Wednesday, July 6, 2011

சில மனிதர்கள்,,, சில கேள்விகள்

ஸ்பீல்பெர்க்:
எந்த நம்பிக்கையில transfromers 3 படம் எடுத்தீங்க? மெஷின் மனுஷனை அடிக்கறது, அமெரிக்காவை ஆக்கிரமிக்கறது எல்லாம் அரதப் பழைய டெக்னிக், 20 வருஷம் ஆச்சே, கொஞ்சம் மாத்திக்கக் கூடாதா? Terminator 2 எடுத்த ஜேம்ஸ் காமரூன் தான் அதையே லைட்டா உல்டா பண்ணி அவதார் எடுத்தார்ன்றதை மறந்துட்டீங்களா?

மன்மோகன் சிங்:
சென்டர் பிரெஷ் chewing gum கம்பெனியோட brand ambassador ஆயிட்டீங்களா ஐயா? நாட்டுல இவ்ளோ அமளி துமளி நடக்குது, கொஞ்சம் கூட வாயைத் திறக்க மாட்டேங்கறீங்க. மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்தறோம், நீங்க ministry of finance குமாஸ்தா இல்லை, நாட்டுக்கே பிரதமர்.

கனிமொழி:
பெயில் கிடைக்கலைன்னு வருத்தப்படாதீங்க மேடம், சாம்பார் சட்னிலேர்ந்து லேட்டஸ்ட் dvd வரைக்கும் எல்லாமே கிடைக்குதாமே திஹார்ல? எல்லாம் நன்மைக்கேன்னு நினைங்க. வருங்காலத்துல "கூண்டுக்கிளி" அப்படின்னு சுயசரிதை போட்டுடலாம்.

இயக்குனர் பாலா:
எதிர்பார்த்து ஏமாந்து போறது எங்களுக்கு ஒண்ணும் புதுசில்ல. நீங்க கவலைப்படாதீங்க, அடுத்த படத்துல கலக்கிடுங்க.

ICC:
வீரர்களுக்கு பிட்னெஸ் டெஸ்ட் வைக்கற மாதிரி அம்பயர்களுக்கும் வைக்கக் கூடாதா? ஹார்பர் மாதிரி ஊனமுற்றவர்களுக்கு - மன்னிக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஆசைப்பட்டீங்கன்னா வேற எதாச்சும் வேலை குடுங்க. இப்ப பாருங்க, இந்த ஆளு எப்படி த்வம்சம் பண்ணிட்டு போயிருக்கான்

விவேக்:
சடார் சடார்னு நீங்க அடிக்கற ஒரு வரி வசனங்கள் தான் உங்க பலமே. அதை விட்டுட்டு ஸ்லாப்ஸ்டிக் காமெடி பண்றீங்க. ஒரு வேளை ஜனங்க மாறிட்டாங்கன்னு நினைக்கறீங்களா?

சந்தானம்:
கௌண்டமணி ஸ்டைலில் காமெடி பண்றதை எப்போ நிறுத்தப்போறீங்க? அப்படியே கொஞ்சம் டாஸ்மாக் ஏரியாவை விட்டு வெளியே வாங்க. குடிச்சிட்டு உளர்றது,வம்பு பண்றது, கலாய்க்கறது, இதெல்லாம் அன்றாடம் தமிழ்நாட்டுல நடக்கறது தான், அதெல்லாம் ஸ்க்ரீன்ல காட்டி கிச்சு கிச்சு மூட்டப்பாக்காதீங்க.

வடிவேலு:
எங்க இருக்கீங்க? அபுதாபியா? பஹ்ரீனா? இல்லை, ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிட்டீங்களா?

ரஜினிகாந்த்:
வீரா, பாபா, இப்போ ராணா - இனிமேலாச்சும் ரெண்டெழுத்து டைட்டில் வைக்காதீங்க தலைவா, உங்களுக்கு ராசியே இல்லை. எதாச்சும் பிரச்சினை இல்லேன்னா படம் ப்ளாப்

கமலஹாசன்:
முதலில் தயாரிப்பாளர் செட் ஆவலை, அப்புறம் டைரக்டர், இப்போ ஹீரோயின். நீங்க “விஸ்வரூபம்” எடுக்கறதுக்குள்ள ஒரிஜினல் ரூபம் அழிஞ்சு போயிடும் போல. பை தி பை, உங்களுக்கு பயங்கர கரி நாக்கு சார், அன்பே சிவம்ல சுனாமி பத்தி பேசினீங்க, சுனாமி வந்திச்சு. தசாவதாரம்ல பெருமாளைக் காப்பத்தறதுக்கு ஊர் ஊரா ஓடினீங்க. இப்போ கேரளாவுல பெருமாளை யார் காப்பாத்தறதுன்னு போட்டி நடக்குது.

பார்த்திபன்:
வழக்கமா கல்யாணம் ஆனா வாழ்க்கை பாழாயிடும்னு ஜோக் அடிப்பாங்க. ஆனா உங்க விஷயத்துல உங்களை மாதிரியே இதுவும் வித்யாசம். கல்யாணம் ஆகி நல்லா வாழ்ந்த நீங்க, விவாகரத்து பண்ணி வீணாப் போயிட்டீங்க.

சுப்ரீம் கோர்ட்:
இப்பல்லாம் டபுள் ஷிப்ட் பண்றீங்கன்னு கேள்விப்பட்டேன். போற போக்கைப் பார்த்தால் கிரிக்கெட் மேட்ச்ல அம்பயர் தப்பு பண்ணினாக்க் கூட அதுலயும் ஏதோ ஊழல் இருக்குன்னு உங்க கிட்ட வருவாங்க போலிருக்கு.

தோனி:
எதுக்கும் மூணாவது டெஸ்ட் கொஞ்சம் சூதானமா இருங்க. அப்புறம் டூர் சம்பாத்தியம் முழுக்க பைன் கட்டற மாதிரி ஆயிடப்போவுது. பயபுள்ளைங்களுக்கு நல்லா கறியும் மீனும் வாங்கிக்குடுங்க. அப்போதான் இங்கிலாந்துல நல்லா பௌலிங் போட முடியும். இல்லேன்னா நீங்க கிங்காமிங்கா தான்

ராம்தேவ்:
நீங்க மாஸ்டர்பீஸ் ஆவலாம்னு நினைச்சீங்க. கடைசிக்கு உங்களை காமெடி பீசா ஆக்கிட்டாங்க. உண்ணாவிரதம் இருப்பது எப்படின்னு எங்க தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க கிட்ட ஒரு வாரம் ட்ரைனிங் எடுத்துக்கோங்க. அடுத்த தடவை பயனளிக்கும். யோகா பண்றதுக்கும் அரசியல் பண்றதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு சாமியோவ்!

அன்னா ஹசாரே:
உங்க மன உறுதி பிரமிக்க வைக்குது. ஆனால் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்காதீங்க. எங்க ஆளுங்க ஒரு மார்க்கமானவங்க. உண்ணாவிரதமா? இருந்துக்கோங்கன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுவாங்க. கண்டுக்கவே மாட்டாங்க கிரகம் புடிச்சவனுங்க. அப்புறம் நீங்க பில்போத்ரி தான்.

செல்வராகவன்:
படம் எடுக்கறீங்களோ இல்லையோ, போட்டோ எடுத்துக்கறீங்க. I mean கல்யாண போட்டோ. பிரியமானவளே விஜய் மாதிரி அக்ரீமென்ட் கல்யாணம் பண்ணிக்குவீங்களோ? கரெக்டா கழட்டி விட்டுடறீங்க!

மேற்கிந்திய கிரிக்கெட் அணி:
சாமி இல்ல, ஆறுச்சாமியை கேப்டனா போட்டாக்கூட தேற மாட்டாங்க போலிருக்கு

இயக்குனர் ஷங்கர்:
இந்த வீணாப்போன ரீமேக் படத்துக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? தயவு செஞ்சு மறுபடியும் "நான் சிகப்பு மனிதன்" பார்முலாவுக்கு போயிடாதீங்க. ஜென்ட்டில்மேன்லேர்ந்து சிவாஜி வரைக்கும் பார்த்து பார்த்து டயர்ட் ஆயிட்டோம்.

ஐஸ்வர்யா:
வாழ்த்துக்கள் மேடம், நீங்க கர்ப்பமா இருக்கறதால உங்க புருஷனை பக்கத்துல இருந்து உங்களை கவனிச்சுக்க சொல்லுங்க. அப்போ தான் சினிமாவுல நடிக்க மாட்டார். ஏன்னா ஹிந்தி சினிமா தயாரிப்பாளர்கள் ரொம்பவும் நொந்து போயிருக்காங்க (தொடர்ந்து 18 படம் ப்ளாப் அடிக்கறதுன்னா சும்மாவா!)

பத்மநாப சுவாமி, திருவனந்தபுரம்:
நீங்க பாட்டுக்கு தூங்கறீங்க. எங்காளுங்க உங்க அண்டர்க்ரௌன்டையே நோண்டி நொங்கு எடுக்கறாங்க. சீக்கிரம் முழிச்சுக்கோங்க. இல்லேன்னா உங்களைக் காப்பாத்த கமலஹாசன் தசாவதாரம் பார்ட் 2 எடுப்பார், அதையும் நாங்க பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...