Wednesday, May 1, 2013

IPL 6 | டரியல் - 3



இந்த வாரம் நம்ம தூர்தர்ஷன் "நேரலை ஒளிபரப்பு" ஸ்டைல்:

வணக்கம் நேயர்களே, இந்த வாரம் IPL பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வடிவேலு நம்ம ஸ்டூடியோவுக்கு வந்திருக்கார்.

வணக்கம் சார்.

"வணக்கம்ம்மா"

சார், இப்போ இந்த வருட IPL ரொம்ப பரபரப்பா போய்க்கிட்டிருக்கு, எங்க பார்த்தாலும் IPL பத்தின பேச்சாத்தான் இருக்கு. ஸோ, அது சம்பந்தமா நம்ம நேயர்கள் கேட்கிற கேள்விக்கு உங்க பதிலை எதிர்பார்க்கறோம்.

"ரொம்ப சந்தோஷம்மா"

சரி சார், நிகழ்ச்சிக்குப் போவோம், முதல் நேயர் லைன்ல வர்றார், ஹெலோ யார் பேசறது?

நேயர், "மேடம், நான் ஜெய்ப்பூர்லேர்ந்து திராவிட் பேசறேன்,

பெண்மணி, "சார், உங்க வாய்ஸ் சரியா கேட்கலை, வாயில ஏதோ ஓரமா ஒதுக்கி வைச்சிருக்கீங்களே, அதை துப்பிட்டுப் பேசுங்க"

"சரி மேடம், (துப்பி விட்டு) ஒவ்வொரு வருஷமும் எங்க டீம் நல்லாத்தான் ஆடுது, ஆனாலும் செமி பைனல் கூட வர முடியலை. இந்த வருஷமாச்சும் வர முடியுமா?"

வடிவேலு, "அது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை சார். நீங்க ஜெய்ப்பூரை விட்டு வெளியே போனா சொதப்பிடறீங்க. முக்கியமான மேட்ச்செல்லாம் வெளியே தானே சார் நடக்குது. அதுக்கேத்த மாதிரி உங்க டீமை தயார் பண்ணுங்க.





அடுத்து சார், நமக்கு ஒரு ஈமெயில் வந்திருக்கு. பூனேலேர்ந்து யுவராஜ் அனுப்பியிருக்கார்.

"என்ன பெரிசா கேட்கப்போறாரு, அடுத்த வருஷம் எங்க டீம் இருக்குமான்னு டவுட்டா இருக்குன்னு எழுதியிருப்பார்"

"எப்படி சார் கரெக்டா சொன்னீங்க? நானே கூட கேட்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்"

"உங்களுக்கு மட்டுமா? IPL பாக்கற எல்லாருக்குமே இந்த டவுட் இருக்கு. காலம் தான் இதற்கு பதில் சொல்லணும்."

சரி சார், இப்போ அடுத்த நேயர் வர்றார், ஹெலோ?

நேயர், "யோவ், நான் பெங்களூருவிலிருந்து விராட் பேசறேன், ஒ....இந்த கெயில் பா.... ஒரு மேட்ச் ஆடறான், ஒ.....அடுத்த மேட்ச் ஆப்பு வைக்கறான். ஒ... இந்த ல...கோ...தொடர்ந்து ஒழுங்கா ஆடுவானா மாட்டானா? மவனே ஆடலேன்னா அவ்ளோ தான், ..

வடிவேலு குறுக்கிட்டு, "தம்பி தம்பி, இது பொது நிகழ்ச்சி தம்பி, இப்படி ஏக வசனத்தில பேசறது நல்லாவா இருக்கு.."

விராட் கடுப்பாகி "யோவ்...ஒ.... எனக்கே அட்வைசா? நான் இளைய தலைமுறையின் அடையாளம், தெரிஞ்சுக்கோ. ரொம்ப பேசினே அவ்ளோ தான், சூ...அடிச்சு சு...தடவிடுவேன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா என் வென்று" படக்கென்று போனை வைக்கிறார்.

வடிவேலு முகத்தைத் துடைத்த படியே, "தம்பி அவர் பேரோ கெயிலு, அவர் அடிச்சா புயலு - புயல் வருஷம் முழுக்கவா அடிக்கும்? ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தான் தம்பி அடிக்கும், சரிங்களா?" - மறுபடியும் முகத்தைத் துடைக்கிறார்.

பெண்மணி, "ஓகே சார், ஒரு சிறிய விளம்பர இடைவேளை "

வடிவேலு, "தயவு செஞ்சு பிரேக் விடுங்க, காதிலேர்ந்து ரத்தம் வர்ற மாதிரி இருக்கு, பஞ்சு வைக்கணும் - பாவிப்பய, இப்படியா வண்டை வண்டையா திட்டுவான்?"




இடைவேளைக்குப் பிறகு..

ஓகே சார், ஒரு கால் வருது..ஹெலோ யார் பேசறது?"

நேயர், "நீங்க தான் பேசறீங்க"

வடிவேலு உஷாராகி,"மேடம் இவன் அவனே தாங்க, இங்கேயும் வந்துட்டான்"

நேயர், "சார் சார், நான் நீங்க நினைக்கற ஆள் இல்லை, பஞ்சாப்பிலேர்ந்து கில்லி பேசறேன்"

"யாரு விஜய் தம்பியா?'

"அர்ரே, ஆடம் கில்க்ரிஸ்ட் பேசறேன்யா"

"அப்படி தெளிவா பேசிப் பழகு, என்ன விஷயம்?"

"டீம் சரியா ஆடலேன்னு நான் பெஞ்ச்சில உட்கார்ந்தேன். ஆனாலும் ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லையே? எவ்ளோ முக்கினாலும் முடியலையே?"

"முக்கினாலும் முடியலேன்னா நல்ல டாக்டரா பாரு."

"அட அது இல்லீங்க, டீம் ஜெயிக்க மாட்டேங்குதே, அதைச் சொன்னேன்"

"அதுக்கு நீங்க பெஞ்சில உட்கார்ந்தா பத்தாது. அம்ரித்சர் குருத்வாரா வாசலில் குத்த வைச்சு உட்காருங்க. குரு நானக்கின் அருள் கிடைச்சாலாவது எதாச்சும் நல்லது நடக்குதான்னு பார்க்கலாம், போனை வைங்க"

வடிவேலு, "பதில் சொல்லி தொண்டை வறண்டு கிடக்கு, கொஞ்சம் தண்ணி குடுங்க"

தண்ணீர் குடிக்கும்போதே போன் மணி அடிக்கிறது. உடனே பெண்மணி,"சார் ஒரு நேயர் லைன்ல.."

வடிவேலு, "எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆமாம், நீங்க எதுக்கு இங்க சும்மா உட்காந்திருக்கீங்க? போய் வேற வேலை வெட்டி இருந்தாப் பாருங்க" என்று விரட்டி விட்டு போனை எடுக்கிறார்.




"ஹெலோ, வடிவேலுவா?, நான் ரிக்கி பாண்டிங் பேசறேன்"

"வாய்யா, என்ன திடீர்னு?"

"ஒண்ணும் இல்லை, டீம் நல்லா இருக்கணும்னு நினைச்சு வெளியே வந்தாலும் வந்தேன். ஆனா இந்த ரோஹித் பய போடற ஆட்டம் தாங்க முடியல"

"என்ன பண்றது? பயபுள்ள ஓவராத்தான் துள்ளுது, ஆனா அவனைச் சொல்லி தப்பில்லை. ஏன்னா இருந்திருந்து அவனுக்கு கேப்டன் பதவி கிடைச்சிருக்கு. காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாஞ்ச மாதிரி பாயறான். விடு விடு, ரெண்டு மேட்ச் தோத்தான்னா போதை எல்லாம் பிதுங்கி வெளியே போய் ப்ரெஷ் ஆயிடுவான்.

"அப்படியா" என்று சொல்லிவிட்டு ரிக்கி போனை வைக்கவும், வடிவேலு "சூடு தாங்க முடியாம ஓரமா உட்கார்ந்து காத்து வாங்கற நன்னாரிப் பயலுக்கு வயிறு எரியுது பாரு" என்று அவர் ஸ்டைலில் போனைப் பார்த்து முணுமுணுக்கிறார்.



உடனே அடுத்த மணி அடிக்கிறது. "சார் நான் கம்பீர் பேசறேன்,"

உடனே இன்னொரு குரல் "சார் நான் வீரு பேசறேன்"

வடிவேலு, "யாராச்சும் ஒருத்தர் பேசுங்கய்யா, ரெண்டு பேருக்கும் ஒண்ணும் பெரிய வித்யாசம் இல்லை. நீ இன்னிக்குப் போகபோற, அவன் நாளைக்குப் போகப்போறான்"

கம்பீர் , "போன வருஷம் கப் வாங்கின டீம் சார் எங்களுது. இந்த வருஷம் நிலைமையைப் பார்த்தீங்களா?

"என்ன பெரிய நிலைமை? போன வருஷம் ஆடின மாதிரி ஆட வேண்டியது தானே?"

"அதான் முடியலையே சார்"

"முடியலேன்னா மூடிக்கிட்டு போ. அதை விட்டுட்டு டீம்ல இருக்கற சின்னப் பசங்க கிட்ட வீராப்பா முறைக்கற வேலையெல்லாம் வைச்சுக்காதே, நீயே ஒரு தேவையில்லாத ஆணி. ஞாபகம் வெச்சிக்க.

வீரு குறுக்கிட்டு, "சார் எனக்கு எதாச்சும்...?"

"பெரிசு, வயசில பெரியவங்க நீங்க, நான் உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாது, பார்த்து செய்யுங்க"

வடிவேலு போனை வைத்து விட்டு ஓய்வாக உட்காரவும் அவரது செல்போனில் மெசேஜ் வருகிறது. எடுத்துப் பார்க்கிறார்.

"மெசேஜ் ப்ரம் கலாநிதி மாறன் - ஷோ ரொம்ப அருமையா பண்றீங்க, சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூட இதே மாதிரி ஒரு ப்ரோக்ராம் வருது. வர்றீங்களா?"

வடிவேலு படக்கென்று மெசேஜை டிலீட் செய்கிறார் - "நல்ல வேளை, அழிச்சிட்டேன். இந்த ஆள்கிட்டேர்ந்து மெசேஜ் வந்தது தெரிஞ்சாக் கூட அந்த அம்மா உள்ளே வெச்சிடும்" - என்று ரிலாக்ஸ் ஆகவும் போன் மணி ஒலிக்கிறது. எடுக்கிறார்.





மறுமுனையில் "சார் நான் தோனி பேசறேன்"

வடிவேலு குஷியாகி "அடடடா, நம்மூர்க்காரன் கிட்ட பேசற சந்தோஷமே தனி. நானே உங்களுக்கு போன் போடணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், நீங்களே பண்ணிட்டீங்க"

தோனி, "என்கிட்டே உங்களுக்கு என்ன கேட்கணும்?"

வடிவேலு, "எல்லா மேட்சையும் கடைசி பால் வரைக்கும் இழுத்துக் கொண்டு போய், நாடி நரம்பு, இதயத்துடிப்பு எல்லாம் அடங்கிப் போகற அளவுக்கு மனுஷனை டென்ஷன் பண்ணி ஜெயிக்கறீங்களே? உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?"

"அப்போ தான் "சென்னை அணி த்ரில் வெற்றி" அப்படின்னு கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி போட முடியும் அய்யாச்சாமி"

"அய்யாச்சாமியா? சரி பரவால்ல. இன்னொரு கேள்வி"

"என்னது?"

"உங்க பேட்ல மட்டுந்தேன் அந்த பவர் இருக்கா? இல்லை எல்லா பேட்லயும் இருக்கா? அடிச்சா பந்து பாதாளம் வரைக்கும் பாயுதே? எப்படி எப்படி எப்படி?"

"பேட்ல என்ன இருக்கு? எல்லாம் படைச்சவன் கையில் இருக்கு"

"என்ன இவ்ளோ சிம்பிளா சொல்றீங்க?"

"ஆமாய்யா, ஆஸ்திரேலியா கிட்ட தோத்தப்போ காறித் துப்பினீங்க. அதே டீமை இங்க துவைச்சு எடுத்தப்போ தலையில தூக்கி வைச்சு கொண்டாடினீங்க. இப்போ IPL பார்த்துட்டு பாராட்டறீங்க. இது முடிஞ்சு சவுத் ஆப்பிரிக்கா போய் உதை வாங்கினா மறுபடியும் கழுவி ஊத்துவீங்க. உங்க இஷ்டத்துக்கு நாங்க ஆட முடியுமா?ஏதோ ஒரு கணக்குல அகஸ்மாத்தா வீசறேன், அதுவா பட்டுப் போகுது. ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்கய்யா"

"நியாயமான பதில்"

"போனை வைச்சிடவா?

"சார் சார், கடைசியா ஒரு கேள்வி"

"கேளுங்க"

"மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வரக்கூடாது, IPL ஆடக்கூடாதுன்னு சொல்லி நம்ம எதிர்ப்பைக் காட்டினோம். ஆனால் ரமீஸ் ராஜா, வாகார் யூனுஸ், முஷ்டாக் அஹ்மத், வாசிம் அகரம் இப்படின்னு ஒரு பெரிய பாகிஸ்தான் பட்டாளமே IPLலோட சம்பந்தப்பட்டிருக்காங்களே, இவங்களுக்கெல்லாம் அந்த விதிமுறை பொருந்தாதா?"

.

.

.

.

.

பிசிசிஐ சிந்திக்குமா?



Jayaraman

New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...