Wednesday, April 24, 2013

IPL 6 | டரியல் - 2


175 அடித்து அசால்ட்டு பண்ணிய அந்த மனித இயந்திரத்தின் பாத கமலங்களில் இந்த எபிசோடை சமர்ப்பிக்கிறோம்

சன்ரைசர்ஸ்:

மாறன் சார், டீம் தலையெழுத்தையே மாத்திட்டீங்களே? ஒவ்வொரு மேட்சிலும், மயிரிழையில் தப்பிச்சு டாப் 3ல உங்க டீம் வந்திடுச்சே? சங்கக்கராவுக்கு நிஜமாவே காயமா? இல்லை நீங்க பிரச்சினை வேணாம்னு உட்கார்த்தி வெச்சிட்டீங்களா? காசு நிறைய இருக்குன்னா சொல்லுங்க, இன்னும் ரெண்டு டீம் கூடிய சீக்கிரம் விற்பனைக்கு வருது. டீல் பேசிடலாம்.

பூனே வாரியர்ஸ்:

கெயில் அடித்த சிக்சர்களில் இருந்த இடம் தெரியாமல் சின்னாபின்னமாயிருக்கும் அணியை காப்பாற்றும் நோக்கில் அதன் மேலாளர் சுப்புவுக்கு (சுப்ரதோ ராய்) போன் போடுகிறார்:

"சார், நான் மேனேஜர் பேசறேன்"

கடுப்பாக, "சொல்லுய்யா, என்ன விஷயம்?"

"பசங்க ரொம்ப நொடிஞ்சு போயிருக்காங்க. நீங்க கொஞ்சம் வந்து ஆறுதல் சொன்னீங்கன்னா..."

"ஆறுதலா? நானே SEBI அனுப்பின 17500 கோடி ரூபாய் நோட்டீஸுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். இதுல நீ வேற.."

"அதில்ல சார், இப்படியே போச்சுன்னா நம்ம டீம் ஒரு மேட்ச் கூட ஜெயிக்காது"

"உன்னை யாருய்யா ஜெயிக்க சொல்றாங்க?"

"சார்.."

"இத பாரு, ஒழுங்கா மரியாதையா எல்லா மேட்ச்சையும் திவசம் பண்ற மாதிரி கடமைக்கு ஆடினாப் போதும்."

"சரி சார், டீம்ல எதாச்சும் மாறுதல் பண்ணலாமா?"

"நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். அங்க இருக்கறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். புரிஞ்சுதா?"

"சரி சார்"

"அப்புறம், அடிக்கடி இந்த மாதிரி போன் பண்ணி துக்கம் கொண்டாடாதீங்க. போனை வை.




டெல்லி:

மஹேலா "அதாவது அடுத்த மேட்ச் என்ன ஸ்ட்ராடெஜின்னா, வார்னரும் இர்பானும் ஓபனிங் பண்றாங்க, அப்புறம் நான் வர்றேன், எனக்குப் பிறகு உமேஷ் யாதவ் , அப்புறம் மார்கெல், நதீம், கடைசியா செஹ்வாக்."

பிறகு சிறிய யோசனைக்குப் பிறகு, "இல்லை இல்லை, உமெஷும் நானும் ஓபனிங், அப்புறம் வார்னர், செஹ்வாக்,..."

சிறிது நேரம் கழித்து "உமெஷும், நதீமும் ஓபனிங், அப்புறம் மார்கல், அப்புறம் இர்பான், அப்புறம் நான், செஹ்வாக்,...."

அப்பொழுது அந்த வழியாக உன்மக்த் சந்தும் செஹ்வாகும் மஹெலாவைக் கடந்து செல்கின்றனர். உன்மக்த் வீருவைப் பார்த்து "என்னண்ணே ஆச்சு இவருக்கு? இப்படி தனியா புலம்பிக்கிட்டிருக்கார்?"

வீரு , "வேற ஒண்ணும் இல்லை, ஆறுதலுக்கு ஒரு வெற்றி கிடைச்சாலும் தொடர்ந்து ஏழு முறை தோத்தாச்சு. இனிமே பெரிசா வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பிரஸ் மீட்ல, டாஸ் போடும்போது அவங்க கேக்கற கேள்விக்கு எதாச்சும் இங்கிலிஷ்ல பேசியாகணுமே, அதான் பிராக்டிஸ் பண்றாப்ல, நீ வா, நாம சில்லுனு ஒரு பீர் அடிப்போம்"




பெங்களுரு:
விராட் கோஹ்லி ரூம் வாசலில் ஏகப்பட்ட ஸ்பான்சர்கள் கூட்டம். அதைப் பார்த்த வினய் குமார் அருகிலிருந்த டிவில்லியர்சிடம் "என்னங்க இது, காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி அந்த ஆள் சுத்தி சுத்தி அடிச்சதுக்கு இங்க இவர் வாசலில் பணப்பெட்டியோட கூட்டம் அள்ளுதே?

டிவில்லியர்ஸ், "அதான்யா கலிகாலம், நீயும் நானும் எவ்ளோ மேட்ச் காப்பாத்திக் குடுத்திருப்போம், எந்த நாயாவது திரும்பிப் பார்த்திருக்கா? நானாவது வெளியாள். நீ உள்ளூர்க்காரன், உன்னை எவனும் சீண்ட மாட்டேங்கறானே?"

வினய், "எல்லாத்துக்கும் முகராசி வேணுங்க, நமக்கு அதெல்லாம் இல்லை, சரி வாங்க சோனி டிவிகாரங்க கூப்பிடறாங்க. கெயில் பத்தி ஒரு பன்ச் டயலாக் அடிக்கணுமாம். - புயல் அடிச்சா பிழைக்கலாம், கெயில் அடிச்சா பிழைக்க முடியுமா?" - நல்லாருக்கா?



ராஜஸ்தான்:
திராவிட் மனசுக்குள் "இந்த தடவை அட் லீஸ்ட் செமி பைனல் வரைக்கும் வந்து கௌரவமா வெளியேறணும்னு நினைச்சேன், அது நடக்காது போலிருக்கே! விழுந்து விழுந்து கேட்சும் பீல்டிங்கும் பண்ணும்போது உடம்பு எப்படி வலிக்குது தெரியுமா? நானும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது? நம்ம கஷ்டம் இந்த சில்வண்டுப் பசங்களுக்கு எங்க தெரியுது? ஒரு மேட்ச் கலக்கறாங்க, அடுத்த மேட்ச் நம்மளைக் கலக்கிடறாங்க. என்ன செய்யலாம்? ஒண்ணும் புரியலையே?

பஞ்சாப்:
காமெடி பீஸ்னு நினைச்சா பெரிய டெர்ரர் பீசா இருக்கும் போலிருக்கே? தொடர்ந்து ஜெயிச்சு மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு பெரிய தலைவலியை உண்டு பண்ணிட்டாங்க. இப்படியே தொடர்ந்து விளையாடினா டீமுக்கு நல்லது. குறிப்பா முதலாளிக்கு நல்லது.





சென்னை:
"என்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா" என்று கொக்கரித்த வண்ணம் ஆடிக்கொண்டிருக்கிறார் பிராவோ. அதைப் பார்த்த பத்ரி, "அண்ணே, பெரிசே தன்னடக்கமா இருக்கு, நீங்க இப்படி குதூகலிக்கறது கொஞ்சம் ஓவரா இல்லை?"

"யோவ், நான் ஆடுவேன்யா, உனக்கென்ன போச்சு? முடிஞ்சா நீயும் ஆடு"

அப்பொழுது ஜடேஜா அங்கே வருகிறார். உடனே பிராவோ, "வணக்கம் Sir ஜடேஜா"

ஜடேஜா, "அடிக்கடி அந்த வார்த்தையை சொல்லாதீங்கப்பா, ஓவரா கிண்டல் பண்றீங்களோன்னு டவுட் வருது"

பத்ரி, "நீங்க நினைக்கற மாதிரி அது இங்கிலீஷ் Sir இல்லீங்க. ஹிந்தி "சர்" - அதாவது தலை. எங்க ஊர்ல யாரையாச்சும் ரொம்ப விரும்பினோம்னா அவங்களை "தல" அப்படின்னு தான் கூப்பிடுவோம். அதைத் தான் அஷ்வின் ஹிந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ணி 'சர்" அப்படின்னு வெச்சிருக்காப்ல.

ஜடேஜா, "அப்படியா?"

பத்ரி, "இதான் கொள்கை விளக்கம், கிளம்புங்க. மத்தபடி உங்க ஆட்டத்தைப் பத்தி நாங்க ஏன் கிண்டல் பண்றோம்? அதுக்கெல்லாம் ஊர்ல நிறைய பேர் இருக்காங்க"





மும்பை & கொல்கத்தா:
"சபாஷ், சரியான போட்டி" என்று சொல்லுமளவிற்கு சரியான அணிகள். எந்த அளவுக்குத் திறமையும் அனுபவமும் இருக்கிறதோ அந்த அளவுக்கு தோல்வியும் முட்டாள்தனமும் நிறைந்த அணிகள். ரிக்கி ஒதுங்கினாரா அல்லது ஒதுக்கப்பட்டாரா என்று தெரியவில்லை. பஞ்சாபும் ஹைதராபாதும் நன்றாக விளையாடுவது இவர்களுக்குக் கண்டிப்பாக எரிச்சலைத் தரும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருவரும் இருக்கின்றனர். தீயா வேலை செய்யணும் கண்ணுங்களா!!! பிறந்த நாள் அதுவுமா இப்படியா விழுந்து நமஸ்காரம் பண்ணி கிளீன் போல்ட் ஆவீங்க? இருந்தாலும் வாழ்த்துக்கள்.






Jayaraman
Delhi

போட்டோக்கள் உபயம் -பேஸ்புக் நண்பர்கள்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...