தீபாவளின்னாலே சினிமா தான். ஆனால் இந்த தீபாவளிக்கு சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் படங்கள் வரலைன்னு ரசிகர்கள் ரொம்ப பீலிங்கா இருக்காங்க. விஜய் படம் கூட மொக்கை தான்னு இப்பவே அரசல் புரசலா ரிப்போர்ட் வருது. அந்தக் குறையை நிவர்த்தி செய்யறதுக்காக இந்த ஸ்பெஷல் போஸ்டிங். ஒரு முக்கியமான விஷயம், நரகாசுரன் தமிழன். ஒரு தமிழன் செத்ததைப் போய் இப்படி விமரிசையாக் கொண்டாடறது நியாயமான்னு ஒரு க்ரூப் கேள்வி கேட்குது. எதுக்கும் உஷாரா இருங்க.
SKY FALL படம் பார்த்தவர்கள் டேனியல் க்ரேக்கிற்கு வயதாகி விட்டது, வேறு ஒருவர் தான் இனிமேல் பாண்டாக நடிக்க வேண்டுமென்று கூறி வருகின்றனர். கமல் உட்பட பல தமிழர்கள் ஹாலிவுட்டில் பணியாற்றும்போது தமிழ் நடிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாதா என்ன? (ஜெய்ஷங்கர் அவர்கள் இன்னிக்கு உயிரோட இருந்திருந்தா இந்த பஞ்சாயத்தே வந்திருக்காது). அப்படி அவருக்குப் பதிலாக நம்மூர் ஹீரோக்களை ஜேம்ஸ் பாண்டாக போட்டால் என்னாகும்? (அவங்க ஏற்கனவே பாதி ஜேம்ஸ் பாண்டுதான்றது வேற விஷயம்)
தல அஜித்:
லுக்கெல்லாம் ஓகே தான். ஆனா ரொமாண்டிக் ஸீன் செட் ஆவாது. கருப்பழகி தலையை நெருங்கி வரும் போது "நீ கருப்பு, ஆனா நான் கருப்பு சரித்திரம்" அப்படின்னு பழக்க தோஷத்துல அங்கயும் பன்ச் பேசிடுவாரு நம்ம தல. மற்றபடி ஆக்ஷன் சீனெல்லாம் பின்னி பெடல் எடுத்துடுவாரு
இளைய தளபதி விஜய்:
இவரு லுக்கிலேயே அடி வாங்கிடுவாரு சேர்ந்த மாதிரி பத்து வினாடி விறைப்பா நின்னார்னா மக்கள் சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால கொஞ்சம் ஜாக்கி சான் ஸ்டைலையும் மிக்ஸ் பண்ண வேண்டியிருக்கும். கருப்பு, சிவப்பு, மாநிறம்னு மூணு லேடீஸ் வைச்சாலும் மூணு பேர் கூடவும் டூயட் பாட... சாரி... ஆடக் கூடிய திறமைசாலி. என்ன, இவர் வில்லனைத் தேடிக் கண்டு பிடிக்கப் போகும்போது கூடவே (முடிஞ்சா படம் முழுக்க)ஒரு காமெடியனும் வரணும்னு எதிர்பார்ப்பாரு. எவ்ளோ பெரிய அதி பயங்கர வில்லனா இருந்தாலும் "..ண்ணா" என்று தான் நக்கலாக அழைப்பார். வில்லனாக பிரகாஷ் ராஜைப் போட்டால் இரட்டிப்பு சந்தோஷம் அடைவார்.
விஜயகாந்த்:
இவருக்குத் தான் வயசாச்சே, இவர் எப்படின்னு கேட்கறீங்களா? இந்தியா முழுக்க தீவிரவாதிகளோட சண்டை போட்டு போராயிட்டாரு. அதனால நாம இவருக்கு ப்ரோமோஷன் குடுத்து உலகத் தீவிரவாதிகளை ஒடுக்கச் சொல்றோம். ஹீரோயின் ரொமான்ஸ் பண்ண வரும்போது "பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?" அப்படின்னு ஆரம்பிச்சு அங்க ஒரு புள்ளி விவரம் சொல்லுவார். ஆனா அதற்கடுத்த சீன்லயே அவங்க தொப்புள்ல பம்பரம் அல்லது லேட்டஸ்ட் கேம்ஸ் எதாவது விளையாடுவாரு. வில்லன் கண்டிப்பா முஸ்லீமாகத் தான் இருக்கணும்னு அடம் பிடிப்பார். அப்போத் தான் தம் கட்டி முழு நீள வசனம் பேச ஸ்கோப் கிடைக்கும். ஒரு பெரிய பிரச்சினை என்னன்னா அந்த ஜேம்ஸ் பாண்ட் மார்ட்டினி அடிப்பாரு. இவரு மேட்னியிலேயே அடிக்க ஆரம்பிச்சிடுவாரு.
வடிவேலு:
இது சம்பந்தமா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது "ஏய், என்னை வைச்சு காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலியே? ஏற்கனவே உங்களை ஹீரோவா நடிக்க வைச்சு பெரிய ஆளாக்கறேன்னு சொல்லித்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கானுங்க, இதுல பாண்டா நடிக்கச் சொல்லி என்னைக் கடுப்பேத்தாதீங்க மை லார்ட். அந்தப் படத்தில வர்ற வில்லன்கள் ரொம்ப பயங்கரமா இருப்பாங்க அவங்க முன்னாடி என்னைக் கொண்டு போய் நிறுத்தினா கடுப்பாகி உங்களை கழட்டி மாட்டிடுவாங்க"
விக்ரம்:
கிட்டத்தட்ட பெர்பெக்ட் சாய்ஸ் இவர் தான். லுக், ஆக்ஷன், ரொமான்ஸ் எல்லாம் ஓகே. ஆனா புதுசாப் பண்றேன் பேர்வழின்னு தன்னை அறியாமல் ஓவராக்டிங் பண்ணி ஒட்டு மொத்தமா நாறடிச்சிடுவார்.
சூர்யா & கார்த்தி:
ரொம்ப ஹோம்வொர்க் பண்ணி எல்லாம் சரியாப் பண்ணினாலும் வசன உச்சரிப்பில் சொதப்பிடுவாங்க. அதுமட்டுமில்ல, ரெண்டு பேருக்கும் ரொம்ப ஹோம்லி இமேஜ். அதனால ரொமான்ஸ் சீனெல்லாம் எடுபடாது.
சிம்பு:
வழக்கமா பாண்ட் படங்களில் எடுத்தவுடனே ஆக்ஷன் அப்புறம் டைட்டில் வரும். இவர் நடிச்சார்னா டைட்டில் சாங்ல க்ரூப் டான்ஸ் ஆடுவார். "இன்று புத்தாண்டு, நான் உங்க ஜேம்ஸ் பாண்டு, எதிரிக்கு நான் ஒரு வாண்டு, என்னைப் பார்த்து ஆகாதே காண்டு" அப்படின்னு செம குத்தாட்டம் போடுவார் கெஸ்ட் அப்பியரன்சா யாராச்சும் ஒரு ஓஞ்சு போன நடிகையை ஆட விடலாம். எப்படியும் ஒரு ஹீரோயின் ஜேம்ஸ் பாண்டை வில்லன் கிட்ட மாட்டி விட்டுடும். இதான் சாக்குன்னு பெண்களை திட்டி ஒரு பாட்டு போட்டுடுவார். அவங்கப்பாவும் இதே கதையில் நடிக்கலாம், ஒண்ணும் பெரிய வித்யாசம் இருக்காது. ஒரே ஒரு கண்டீஷன், ஜேம்ஸ் பாண்டுக்கு ஒரு தங்கச்சியோ அல்லது அம்மாவோ இருக்கணும்.
ச்சே, இவர் இல்லீங்க. சும்மா பேருக்காக போட்டோ போட்டிருக்கோம். இவர் நல்ல
நடிகர். இவரைப் போய் எப்படி..?
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Jayaraman
New Delhi
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment