Wednesday, July 13, 2011

என்ன கொடுமை சார் இது?



The last day of the 3rd Test between India and WI saw some interesting drama, thrill and a sad or happy end (upto the cricket fan). நாம வழக்கம் போல நடுவுல பூந்து கொஞ்சம் கலாய்க்கறோம். Some imagination and exaggeration is added to spice up the event. We are forcing the captain cool to lose his cool.

வெஸ்ட் இண்டீசை சரியா சுத்திக் காட்டலைன்னு சாக்ஷி தோனியோட சண்டை போடறாங்க. தோனி அந்த கடுகடு மூடிலேயே கிரௌண்டுக்கு வரார்.

Dhoni calls all the players and they form a circle as usual. Dhoni speaks:


நண்பர்களே,

இந்த நாள், உங்கள் கிரிக்கெட் வாழ்வில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

(இங்கிலீஷ் படத்தில கிளைமாக்சுக்கு முன்னாடி அமெரிக்க அதிபர் நாட்டு மக்களைப் பார்த்து பேசற மாதிரி பேசறார் பாரு நம்ம தல),

இன்னிக்கு மட்டும் ஜெயிச்சுட்டோம்னா, ஒரு 25 வருட வரலாற்றை மாத்தி எழுதிடலாம். நமக்குத் தேவை 4 விக்கெட். இஷாந்த், உன் கிட்ட நான் நிறைய எதிர் பார்க்கிறேன். முதல் இன்னிங்க்ஸ் நல்லாப் போட்ட நீ ரெண்டாவது இன்னிங்க்ஸ்ல சொதப்புறது ரொம்ப கேவலமா இருக்கு.

(ஆமாம், ஒருத்தன் ஒழுங்கா வேலை செய்யறான்னு தெரிஞ்சா போதுமே, அவனையே திரும்பத் திரும்ப ஜூஸ் புழியறதே வேலையாப் போச்சு, எல்லாம் அதிகார வர்க்கத்தின் ஆணவம்)


மதிய சாப்பாட்டுக்குள்ள இவங்க நாலு பேரையும் சுருட்டிட்டா நாம ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு.

(எவ்வளவு கஷ்டமான வேலையை எவ்வளவு ஈசியா சொல்றான் பாருங்க. அங்க ஒருத்தன் பாலுக்கு பால் பெயில்ஸ் எடுத்து தரையில அடிச்சு பள்ளம் தோண்டறான், தலை, சீக்கிரம் சொற்பொழிவை முடிங்க, ரொம்ப நேரம் குனிஞ்ச மேனிக்கு நின்னா அப்புறம் முதுகு புடிச்சிக்கப் போவுது)

A carribean interviewer from commentary box interviews dhoni:

“Dhoni, How do you feel today? Hoping to seal the series 2-0?

நல்லா காத்தடிக்குது. மழை பெய்யும்னு நினைக்கறேன், விக்கெட் நல்லா திரும்புது. பவுன்ஸ் கூட ஆவும் போல.

என்ன கிண்டலா?

இல்ல நக்கல், ஏன்யா, எவனாச்சும் தோக்கறதுக்கு விளையாடுவானாயா?

அதுக்கில்ல,

நிறுத்து, ரொம்ப length பண்ணாதே. மேட்ச் ஆரம்பிக்கப் போவுது. ஈவ்னிங் மீட் பண்றேன்,

The field is set and the play starts. As usual Chanderpaul starts digging the ground with bails.

"யப்பா, மெல்ல மெல்ல, நேத்துலேர்ந்து தோண்டிகிட்டே இருக்கே, கடலோரமா இருக்கு, திடீர்னு ஊத்து வந்தாலும் வரப்போவுது."

Sammy and Rampaul goes in quick successions and indians were rejoicing. Edwards join chanderpaul.

“chanderpaul scores century. Everyone congratulates him.

“நாங்க நாலு பேர் 50 அடிச்சோம், நீங்க ரெண்டு பேர் 100 அடிக்கறீங்க. கூட்டிக்கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வருது. யப்பா எட்வர்ட்ஸ், ரொம்ப காஜ் ஆடாதே, சீக்கிரம் அவுட் ஆயிடுப்பா ராஜா. பாஜி, எதாச்சும் பண்ணி இவனை தூக்கு.

“அட நீங்க வேற, அவன் எப்படிப் போட்டாலும் அடிக்க மாட்டேங்கறான். பயபுள்ள ரொம்ப அடம் புடிக்கறான். எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது.

Dhoni asks patel and raina to try their luck but everything goes in vein.

ராய்னா "அண்ணே, முடியலேண்ணே, எவ்வளோ முக்கினாலும் விக்கெட் விழமட்டேங்குது. அம்பயர் அங்கிள் கிட்ட சொல்லி மணியடிக்க சொல்லுங்க. போய் கொட்டிக்குவோம்.

Post lunch session starts. Dhoni keeps changing the bowlers but nothing is happening.

"யப்பா டேய், எதாச்சும் பண்ணி விக்கெட் எடுங்கடா, ரொம்ப சாவடிக்கரானுங்க ரெண்டு பேரும், இந்நேரம் மீடியாக்காரங்க நம்மளை வறுக்க ஆரம்பிச்சிருப்பாங்க நம்மூர்ல

பிரவின் குமார், "அண்ணே, நல்ல ஆடறவனை அவுட் பண்ணிடலாம், ஆடத் தெரியாதவனையும் அவுட் பண்ணிடலாம், ஆனால் ஆடத்தெரியாத மாதிரி ஆடறவனை என்னண்ணே செய்யறது?

இந்த ரைமிங்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே, கேவலமா ஒரு பால் போட்டுட்டு எப்படி பெருமையா பாக்கறான் பாரு.

ஒரு வழியா ராய்னா பந்துவீச்சில் எட்வர்ட்ஸ் அவுட் ஆகிறார்.

தோனி, "அப்பாடா, கடைசி வரைக்கும் நின்னு கழுத்தறுக்காம இருந்தானே, என்ன ஒரு வில்லத்தனம்!

Now Bishoo comes to the crease.

ஹர்பஜன் தன் பௌலிங் திறமைகள் அனைத்தும் பயன்படுத்தி பௌலிங் செய்கிறார்.

தோனி, "400 விக்கெட் எடுத்த குஷில எப்படி வளைச்சு வளைச்சு போடறான் பாரு, உன் திறமையெல்லாம் சில்லறைப்பசங்க கிட்ட காட்டு, நேரா போட்டாலே அவன் தானா அவுட் ஆயிட்டுப் போகப்போறான். உங்களையெல்லாம் வெச்சிகிட்டு எப்படித்தான் இங்கிலாந்துல சமாளிக்கபோறேனோ தெரியல.

மறுபடியும் ராய்னா பந்து வீச வருகிறார். இந்த முறையும் அவருக்கு விக்கெட் கிடைக்கிறது. பிஷூ திராவிட்டிடம் கேட்ச் குடுத்து அவுட் ஆகிறார்.

“அடிச்சான் பாரு அந்தர் பல்டி, டேய் சின்னப்பசங்களா, இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா, கடமை, கண்ணியம் கட்டுப்பாடுன்னா என்னன்னு இந்தாள் கிட்ட கத்துக்கோங்க.”

ஒரு வழியாக WI இன்னிங்க்ஸ் முடிகிறது. இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகிறது

விஜய் தோனியிடம், "தல, 47 ஓவருக்கு 180 தான் அடிக்கணும், நான் வேணா IPL மாதிரி ஒரு காட்டு காட்டிட்டு வரவா?"

தோனி, "நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம், நார்மலா ஆடினாலே போதும், இது என்ன சேப்பாக்கம்னு நினைப்பா?, சிதறிடுவே, அவனுங்க எல்லாம் கொலைவெறியோட இருக்கானுங்க. எவன் உசிருக்கும் இன்னிக்கு உத்தரவாதம் இல்ல. "

முதல் பந்திலேயே அபினவ் அவுட் ஆகி பெவிலியன் திரும்புகிறார்.

"வா வா, என்னப்பா போன வேலை முடிஞ்சுதா?"

"இல்லண்ணே, பால் சல்லுனு வந்திடுச்சு."

"சல்லுனு வராம, மீட்டிங் பிக்ஸ் பண்ணிட்டா வரும்?. ச்சே, உன்னை நம்பி அனுப்பினேனே!! அடுத்து யாருப்பா? மொக்கைச்சாமியா?

" ஹலோ நான் டிராவிட்"

"தெரியும் சார், ரெண்டும் ஒண்ணு தான் சார்"

விஜயும் திராவிடும் நிதானமாக ஆடி வருகின்றனர்.

ராய்னா டிராவிட் ஆட்டத்தைப் பார்த்து "ஹரி படத்துல கூட வித்யாசம் கண்டுபிடிச்சடலாம், ஆனா இந்த ஆள் பேட்டிங்க்ல கொஞ்சம் கூட வித்யாசம் தெரியல.ஆறு பாலையும் ஒரே மாதிரி ஆடறார்"

தோனி, "அனாவசியமா கண்ணு வைக்காதே, அப்புறம் ஆடறதுக்கு கை இருக்காது.

ராய்னா "இவங்க ரெண்டும் பேரும் ஆடறதைப் பார்த்தா ஷோலே படத்துல வர்ற அமிதாப் தர்மேந்திரா மாதிரி இருக்கு"

ராம்பால் பந்தில் விஜய் அவுட் ஆகிறார்

தோனி ராய்னாவைப் பார்த்து

"திருப்தியா? அமிதாப்பைப் போட்டுத் தள்ளிட்டாங்க. பார்ட்னர்ஷிப் பத்தி பேசாதீங்கடான்னா கேக்கறாங்களா! போய் விளையாடு, எதாச்சும் ஏடாகூடமா சொதப்பினே, இங்கிலாந்து டூர்ல உக்காத்தி வெச்சிடுவேன்.

மிகுந்த தடுமாற்றத்துக்குப் பிறகு ராய்னாவும் அவுட் ஆகி ரிடர்ன் ஆகிறார்.

தோனி, "யோவ், உன்னை கிரிக்கெட் ஆடுன்னா மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்துட்டு வர்றியா?

"சும்மா கிண்டல் பண்ணாதீங்க தலைவா, அங்க போய் நின்னு பாருங்க. அப்போ தெரியும். ஸ்பின் போட்டாப் பரவால்ல, அவன் U டர்ன் எல்லாம் பண்றான் "

இந்த விளக்கத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே, அய்யா லக்ஷ்மன், போய் ராமருக்கு கம்பெனி குடுங்க, போங்க

இதனிடையே தோனி சாமியுடன் பேசுகிறார்:

"என்ன தம்பி, அவசியம் இதுக்கு மேல விளையாடணுமா? எப்படியும் மீடியா உங்களைத்தான் பாராட்டப் போவுது. சந்தர்பாலை ஹீரோவாக்கி எங்களை ஜீரோவாக்கிடுவாங்க. சீக்கிரம் முடிச்சிகிட்டா ரெண்டு பேரும் போய் ஜாலியா ஒரு ரெண்டு பெக் போடலாம். அதுவுமில்லாம இங்க வெயில் தாங்கலை, இங்கிலாந்து போய் ரெண்டு நாளாவது ரெஸ்ட் எடுக்கணும். யோசிச்சு சொல்லு. Pad கட்டவா அவுக்கவா? நீயே அவுத்தா சமாதானம், நானா அவுத்தா சண்டை.

"டூர்னமெண்டே உங்க இஷ்டப்படி தான் நடக்குது, இதுல மட்டும் நான் சொல்லியா கேக்கப் போறீங்க? இஷ்டம் போல செய்ங்க. ஆனா தயவு செஞ்சு இப்படி மொக்கை பஞ்ச் அடிச்சு கொல்லாதீங்க

"அது, அந்த பயம் இருக்கட்டும், யப்பா பெரியவனே, சின்னவனே, ரெண்டு பேரும் வாங்க. ஆட்டம் கதம் கதம்.

During post match interview,

தோனி, நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டீங்களே?

நாளைக்குக் கிடைக்கபோற குவார்ட்டரை விட இன்னிக்கு இருக்குற கட்டிங் ரொம்ப முக்கியம்

தோத்துடுவோமோன்னு பயந்துட்டீங்களா?

பயம் இல்லை, எச்சரிக்கை

ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்வீங்க?

ஆமாம், ஆனா ரஸ்க் சாப்பிடறதுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது.

ஒரு வேளை உங்க பௌலிங் சரியில்லையோ?

(விடமாட்டான் போலிருக்கே!) எங்களுக்கு வாய்த்த பௌலர்கள் மிகவும் திறமைசாலிகள்,

அப்புறம் ஏன் விக்கெட் எடுக்க அவ்ளோ கஷ்டப்பட்டாங்க? ராய்னா மட்டும் எடுக்கலேன்னா உங்க பாடு இன்னிக்கு அவ்ளோ தான்

(ஏண்டா என்ட்ரன்ஸ் எக்சாம்ல கேக்கற மாதிரி இவ்ளோ கேள்வி கேக்கறீங்க?) எல்லாம் அவன் நேரம்ங்க, ஏதோ தெரியாம விக்கெட் எடுத்துட்டான். பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க.

இந்நேரம் உங்க ஊர் மீடியா உங்களைப் போட்டு கிழிச்சிருப்பாங்களே?

உன்னை விடவா? நான் நாட்டுக்காக ஆடறவன், மீடியாவுக்காக இல்லை, அதுவுமில்லாம எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சு.. இங்கிலாந்துல சச்சின் செஞ்சுரி அடிச்சுட்டா போதும், அப்படியே கட்சி மாறிடுவாங்க.

இருந்தாலும் நீங்க No . 1 டெஸ்ட் டீம், நீங்க போய் WI கிட்ட தடவித்தடவி டிரா பண்றது நல்லாவா இருக்கு?

(எவ்வளோ இடைஞ்சல் பண்றான் ராஸ்கல்)

நீங்க என்னதான்யா எதிர்பாக்கறீங்க? டிராவிட் செஞ்சுரி அடிச்சா "இதிலென்ன அதிசயம்" அப்படின்னு சொல்றீங்க. அவர் டக் அடிச்சா "இந்த ஆளுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றீங்க. கோலி ஆடலேன்னா இந்திய இளம் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டி ஆடும் திறமை இல்லைன்னு சொல்றீங்க. அப்படியே அடிச்சாலும் "WI டீம்ல எல்லாம் கத்துக்குட்டிங்க. இங்கிலாந்து டூர்ல அடிச்சாதான் ஒத்துக்குவோம்னு சொல்றீங்க. ODI சீரீஸ் ஜெயிச்சது தெரியல, கடைசி ரெண்டு மேட்ச் தோத்தது பெரிசா தெரியுது உங்களுக்கு. T20 , ODI, டெஸ்ட் சீரிஸ் எல்லாம் ஜெயிச்சிருக்கோம், அதுவும் புதுப்பசங்க நல்லா ஆடியிருக்காங்க அதைப்பத்தி எல்லாம் பேசாம அபசகுனம் புடிச்ச மாதிரி பேசறே? சும்மா இருக்கறவனை சொறியறதே உங்களுக்கு வேலையாப் போச்சு!

அட ஆமாம், நீங்க தான் overall சீரீஸ் வின்னர்ல? அது வேற ஒண்ணுமில்லை, உங்களை நாள் பூரா திட்டிக்கிட்டே இருந்தோமா, மறந்தே போச்சு.

அடப்பாவிகளா! ஒரு விஷயம் நல்லாப் புரியுது, இந்த பிரபஞ்சத்துல உங்களுக்கு மத்தியில கிரிக்கெட் ஆடறது ரொம்ப கஷ்டம்டா சாமி!!

1 comment:

  1. Hi,

    Great blog. Please keep up the good work.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...