Tuesday, September 25, 2012

ஐ - இது எப்படி இருக்கு?


"இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர்" - அப்படின்னு மொட்டையா சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு ஷூடிங்கிற்குப் போயிட்டாங்க. இருந்தாலும் நமக்கு இப்போதிலிருந்தே மண்டை குடையுதே!. நம்ம பங்குக்கு நாமளும் விதவிதமா யோசிச்சு புரளி கிளப்பறது தானே ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு அழகு. அப்படி "ஐ" யைப் பற்றி ரொம்ப "I think" பண்ணியதன் விளைவு தான் இது: ஒரு வேளை அவரோட முந்தைய படங்களின் சாயலில் இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை (கீழே சொல்லப்பட்டிருக்கற எதுவுமே இல்லாம புதுசாத் தான் அவர் எடுப்பாருன்னு நிச்சயமா நம்பலாம்):

ஜென்டில்மேன் ஸ்டைல்:

ஒரு ஆபீஸ்ல திடீர் திடீர்னு ஊழியர்கள், குறிப்பா பெண் ஊழியர்கள் காணாம போறாங்க. அதே ஆபீஸ்ல தான் நம்ம ஹீரோ மனிதவள அதிகாரியா வேலை செய்யறாரு. ரெண்டு பொண்ணுங்க அவரை லவ் பண்றாங்க. அதே ஆபீஸ்ல தான் சந்தானமும் வேலை செய்யறாரு. இதை வெச்சு முதல் பாதி கிளுகிளுப்பாவும் காமெடியாவும் ஓடுது. ஊழியர்கள் காணாம போறதுக்குக் காரணம் நம்ம ஹீரோ தான்னு பின் பாதியில தான் தெரிய வருது. அவர் நல்லாப் படிச்சும் சிபாரிசோ, டெபாசிட் கட்ட பணமோ இல்லாததினால அவருக்கும் அவர் நண்பருக்கும் வேலை கிடைக்கலை. அந்த விரக்தியில் அவரோட நண்பர் தற்கொலை பண்ணிக்கறாரு. சிபாரிசுல வேலைக்கு வந்த திறமையில்லாத மற்றும் கம்பெனி ரகசியத்தை வெளியே விற்று காசு பார்க்கும் ஊழியர்களை எல்லாம் அவர் கடத்திக் கொலை பண்ணிடறாரு. சிபாரிசுல வந்தவங்களை எல்லாம் தூக்கிட்டா திறமைசாலிகள் முன்னுக்கு வந்திடுவாங்கன்னு ஒரு மெசேஜ் சொல்றோம். ட்விஸ்ட் என்னன்னா அவரோட காதலியும் சிபாரிசுல வந்தவங்க தான். காதலியா, கொள்கையான்னு பரபரப்பா கதை நகருது.


 காதலன் ஸ்டைல்:
ஹீரோயின் முதலமைச்சர் பொண்ணு. ஹீரோ முதல்வரோட PA. முதல்வர் பொண்ணு லண்டன்ல படிக்கும்போது அல்கைதா ஆளுங்க அவருக்கு போதை மருந்து குடுத்து ப்ரைன் வாஷ் பண்ணி அவங்க இயக்கத்துக்காக வேலை செய்யச் சொல்றாங்க. அவங்களும் தமிழகம் பூரா குண்டு வைக்கறாங்க. நடுவுல ஹீரோவோட லவ்வும் வந்திடுது. சந்தானம் தான் முதல்வரோட டிரைவர் (காமெடிக்குத் தொட்டுக்க). நாட்கள் போகப் போக தன் காதலி ஒரு தீவிரவாதின்னு ஹீரோவுக்குத் தெரிய வருது. எப்படி தீவிரவாதிங்க கிட்டேர்ந்து நாட்டையும் காதலியையும் காப்பாத்தறார்ங்கறது தான் மீதிக் கதை.


இந்தியன் ஸ்டைல்:
இதுல ரொமான்ஸ் இல்லை, ஆனா த்ரில் உண்டு.  இந்தியனின் இரண்டாம் பாகம்னு சொல்லலாம். முதல் முறையா கமல், விக்ரம் ஒரே படத்தில்.

திடீர் திடீர்னு சில பெரும் புள்ளிகளும் மேல் தட்டு மக்களும் கொல்லப் படறாங்க. அதை விசாரிக்கறதுக்காக விக்ரம் தலைமையில் தனிப் படை அமைக்கறாங்க.தீவிர விசாரணையில கொல்லப்பட்டவங்களோட பசங்க மேல எதாவது ஒரு போலீஸ் கேஸ் பதிவாகியிருக்கறது தெரிய வருது. அதிலும் பல பேர் குடிச்சிட்டு காரோட்டி நிறைய ஏழைங்களை கொன்னிருக்காங்கன்னும் தெரிய வருது. கொலை செய்யப் பட்ட விதமெல்லாம் பழைய சேனாபதி ஸ்டைலில் இருக்கறதால விக்ரம் இன்னும் தீவிரமா விசாரணை பண்றாரு. எதிர்பார்த்த மாதிரியே, இந்தியன் தாத்தா தான் கொலை செய்யறார்னு தெரிய வருது. பிள்ளைகள் வெறும் அம்பு, இவங்களை ஒழுங்காக வளர்க்காத பெற்றோர்கள் தான் நிஜக் குற்றவாளிகள்னு அவங்களுக்குத் தண்டனை குடுக்கறாரு. கடைசியில தாத்தா தப்பிச்சு குஜராத்துக்கு போயிடுவாரு (அப்போத் தான் மக்கள் அவங்களா இந்தியன் தாத்தாவை நரேந்திர மோடியா கற்பனை பண்ணிக்குவாங்க). ட்விஸ்ட் என்னன்னா மனிஷா கொய்ராலாவோட பையன் தான் விக்ரம். அதாவது தாத்தாவுக்கும் பேரனுக்குமான மோதல். அப்பாவைக் கொன்ன தாத்தா மேல விக்ரம் ஆரம்பத்தில லைட்டா கடுப்பா இருக்காரு. பட் போகப் போக புரிஞ்சுக்கறாரு. நடுவுல ஒரு ஹீரோயின், காமெடி எல்லாம் வழக்கம் போல உண்டு.ஜீன்ஸ் ஸ்டைல்:
அதே ஜீன்ஸ் படம் தான். ஒரிஜினல் படத்தில் வைஷ்ணவி இல்லேன்னதும் தம்பி பிரசாந்த் ரொம்ப ஈசியா சரக்கடிச்சு சமாதானம் ஆயிடுவாரு. ஆனா இதுல அப்படியில்ல. எப்படியாச்சும் ஐஸ்வர்யா ராயை அடைந்தே தீரணும்னு முடிவு பண்ணி பல தப்புகள் பண்றாரு. அதுக்கெல்லாம் அண்ணன் தான் காரணம்னு எல்லாரையும் நம்ப வைக்கறாரு. கடைசில யாரு ஜெயிச்சாங்கறது தான் படமே.

பாய்ஸ் ஒரு மொக்கைப் படம். அதனால அதை டீல்ல விட்டுடுவோம்.

முதலவன் ஸ்டைல்:

காதல் தோல்வின்னா குடிச்சிட்டு குத்துப் பாட்டு பாடணுமான்னு இளைஞர்களை கேள்வி கேட்கிறார் நம்ம ஹீரோ. அதுக்கு ஒரு ஆள், "ஒரே ஒரு தடவை நீ காதலிச்சுப் பார், அப்போத் தான் தெரியும்" அப்படின்னு சொல்றாரு. ஸோ, வேலை மெனக்கெட்டு நம்மாளு லவ்ல விழறாரு. ஒரு நாள் முழுக்க ஹீரோயின் பின்னாடி பொறுமையா சுத்தி சுத்தி கடலை போடறார். அவரை எப்படியாச்சும் தோற்கடிக்கணும்னு ஹீரோயின் ட்ரை பண்றாங்க. அதிலேர்ந்து மீண்டு ஹீரோ எப்படி ஜெயிக்கறார்னு காட்டறோம். ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் காதலன்.

அந்நியன் ஸ்டைல்:

அதே மூணு கேரக்டர். எந்த வித தகுதியும் இல்லாம பொண்ணுங்க பின்னாடி சுத்தற பசங்களையும், ரெண்டு-மூணு பாய் பிரெண்ட் வைச்சு ஏமாத்தற பொண்ணுங்களையும் கருட புராணத்தின் படி போட்டுத் தள்ளிக்கிட்டே இருக்காருநம்ம அந்நியன். ட்விஸ்ட் என்னன்னா அம்பி, ரெமோ, அந்நியன் மூணு பேரும்அண்ணன் தம்பிங்க (triplets). அந்நியன் பண்ற கொலைகளுக்கு ரெமோ மாட்டறாரு. பிளாஷ்பேக்ல நம்ம ஹீரோயின் அம்பியை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்தறாங்க. ஆனா ரெமோவை கல்யாணம் பண்ணிக்கறாங்க. அந்த தோல்வியில் அம்பி தற்கொலை பண்ணிக்கறான். அம்பி செத்ததுக்காக ஹீரோயினைக் கொல்லத் துடிக்கிறார் அந்நியன். ஆனா ரெமோவோ அதைத் தடுக்கிறார். இறுதியில் யார் ஜெயிச்சாங்கங்கறது தான் கதை..காமெடிக்காக சந்தானமும் மூன்று வேடத்தில் வர்றாரு.


சிவாஜி ஸ்டைல்:

அமெரிக்காவில் நல்லா சம்பாதிச்சிட்டு தமிழ்நாட்டுக்கு வர்றார் விக்ரம். அவர் ஒரு டாக்டர். வழி நெடுக மக்கள் சாராயக் கடைகளில் கூட்டம் கூட்டமா இருக்கறதைப் பார்க்கறார். அவங்களுக்குத் தான் கண்டு பிடிச்சிருக்கற சிறப்பு மருந்தைக் குடுத்து அவங்களை மனுஷனாக்கணும்னு முடிவு பண்ணி அரசாங்கத்துக்கு மனு podaraaru. மக்கள் திருந்திட்டா வருமானம் போயிடுமேன்னு அவங்க அதை கண்டுக்காம விட்டுடறாங்க. சரி, நாமளே தமிழ்நாடு முழுக்க குடிகாரர்கள் மறு வாழ்வு மையம் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணி ஆபீஸ் ஆபீசா மனு போடறார். ஆனா சாராயக் கம்பெனிக்காரங்க ஆள் பலத்தையும், அரசியல் பலத்தையும் பயன்படுத்தி அதை தடுத்துக்கிட்டே வர்றாங்க. கடைசியில பொறுமையிழந்து சிங்கப் பாதையில போறாரு. எப்படிப் போறாரு, என்ன பண்றாரு? வெள்ளித்திரையில் காண்க (கடைசியில டாஸ்மாக் கடைகளெல்லாம் மூலிகை ஜூஸ் நிலையங்களா மாறிடுது)எந்திரன் ஸ்டைல்:
ரோபோ மியூசியத்தில் இருக்கற சிட்டியைத் திருடறதுக்காக அங்கே வேலைக்கு சேர்கிறார் விக்ரம். அங்கே ஏற்கனவே இருக்கற சமந்தாவோட கடலை போட்டு டைம் பாஸ் பண்றாரு. போகப் போக சமந்தாவும் சிட்டியைத் திருடறதுக்காகத் தான் வந்திருக்காங்கன்னு தெரிய வருது. செத்துப் போன போராவோட பொண்ணு தான் சமந்தா. அப்பா சாவுக்கு காரணமான வசீகரனைக் கொல்றதுக்காக அவர் கண்டுபிடிச்ச சிட்டியை வைச்சே பழி வாங்கணும்னு வெறியோட அலையறாங்க. இதுக்கு நடுவில் போரா ஏற்கனவே வெளிநாட்டுக்கு அனுப்பிய ஒரு ரோபோ மாடலை தீவிரவாதிங்க அமைப்பு தவறாப் பயன்படுத்துது. விக்ரம் யாரு, அவர் யாருக்காக, எதுக்காக சிட்டியைத் திருட வர்றார், விக்ரம்-சமந்தா காதல் என்னாச்சு, சமந்தா வசீகரனைப் பழி வாங்கினாங்களா இல்லையான்னு ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் நிறைய கிராபிக்ஸ் கலந்து சொல்றோம். சந்தானம் மியூசிய ரோபோக்களுக்கு ஜட்டி சாக்ஸ் போட்டு விடற எடுப்பா வந்து காமெடி பண்றார்.பியூட்டி என்னன்னா கடைசி வரைக்கும் சூப்பர் ஸ்டாரைக் காட்டவே மாட்டோம். ஆனா அவர் இருக்கற மாதிரியே படம் முழுக்க சீன் போடுவோம்.


நண்பன் ஸ்டைல்:
அதாங்க, ரீமேக் ஸ்டைல். சமீபத்திய ஆங்கிலப் படமான "Twilight" சீரிசைத் தழுவி எடுக்கலாம். ஒரு நல்ல பேய், ஒரு கெட்ட பேய், ஒரு ஹீரோயின், முக்கோணக் காதல்னு எல்லாத்துக்கும் ஸ்கோப் இருக்கற கதை. இது வரைக்கும் வெளி வந்த படத்தோட ஸ்டில்ஸும்  கிட்டத் தட்ட இதைத் தான் பிரதிபலிக்குது.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...