Wednesday, October 5, 2011

SRKவின் ரா (ஜினி) ஒன்தமிழ் நடிகர்களை போதும் போதும்னு சொல்ற அளவுக்கு ஓட்டிட்டதால ஒரு மாறுதலுக்கு நம்ம ஷாருக்கானை பேட்டி எடுக்கறதுன்னு முடிவு பண்ணி அவருக்கு ஒரு மிஸ்டு கால் தான் குடுத்தோம். மனுஷன் உடனே நம்ம முன்னாடி வந்துட்டார்.

"என்ன சார் அதுக்குள்ள வந்துட்டீங்க?, எங்களையும் மதிச்சு வந்ததுக்கு ரொம்ப சந்தோசம்"

"ஹேய்ய்ய்... உங்க பிளாக்கை குறைந்த பட்சம் நூறு பேராவது படிக்கறதா கேள்விப்பட்டேன். அதுல எப்படியும் ஒரு 10% மக்கள் RA ONE படத்தைப் பார்த்தாக் கூட எனக்கு லாபம் தான்"

"அடேங்கப்பா, செம கணக்கா இருக்கீங்க?"

"160 கோடி தம்பி, அதான் ஓடி ஓடி உழைக்கறேன்"

"அதுக்காக இப்படியா? கரகாட்டம், மயிலாட்டம்னு ஒண்ணு விடாம?"

"தொழில்னு வந்துட்டா நான் எதையும் பாக்கமாட்டேன்"

"பட் இவ்வளவு விளம்பரம் ஒரு சினிமாவுக்கு அவசியமா? உங்க திறமை மேல நம்பிக்கை இல்லையா?""அர்ரே பையா, இதுவும் ஒரு வகையில திறமை தான். ஒண்ணு தெரிஞ்சுக்கோ, நான் வெறும் நடிகன் மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. படம் ரிலீஸ் ஆகி ரெண்டாவது ஷோ போடறதுக்குள்ள நெட்ல சுடச்சுட பிரிண்ட் வந்திடுது. அதனால தான் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே சம்பாதிசுக்கறோம.

"இவ்ளோ கஷ்டம்னு தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு அந்த கர்மத்தை எடுத்து எங்களை வேற பாக்க சொல்றீங்க மிஸ்டர் கிங் கான்?"

"எங்களுக்கு வேற எதுவும் தெரியாதே, எங்க வீட்ல அடுப்பு எரிய வேண்டாமா? நாங்களும் பிரியாணி சாப்பிடணும்ல?"

எந்த நம்பிக்கையில நீங்க உங்க படத்தை PS3 கேமா ரிலீஸ் பண்றீங்க? ஒரு PS3 கேம் என்ன விலை விக்குது தெரியுமா?

என் ரசிகைகளை நம்பித்தான். என்னோட இளம் ரசிகைகள் எல்லாம் இப்போ மம்மீஸ் ஆயிட்டாங்க. ஆனாலும் என் படத்தைப் பாக்கறாங்க. என் போட்டோ பார்த்தாலே போதும், அம்மாக்களே தன் பசங்களுக்கு வாங்கிக்கொடுப்பாங்க - PS3 வாங்கினா pepsodent toothpaste freeன்னு ஸ்கீம் வேற இருக்கு

உங்க படங்கள் எல்லாமே வெளி நாட்டு வாழ் மக்களை மையப் படுத்தியே இருக்கே, எதனால?"

"அவங்க கிட்ட தான் காசு இருக்கு, உள்ளூர்க்காரங்க தியேட்டர்ல வந்து படம் பாக்கறதில்ல, கேட்டா டிக்கெட் விலை ஏறிபோச்சு, விலைவாசி அதிகமாயிடுச்சுன்னு காரணம் சொல்றாங்க""ஷங்கர் உங்ககிட்ட சொன்ன ரோபோ கதையைத் தான் நீங்க உல்டா பண்ணி ரா ஒன்னா எடுத்திருக்கீங்கலாமே? உண்மையா?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. இது நானே சொந்தமா யோசிச்சு நண்பர்களோடு டிஸ்கஸ் பண்ணி எடுத்தது. சில காட்சிகள் வேணும்னா ஒரே மாதிரியா இருக்கலாம். எந்திரன் மட்டும் எனன் ரொம்ப ஒரிஜினலா? எவ்வளவோ இங்கிலீஷ் படத்தோட சாயல் அதுல இருக்கே?"

"சமீபத்துல ஒரு நிகழ்ச்சிக்கு ரொம்ப லேட்டா போய் அப்புறம் நிருபர்கள் கிட்ட மன்னிப்பு கேட்டீங்க போலிருக்கு?"

"அது என் கேட்ட நேரம், ஆக்சுவலா இந்த படத்துல நிறைய பொருட்களுக்கு விளம்பரம் பண்ணியிருக்கேன், அதனால எவனுக்கு எங்க அப்பாயின்ட்மென்ட் குடுத்திருக்கேன்னே தெரியல, அதுல வந்த வினை தான் அது"

"அது சரி, உங்க ஊர்ல எல்லாரும் தான் படத்தை ஓட்டறதுக்குப் படாத பாடு படறீங்க. ஆனா உங்களை மட்டும் ஏன் கடுமையா விமர்சிக்கறாங்க?"

"இதுக்கு நீங்க தான் பதில் சொல்லணும். ஒரு வேளை நான் நல்லா சம்பாதிக்கறேன், பொண்ணுங்க எல்லாம் என் பின்னாடி சுத்தறாங்க. அதுவாக்கூட இருக்கலாம்"

"இருந்தாலும் உங்க விளம்பரச் செலவுகள் படச்செலவை விட அதிகமா இருக்கும் போலிருக்கே?"

"இப்பல்லாம் விளம்பரச்செலவும் தயாரிப்பு செலவுக்குள்ள வந்திடுது, ஒண்ணு சொல்லுங்க, உங்க ஊர் கார்த்தி அந்த வீணாப்போன சிறுத்தை படத்துக்கு சன் டிவிலேர்ந்து தூர்தர்ஷன் வரைக்கும் மாஞ்சு மாஞ்சு பேட்டி கொடுத்தாரே, அப்படின்னா ரா ஒன் எவ்வளவு பெரிய படம், அதுக்கு நான் விளம்பரம் பண்றதுல என்ன தப்பு?"
"நியாயம் தான், அது சரி எங்க சூப்பர் ஸ்டார் உங்க படத்துல ஒரு சீன்ல வராறாமே?"

"ஆமாம், அது குருவுக்கு இந்த சிஷ்யன் செய்யும் மரியாதை"

"குருவா?"

"அவர் முதல்ல வில்லனா நடிச்சு அப்புறம் ஹீரோவா ஆனார். நானும் அதே ரூட்ல காபி அடிச்சு முன்னேறிட்டேன்ல!!"

ஆனா நீங்க நிறைய செலவு பண்ணிட்டதாகவும், அதைக் காப்பாதிக்கத்தான் சூப்பர் ஸ்டாரோட ஒரு சீன் பண்ணினதாகவும் ஊர்ல ஒரு பேச்சு அடிபடுதே!"

"அது வந்து... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இல்லையா, தமிழகம் அவரை வாழ வெச்சிருக்கு, அது மாதிரி அவர் என்னை வாழ வைப்பார்னு ஒரு நம்பிக்கை தான். தம்பி, இந்த மேட்டரை இதுக்கு மேல நோண்டாதீங்க, நான் அழுதுடுவேன்

"ரா ஒன் தமிழ்ல டப் பண்ணிப் போடுவீங்களா? இல்லை நேரடி ஹிந்திப் படமா?

"டப் பண்றதுக்கு சூர்யா கிட்ட பேசினேன், ஆனா அவரு ஏழாம் அறிவுல பிசியா இருக்காரு, ஷண்முக சுந்தரத்தை வெச்சு சீப்பா முடிக்கலாம்னு பாக்கறேன்"

"ஐயோயோ, ரொம்ப நாராசமா இருக்குமே, வேணும்னா பரத், விஷால் இவங்களை வெச்சு ட்ரை பண்ணுங்க. அவங்ககிட்ட சுத்தமா வேலை இல்லை"

"பாக்கறேன்"

"சரி சார், பேட்டியை முடிச்சிக்குவோம்"

"என்னப்பா? அதுக்குள்ள? வழக்கமா நாங்க தானே டைம் அப் சொல்லுவோம்"

"இல்லை சார், நிறைய எழுதினா அப்புறம் ரா ஒன் போட்டோ எல்லாம் போட முடியாது."

"போட்டோவா?"

"ஆமாம் சார், நாங்க உங்க படத்தோட போட்டோ எல்லாம் போட்டு எங்களால முடிஞ்ச அளவு ப்ரொமோட் செய்யறோம். நீங்க எங்க பிளாக்கைக் கொஞ்சம் பரப்பி விட்டீங்கன்னா அது போதும்"

"யோவ், நீங்க என்னையே மிஞ்சிட்டீங்கப்பா!

"கடைசியா ஒரு கேள்வி, எப்ப நடிக்கலாம்னு இருக்கீங்க?"

"இவ்ளோ நேரம் அதைத்தானே பண்ணிக்கிட்டிருந்தேன், என் நடிப்பை வித்து சினிமா எடுக்கறேன், அந்த சினிமாவை விக்கறதுக்காக எல்லா இடத்துலயும் நடிக்கறேன், btw,
தம்பி, நல்லபடியா ஆர்டிகிள் போடுவீங்கல்ல?

"நீ கவலைப்படாம போ பாய், எங்க தலைவர் வேற வர்றார்னு சொல்லிட்ட, இனிமே இது உன் படம் இல்ல, தலைவர் படம் - ரா ஒன் இல்லை, ரஜினி ஒன்"

"ரஜினி சாப் கி ஜெய ஹோ"

Jayaraman
New Delhi

4 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...