Indian dressing room, Notts.
லார்ட்ஸில் இந்தியாவின் ஆட்டத்தை துவைத்து காயப்போட்டிருக்கும் செய்தித்தாள்களைப் புரட்டியபடியே கலக்கத்துடன் முகுந்த்
வாயில் தெர்மாமீட்டருடன் சச்சின்
கம்பளியை இழுத்துப் போர்த்தியபடி லக்ஷ்மன்
சாகிர் கானுக்கு காலில் கேரளா நரம்பு எண்ணெய் வைத்தியம் நடக்கிறது
பிசியோ சொல்லும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்கும் சேவாக்
கையில் களிம்பு தடவிய நிலையில் கம்பீர்
கோச்சுடன் பேசிக் கொண்டிருக்கும் தோனி எந்த மூடில் வருவாரோ என கலங்கி நிற்கும் ராயினா
மிகவும் "I think " பண்ணி முழி பிதுங்கி நிற்கும் டிராவிட்
இப்பவாவது நம்மள எடுப்பாங்களான்னு ஏங்கும் அமித் மிஸ்ரா
கண்டிப்பா எடுப்பாங்கன்னு நம்பி இருக்கும் ஸ்ரீசாந்த்
"பரட்டைத் தலையனுக்கு ஜாக்பாட் அடிக்கும் போலிருக்கே!" என்று புகைந்து கொண்டிருக்கும் முனாப்
"எப்படியும் என்ட்ரீ உண்டு" - என்று குஷியா இருக்கும் பிரவீன் மற்றும் இஷாந்த்
"இந்தாளை ban பண்ணுவாங்கன்னு நினைச்சேனே, நடக்கலையே" - சாஹா
இவ்வளவு அமளி துமளியிலும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் நாலாவது பீரை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் யுவராஜ் மற்றும் ஹர்பஜன்
தடாலென்று கதவை ஓங்கி தள்ளியவாறே உள்ளே நுழைகிறார் தோனி. எல்லோரையும் பார்த்தவாறே, "ஹ்ம்ம், டிரெஸ்ஸிங் ரூமா ஆஸ்பத்திரி ICUவான்னே தெரியாத அளவுக்கு எப்படி படுத்திருக்காங்க பாரு"
எல்லோரும் அட்டென்ஷன் ஆகின்றனர் - யுவராஜ் & ஹர்பஜனைத் தவிர
தோனி அவர்கள் அருகில் சென்று "ஏம்பா சைடு டிஷ் எதுவும் இல்லாம அடிக்கறீங்க, சிக்கன் லாலிபாப் வாங்கிக்க வேண்டியது தானே?"
இருவரும் சுதாரிக்கின்றனர்
"வந்து வாய்ச்சிருக்காங்க பாரு எனக்குன்னு"
ராயினா 'என்னண்ணே சொன்னாரு கோச்?"
"பழையபடி ராஞ்சியில டிக்கெட் கிழிக்க சொன்னாரு"
பஜ்ஜி & யுவியைப் பார்த்து, "இங்க அவனவனுக்கு டப்பா கிழியுது, நீங்க ரெண்டு பேரும் டப்பா கஞ்சி அடிக்கறீங்களா?"
இருவரும் கோரசாக, "எப்படியும் எங்களை எடுக்க மாட்டீங்க, அதான்"
"லொள்ளு?" உங்களை அப்புறம் வெச்சிக்கறேன்"
யுவராஜ், "இப்படி எனக்கு வாய்ப்பே குடுக்காம பென்ச்ல உக்காத்தி வைங்க, , அப்புறம் திடீர்னு ODI la இறக்கி விடுவீங்க. அன்னிக்கு பார்த்து நான் சொதப்புவேன், அப்போதானே யுவி "Out of form" அப்படின்னு சொல்லி கழட்டி விட வசதியா இருக்கும்"
"உனக்கு எவ்ளோ தான் சொன்னாலும் மண்டையில ஏறவே ஏறாதா? உன்கிட்ட அப்புறமா தனியா பேசறேன்,
அய்யா சச்சின், சீக்கிரம் உடம்பைத் தேத்திக்கற வழியை பாருங்க, ஏற்கனவே "சச்சின் லார்ட்ஸ்ல செஞ்சுரி அடிச்சுட்டார் - ஜுரத்தில" அப்படின்னு உங்க கார்ட்டூன் தான் பரபரப்பா ஓடிக்கிட்டிருக்கு"
சச்சின் மெளனமாக தலையாட்டுகிறார்
சாஹா "உங்க மேல ban எதுவும் போடாம விட்டுட்டாங்க போலிருக்கு?"
"நீ ரொம்ப எதிர்ப்பார்த்திருப்பே போலிருக்கே? அண்ணன் எப்படா எழுந்து போவான், திண்ணை எப்ப காலியாவும்னு"
"நான் அப்படியெல்லாம் நினைப்பேனா தலை?""
"அடடா, என்ன பாசம்!!, சரி நண்பர்களே, நாளைக்கு மேட்சுக்கு சாகிர் கானுக்குப் பதிலா ஸ்ரீசாந்த், அப்புறம் ஹர்பஜனுக்குப் பதிலா மிஸ்ரா, இவங்களை இறக்கி விடலாம்னு ஒரு ஐடியா, என்ன சொல்றீங்க?"
ஹர்பஜன், "இது அநியாயம்"
"எது?, மாஞ்சு மாஞ்சு 56 ஓவர் போட்டும் ஒரு பால் கூட ஸ்பின் ஆவலை, அதைதானே சொல்ற?"
"பிட்ச் சரியில்ல, நான் என்ன பண்றது?"
"நல்லா இருந்தா மட்டும் அப்படியே 10 விக்கெட் தூக்கிடுவியா?, கடந்த ஆறு மாசமா நீ எப்படி பௌலிங் பண்ணியிருக்கேன்னு கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பாரு,
சும்மா சாக்கு சொல்லாதீங்க, நீங்க ஒரு முப்பது ஓவர் நின்னு காஜ் ஆடிருந்தா போன மேட்ச் டிரா ஆயிருக்கும்! ஏதோதோ சொல்லி என்னை கழட்டி விடறது அநியாயம்
" உன்னை ஒதுக்கலை, உனக்கு பிரேக் குடுக்கறேன், அது உனக்கு உதவியா இருக்கும், யார் கண்டா, மூணாவது டெஸ்ட்ல நீ பொங்கினாலும் பொங்குவே"
ராயினா கம்பீரிடம் "உனக்கு ஆப்பு வெச்சிருக்கேன்னு தலை எப்படி ஸ்டைலா சொல்லுது பார்"
சோகமாக இருக்கும் முகுந்தைப் பார்த்து, "என்ன தம்பி, ஓஞ்சு போய் உக்காந்திருக்கே?, மேலுக்கு முடியலையா?"
"இல்லை தலை, நாசீர் ஹுசைன் பேட்டி படிச்சேன், தாறுமாறா பேசியிருக்கான்"
"அவன் கெடக்கறான், இதெல்லாம் அவங்க பண்ற சைகலாஜிகல் அட்டாக், ஹாண்டில் பண்ண பழகிக்கோ, அப்போ தான் பெரிசா சாதிக்க முடியும்"
யுவராஜ், "அப்போ இந்த மேட்சும் நான் கிடையாதா?
"கம்பீருக்கு கை ஒடிஞ்சு போகணும்னு வேண்டிக்கோ, ஒரு சான்ஸ் இருக்கு. அப்புறம் ஒரு விஷயம், இந்த பொம்மைக் கண்ணாடி, half பனியன் போட்டிக்கிட்டு காலரீல கவர்ச்சியா உட்காராதே, உன்னை பாக்க சொல்ல எனக்கே கேந்தியா இருக்கு"
முனாப், "எனக்கு வாய்ப்பு குடுப்பீங்கன்னு நினைச்சேன், ஏமாத்திட்டீங்களே?
தோனி, "நியாயம் தான், ஆனா இப்போ நாம திருப்பி அடிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்"
"அதுக்கு?"
"ஸ்ரீசாந்த் மாதிரி ரௌடிங்க தான் வேணும், விக்கெட் விழுதோ இல்லையோ, அவங்களை நல்லா வெறுப்பேத்துவான், நீ கொஞ்சம் சாப்ட், ஆனா ஸ்ரீ ரணகளம் பண்ணுவான்"
கம்பீர், "ஒரு விஷயம் புரியலை, என்னமோ வேர்ல்ட் கப் பைனல்ஸ் தோற்றது மாதிரி ஆளாளுக்கு நம்மளை இப்படி கண்டம் பண்றாங்களே?"
டோனி, "அதான் மேட்டர், புலி புல் தடுக்கி விழுந்தா எலிங்க எக்சைட் ஆவுறது வழக்கம் தானே,"
முகுந்த், "இருந்தாலும் ரொம்ப அசிங்கமா இருக்கு, என்ன பண்றதுன்னே தெரியல"
"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் தம்பி, உன் கோபத்தை அவங்க பௌலர்ஸ் மேல காட்டு, ஓட ஓட பந்து பொறுக்க வை, Well left பண்றேன்னு LBW ஆகி திரும்பி வராதே,
See guys, அவங்க ஏற்கனவே ஒரு ரவுண்டு சிறிலங்காவோட டெஸ்ட் ஆடியிருக்காங்க, நல்லா பழக்கம் ஆயிடுச்சு, அதனால் அவங்க ஜெயிச்சது ஒண்ணும் உலக அதிசயம் இல்லை, நம்ம கிட்டயும் தப்பு இருக்கு, சரி பண்ணிக்குவோம், நாளைக்கு நாம யார்னு காட்டுவோம், சிங்கத்தோட தலையை சீப்பால வாரிட்டங்க, விடக்கூடாது, ஆனா மழையை நினைச்சாத் தான் கவலையா இருக்கு, நல்லா வெயிலடிக்குது, திடீர்னு கறுக்கும்முன்னு ஆயிடுது.
சாஹா நடுவில் புகுந்து, "எப்படி தலை இப்படி கிளாஸ் எடுக்கறீங்க, நிஜமாவே நீங்க கேப்டன் கூல் தான்"
"எவ்ளோ காறித் துப்பினாலும் துடைச்சு போட்டுட்டு போயிட்டே இருக்கேன்றதை நாசூக்க சொல்றே, புரியுது, அதனால தான் நான் கேப்டன், நீ எனக்கு ரிப்போர்ட் பண்றே"
யுவராஜ், "டேய் கம்பீர், நாமெல்லாம் ஒரே ஊர்க்காரங்க, நாளைக்கு பேசாம சிக் லீவ் போடுடா, நான் ஆடிக்கறேன், பேட்டை புடிச்சு ரொம்ப நாளாச்சுடா, IPL கூட சொதப்பிடுச்சு, நான் வேணும்னா ஒரு ODI மேட்ச் உக்காந்துக்கறேன்
கம்பீர், "என் சரக்கு உனக்கு போதையாகும் ஆனால் உன் போதை எனக்கு சரக்காகாது"
யுவராஜ் மனசுக்குள் "இனி இவன் கிட்ட பேசிப் பிரயோஜனமில்ல, நாம வழக்கம் போல தண்ணியும் டவலும் சப்ளை பண்ண வேண்டியது தான் "
தோனி, "என்னப்பா எல்லாருக்கும் ஓகே தானே? போய் வேலையைப் பாருங்க, மிஸ்ரா & ஸ்ரீ, என்கூட நெட்சுக்கு வாங்க,
"எதுக்கு தலைவரே, பௌலிங் பயிற்சிக்கா?
"இல்லை, பேட்டிங் பயிற்சிக்கு"
"யாருக்கு?"
"எனக்கு!, பெரிசுங்க எல்லாம் இப்பவோ அப்பவோன்னு இருக்குதுங்க, கரெக்டா காலை வாரிட்டா என்ன பண்றது? சேர்ந்தா மாதிரி ஒரு பத்து ஓவர் நின்னு ஆட பழகிக்க வேண்டாம்? போய் போடுங்க போங்க "
தொடரும்...
Jayaraman
New Delhi
கலக்கல் காமெடி !!!
ReplyDeleteஅருமையான flow !!!