையாவது சாவடிப்பது
2) டிவி நிகழ்ச்சிகளில் காசு குடுத்து குத்தாட்டம் போடுவது
3) முன்ஜென்மம், மறுஜென்மம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது
4) முன்னாள் நண்பர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சம்பந்தமே இல்லாமல் கண்ணீர் விடுவது


சோனியா காந்தி:

நீங்க யாருக்காக ஊழல் செய்கிறீர்கள்?

1) இத்தாலி குடும்பத்துக்காக
2) மருமகன் வதேராவுக்காக
3) மகன் ராகுலுக்காக
4) காங்கிரஸ் கட்சிக்காக

சூர்யா:

நீங்கள் அடிக்கடி செய்வது எது?

1) விழாக்களில் நமஸ்கரிப்பது
2) என்ன பேசுவதென்று தெரியாமல் காமெராவைப் பார்த்து முழிப்பது
3) சொந்தப் பணத்தில் படமெடுத்து அதை நல்ல ரேட்டுக்கு விற்றுவிடுவது
4) இயலாதவர்களுக்கு உதவி செய்வது


தனியார் தொலைக்காட்சிகளுக்கு:

இவற்றில் மக்களை அதிகம் டார்ச்சர் செய்யும் நிகழ்ச்சி எது?

1) மனை மற்றும் டிவி ஷாப்பிங் விளம்பரங்கள்
2) இரண்டு மணி நேரப் படத்தை விளம்பரங்கள் போட்டு ஐந்து மணி நேரமாக ஓட்டுவது
3) கலை மற்றும் விருது நிகழ்ச்சிகளை ரெகார்ட் தேயும் வரை மறு ஒளிபரப்பு செய்வது
4) வீணாப் போன ஹிந்தி சீரியல்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்புவது

இந்தியக் குடிமகன்:

உங்களை மிகவும் பாதிப்பது எது?

1) எரிபொருள் விலையேற்றம்
2) உணவுப்பொருள் விலையேற்றம்
3) லஞ்சம் ஊழல்
4) கழுத்தறுக்கும் மழை

என்ன தான் வியாபாரமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமா சில பேர் வாழ்க்கையை நல்ல விதமா மாற்றி அமைச்சதற்கும், ஆதரவில்லாம கஷ்டப்படற நிறைய பேருக்கு உதவிகள் குவிய காரணமா இருந்ததற்கும், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கும் விஜய் டிவிக்கு நன்றி. நம்ம மக்களுக்கு வெறும் புத்தக அறிவு தான் அதிகமாயிருக்கு. பொது அறிவு அநியாயத்திற்குக் குறைவா இருக்கு. அதிலும் தமிழறிவு சூன்யம். அட, தமிழறிவு தான் இல்லை, பிரியங்கா காந்திக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் கூடவா வித்யாசம் தெரியாது? நினைக்கும்போதே புல்லரிக்குது.

வாழ்க ஆங்கிலம், வளர்க தமிழ் மக்கள். சூர்யா, மைண்ட்ல வெச்சிருக்கோம், பட் உங்க கிட்ட நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கறோம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (சேர்ந்தே இருப்பது தமிழனும் ஆங்கிலமும் - பிரிக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது).

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...