Tuesday, January 10, 2012

தோனியின் ராஜவேட்டை: இந்தியாவின் ஆஸ்திரேலியப் படையெடுப்பு (பாகம் 3)


எவ்வளவோ தொடர்பு கொள்ள முயன்றும் தோனியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் நாமே நேரடியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று உண்மை நிலவரம் அறிந்து வருவோம் எனப் புறப்பட்டோம் (அடுத்த எபிசோடு போட்டாகணுமே!!).

இந்தியன் டிரெஸ்ஸிங் ரூம்:

சகீர் கானும் இஷாந்தும் கை கால்களை அமுக்கிய வண்ணம் ஒரு ஓரமாக உட்காந்திருக்காங்க. அப்பொழுது விராட் கோலி க்ராஸ் ஆகிறார்.

சகீர் கான், "டேய், சும்மாத் தானே இருக்கே, கொஞ்சம் வந்து கை கால் அமுக்கி விடுடா, 2 நாள் சேர்ந்தா மாதிரி போலிங் போட்டு கை கால் எல்லாம் அடடாங்குது."

கோலி கடுப்பாகி, "நானே விரல் மேட்டர்ல செம கடுப்புல இருக்கேன். மேற்கொண்டு நோண்டாதீங்க"இஷாந்த், " ஏன்யா, தூக்கிக் காட்டறதுக்கு உனக்கு வேற விரலே கிடைக்கலியா? இப்படியே போனீன்னா சிம்பு மாதிரி உன்னையும் விரல் வித்தை வீரர்னு கூப்பிடப் போறாங்க"

அதை நீ சொல்றியா? கோ-கார்ட்டிங் விளையாடும்போது நீயும் தானே பண்ணினே?இஷாந்த், "பட் நான் உன் அளவுக்கு பிரபலமாகலியே"

செஹ்வாக் உள்ளே நுழைந்தவாறே, "அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும் தம்பி"

இஷாந்த் சற்றே கடுப்பாக, சகீர் " கூல் மேன், அவர் சும்மா கிண்டல் பண்றார்"

கொஹ்லி பேச்சை மாற்றும் விதமாக, "என்ன சாகீர், பிரஸ் மீட் எல்லாம் குடுத்து கலக்கறே? அதுவும் சீரீஸ் லெவல் பண்ணுவோம்னு வேற சொல்லியிருக்கே. ரொம்ப தைரியம் தான்"

சகீர், "கான்பிடன்ஸ் மச்சி கான்பிடன்ஸ். அவங்க நாலு வரி சொல்லும்போது நாமளும் பதிலுக்கு நாலு வார்த்தை சொன்னாத்தானே ஒரு பில்ட் அப் இருக்கும்."”

செஹ்வாக், “பீல்ட்ல தான் ஒண்ணும் இல்லை, அட் லீஸ்ட் இங்கயாச்சும் கொஞ்சம் கொந்தளிப்போமேன்னு பேசியிருப்பான், இல்லை சாகீர்?"

ஜாகீர், "கம்பெனி சீக்ரட்டை ஏம்பா வெளிய சொல்றே?" எல்லோரும் சிரிக்கின்றனர்.

கோலி, "சரி நீங்க கதையடிங்க,, நான் ப்ராக்டீசுக்குப் போறேன்"

கான் நக்கலாக, "பயிற்சியா? எதுக்கு? நீ தான் இனிமே டீம்ல இருக்க மாட்டியே? உன்னை விட நானும் இஷாந்துமே நிறைய பால் ஆடிட்டோம்"

அப்பொழுது டிராவிட் அங்கே சேர்கிறார், "ஆமாம்பா, ஆடாம இருந்த கம்பீரும் லக்ஷ்மனும் போன மேட்ச்ல ஏதோ ஆடி எஸ்கேப் ஆயிட்டாங்க, உனக்கு அடுத்த மேட்ச்ல ஆப்பு தான்"

கோலி, "அப்படிப் பார்த்தா உங்களைத் தான் தூக்கணும்"


"யோவ், அவர் நம்ம டீமோட "சுவர்", தெரியும்ல? " - வியர்வையை துடைத்தவாறே கம்பீரும் ஜமாவில் ஐக்கியம் ஆகிறார்கோலி, "அதெல்லாம் சும்மா, அவர் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் கன்னாபின்னான்னு வீக், பார்த்தீங்கல்ல, ரெண்டு மேட்சா எப்படி கிளீன் போல்ட் ஆவுறாருன்னு. பௌலர் நல்ல பால் போட்டா அதை மதிக்க வேண்டியது தான், அதுக்காக இப்படியா விழுந்து நமஸ்காரம் பண்ணுவாங்க? இவர் குனிஞ்சு நிமிர்றதுக்குள்ள பந்து ஸ்டம்பை தூக்கிடுது"

லக்ஷ்மன், " அதெல்லாம் நல்லா ஆடறவங்க சொன்னா நல்லாருக்கும்"

கோலி, "ஏன் எனக்கென்ன? நான் அவ்வளவா டெஸ்ட் மேட்ச் ஆடினதில்ல. நீங்கல்லாம் ஆரம்ப காலத்துல ஏதோ எல்லா மேட்ச்லயும் செஞ்சுரி அடிச்சா மாதிரி பேசறீங்க?"

செஹ்வாக், "ஏம்பா எல்லாரும் சூடாகறீங்க? எல்லாரும் அவங்கவங்க நேச்சுரல் கேம் ஆடினாலே போதும்"

அஷ்வின் சிரித்துக் கொண்டே, "பாஸ், இங்க ஒண்ணும் "மேன் ஆப் தி மேட்ச்" அவார்ட் குடுக்கல, இங்கயும் அதே மாதிரி பேசாதீங்க"அப்பொழுது தோனியும் சச்சினும் அங்கே நுழைகின்றனர்.

செஹ்வாக் நக்கலாக, "இதோ வந்துட்டாங்கப்பா, பூஸ்ட் பிரதர்ஸ்"

எல்லோரும் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தோனி, "என்னப்பா, எதாச்சும் கட்சி ஆரம்பிக்கப் போறீங்களா?"

ரோஹித், "அதெல்லாம் நீங்க தான் செய்வீங்க!"

ரஹானே, "ராஞ்சியில ஏதோ கட்சியெல்லாம் ஆரம்பிக்கப் போறீங்களாமே?

தோனி கலவரமாகி, "யோவ், இதெல்லாம் யாருய்யா கிளப்பி விடறாங்க?"

உமேஷ், "அதனால தான் நீங்க 2015 வேர்ல்ட் கப்ல நான் இருப்பேனான்னு தெரியாதுன்னு பேட்டி குடுத்தீங்களாமே?"

சச்சின், "ஏம்பா, அவனே ரெண்டு மேட்ச் உதை வாங்கினதுல மேலிடத்துக்கு பதில் சொல்ல முடியாம முழிச்சிக்கிட்டிருக்கான், நீங்க வேற"

செஹ்வாக், "இவனுக்கா பதில் சொல்லத் தெரியாது? இங்கிலாந்து டூர்ல என்ன சொன்னானோ அதையே தான் இங்கயும் சொல்றான், செம கேடி"

தோனி,"ச்சே, இருந்தாலும் இப்படியா திட்டுவாங்க? எவ்ளோ டீப்பாப் போறாங்க! ரொம்ப அவமானமா இருக்கு"

செஹ்வாக், "அடடா, இதுக்கு முன்னாடி துரை அவமானப் பட்டதே இல்லையாக்கும்"

தோனி, "உன் பேச்சில திமிர் தெரியுதே?"

டிராவிட், "சும்மா கலாய்க்காதீங்கப்பா, அவன் ஏதோ முக்கியமான விஷயம் பேச வந்திருக்கான்"

கோலி, "என்ன பெரிய முக்கியமான விஷயம்? அடுத்த மேட்ச்ல யாரெல்லாம் ஆடறதுன்னு டிஸ்கஸ் பண்ணுவாரு"

ரோஹித், "அது முக்கியம் இல்லையா?"

செஹ்வாக், "அதான் நாம புடுங்கறது எல்லாம் தேவையில்லாத ஆணீன்னு தெரிஞ்சு போச்சே, அப்புறம் எவன் ஆடினா என்ன!"

அஷ்வின், "என்ன சார் இப்படிச் சொல்றீங்க?"

செஹ்வாக், "அட போய்யா, வெறுப்பா வருது. கடந்த 12 இன்னின்க்ஸ்ல ரெண்டு தடவை தான் முன்னூறுக்கு மேல அடிச்சிருக்கோம். இதுல நமக்கெல்லாம் பேட்டிங் சூப்பர் ஸ்டார்ஸ்னு பேரு வேற.

சச்சின், "இந்த மாதிரி நேரத்துல தான் நாம ஸ்டெடியா இருக்கணும் வீரு. நீயே இப்படி ஓய்ஞ்சு போய்ட்டா அப்புறம் எப்படி?"

செஹ்வாக், "இல்லை சீனியர், நிஜமாவே எனக்கு பேட்டிங் தெரியுமான்னு இப்ப சந்தேகமா இருக்கு"

தோனி, " யோவ், ஏன்யா இப்படி சோக கீதம் வாசிக்கறே? நீங்க இப்படியெல்லாம் சோர்ந்துடக் கூடாதுன்னு தானே எல்லார் எதிர்ப்பையும் மீறி உங்களை வெளிய கூட்டிட்டுப் போறேன்?"

அறையில் சிறிது நேரம் மௌனம். பிறகு தோனி தொடர்கிறார்.

எல்லாரையும் பார்த்து, "சரிப்பா, நம்ம வேலையைப் பார்ப்போம், அடுத்த மேட்ச்ல யாரெல்லாம் போடலாம்னு கொஞ்சம் சஜெஸ்ட் பண்ணுங்க"

டிராவிட், "நான் அடுத்த மேட்ச் ஒதுங்கிக்கறேன், எனக்குப் பதிலா வேற யாரையாச்சும் போட்டுக்கோங்க"

தோனி, "அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது, நீங்க ஏன் சொல்றீங்க நீங்க ஏன் சொல்றீங்க?"

அஷ்வின் மனதுக்குள், " பிரகாஷ் ராஜ் படம் பார்த்துட்டு வர்றார் போலிருக்கு, அதே எபெக்ட்"

சச்சின், "ஏம்பா இப்படி சொல்றே?"

டிராவிட், "சின்னப் பசங்க ரெண்டு பேரு சும்மாவே உக்காந்திருக்காங்க, அவங்களும் ஆடினாத்தானே நல்லது. அப்புறம் இந்தியன் டீம்ல டெஸ்ட் விளையாட யாருமே இல்லைன்னு ஆயிடக்கூடாது. சீரீஸ் லெவல் பண்றது கூட ரொம்ப கஷ்டம். இனிமே சின்னவங்களுக்கு சான்ஸ் குடுக்கறது தான் புத்திசாலித்தனம்"

சச்சின், "அப்படிப் பார்த்தா நானும் தான் உக்காரணும்"லக்ஷ்மன், "உங்களை எப்படி உக்காத்தி வைக்க முடியும்? நீங்க செஞ்சுரி அடிப்பீங்கன்னு உலகமே எதிர்பாக்குது. பிசிசிஐ ஆளுங்களே கூட உங்க மேல பெட் கட்டியிருப்பாங்க"

தோனி, "ஆமாம் சச்சின், உங்களை உக்காத்தி வைக்க முடியாது. யாராச்சும் கேப்டன்சி பண்றதுக்குன்னு ரெடின்னா சொல்லுங்க, அடுத்த மேட்ச் நான் உக்காந்துக்கறேன். கொஹ்லி கீபிங் பண்ணுவான். என் கேப்டன்சி வேற டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுச்சு. எனக்கும் ப்ரேக் கிடைச்ச மாதிரி இருக்கும் ”

கம்பீர், "எனக்கு ஆசை தான், ஆனா இப்போ தான் நான் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சிருக்கேன், கேப்டனானா இருக்கற பார்மும் போயிடும்"

கொஹ்லி, "ஆமாங்க, நீங்களே இருந்துக்கோங்க, என்னால கீபிங் எல்லாம் பண்ண முடியாது"

சச்சின், "ஒரு முக்கியமான விஷயம், தயவு செஞ்சு நைட் கிளப்புக்கெல்லாம் போய் இருக்கற மிச்சம் மீதி மானத்தையும் வாங்கிடாதீங்க. எல்லோரும் நாம் ஏதோ குடிச்சிட்டு ஆடறோம்னு நினைக்கறாங்க"

ரஹானே, "கரெக்ட் தானே? அங்கே குடிச்சிட்டு தானே ஆட முடியும்?"

தோனி கடுப்பாகி சச்சினைப் பார்த்து, "இவனுக்கு இன்னும் தெளியலை போலிருக்கு, நாம எந்த ஆட்டத்தைப் பதிப் பேசறோம், இவன் எந்த ஆட்டத்தைப் பத்திப் பேசறான்னு பார்த்தீங்களா?". பிறகு ரஹானேவைப் பார்த்து, "ராஜா, நம்ம டப்பா கிரௌன்ட்ல டான்ஸ் ஆடுது பாரு, அதைப் பத்தி பேசறோம்"

டிராவிட், "தோனி, இவங்களை விட்டா பேசிக்கிட்டே இருப்பாங்க, நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க"

தோனி, "எனக்கு என்ன தோணுதுன்னா லக்ஷ்மன் டிராவிட் இவங்களுக்குப் பதிலா ரோஹித் அண்ட் ரஹானேவை எடுக்கலாம்னு இருக்கேன்"

டிராவிட், "யாராச்சும் ஒருத்தருக்கு ரெஸ்ட் குடுங்க. நான் இங்கிலாந்து டூர்ல கொஞ்சம் சுமாரா ஆடிட்டேன். பாவம் லக்ஷ்மனுக்குத் தான் எந்த இன்னிங்க்சும் சரியா அமையலை.அதனால லக்ஷ்மனை விளையாட விடுங்க"

சச்சின், "அதுவும் சரி தான், அவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா டீம்ல பாலன்ஸ் இருக்காது"

தோனி, சரிங்க டிராவிட், உங்களுக்குப் பதிலா ரோஹித்தை போட்டுக்கலாம். அப்புறம் அஷ்வினுக்குப் பதிலா ஓஜாவை போட்டுக்கலாம்னு இருக்கேன். ஆமாம் எங்க அவன்?"

அஷ்வின், "பௌலிங் மறந்து போயிடக் கூடாதுன்னு ரொம்ப தீவிரமா ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கான்"

ரஹானே, "அப்போ நான்?"

தோனி, "நீ நாலாவது டெஸ்ட் ஆடிக்கோ - கொஹ்லிக்குப் பதிலா"

கொஹ்லி மனசுக்குள், "அடப்பாவி, அடிலைட் கொஞ்சம் பேட்டிங் பிட்ச்சுன்னு சொல்வாங்களே, அங்க போய் நம்மளை உக்காத்தி வைக்கறாரே, சரி பரவால்ல. காபி கிடைச்சுதே, அதுவே பெரிய விஷயம். இதுல ஆறிப் போச்சு, சூடு இல்லேன்னு சொன்னா அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா தான்"

தோனி ஏதோ ஞாபகம் வந்தவராக, "வினய், சாஹா இவங்கல்லாம் எங்க?"\

கம்பீர், "வினய் சொந்தகாரங்க இந்த ஊர்ல இருக்காங்களாம், பாக்கப் போயிருக்கான். கூடவே சாஹாவும் போயிருக்கான்"

ரோஹித் கோலியிடம், "இருந்தா மட்டும் டீம்ல எடுத்துடுவாராக்கும்!"

தோனி அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு, "சரிப்பா, இதான் பைனல் டீம்.. திராவிடுக்குப் பதிலா ரோஹித், அஷ்வினுக்குப் பதிலா ஓஜா, மற்றபடி அதே டீம் தான். என்ன அஷ்வின்? ஓகே தானே?

"அஷ்வின், டபுள் ஓகே. ரொம்ப சந்தோஷம், ஜாலியா ஊரை சுத்திப் பார்த்துட்டு வருவேன், பொண்டாட்டி ரொம்ப நச்ச்சரிக்கறாப்பா"

கொஹ்லி, " சரி மேட்டர் முடிஞ்சிடுச்சு வாங்க குவார்ட்டருக்குப் போவோம்"

சச்சின், "யோவ், இப்போ தானே சொன்னேன்...."

கம்பீர், "அவன் நாம தங்கியிருக்கற குவார்ட்டர்சை சொல்றான், இல்ல கொஹ்லி?"

கொஹ்லி, "ஆங்,,, அப்படியும் வெச்சுக்கலாம்"

செஹ்வாக், "மேட்சுக்கு முன்னாடி வேற விளையாட்டு எதாச்சும் விளையாடினா புது உற்சாகம் பிறக்கும்னு நீங்க தானே சொன்னீங்க தோனி? அதான் பசங்க ஜாலியா வெளிய போறாங்க"

தோனி, "உங்க ஜாலில என் சோலிய முடிச்சிடாதீங்க கண்ணுங்களா. எது செஞ்சாலும் பார்த்து செய்ங்க, அப்புறம் எவனாச்சும் போட்டோ எடுத்துட்டான்னா அவ்ளோ தான், நீங்க சொன்ன மாதிரி ராஞ்சியில புது கட்சி இல்லை, இருக்கற கட்சியில வட்டச் செயலாளர் பதவி கூட கிடைக்காது. ஏற்கனவே கவாஸ்கர் முதற்கொண்டு காறித் துப்பறாங்க"

செஹ்வாக், "துப்பிட்டு எங்க போவாங்க? அவங்களும் ஊர் சுத்தத்தான் போவாங்க"

கம்பீர் "ஆபீஸ் விஷயமா டூர் போறவங்க வெறும் ஆபீஸ் வேலையை மட்டும் பார்த்துட்டு திரும்பிடுவாங்களா? கொஞ்சம் ஊர் சுத்திட்டுத் தானே வருவாங்க. அது மாதிரி தான் இதுவும்"

சச்சின், "அவங்க ஆபீஸ் வேலையை முடிச்சதுக்கப்புறம் போவாங்க, இங்க அப்படியா?"

ரோஹித், "ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணிட்டா மட்டும் நாம ஜெயிச்சுடுவோமா? அவனுங்க அந்த குத்து குத்தறாங்க. பால் லெப்ட் போய் ரைட் வந்து செண்டர்ல வந்து நிக்குது"

டிராவிட், "அதுக்குத் தான் ப்ராக்டீஸ் பண்ணச் சொல்றது, கொஞ்சமாச்சும் ஆடலாம்ல"

தோனி, "கூல் கூல், fun at work வேணும், பட் dont make the work funny "

செஹ்வாக், " என்ன, பன்ச் அடிக்கறியா? கிரிக்கெட்டைத் தவிர எல்லாத்திலேயும் கரெக்டா இரு"

தோனி, " ஏன், நாங்கல்லாம் அடிக்கக் கூடாதா?"

"அது சரி, நீ எப்படியும் பந்தை அடிக்கப் போறதில்ல, பஞ்சையாவது அடிச்சாவது அடிச்சிட்டுப் போ"

தோனி,"யோவ், என்னை என்ன வேஸ்டுன்னு டிக்ளேரே பண்ணிட்டீங்களா?"

செஹ்வாக்," எங்க வேஸ்ட் ஆயிடப் போறியோன்னு நினைச்சு சொல்றேன். உன் கேப்டன்சி ஒண்ணு தான் உனக்கு வொர்க் அவுட் ஆயிக்கிட்டிருந்துச்சு, இப்போ அதுலயும் சொதப்பறே, அந்த அக்கறையில சொல்றேன்"

கம்பீர், "அடுத்த மேட்ச் டாஸ் ஜெயிச்சா பௌலிங் எடுங்க. பேட்டிங் எடுக்காதீங்க"

ஜாகீர், "ஆமாம் தலை, பேட்டிங் எடுத்தா எல்லாரும் லஞ்சுக்குள்ள அவுட் ஆயிடறீங்க. என்னால சாப்பிட்டு வந்து பௌலிங் முடியலை"

தோனி வெறுப்பாக, "என்னாங்கடா ஆளாளுக்கு உபதேசம் பண்றீங்க? உள்ளே போனா கோச் முதற்கொண்டு ஏறி மிதிக்கறாங்க. போதாக்குறைக்கு ஸ்ரீகாந்த் வேற போன் மேல போன் போட்டு திட்டி நொறுக்கறாரு. எல்லாரையும் வெச்சு வாங்கிடுவேன் - மைண்ட் இட்"

எல்லோரும் தோனியை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு வேகமாக கலைந்து செல்கின்றனர்.

தோனி மனசுக்குள், "அய்யோயோ, அவசரப்பட்டு பேசிட்டேனே, அடுத்த மேட்ச்ல வேணும்னே சீக்கிரம் அவுட் ஆயிட்டு இன்னும் மானத்தை வாங்குவாங்களே, நான் என்ன செய்வேன்!!"

தோனி என்ன செய்யப் போகிறார்? இந்திய அணி என்ன செய்யப் போகிறது?
பாப்போம்....அதை விட நமக்கு வேறென்ன வேலை?


Jayaraman
New Delhi

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...