Monday, December 9, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 19

வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வந்த மொஹிந்தருக்கு அடி மேல் இடியாக அமைந்தன இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு அவனை சூப்பர் ஸ்டாராக சித்தரித்த பத்திரிகை "நண்பர்கள்" இன்று அவனை காமெடி பீசாக கேலி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவனோ எதைப் பற்றியும் அலட்டிக்காமல் சாந்தமாக வளைய வந்தான். கெட்டதிலும் ஒரு நன்மையாக நரேந்தர் தொடர்ந்து சொதப்பியது அவனை முழுமையாக ஓரங்கட்டுவதற்கு மொஹிந்தருக்கு இலகுவாக இருந்தது.

********************************************************************************************************************************
இந்த நவீன யுகத்தில் வியாதி மற்றும் மருத்துவமனையைப் போல் வாழ்க்கையெனும் பாடத்தைக் கற்பிக்கும் ஆசான் யாருமில்லை. அப்படி ஒரு பாடத்தை புற்றுநோய் மூலம் பெற்றுக் கொண்டான் ப்ரித்வி. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் ஒரு புதிய மனிதனாக மாறியிருந்தான்.

********************************************************************************************************************************
தமிழகத்தில் ஆட்சி மாற்றம், மருமகனின் சூதாட்ட வெறி, இந்திய அணியின் தொடர் தோல்விகள், ப்ரித்வி போன்ற சகலகலா வல்லவன் அணியில் இல்லாதது, என பல முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருந்தார் பத்மநாபன். அதிலும் புதிய முதல்வருக்கும் நல்ல கண்ணுவிற்குமான நெருங்கிய நட்பு அவரை மேலும் கலக்கமடையச் செய்திருந்தது.

********************************************************************************************************************************
ரகுவின் குடும்ப நிறுவனத்தில் லாஜ்வந்தி தொடர்ந்து நடித்து வந்தது பாருவின் சந்தேகத்தை மேலும் வளர்த்தது. தனக்கும் ரகுவிற்கும் அப்படி எந்தத் தகாத தொடர்பும் இல்லையென்று லஜ்வந்தியே நேரடியாக விளக்கமளித்ததால் அமைதியானாள். தான் செய்த தவறுக்காக ரகுவிடம் மிகவும் வருந்தியதன் விளைவாக தற்சமயம் மூன்றாவது குழந்தைக்குத் தாயாகியிருந்தாள்.

********************************************************************************************************************************
"நண்பர்களே, அனேகமா இது தான் நாம கலந்துக்கற கடைசி போட்டியா இருக்கும்னு
நினைக்கறேன். உங்களுக்கே தெரியும், தொடர்ந்து நாலு வருஷமா நாம ஒண்ணும் பெரிசா சாதிக்கலை. நான் பண்ற விளம்பரங்கள் தான் நமக்கு இருக்கற ஒரே வருமானம். நஷ்டம் இல்லேன்னாலும் அணியோட மதிப்பு அப்படியே தான் இருக்கு. இது மட்டுமில்லை, என்னோட சமீபத்திய சயன்ஸ்-பிக்ஷன் படமும் நான் எதிர்பார்த்த லாபத்தைக் குடுக்கலை. அதனால, ஒரு முதலீட்டாளரா இது எனக்கு சோதனையான காலம்.இந்த வருடம் நடக்கப் போகிற போட்டியில் குறைந்த பட்சம் நம்ம அணி அரை இறுதிப் போட்டிக்காவது தகுதி பெறணும். என்னை வருத்திக்கிட்டு உங்களுக்கெல்லாம் சம்பளம் குடுக்கணும்னு ஒண்ணும் தலையெழுத்தில்லை. முடிஞ்ச அளவு வெற்றிக்காக போராடுங்க. யார் விளையாடணும், விளையாடக் கூடாது - இது எதிலும் நான் தலையிடப் போறதில்லை. ஆல் தி பெஸ்ட்" என்று தன் முன்னே கூடியிருந்த வீரர்கள் முன்னாள் உரையாற்றி விட்டு வெளியேறினான் சாதிக் கான்.

********************************************************************************************************************************
"இந்த பேப்பர் மில்லை உங்களுக்குக் கொடுத்ததில் ரொம்ப சந்தோசம் சார்" என்று செழியனின் கையைப் பற்றிக் குலுக்கினார் ரெட்டி. கிரிக்கெட் மூலம் ஏற்பட்ட நட்டத்திற்கு ஈடு கட்ட முடியாமல் தனது சொத்துக்களை விற்க ஆரம்பித்திருந்தார் ரெட்டி. அதன் ஒரு பகுதியே இந்த பேப்பர் மில் விவகாரம்.

"இதில் என்ன சார் இருக்கு? எனக்கும் தான் இதில் லாபம்" என்று அடக்கத்துடன் கூறினான் தென்னிந்தியாவின் மீடியா கிங் என்று அழைக்கப்படும் செழியன்.

"நீங்க தொட்டதெல்லாம் துலங்குது. அப்புறம் ஏன் நீங்க இந்த பிரீமியர் அணிகளில் முதலீடு பண்ணலை சார்? சென்னை அணியை நீங்க ரொம்ப எளிதா வாங்கியிருக்கலாமே?" என்று கேட்டாள் அருகிலிருந்த ரெட்டியின் மகள்.

"கிரிக்கெட் ஒரு யானைம்மா. அதுக்கு தீனி போட்டு கட்டுப்படியாகாது"

"நீங்க சொல்றதும் சரி தான்" என்று தனது அனுபவத்தை நினைவு கூர்ந்தார் ரெட்டி.

"சார், ப்ளைட்டுக்கு நேரமாச்சு, இப்பவே கிளம்பினாத்தான் சரியா இருக்கும்" என்று செழியனுக்கு நினைவுபடுத்தினார் உதவியாளர்.

"ஓகே சார், கிளம்பறேன்" என்று மீண்டும் கை குலுக்கிவிட்டு கிளம்பினான் செழியன். ஆனால் சென்னை வந்து சேரும் வரை கிரிக்கெட் அணியை வாங்குவதைப் பற்றி யோசித்த வண்ணமே இருந்தான்.

*******************************************************************************************************************************
"டார்லிங், நம்ம டீமை ரத்து பண்ணிட்டாங்க" என்று மூக்கை சிந்தியவாறே சசிதரனிடம் கூறினாள் அவரது லேட்டஸ்ட் செல்லம் மோனிகா.

"அப்பாடா, இப்போ தான் நிம்மதியா இருக்கு. இதை காரணமா வெச்சு நம்ம கிட்ட இருக்கற கருப்பை வெள்ளையாக்கிடலாம்" என்றார் சசி.

"ஆனால் இது என் மானப்ப்ரசினை. நான் எவ்ளோ கனவு கண்டிருந்தேன் தெரியுமா?"

"எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்க. நல்ல கொளுத்தற வெயில்ல இந்த டீமோட இந்தியா முழுக்க எப்படி அலைய முடியும்? நீ என் செல்லம்டா, கறுத்துடுவேடா கண்ணா" என்று கொஞ்சினார் சசி.

"இப்படி எதாவது பேசியே என்னை மயக்கிடுங்க" என்று அவளும் கொஞ்சிக் கொண்டே சசியை கட்டிப் பிடித்தாள். இவளால் தன் பதவிக்கு வர இருந்த ஆபத்து விலகியதை நினைத்து பெருமூச்சு விட்டார் சசி.

********************************************************************************************************************************

கோகுலின் தலைமையில் ஜெய்ப்பூர் அணி திறமையான இளைஞர்கள் நிறைந்த அணியாக உருவாகியிருந்தது.ஆனாலும் அவர்களால் முக்கியமான போட்டிகளில் தோற்றுப் போவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. மாமாஜியுடன் நேரடித் தொடர்பு இல்லாததால் சூதாட்டத்தில் சற்று அடக்கியே வாசித்தான் ஸ்வராஜ். இதனால் ராதே ஜெய்ப்பூர் அணியில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களுடன் பேரம் பேச ஆரம்பித்தான்.

********************************************************************************************************************************
வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்த சென்னை அணி, மூன்று பெரிய அணிகள் தோற்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதிலும் முக்கியமான அரையிறுதியில் டெல்லி அணி புதுமுகத்தை அறிமுகப்படுத்தியது நரேந்தரின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது.

********************************************************************************************************************************
4வது முறையாக சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாலும் கல்கத்தா அணி போராடி கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற பின்னர் பத்திரிகையாளர் முன் பெருமையாகப் பேசி தானும் கேப்டனுக்குத் தகுதியானவன் தான் என்று நிரூபிக்க முயற்சித்தான் பிரவீன். ஆனால் அது மொஹிந்தர் மீது அவனுக்கிருந்த காழ்ப்புணர்ச்சியை பட்டவர்த்தனமாக்கியது. மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் ஊர் ஊராக குதித்துக் கொண்டிருந்தான் சாதிக்.

********************************************************************************************************************************
"மேடம், நான் சொன்ன அந்த விஷயம்..." என்று போனில் முதல்வரிடம் குழைந்தார் நல்ல கண்ணு.

"இது உங்க தனிப்பட்ட பிரச்சினை சார். நான் தலையிடக் கூடாது. நீங்களே பார்த்துக்கோங்க"

"எனக்கும் அதான் மேடம் வேணும். நீங்க தலையிடாம இருந்தா போதும்" என்று கூறி போனை வைத்தார் நல்லகண்ணு.

********************************************************************************************************************************

"டேய்பாலா, இதோட நிறுத்திக்கலாம்டா, ஒருமாதிரியா இருக்கு" என்றான் ரகு.இடம்- அவர்களின் வழக்கமான மற்றும் ராசியான நண்பர்அகர்வாலின் ஹோட்டல்.
ஏன்? சரக்கு நல்லாத்தானே இருக்கு? என்று கடித்தான் பாலா.

"நான் நம்ம பண்ற திருட்டுத் தனத்தைச் சொல்றேன்"

"ஏன்,பயமா இருக்கா?" என்று மது அருந்தியவாறேகேட்டான் பாலா.
"தெரியலை,ஆனால் ஒண்ணும் சரி இல்லை"
"என்ஜாய்பண்ணு மச்சி, எவ்ளோ காசுபாரு, தினம் தினம் திருவிழாமாதிரி போகுது. வீட்ல ஏகமரியாதை. இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையைஇனிமே என்னாலநினைச்சுக் கூட பார்க்க முடியாது."- போதையில் வாய் தாறுமாறாக குழறியது பாலாவுக்கு.இனிமேல் அவனிடம் பேசிப் பயனில்லைஎன்றறிந்து கொண்ட ரகு அங்கிருந்துவெளியேறினான்.
********************************************************************************************************************************
"பத்மநாபன்,அடுத்த வருஷம் நடக்கப் போகிறதலைவர் தேர்தலில் நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும். அடுத்த வருஷம் பஞ்சாப்லேர்ந்துவந்தா நல்லாருக்கும்னு மேலிடத்தில்பிரியப்படறாங்க"என்றார் முன்னாள் தலைவர்.
பத்மநாபன்கடுப்பானாலும் "இதுல நான் சொல்றதுக்குஎன்ன சார் இருக்கு நீங்கசொல்லி நான் மறுக்க முடியுமா?ஆனால் அடுத்ததேர்தலில் தென் மண்டலத்துக்குத் தானேவாய்ப்பு?
"அதுதெரியும் பத்மநாபன், ஆனால் அது உங்ககையில் இருக்குன்னும் தெரியும். நீங்க சொன்னா அவங்ககேட்காமலா போயிடுவாங்க?"
"உங்களுக்கேதெரியும், குழுவில் தென்னிந்தியாவிற்கு எப்பவோ ஒரு தடவைதான் வாய்ப்பு கிடைக்குது. மற்றபடி முழுக்க முழுக்கவட இந்திய ஆதிக்கம் தான்.மற்றபடி உங்க பேச்சை நான்மீற மாட்டேன்"
"ரொம்பநன்றி பத்மநாபன்"
போனை வைத்த பத்மநாபனின் முகம்கோபத்தில் சிவந்திருந்தது. மீற மாட்டேன் என்றுவாக்களித்திருந்தாலும் மனதளவில் அதை மீறுவதற்கான முயற்சிகளைமேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்.
ஆட்டம் தொடரும்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...