Wednesday, July 20, 2011

இந்தியாவின் England சுற்றுப் பயணம் - 1


Team selection for the first test against England meeting is going on. As usual, Dhoni breaks the ice:

நண்பர்களே, நாமெல்லாம் இங்கே எதுக்கு கூடியிருக்கோம்னா..

மிஸ்ரா, "பெட்ரோல் டீஸல் விலை இன்னும் எவ்ளோ ஏத்தலாம்னு முடிவு பண்ணத் தானே?"

என்ன தம்பி, எகத்தாளம் தூக்கலா இருக்கே?

எப்படியும் என்னை எடுக்க மாட்டீங்க, அந்த தைரியம் தான்.

உன்னை அப்புறம் வெச்சுக்கறேன், ஆங், எங்க விட்டேன்? ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் மேட்ச் விளையாடப் போறோம் இல்லையா, அதுக்கு யாரெல்லாம் எடுக்கறதுன்னு செலக்ட் பண்ணத்தான் கூடியிருக்கோம்.

யுவராஜ், "அதாவது நீங்க, சச்சின், டிராவிட், லக்ஷ்மன், கம்பீர், சகீர், பஜ்ஜி போக மீதி 4 பேர் யாருன்னு முடிவு பண்ணத்தானே?"

சரியா புரிஞ்சுக்கிட்டியே,

அதையும் உள்ளேயே முடிவு பண்ணிட்டு வந்திருப்பீங்களே? DMK பொதுக்குழு மாதிரி

என்னங்கடா, எல்லாம் ஒரு டைப்பா பேசறீங்க

ராயினா, "பின்னே என்னங்க, எப்பப்பாரு, எங்கள்ள ஒருத்தன் தான் பலி கடா ஆவுறோம். அவங்க மூணு பேர்ல ஒருத்தரை உக்காத்தி வைங்க."

முகுந்த் மனதிற்குள், "மூணாவது டெஸ்ட் மேட்சுக்கு சேவாக்கும் வந்திடுவான், நம்ம பாடு ரொம்ப கஷ்டம் தான்"

சாஹா, "தலை, எனக்கு ஒரு தடவையாச்சும் வாய்ப்பு குடுங்க, West Indies டூர்ல சரியா ஆட முடியல"

தோனி, "அட நீ வேற, சும்மா இருப்பா, ஏற்கனவே எரியுது, மேற்கொண்டு மொளகாப்பொடி தடவாதே"

ரைனா, "தலைவரே, அவங்க மூணு பேரும் தான் எல்லா ஊர்லயும் எல்லா பிட்சிலும் டெஸ்ட் மேட்ச் ஆடிட்டாங்களே. நாங்க இளசு, எங்களுக்கு மட்டும் லார்ட்ஸ்ல ஆடணும்னு ஆசை இருக்காதா?

டிராவிட், "தம்பி, நானும் லக்ஷ்மனும் டெஸ்ட் மேட்ச் மட்டும் தான் ஆடறோம், ODI ,T20௦ எதுலயாச்சும் எங்களை சேக்கறீங்களா? எங்களுக்கும் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கு, உன்னை மாதிரி ஸ்பான்சர்ஷிப் கூட கிடையாது எங்களுக்கு, பினாமி ரியல் எஸ்டேட் கம்பெனி வேற ஆரம்பிச்சிருக்கியாமே?" (ஆஹா, கரெக்டா கேட்டுப்புட்டானே)

லக்ஷ்மன், "அதானே, இங்க பாருங்க தோனி, உங்களுக்கு இஷ்டம் இருந்தா எங்களை சேர்த்துக்குங்க, இப்படியெல்லாம் கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்தாதீங்க."

தோனி, "சார் சார் கோச்சுக்காதீங்க, ஏம்பா ரைனா, பெரிசு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது?"

சச்சின் நடுவில் புகுந்து, "see, நான் வேணும்னா இந்த மேட்ச் உக்காந்துக்கவா?" தோனி, " ஐயா, மன்னா, தளபதி, உங்களை வெச்சுத்தான் எல்லா மீடியாக்காரங்களும் பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க. 2000th world test, 100th test between India and England, Sachin needs one more century to achieve “TON TON”. அதுல மண்ணள்ளிப் போட்டுடாதீங்க தெய்வமே. உங்களை இந்த மேட்ச் உக்காத்தி வெச்சா அப்புறம் நான் நிரந்தரமா உக்கார வேண்டியது தான்.

மிஸ்ரா யுவராஜிடம், "இவர் பெரிய லார்ட் லபக்தாஸ்"

தோனி, "கரெக்ட், அவர் லார்ட், நீ லபக்தாஸ்"

யுவராஜ் முகுந்தைப் பார்த்து, "டேய் அரை டிக்கெட், நீ உக்கார மாட்டியா?"

முகுந்த், "அதே கேள்வியைத் தான் நான் உங்ககிட்ட கேப்பேன், நீங்களும் தான் நிறைய மேட்ச் ஆடியிருக்கீங்க, நீங்க உக்காருங்க. நான் இப்ப தான் ஒரு சீரீஸ் ஆடியிருக்கேன்,"

யுவராஜ் மனதிற்குள், "மேலிடத்து சிபாரிசு இல்ல, அதான் பேசறான், சாலா மதராசி, "

முகுந்த், "என்ன சொன்னீங்க?"

யுவராஜ், "சாப்பிட்டியான்னு கேட்டேன்"

தோனி, "என்னப்பா நீங்க, தெரு கிரிக்கெட்டா விளையாடறோம்?" இப்படி அடிச்சுக்கறீங்க"

கம்பீர், "எங்க விளையாடினா என்னங்க?" கிரிக்கெட் கிரிக்கெட் தானே"

பிரவின் குமார், "என்னங்கப்பா உங்களுக்கு மட்டும் அநியாயம் நடக்கறா மாதிரி பேசறீங்க?' கொஞ்சம் எங்க சைடும் பாருங்க. நான், ஸ்ரீசாந்த், முனாப், இஷாந்த், சாகிர் கான் மொத்தம் ஐந்து பேர். பிட்ச்ல ஸ்பின் ஆவுதோ இல்லையோ ஹர்பஜன் இருப்பான், எச்ச இலைக்கு அடிச்சுக்கற மாதிரி நாங்க மிச்ச மீதிக்கு அடிச்சுக்கணுமா?

ஹர்பஜன், "என்னை ஏம்பா வம்புக்கு இழுக்கறீங்க?"

தோனி, "அதான் 4 டெஸ்ட் இருக்குல்ல?

இஷாந்த்,"ஆனாலும் லார்ட்ஸ்ல ஆடற மாதிரி வருமா? அதுவுமில்லாம எப்போ மழை வரும்னு யாருக்கு தெரியுது? அடுத்த மேட்ச்செல்லாம் கான்செல் ஆயிட்டா?

தோனி, "இப்ப என்னதாம்பா சொல்றீங்க?"

ராயினா, "டிராவிட் லக்ஷ்மன் ஹர்பஜன் மூணு பேரையும் உக்காத்தி வைங்க."

ஹர்பஜன், "நான் எதுக்கு உக்காரணும்? நான் தான் லீடிங் ஸ்பின் பௌலர், என்னை விட்டா யாரு இருக்கா? நானும் நிறைய டெஸ்ட் மேட்ச் save பண்ணியிருக்கேன், லக்ஷ்மன் பாய், சொல்லுங்கப்பு"

லக்ஷ்மன் "அந்த $%^& நக்கல்ல தானே துள்றே"

ஹர்பஜன், "என்ன பாய்?"

லக்ஷ்மன் "உனக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்"

இதற்கு நடுவே தோனியின் செல்போன் ஒலிக்கிறது, எடுத்துப் பேசுகிறார், "சார், ஆமாம் சார், அப்படியா?, ஓகே சார், அப்படியே பண்ணிடுவோம்"

"பிட்ச் கியூரேட்டர் சொல்றாரு ஸ்பின் எடுக்காதுன்னு. ஹர்பஜன், நாளைக்கு நீ இல்லப்பா"

ஹர்பஜன், "இது எந்த பிட்ச் கியூரேட்டர் சொன்னதுன்னு எனக்கு தெரியும், நான் அப்புறமா பார்த்துக்கறேன்" பொருமிக்கொண்டே வெளியேறுகிறார்

இங்க பாருங்க மக்களே, நான், சச்சின், டிராவிட், லக்ஷ்மன், முகுந்த், கம்பீர், பிரவின் குமார், இஷாந்த், ராயினா, முனாப், சாகிர் கான் இவங்கதாம்பா நாளைக்கு விளையாடப் போறோம். அடுத்த மேட்ச்ல முனாப் பதிலா ஹர்பஜன் ஆடுவாங்க.

யுவராஜ், "ஒரு மாறுதலுக்கு அந்த மும்மூர்த்திகள்ள ஒருத்தரை உக்காத்தி வெச்சுட்டு என்னை ஆடவிட்டுப் பாருங்க. அப்போ தான் எனக்கும் டெஸ்ட் மேட்ச் விளையாட நம்பிக்கையும் தைரியமும் வரும். நாளைக்கே அவங்க மூணு பெரும் வரிசையா போயிட்டாங்கன்னா அப்புறம் எல்லாம் பொறுப்பும் என் தலைல தானே வந்து விழும். அப்புறம் எனக்கு டெஸ்ட் மேட்ச் விளையாடத் தெரியலைன்னு சொல்லி ஒரு பயனும் இல்லை.

தோனி, "அய்யய்யே, மறுபடியும் முதல்லேர்ந்து ஸ்டார்ட் பண்றியே?"

ரைனா யுவராஜிடம், "அடுத்த மேட்ச் நீ ஆட நான் சிபாரிசு பண்ணுறேன். இப்போ உக்காரு"

யுவராஜ், "உன் கட்டிங் உஷார் ஆயிடுச்சுல்ல, நீ இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே"

சச்சின், "நாங்க தான் ODI அண்ட் T20 பக்கம் வர்றதே இல்லையே, அங்க உங்க ராஜ்ஜியம் தானே நடக்குது?"

கம்பீர், "ஏன்னா உங்களுக்கு வயசாயிடுச்சு, IPL மேட்ச்ல தான் பாக்கறோமே, 30 ரன் அடிக்கறதுக்கே அந்த தடவு தடவறீங்க, நீங்க மட்டும் உஷாரா முக்கால் வாசி மேட்ச் மும்பைல வெச்சிக்கிட்டீங்க"

லக்ஷ்மன், "ஹ்ம்ம், வளர்த்த கடா மார்பில் பாயுதடா"

சச்சின், "கண்ணுங்களா, நீங்க nappy pad கட்டும்போது கிரிக்கெட் pad கட்டினவன் நான், ரெண்டு செஞ்சுரி அடிச்சேன்னு வெச்சுக்கோ, இருக்குற இடமும் தெரியாது, வந்த தடமும் தெரியாது"

யுவராஜ் கம்பீரிடம் "ஹிஹி, இவர் செஞ்சுரி அடிச்சா ஜெயிச்சா மாதிரி தான்"

சச்சின் தோனியிடம், "முடிவா என்னதான் சொல்றீங்க தோனி? நாளைக்கு நான் இருக்கேனா இல்லையா?"

தோனி, "நீங்க கண்டிப்பா இருக்கீங்க தெய்வமே, அப்ரசண்டுங்க பேச்செல்லாம் நீங்க ஏன் மதிக்கறீங்க?, டிராவிட் சார் லக்ஷ்மன் சார், நீங்களும் நாளைக்கு இருக்கீங்க, கேப்டன் நான் சொல்றேன்"

"உன்னை நம்பி போறோம், சொதப்பினே, வேறென்ன, நாளைக்கு டீமுக்கு புது கேப்டன் தேட வேண்டியதா இருக்கும், அவ்ளோ தான்" மூவரும் வெளியேறுகின்றனர்.

தோனி, "ஏம்பா இப்படி நடந்துக்கறீங்க? எல்லாருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும், அவங்க எல்லாம் என்ன மாதிரியான ப்ளேயர்ஸ் "

யுவராஜ்,"உண்மை தான், ஆனா ஜூனியருக்கு வழி விட மாட்டேங்கறாங்களே"

தோனி, "நெஞ்சைத் தொட்டுச் சொல்லு, நாளைக்கு அவர் செஞ்சுரி அடிச்சா சந்தோஷப்படமாட்டியா?"

கம்பீர், "கண்டிப்பா"

தோனி, "அப்புறம்? வெளியே மீடியாக்காரங்க பண்ற அதே தப்பைத் தாம்பா நாமளும் பண்றோம், சச்சின் செஞ்சுரி அடிக்கணும்னு எதிர்பாக்கறவங்க அவர் எப்போ ரிடையர் ஆவார்ன்னும் கேக்கறாங்க, கிறுக்குத்தனமா இல்ல?"

ஸ்ரீசாந்த், "சேட்டா, என்னை மறந்துட்டீங்களே?"

தோனி, "நீ முதல்ல கொஞ்சம் கூல் ஆயிக்கோ, அந்த சோமர்செட் பசங்களே அந்த அடி அடிக்கறாங்க உன்னை, முதல் டெஸ்டிலேயே உன்னை புழிஞ்சிட்டாங்கன்னா அவ்ளோ தான், நீ வாட்டர் பாட்டிலும் டவலும் தூக்க வேண்டியது தான் - சீரிஸ் முழுக்க"

தோனி, "சரிப்பா, இன்னும் யாருக்காவது எதாச்சும் குற்றம் குறை இருக்காப்பா?"

ராயினா "அதான் எல்லாம் மழுப்பி சரி பண்ணிட்டீங்களே, அப்புறம் என்ன கேள்வி"

"சேம் சைடு கோல் போடறியா கண்ணா?" "இல்லீங்கண்ணா, நான் போய் அப்படியெல்லாம் செய்வேனா?"

"சரிப்பா, அப்போ மீட்டிங் நல்ல படியா முடிஞ்சுது, எல்லாம் போய் ப்ராக்டிஸ் பண்ணுங்க - அப்படின்னு சொல்ல மாட்டேன், ஏன்னா சொன்னாலும் செய்ய மாட்டீங்க, பரீட்சைக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடிதானே நாம புத்தகத்தையே பாப்போம்? வழக்கம் போல சரக்கடிச்சு மட்டை ஆயிடுங்க.

எல்லோரும் போன பிறகு தோனி, "40 -50 MP MLA வெச்சிருக்கற கட்சிக்காரன் கூட நிம்மதியா இருக்கான், ஆனா இந்த 10 -15 பேரோட நான் படற பாடு இருக்கே ஐயோயோயோயோ"


தொடரும்...
(Hacking Courtesy - Murdoch)


Jayaraman
New Delhi

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...