Monday, December 31, 2012

2013 உறுதி மொழிகள்



தண்ணியடிக்க மாட்டேன், தம் அடிக்க மாட்டேன், தினசரி உடற்பயிற்சி செய்வேன் - இதெல்லாம் மாங்காய் மனிதர்கள் (அதாங்க, காங்கிரஸ் பாஷையில் ஆம் ஆத்மி) மேற்கொள்ளும் புது வருட உறுதிமொழிகள். பெரிய மனிதர்களெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதால் இந்த வருடம் அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தோம் (சில நாதாரிங்க அப்படியே தங்கள் கனவுகளையும் மிக்ஸ் பண்ணிடுச்சுங்க):


தமிழ்நாடு மின்சார வாரியம்:

இன்னும் கூடுதலாக மின் வெட்டு செய்து பல எடிசன்களையும் ஐன்ஸ்டீன்களையும் உருவாக்குவோம் (அவங்கல்லாம் மெழுகுவர்த்தி வெளிச்சத்துல தான் படிச்சாங்களாமே!)


பிசிசிஐ ஸ்ரீனிவாசன்:

நான் இந்திய அணியின் பொறுப்பாளர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவேன். ஒரு பொழுதும் இந்திய அணியை CSKவாக மாற்ற முயற்சிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். மேலும், புதிய மற்றும் திறமையான பௌலர்கள் அணியில் இடம் பெற முயற்சிகள் மேற்கொள்வேன் எனவும் தெரிவிக்கிறேன்.

சல்மான் கான்:

வீணாப் போன தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களை ஹிந்தியில் எடுத்து மக்களைக் கொல்ல மாட்டேன் என உறுதி கொள்கிறேன் (சார், அப்புறம் நான் புவ்வாவுக்கு என்ன சார் பண்றது? இவ்ளோ வயசுக்கப்புறம் இப்படி ஒரு முத்திப்போன மூஞ்சியை வைச்சுக்கிட்டு என்னால வேற எதுவுமே பண்ண முடியாதுண்ணா (கல்யாணம் உட்பட) - கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க)


சின்னத்திரை ராதிகா:

எப்படியும் இந்த வருடத்திற்குள் செல்லமே சீரியலை முடித்து விடுவேன்.


செஹ்வாக் / கம்பீர்:

எப்படியும் ஒரு மேட்ச்சுக்காச்சும் கேப்டனா ஆயிடணும். அதுல எந்த வில்லங்கமும் வராம ஜெயிச்சுடணும். நீங்க உறுதிமொழி எடுக்கச் சொன்னீங்கல்ல, சாரி, வயசாயிடுச்சுல்ல, அதான் மறந்துட்டோம். பந்தைப் பார்த்து எட்ஜ் வாங்காமல் ஆட முயற்சி எடுப்பேன் என உறுதி அளிக்கிறோம்.

சந்தானம்:

சிரிப்பு வரும்படி மொக்கை போடாமல் யாரையும் காப்பி அடிக்காமல் காமெடி பண்ணுவேன்


கூடங்குளம்:

குப்பை கூடும் களமாக மாறுவதற்கு முன்னால் யாராச்சும் மோட்டாரை ஸ்டார்ட் செய்யுங்கப்பா!


மன்மோகன் சிங்:

சொந்தமாக, யாரும் சொல்லிக் கொடுக்காமல் ஒரு நாலு வார்த்தை நன்றாக வாயைத் திறந்து பேசுவேன்


சூர்யா / கார்த்தி:

ப்ரமோஷன் என்ற பெயரில் அப்பா போல் ஓவராக மொக்கை போடாமல் அளவாக பேசுவோம் என உறுதி கொள்கிறோம்


சச்சின்:

எம்பியாக, ஒரு விளையாட்டு வீரனாக, கிரிக்கெட்டுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் உருப்படியாக எதாவது செய்வேன் (பின்னே? ரிடையர் ஆயிட்டு எவ்ளோ நாள் தான் சும்மா இருக்க முடியும்?)


"நீயா நானா"கோபிநாத்:

இந்த வருடம் எந்த ஒரு நிகழ்ச்சியையும் கோட் போடாமல் சாதாரண உடை அணிந்து நடத்துவேன் (அவ்ளோ பெரிய பாடியை மறைக்கறது கஷ்டம் தான், இருந்தாலும் முயற்சி திருவினையாக்கும்)


கமல்:

கேபிள், சாட்டிலைட், சுனாமி என்று நான் சொன்ன அனைத்தும் உண்மையாகி விட்டதால் என்னை கடவுளாக நம்பாதீர்கள். நான் மனிதத்தை நம்பும் மனிதன். உங்களை நம்பி உங்களுக்காக DTHல் விஸ்வரூபம் வெளியிடுகிறேன். கண்டிப்பாக இந்த வர்த்தக முறை விஸ்வரூபம் எடுக்கும். வெல்.... உறுதி மொழி.... சுற்றி வளைக்காமல் நேரடியாக பேச முயற்சிப்பேன். சுற்றி வளைப்பதால் என்னைக் குழப்பவாதி என்று எண்ண வேண்டாம். குழப்பவாதிகள் தெளிவானவர்கள். நான் இன்னும் தெளிவைத் தேடித்தேடி குழம்பித் தூர் வாரும் ஒரு விவசாயி....ஆம்.. சினிமாவும் விவசாயம் தான்.......


ஹாரிஸ் ஜெயராஜ்:

முந்தைய பாடல்களின் சாயல் இல்லாமல் சற்றேனும் யோசித்து புதுசாக டியூன் போடுவேன்


தோனி:

ஆடி அமாவாசை போல் வருடத்திற்கொரு முறை விளையாடாமல் அடிக்கடி விளையாடிப் பழகுவேன். பாலிடிக்சை பகுதி நேரத் தொழிலாகவும் கிரிக்கெட்டை முழு நேரத் தொழிலாகவும் (அணியில் இருக்கும் வரை) வைத்துக்கொள்வேன்.

பாரதிய ஜனதா கட்சி:

கட்சியின் சார்பா ஒருவர் மட்டுமே பேசுவோம், ஆளாளுக்கு கருத்து சொல்லி குழாயடி சண்டை போட மாட்டோம், எங்கள் முதுகை முதலில் நன்றாக சுரண்டி அழுக்கு நீங்கிய பின்னர் பிறர் மீது குற்றம் சுமத்துவோம்.


கேப்டன்:

அடிக்க மாட்டேன்...நடிக்க மாட்டேன்.... எடுக்க மாட்டேன் - தப்பாப் புரிஞ்சுக்காதீங்க பாஸ்.

தேவையில்லாமல் யாரையும் அடிக்க மாட்டேன்

காமெரா முன்னால் மட்டுமல்ல, மேடையிலும் நடிக்க மாட்டேன்

அரை வேக்காடான முடிவுகளை எடுக்க மாட்டேன்


டிவி சேனல்கள்:

ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் அழுகாச்சி பண்ணாமல் ஒழுங்காக நிகழ்ச்சிகள் நடத்துவோம்


ரஜினி:

கண்ணா ,சில பேர் சொல்வாங்க, சில பேர் செய்வாங்க, நாம சொல்றதைத் தான் செய்வோம், செய்யறதைத் தான் சொல்வோம் - இதுக்கு எதுக்கு உறுதி மொழி? விடற மூச்சுக் காத்தே வாடகைக்குத் தான். அதுவே எப்போ சப்ளை கட் ஆவும்னு நமக்குத் தெரியல. அதனால நல்ல சிந்தனையோட, முழு உழைப்போட மட்டும் வாழுங்கன்னு சொல்லி உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்:
பவரான சூப்பர் ஸ்டாரே சும்மா இருக்கும்போது பட்டப் பெயரில் மட்டும் பவரை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் ராவடி பண்ண மாட்டேன்

இந்தியக் குடிமகன்::
சேனல் மாற்றி மாற்றி சமூக அவலம் மற்றும் ஊழல் செய்திகளைப் பார்த்துவிட்டு வலை தளத்திலும் மொபைலிலும் வெட்டிப் பொழுது போக்காமல் உருப்படியாக எதாவது செய்வேன். இல்லையேல் உடம்பில் இருக்கும் நவத் துவாரங்களையும் மூடிக் கொண்டு சும்மா இருப்பேன்.




ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்




Jayaraman

New Delhi




























No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...