Monday, October 31, 2011

3 இடியட்ஸ்தீபாவளிக்கு வந்த மூணு படமுமே சுமார் தான்னு தெரிஞ்சுபோச்சு. இந்த நிலையில, அந்த மூணு படங்களோட ஹீரோக்கள் மீட் பண்ணினா எப்படி இருக்கும்?

சூர்யா, "வாய்யா வேலு, சாரி, வேலாயுதம், ரொம்ப சந்தோஷமா வர்றே?"

விஜய்,"பின்னே? படம் எஸ்கேப் ஆயிடுச்சுல்ல!!"

"அப்படியா? நான் ஊத்திக்கிச்சுன்னு தானே கேள்விப் பட்டேன்"

"அது உன் படமா இருக்கும், காதுக்குக் கண்ணாடி வாங்கி மாட்டிக்க. இருந்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன் "

"நன்றியா?"

"ஆமாம், நீங்க ஒரேயடியா தமிழர் வரலாறு, சீனா, குங்க்பூ, போதிதர்மன்னு உதார் விட்டதுல மக்கள் ரொம்பவே மிரண்டு போயிட்டாங்க. அதான் என் படத்துக்கு வர்றாங்க. போதாக்குறைக்கு உன் போஸ்டர் வேற. என்னய்யா உடம்பு அது? பழனி படிக்கட்டு மாதிரி"

"ஹெலோ, உதார் எல்லாம் இல்லை, நிஜமாவே இது தமிழர் வரலாறு தான்"

"இல்லையே, கூகிள்ல தேடினேனே, போதிதர்மன் மலையாளின்னு சொல்லுதே"

"அப்போ நீங்க முருகதாசைத் தான் கேக்கணும்"

இதற்கிடையில் ஷாருக்கான் என்ட்ரீ ஆகிறார். 'ஹேய்ய்ய், சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு"

விஜய், (வேட்டைக்காரன் ஸ்டைலில்), வாய்யா, பையா, உன் படம் எங்க ஓடினாலும் மக்கள் பாதியிலேயே எழுந்து ஓடறாங்கன்னு கேள்விப்பட்டேன்!"

SRK "ஆமாங்க, ஏன்னே தெரியல"

விஜய் (மறுபடியும் வேட்டைக்காரன் ஸ்டைலில்), "ரா ஒன்னா பயம், பயம்"

SRK ,"டேய் தம்பி, உன் பேச்சில திமிர் தெரியுதே?"

சூர்யா, "அது தமிழ்த் திமிரு, எங்க ஆளுங்களைக் கிண்டல் பண்ணி படம் எடுத்துட்டு அதை டப் பண்ணி எங்க ஊர்லயே ரிலீஸ் பண்றியா?"

விஜய், "அதைக் கூட மன்னிச்சிடலாம். ஆனா தலைவர் வர்ற சீன ஒண்ணு இருக்கு பாரு, அதுக்கே இவனை பீஸ் பீசாக்கணும்"SRK, “நீங்க என்னதான் சொன்னாலும் என் படம் ஹிட் ஆயிடுச்சு தெர்யுமா?"

சூர்யா, "என்ன பெரிய ஹிட், சல்மான் கானை இன்னும் ஓவர்டேக் பண்ணலியே?"

விஜய், "பையா, நீ மும்பையில வேணா கிங்கா இருக்கலாம். இங்க வாலாட்டின, உனக்கு சங்கு தான்"

SRK, "தம்பி, வரிசையா பிளாப் குடுத்த நீ பஞ்செல்லாம் பேசக்கூடாது, சூர்யா வேணா பேசலாம்"

விஜய், "நாங்களும் ஹிட் குடுத்துட்டோம்ல"

SRK, "அதை நீ சொல்லாதே, பணம் போட்டவங்களைக் கேளு. ரத்தத்தின் ரத்தமேன்னு பாடினா நீ MGR ஆயிடுவியா?"

சூர்யா, "இதெல்லாம் உங்களுக்கு எப்படிங்க தெரியும்?"

SRK, "நான் என்ன கேணயனா? எல்லாம் விசாரிச்சிட்டு தான் டப்பிங் பண்ணியிருக்கேன். தியேட்டர்ல போய் பாருங்க, எல்லா படத்துக்கும் ஒரே அளவு கூட்டம் தான் வருது."

சூர்யா, "நீங்க ரெண்டு பேரும் மொக்கை படம் எடுத்தீங்க, அதனால கூட்டம் வரல, என் படத்துக்கு ஏன் வரலை?"

SRK, "அது என்ன அவதாரா இல்லை ஜுராசிக் பார்க்கா? ஒண்ணு தெரிஞ்சுக்க, கஜினி ஓடினது அசின் நடிப்புக்காகவும் நயன்தாரா இடுப்புக்காகவும் தான். உங்க கதைக்காக இல்ல"

விஜய்,”சூர்யா, நீ இனிமே ஹரிஸ் ஜெயராஜை உன் படத்துல போடாதே, அந்த ஆள் இன்னும் காக்க காக்கலேர்ந்தே வெளிய வரலை. எல்லா பாட்டையும் ஒரே மாதிரி போடறாப்ல".

சூர்யா, "நீ சொல்றதும் கரெக்ட் தான்"SRK, "ஆனா விஜய், சும்மா சொல்லக் கூடாது. கேரளாவுல உன் படம் எப்படியும் ஓடும்னு உன் படத்துல ஒரு சேச்சியப் போட்டுடற!, அசின், நயன்தாரா, இப்ப சரண்யா மோகன்"

விஜய், "ண்ணா, பிசினஸ் டெக்னிக்கை வெளிய சொல்லாதீங்க, உங்களுக்கு விளம்பரம் மூலமா காசு வந்திடுது. எங்களுக்கெல்லாம் அப்படியா? இப்படி எதாச்சும் பண்ணினாத்தான் பொழைக்க முடியும்"

சூர்யா, "ச்சே, எவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சேன், இருந்தும் படம் இப்படி சாதாரணமா போயிடுச்சே!"

விஜய், "நீ எங்கே நடிச்சே? சட்டையை அவுத்து சிக்ஸ் பேக் காமிச்சே, அவ்ளோ தான். அதைத்தான் வாரணம் ஆயிரம்லேர்ந்து மக்கள் பாக்கறாங்களே. கஜினில பண்ணினதுல பாதி கூட ஏழாம் அறிவுல பண்ணலையே. கமல் சாரைப் பார்த்தாவது பாடம் கத்துக்க வேண்டாம்? அவருக்கு ஒரு தசாவதாரம், உனக்கு ஏழாம் அறிவு. படத்துல என்னமோ இருக்கு இருக்குன்னு சொல்லி கடைசியில மக்களைக் குழப்பிட்டீங்க"

சூர்யா, "மார்க்கெட்டிங் கூட நல்லாப் பண்ணினோமேங்க"

SRK, "நான் கூடத் தான் விழுந்து விழுந்து பண்ணினேன், ஒண்ணும் பெரிசா ஆகலையே!"

விஜய், "மசாலா தோசைக்குள்ள மசாலா இருக்குன்னு சொன்னா மக்கள் நம்புவாங்க, மைசூர் போண்டாவுக்குள்ள மைசூர் இருக்குன்னு சொன்னா நம்புவாங்களா?"

SRK , "நீ என்ன சொல்ல வர்ற, ஒண்ணும் புரியல"

விஜய், "அது புரிஞ்சிருந்தா உன் படம் நல்லா ஓடியிருக்குமே, அதான் இப்போ தியேட்டரை விட்டே ஓடுது, கல்கத்தாவுல இந்தியா - இங்கிலாந்து மேட்ச் பாக்க வந்த கூட்டம் கூட உன் படத்துக்கு வரலியாமே? அதுக்குத் தான் என்னை மாதிரி உஷாரா ப்ளே பண்ணனும்

சூர்யா, "எப்படி? உன்னை மாதிரி தொடர்ந்து ரீமேக் படங்களையே பண்ணச் சொல்றியா? கொஞ்சமாச்சும் ஒரிஜினாலிடி வேணாம்?"

விஜய், "நீங்க இங்கிலீஷ் படத்தை உல்டா பண்ணலாம், நான் பக்கத்துக்கு ஸ்டேட்லேர்ந்து உருவக் கூடாதா? வால்மீகியைப் பார்த்துதான் கம்பர் ராமாயணம் எழுதினார். அதுக்காக கம்பர் காப்பியடிச்சார்னு சொல்வீங்களா? ரெண்டுத்துக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு!!"

SRK , "அதைத்தான் சூர்யாவும் சொல்றாரு, புக்கைப் படிச்சிட்டு எக்ஸாம் எழுதறதுக்கும், புக்லேர்ந்து பேப்பரைக் கிழிச்சிட்டுப் போய் அதைப் பார்த்து எக்ஸாம் எழுதறதுக்கும் வித்யாசம் இருக்கு பாய்"

விஜய், "யோவ், நான் என்னமோ திருட்டுத்தனமா காப்பி அடிக்கற மாதிரி பேசறீங்க? காதலுக்கு மரியாதைலேர்ந்து இப்போ வேலாயுதம் வரைக்கும் எல்லாம் ப்ராபர் ரீமேக். ஆனா எதுவும் சீன் டு சீன் காப்பி இல்லை. நீங்க சொல்றபடி பார்த்தா கமல் சாரெல்லாம் சினிமாவே எடுக்க முடியாது போலிருக்கே! தெய்வத்திருமகள் கூட இங்கிலீஷ் பட காப்பி தான், அப்போ விக்ரம் மொக்கைன்னு சொல்வீங்களா? உன் கஜினி கூட இங்கிலீஷ் தழுவல், வாரணம் ஆயிரம் அப்படியே பாரெஸ்ட் கம்ப் பாக்கற மாதிரி இருக்கும். இப்போ நான் கவுதம் கூட பண்ற படம் கூட ஹாலிவுட் படம் தான். அப்போ அவரும் வேஸ்டா? வசூல் ராஜா சீன் டு சீன் காப்பி, ஆனா வசனம் ஒரிஜினலையே தூக்கிச் சாப்பிடுற அளவுக்கு சூப்பர். அதுவும் ஒரு கலை தாங்க. அவ்வளவு ஏன், எல்லாரும் வியந்து பாக்கற டைரக்டர் ஷங்கர், அவரோட எந்திரன்லேயே நிறைய காட்சிகள் ஆங்கிலப்படத்தை ஞாபகமூட்டற மாதிரி இருக்கு. ஒரு சீன் காப்பி அடிச்சாலும் படத்தையே காப்பி அடிச்சாலும் ரெண்டும் ஒண்ணு தான். நீங்க கதையை காப்பி அடிக்கறீங்க, நான் திரைக்கதையையும் சேர்த்து காப்பி அடிக்கறேன். நதிமூலம் ரிஷிமூலம் பாக்காதீங்க, மக்கள் ரசிக்கறாங்களா, நமக்கு பாக்கெட் நிரம்புதா, அதான் முக்கியம்.

சூர்யா, "நீ சொல்றது ஒரு வகையில உண்மை தான் விஜய், இருந்தாலும் உனக்கு இருக்கற மாஸுக்கு நீ இன்னும் சூப்பரா பண்ணலாம். எக்ஸ்பெரிமென்ட் பண்ண பயமா?"

SRK, "தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் வெரைட்டீன்னா விக்ரம், சூர்யாதான்னு ஆயிடுச்சு."விஜய், "நீங்க சொல்றது உண்மை தான். ஆனா என் மூஞ்சியையும் உடம்பையும் நல்லா ஒரு தடவை பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க. நான் என்ன பெரிசா பண்ணிட முடியும்?. போக்கிரில ஒரு சீன்ல போலீஸ் டிரஸ் போட்டதுக்கே மக்கள் கலாய்ச்சிட்டாங்க. என்னால சாதாரண ரோலில் நல்லா நடிக்க முடியுமே தவிர உங்களை மாதிரி ஹெவி காரெக்டர் எல்லாம் பண்ண முடியாது. ஒண்ணும் வேண்டாம், ஏழாம் அறிவுல அந்த முனிவர் வேஷத்துல என்னை கற்பனை பண்ணி பாருங்க."

இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

விஜய், "பார்த்தீங்கல்ல, அந்த அளவுக்கு காமெடி பீசுங்க. என்ன பண்றது? நானும் ஒரு ஹீரோன்னு பார்ம் ஆயிட்டேன்.

SRK , "ஆனா என்னோட அடுத்த படத்து மேல எனக்கு நம்பிக்கை இருக்கு"

சூர்யா, "ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ப்ரோமொஸ் பார்த்தேன், உங்க ஹேர் ஸ்டைல் சகிக்கல. ஆமாம் விஜய், நீ என்ன பண்ணப் போறே?"

விஜய், "தெரியலீங்க, நண்பன் அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு. தெலுங்குல இப்போதைக்கு தூக்குடு தான் ஹிட், பேசாம அதை தழுவிட வேண்டியது தான்"

SRK , "நீ திருந்தவே மாட்டியா?, சூர்யா உங்களது என்ன ப்ராஜெக்ட்?"

சூர்யா, "ரெண்டு மூணு படம் கைவசம் இருக்கு. மாற்றான் கை குடுக்கும்னு நம்பறேன், உடம்போடு ஒட்டிப்பிறந்த ட்வின்ஸ் பத்தின கதை. ஆனா முன்ன மாதிரி டைரக்டர் கிட்ட நம்ம பேச்சு எடுபடாது. கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்"

இந்நிலையில் மூவரின் போனிலும் ஒரு மெசெஜ்:
"விமர்சகர்கள் நாறடித்தாலும் தயாரிப்பாளர்களுக்குப் படம் கையைச் சுடவில்லை. ஆனா இப்படியே போச்சுன்னா உங்க எதிர்காலம் கேள்விக்குறிதான்"

மூவரும் சிரித்துக் கொண்டே, "சினிமாவுல இதெல்லாம் சாதரணமப்பா"

அடிக்கோடுகள் (Bottomlines):

உதயநிதி - "ஒண்ணு இனிமே நாம ஹீரோவா நடிக்கணும், இல்லேன்னா ஆர்யா ஜீவாவோட நிறுத்திக்கணும். இவனுங்களை நம்பினா முதலுக்கே மோசம் தான். முதல்ல சந்தானம் கிட்ட கால்ஷீட் வாங்கிடணும். அவன் இல்லேன்னா எவன் படமும் ஓடாது போலிருக்கே!

முருகதாஸ் - தமிழன் தமிழன்னு ஓவரா உணர்ச்சிவசப்பட்டதுல கதையை மறந்துட்டேனே, மணிரத்னம், ஷங்கர் எல்லாம் ஏன் அடக்கி வாசிக்கறாங்கன்னு இப்பல்ல புரியுது.

ஜெயம் ராஜா - நமக்கு நம்ம தம்பி தான் லாயக்கு. இந்த ஆளு பன்ச் வைக்கற ஜோர்ல நம்மள ஒழுங்கா ரீமேக் பண்ண விடமட்டேங்கறான்

ஷங்கர் - பரவால்ல, விஜய்க்கு ரீமேக் செண்டிமெண்ட் நல்லா வொர்க் அவுட் ஆகுது. நம்ம படம் எஸ்கேப் ஆயிடும்.

பர்ஹான் அக்தர் - இந்த ஆளை நம்பி ஏகப்பட்ட காசு போட்டிருக்கோமே, டான் 2 பொழைக்குமா?

சூர்யா - நம்ம மாமாவை வெச்சு எவர்க்ரீன் கம்பெனிக்கு சிங்கம் மாதிரி ஒரு மசாலாப் படம் எடுத்துட வேண்டியது தான். அப்போதான் விட்டதை புடிக்க முடியும்

Jayaraman
New Delhi

1 comment:

  1. Really awesome....
    everything from your blog are very interesting....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...