Wednesday, December 17, 2014

லிங்கா உருவான விதம்

பொதுவாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு அதிக விமர்சனம் தேவையில்லை என்பார்கள். அதனால், விமர்சனத்திற்குப் பதிலாக இந்தப் படம் எப்படி உருவாகியிருக்கும்னு ஒரு சின்ன கற்பனை ட்ரைலர்:
  
சூப்பர் ஸ்டாரை சந்தித்த பின் தனது அலுவலகத்துக்குள்  நுழைகிறார் ரவிகுமார். 

உதவி இயக்குனர் ஒருவர் டவல் எடுத்துத் தர இன்னொருவர் குளிர்ந்த பாட்டிலை அவர் முன் நீட்டுகிறார். மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்த பின் நாற்காலியில் அமர்ந்து பெரு மூச்சு விடுகிறார்.

துணை இயக்குனர்களில் ஒருவர், "என்ன ஆச்சு தலைவரே?, ஏதும் பிரச்சினையா?"

ரவி, "பெரிய பிரச்சினை தான், ஆறு மாசத்துக்குள்ள ஒரு படம் பண்ணித் தர முடியுமான்னு கேட்கறார். அதுவும் ஷங்கர் பட ரேஞ்சுக்கு"

"நீங்க என்ன சொன்னீங்க?"

"ஒரு நாள் டைம் குடுங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்"

"முடிச்சுடலாம் தலைவரே, ஒண்ணும் டென்ஷன் இல்லை"

"எப்படிடா முடியும்? ஷங்கர் ரெண்டு வருஷம் ஷூட்டிங் பண்ணினா, அடுத்த 2 வருஷம் கம்பியூட்டர்ல படத்தைப் பாலிஷ் பண்றான். எனக்கெல்லாம் அந்த அளவுக்குப் பொறுமை கிடையாதே?"

"ஏண்ணே, ஷங்கர் ரேஞ்சுக்குத் தானே சொன்னாரு, அதே மாதிரின்னா சொன்னாரு?"

"கொஞ்சம் புரியற மாதிரி சொல்றியா?"

அதற்குள் இன்னொரு உதவியாளர் குறுக்கே புகுந்து "அந்த பீல் குடுத்தாப் போதும்ணே"

ரவி கடுப்பாகி நோட் புக்கை விசிறி அடிக்கிறார் "சும்மா வெறுப்பேத்தாம நேரா பேசுங்க"

"முதல்ல ஷங்கர் கூட வழக்கமா வேலை செய்யற ஆளுங்கள நம்ம படத்துல போட்டுக்கணும். அதுவே பாதி படம் முடிஞ்சா மாதிரி"

"எப்படி?"

"ரகுமான், வைரமுத்து, சாபு சிரில், ரத்தினவேலு இந்த மாதிரி"

"ரகுமான், வைரமுத்து பிரச்சினையில்லை. ஏற்கனவே வொர்க் பண்ணியிருக்கோம். ஆனா மற்றவங்க பெரிய ஆளுங்களாச்சே? டைம் குடுப்பாங்களா?"

"அண்ணே, இவங்கள்லாம் பெரிய படங்கள்ல மட்டும் தான் வேலை செய்வாங்க. ஷங்கர் சார் இப்போ படம் எதுவும் பண்ணல. அதனால ப்ரீயா தான் இருப்பாங்க. அதுவுமில்லாம சூப்பர் ஸ்டார் படத்தில் வேலை செய்யறதுக்குக் கசக்குமா?"

"சரி, வேற?"

"காட்சிகள் பிரம்மாண்டமா திரையில் தெரியணும்"

"அதுக்கு?"

"ஒண்ணு கிராபிக்ஸ் பண்ணணும். இல்லேன்னா அந்த மாதிரி லொகேஷன் வெச்சு கதை பண்ணணும்"

"கிராபிக்ஸ் எல்லாம் நம்ம ஸ்டைலுக்கு செட் ஆவாது. வழக்கம் போல ராஜா, அரண்மனை, யானை, குதிரைன்னு நாட்டாமை / முத்து ஸ்டைலில் வேணா பண்ணலாம்"

இதற்கிடையில் ஒரு உதவியாளர் சற்றே தயங்கி, "அண்ணே, எல்லாம் சரி, ஆனா நாம இன்னும் கதையை பற்றி பேசவே இல்லையே?"

ரவி கடுப்புடன், "அதையும் நீயே சொல்லு".

"தமிழ்நாட்டில் என்னைக்கும் தீராத பிரச்சினை தண்ணீர் தான். அதை வெச்சு எடுத்தா என்ன?"

உடனே இன்னொரு உதவியாளர், "ஆனா முருகதாஸ் கூட விஜய்யை வைச்சு இந்த சப்ஜெக்ட்ல தான் எடுக்கறதா கேள்வி"

"எடுத்துட்டுப் போட்டும். நாம நம்ம பாணியில் எடுப்போம்"

"ஐடியா. சமீபத்தில் ஒரு அணையை காப்பாத்தறதுக்கு மக்கள் எப்படி போராடறாங்கன்னு கதை ஒண்ணு படிச்சேன். அது கிட்டத்தட்ட நம்ம முல்லைப் பெரியார் மேட்டர் மாதிரியே இருந்திச்சு"

ரவி குஜாலாகி, "அப்போ அதையே பண்ணிடுவோம். அப்படியே அதைக் கட்டினாரே பெவி கவிக்.."

"பென்னி கவிக்" என்று இடைமறிக்கிறார் ஒரு உதவியாளர்.

ரவி பேனாவை அவர் மீது வீசியவாறே, "பெரிய ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி, வந்துட்டாரு"

"ஆங், எங்கே விட்டேன்? பென்னி கவிக், பேசாம அந்த ஆளையே ஹீரோவாக்கிட்டா? அவரும் கிட்டத்தட்ட அந்த ஏரியாவுல ஹீரோ மாதிரி தான் வாழ்ந்திருக்கார்"

"பின்றீங்க தலைவரே,"

"அப்படியே பின்னணியில் அணை வருது. ஒரு 4-5 கிரேன் காமெரா வெச்சு குறுக்கும் நெடுக்குமா ஷாட்ஸ் போட்டோம்னா பிரம்மாண்டமாவும் தெரியும். என்ன சொல்ற?"

"சூபபர்னே, நீங்க நீங்க தான், நாங்க நாங்க தான்"

"ஜால்ரா அடிச்சது போதும். டீ சொல்லி அரை மணி நேரம் ஆவுது, இன்னும் வரலை"

"இதோ இப்பவே" என்று சொல்லி வெளியே ஓடுகிறார்.

"டேய் ராமு, எங்கே இந்த ஒரு வரியை கொஞ்சம் டெவலப் பண்ணு பாப்போம்"

"அதாவதுண்ணே, ஹீரோ மேல் படிப்பு படிச்சிட்டு வெளிநாட்டுலேர்ந்து நம்ம ஊருக்கு வர்றார். .அதாவது படையப்பாவில் வர்ற மாதிரி. இங்க மக்கள் தண்ணியில்லாம கஷ்டப்படறத பார்க்கறார். அவங்களுக்கு எதாவது செய்யணும்னு சொல்லி அணை கட்டலாம்னு முடிவெடுக்கறார். ஆனா அதை அரசாங்கம் தடுக்குது. அதை எதிர்த்து நம்ம ஹீரோ போராடறார் - இதான் கதை"

இன்னொரு உதவியாளர்,"இதுல ராஜா, யானைக்கெல்லாம் எங்க வேலையிருக்கு?"

ரவி, "அதை நான் சொல்றேன். வெளிநாட்லேர்ந்து வர்ற நம்ம ஹீரோ உண்மையிலேயே அந்த ஏரியாவோட ராஜா. ஆனால் இந்த மேட்டர் இப்ப நடக்கற மாதிரி காமிச்சா பல பிரச்சினை வரும். படம் ரிலீஸ் ஆவாது. பேசாம வெள்ளைக்காரன் காலத்தில் நடக்கற மாதிரி காட்டிட வேண்டியது தான்."

"சூப்பர் ஸ்டாரை மாணவனா காண்பிச்சா மக்கள் ஒத்துப்பாங்களா சார்?"

"கரெக்ட், சிக்கல் தான். பேசாம அரசு அதிகாரியா காமிச்சிடுவோம். வெள்ளைக்காரன் காலத்துல நம்மாளுங்க நிறைய பேரு கலெக்டரா கூட இருந்திருக்காங்க"

"சூப்பர், அப்படியே 4-5 அரசியல் வசனம் கூட எழுத ஸ்கோப் கிடைக்கும்"

ரவி, "நோ நோ, அரசியலே வரக்கூடாதுன்னு உறுதியா சொல்லிட்டார். அப்புறம் படம் ரிலீஸ் ஆகறதுல சிக்கலாயிடும்"

"அண்ணே, இது ஏதோ பீரியட் படம் மாதிரி டெவலப் ஆகுதுண்ணே. கொஞ்சம் கரண்டாவும் விஷயம் வேணுமே?"

இன்னொருவர், "இந்த மகதீரா மாதிரி முன்ஜென்மம், மறுஜென்மம் வெச்சா என்ன?"

ரவி, "அதெல்லாம் வேண்டாம். ரொம்ப பழசு. இந்த கலெக்டரை தேடி அவரோட பேரன் வர்றான். பேரன் வரும்போதும் ஊர் மக்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை அதை எப்படி தீர்த்து வைக்கறான்னு காமிச்சுக்கலாம்"

"அப்போ சூப்பர் ஸ்டார் ரெண்டு கெட்டப்பா? உங்களுக்கும் டபிள் ஆக்ஷன் செண்டிமெண்ட் செமையா வொர்க் அவுட் ஆவும்."

"ரெண்டு ரோல்னா ரெண்டு ஹீரோயின், ரெண்டு ரொமான்ஸ், ரெண்டு டூயட் - 4 ரீல் படம் ரெடி"
 
"ரோலுக்கு ரெண்டு சண்டைன்னா, 4 சண்டை - அடுத்த 4 ரீல் ரெடி"

ரவி, "நோ, நோ, 4 சண்டையெல்லாம் வேஸ்ட், அதுக்கு நிறைய டைம் வேற எடுக்கும். ரெண்டு சண்டை போதும். சரி, யாராவது முழுக்கதையை சொல்லுங்க பார்ப்போம்"

"ராஜா வெளிநாடு போய் படிச்சிட்டு கலெக்டரா ஊருக்கு வர்றாரு. வந்த பார்த்தா ஒரே வறட்சி, பஞ்சம். உடனே ஒரு அணை முடிவெடுக்கறார். ஆனா வெள்ளைக்காரன் அனுமதிக்கல. அதனால சொந்த காசுல காட்டறாரு. இதை தெரிஞ்சுக்கிட்ட வெள்ளைக்காரன் சூழ்ச்சி பண்றான். ராஜாவை கெட்டவனா காட்டறான்.மக்கள் ராஜாவை ஊரை விட்டே துரத்திடறாங்க"

ரவி குறுக்கிட்டு, "கொஞ்சம் சீரியஸா போகற மாதிரி இருக்கே. , கேரக்டர் வேற ரொம்ப முதிர்ச்சியா இருக்கே. ஆடியன்சுக்கு கொஞ்சம் யூத்தா, லைட்டா எதாவது காட்டணுமே?"

"அதுக்குத்தான் பேரன் கேரக்டர் இருக்கே, நல்லா மாடர்னா யூத்தா காட்டிடலாம்"

"பேரன் கேரக்டரை எப்படி காட்டறது?"

"திருடன் தான். அதானே இப்போ பேஷன். பொண்ணுங்களுக்கும் ஹீரோ திருடனா, மொள்ளமாரியா இருந்தாத்தான் புடிக்குது"

ரவி, "சரி கதை கிட்டத்தட்ட ஓகே. ஆர்டிஸ்ட் செலெக்ஷன் சொல்லுங்க"

 "ரெண்டு ஹீரோயின் வேணும் - தீபிகா படுகோனே அப்புறம் சமந்தா ஒகேவாண்ணே?"

ரவி, "அய்யே, வேண்டாம்பா, தீபிகா ஒரு நரம்படி, சமந்தாவுக்கு ஏதோ தோல் வியாதியாம், ஸ்பாட்டுக்கு வர்றதுக்கே ரொம்ப கண்டீஷன் போடும்னு சொல்றாங்க. அதுவுமில்லாம இவங்க ரெண்டு பேரும் அவர் முன்னாடி குழந்தைங்க மாதிரி இருப்பாங்க. frame சரியா இருக்காது. கொஞ்சம் சீனியரா சொல்லு"

"அப்போ நயன்தாரா இல்லேன்னா அனுஷ்கா போட்டுக்கலாம். இன்னொரு ஹீரோயினா இலியானாவை போடலாமா?

ரவி,"அந்த பொண்ணு சோத்துக்கு செத்த மாதிரி இருக்கும்பா, அதுவுமில்லாம ரேட்டும் ஜாஸ்தி. கொஞ்சம் நம்மூர் பொண்ணு மாதிரி புஷ்டியா சொல்லு"

"ஹிந்தியில புதுசா வந்திருக்காங்களே சோனாக்ஷி சின்ஹா, நம்ம பிரபு தேவா கூட 2-3 படம் டைரக்ட் பண்ணியிருக்காரு. அவங்க கொஞ்சம் நம்மூர் பொண்ணு மாதிரி தான் இருப்பாங்க."

ரவி, "சரி, காமெடிக்கு சந்தானத்தைப் போட்டுக்கலாம். மற்ற கேரக்டர் ஆர்டிஸ்ட் மட்டும் கொஞ்சம் பொதுவான முகங்களா போடுங்க. அப்போ தான் எல்லா மொழியிலேயும் டப் பண்ணி நிறைய பிரிண்ட் போட முடியும். "குறிப்பா நம்ம கூட முன்னாடி வேலை செஞ்ச ஆர்டிஸ்டா இருக்கணும். விஜயகுமார் மாதிரி. அப்போ தான் முந்தைய படங்களை refer பண்ணி காமெடி சீன்ஸ் எழுத வசதியா இருக்கும்.

"சரிங்க, மெயின் பார்ட்டி வில்லன் யாரு தலைவரே?"

ரவி, "பிரகாஷ் ராஜ் காஸ்ட்லி, கோட்டா ஸ்ரீநிவாஸ் காமெடியன், வேற யாரைப் போடலாம்?"

"அந்த கஜபதி பாபு பிரீயாத்தான் இருப்பாரு. அவருக்கு ஹீரோ சான்சும் இப்போ யாரும் குடுக்கறதில்ல. சீப்பா முடிக்கலாம்."

ரவி, "கிட்டத்தட்ட எல்லாமே ரெடி, நாளைக்கே தலைவரைப் பார்த்து ஓகே பண்ணிடறேன்"






படம் ப்ரிவியூ ஷோ முடிந்த பிறகு,

ரவி, "என்ன சார், படம் எப்படி வந்திருக்கு?"

சூப்பர் ஸ்டார் "எதாவது வித்யாசமா வந்திருக்கும்னு நினைச்சா முத்து படத்தை மறுபடியும் பார்க்கற மாதிரி இருக்கேய்யா?

"இதான் சார் இன்ஸ்டன்ட் பார்முலா. புதுசா எதாவது பண்ணனும்னா அதுக்கு நிறைய நேரம் எடுக்கும்."

எல்லாம் ஓகே தான். . ஆனா 3 மணி நேரம் ஓடுதே, மக்கள் பார்ப்பாங்களா? நடுவுலே எனக்கே கொஞ்சம் கண்ணை கட்டிடுச்சு"

"உங்களை 3 மணி நேரம் பார்க்க கசக்குதா சார்? அதுவும் டபுள் ரோலில்? 4 வருஷம் கழிச்சு படம் பண்றீங்க. ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் சார் இது"

"இல்லப்பா, அளவுக்கு மிஞ்சினா அமிர்தமே நஞ்சு. நானெல்லாம் எந்த மூலைக்கு?"

"அதை பத்தி கவலைப்படாதீங்க. வேணும்னா அப்புறமா கொஞ்சம் எடிட் பண்ணிக்கலாம். ஏற்கனவே நான் 2 சண்டை 4 பாட்டு மட்டும் தான் வெச்சிருக்கேன். சீன்ஸ் படத்துக்கு அவசியம்"

சூப்பர் ஸ்டார், "அந்த க்ளைமாக்ஸ் சரியில்லையே, கொஞ்சம் கார்ட்டூன் மாதிரி இருக்கே?"

"வேணும் சார். அப்போ தான் 7-8 வயசு பசங்க படம் பார்க்க வருவாங்க.அவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி வீடியோ கேம் சமாச்சாரம் அவசியம் தேவை"

"அதான் சொல்றேன், இந்த க்ளைமேக்ஸ் ரொம்ப குழந்தைத்தனமா இருக்கு. 80களில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி"

"நீங்க செய்யலாம் சார். முதல்ல கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் பேஸ்புக் வாட்சாப்னு இவங்களே தீவிரமா பரப்பிடுவாங்க"

சூப்பர் ஸ்டார், "அந்த யூத் கேரக்டர் பார்க்கறதுக்கு பழைய NTR மாதிரி இருக்கே. சில டான்ஸ் ஸ்டெப்ஸ் கூட அவரைத் தான் ஞாபகப்படுத்துது"

"ரொம்ப வசதியாப் போச்சு. தெலுங்குல கண்டிப்பா ஹிட் ஆயிடும். ரசிகர்களுக்கு உங்க ஸ்டைலில் ஒரு பொழுதுபோக்குப் படம் வேணும். அதுக்கு இதைவிட பெட்டர் சாய்ஸ் கிடையாது. நீங்க சொன்னதால நான் பெரிசா பஞ்ச் டயலாக் கூட வைக்கல. அதுவுமில்லாம இன்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி ஒரு மினிமம் கியாரண்டி படம் தேவை. அப்போ தான் எல்லா தரப்பினரும் சம்பாதிக்க முடியும்."

"ரொம்ப அவசரப்பட்டு எடுத்த மாதிரி இருக்கு. நிறைய காட்சிகளில் மேக்கப் கூட சரியா போடாத மாதிரி வருது. சிவாஜி, எந்திரன் மாதிரி படங்கள் பண்ணிட்டு இப்படி மறுபடியும் பழைய பார்முலா பாணியில் படம் எடுத்தது சரியாய் தப்பான்னு தெரியலை. அதுமட்டுமில்லை, பாட்டும் சுமாராத்தான் வந்திருக்கு."

"என்ன சார் இதுக்குப் போய் இப்படிக் குழம்பறீங்க? உங்களை நான் இந்த மாதிரி பார்த்ததே இல்லையே?"

"இல்லை ரவி, கோச்சடையான் மூலமா நான் நிறைய அடி வாங்கிட்டேன். கொஞ்சம் பண நஷ்டம், நிறைய மனக்கஷ்டம். அதான் இந்தப் படம் வெற்றி அடையணுமேன்னு கவலையா இருக்கு. ஏன்னா பெயர், புகழ், பணம் போனா சம்பாதிசுக்கலாம். ஆனா நம்பிக்கை போயிடுச்சுன்னா அப்புறம் எழுந்துக்கவே முடியாது. நம்ம இண்டஸ்ட்ரியே நம்பிக்கையில் தான் ஓடுது"

"வாஸ்தவம் தான் சார். ஆனா நீங்க கவலைப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லை. உங்களுக்குத் தான் கடவுள் நம்பிக்கை உண்டே, எல்லாம் "அவன்" செயல்னு நினைச்சு அக்கடான்னு இருங்க"

"கரெக்ட் ரவி, ஓடினா அடுத்த படம், ஓடாட்டி ரிடயர்மென்ட். எது எப்படியிருந்தாலும் இமயமலைக்கு பறக்காஸ் நிச்சயம்.




மேற்கண்ட உரையாடல் முழுக்க முழுக்க கற்பனையே சூப்பர் ஸ்டார் இருக்கும் வரை ரசிகர்கள் இருப்பார்கள். ரசிகர்கள் இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் இருப்பார். சினிமா என்பது இவர்களை இணைக்கும் ஒரு மீடியம். அவ்வளவே. அது எப்படியிருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை.

ஜெயராமன் 






Monday, December 8, 2014

Beware of Bouncers

Cricket is a fantastic sport that is known to give life to people. At the moment, the sport has taken away a wonderful life. May the soul of Phil Hughes rest in peace.

And so here is an important series against Australia commencing in an entirely different backdrop than usual. The buildup to the series has been subdued (understandably). But I’m sure the intensity isn’t.

Dhoni was supposed to play from the second match of the series (a thumb injury forcing him to rest the first test). Now that the schedule of the series is altered due to Hughes demise, the first match is actually beginning at the time when the second match should be starting. So one would be tempted to believe Dhoni will be leading the side. And it appears he is also fit from the outside. Interestingly, Kohli is leading the charge for the first test, while Dhoni continues to rehabilitate considering all important World Cup is round the corner.

I read the script entirely different. Selectors are resting Dhoni sighting injury grounds so as they can try a new skipper. The call for Dhoni’s head has been growing loud for a while. At the same time, the idea of handing over the Captaincy to Kohli, is little premature, since he is not cemented his place in the test side except for the fact that he is an exceptional talent. At this time, giving one off Test Captaincy would be a good idea to evaluate Kohli to see if he is actually ready for the job. If Kohli comes out in flying colors (ideally a win) there is a good chance he will be asked to lead the side reminder of the series (After all, you don’t win against Aussies on fluke at their den). If Kohli fails to make an impact as a Captain in the First Test, Dhoni will return to the side as Captain starting from the Second Test of the Series. By all means, the Captaincy will not change hands hastily (either way). (In my following of Cricket, handing/revoking of Captaincy to/from Tendulkar wasn't handled well. Probably BCCI/Selectors are trying to avoid such occurrences). Let’s watch how it all pans out.

Coming to the starting lineup of the first test, one would be tempted to believe Dhawan may not feature in the XI. After a sling of failures abroad, Dhawan lost his place to Gambir in England after 3rd Test. So, Dhawan should not be a sure starter in the XI. If Dhoni was captaining today, I wouldn’t be surprised at the debut of L Rahul. But with Kohli donning duties, I doubt he would experiment a new comer right away. From that aspect Dhawan should retain his place. A technically correct Indian line up would be something as follows.

Vijay, Dhawan, Pujara, Kohli, Rahane, R Sharma, Saha, Ashwin, Shami Ahmed, Ishant Sharma and Varun Aaron.

But it would not be a bad idea if India fields

Vijay, Dhawan, Pujara, Kohli, Rahane, R Sharma, Saha, Ishant, Varun Aaron, Umesh Yadav and Karn Sharma

This is my reasoning for the above side. The top six batsmen take their place followed by wicket keeper Saha. It is in the bowling department I would like to see some changes. After all, test matches are won by taking 20 wickets more than anything. So, India should go all out in this department. Both quicks (Aaron and Yadav) should play. As a matter of fact, Yadav had a fantastic series the last time he visited Australia. Ishant is a default choice for the 3rd seamer and India should surprise by fielding leg spinner Karn Sharma ahead of Ashwin or Jadeja. Both Ashwin and Jadeja have been very ordinary in abroad conditions so far. So a leggie could make the impact that India is looking from the sping department.

Bottom line: Awaiting the reaction of the first bouncer.


Dinesh
Cricket Lover

Saturday, December 6, 2014

கேடி பில்லா, கில்லாடி ரங்கா

காட்சி 1:

"திவ்யா, நான் உன்னை காதலிக்கலை, நீ அழகா இருக்கேன்னு சொல்லலை" என்று ஆரம்பித்தான் அஜய்

"ஹலோ, இந்த வசனமெல்லாம் வந்து பல வருஷம் ஆவுது. இவ்ளோ பழசா இருக்கியே" என்று கிண்டலடித்தாள் திவ்யா.

"ஓகே, நான் உன்னை காதலிக்கறேன், நீ?"

"எதுவா இருந்தாலும் எங்கப்பா கிட்ட பேசிக்கோ" என்று சொல்லிக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள்.

"எனக்கொரு பதில் சொல்லிட்டுப் போ"

"மண்டு, அதான் அப்பா கிட்டே பேசுன்னு சொல்றேன்ல" என்று கூறிவிட்டு நிற்காமல் விரைந்தாள்.

காட்சி 2:

"என்னடா மச்சான், இன்னிக்கு ஒரு பந்து கூட பேட்ல படவே இல்லையே,  எதாவது பிரச்சினையா?" கிரிக்கெட் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கணேஷிடம் கேட்டான் அஜய். இருவரும் கிரிக்கெட் நண்பர்கள்.

"இல்லடா, நாளைக்கு ஒரு பொண்ணு பார்க்க போறேன், முதல் தடவை. அதான் பரபரப்பா இருக்கு" என்று குழம்பி வழிந்தான் கணேஷ்.

"நல்ல விஷயம் தானே, இதுக்கே இவ்ளோ டென்ஷன் எடுத்தேன்னா, அப்புறம் முதல் ராத்திரி ப்ரேக் டவுன் ஆயிடும், பார்த்துக்கோ" என்று கூறி கண்ணடித்தான் அஜய்.

"ஏண்டா வேற சிந்தனையே கிடையாதா?"

"சரி சரி, ப்ரீயா விடு, ஒரு ரவுண்டு ஜாகிங் போவோம் வா, டென்ஷன் குறையும்"

காட்சி 3:


"நீ பேசாம கணேஷையே கல்யாணம் பண்ணிக்க திவ்யா" என்று கண்ணீருடன் கூறினான் அஜய்.

"அடப்பாவி, இதான் நீ லவ் பண்ணின லட்சணமா?

"வேறென்ன பண்ணச் சொல்ற? நான் வந்து உங்கப்பா கிட்ட பேசறதுக்குள்ள அவன் முந்திக்கிட்டான். அவன் உன்னை தான் பார்க்க வர்றான்னு தெரிஞ்சிருந்தா அவன்கிட்டயாவது பேசி தடுத்திருப்பேன்"

"ஓஹோ, பிரெண்டா, பிகரான்னு குழப்பமா இருக்கோ?"

"இல்ல, அது வந்து...."

"நீ உன் நட்பை கட்டிக்கிட்டு அழு, நான் உன் ப்ரெண்டை கட்டிக்கிட்டு காலம் முழுக்க அழறேன், குட் பை"

காட்சி 4:

கோவாவின் பிரபல ஹோட்டலின் டீலக்ஸ் அறை. கணேஷும் தேவிகாவும் உல்லாசமாக படுத்திருந்தனர்.

"புது மாப்பிள்ளை என்ன யோசிக்கறீங்க?" என்று அவன் முள் தாடியை வருடிக்கொண்டே கேட்டாள் தேவிகா"

"எல்லாம் வரப்போற மேட்ச் பத்தி தான். டீம்ல இருக்கேனா இல்லையான்னு கூட தெரியல"

"நான் கூட பொண்டாட்டியைப் பத்தி யோசிக்கறியோன்னு நினைச்சுட்டேன்"

"அவளே என்னை நினைக்கறதில்ல. நான் எதுக்கு அவளை நினைக்கணும்?"

"இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம காதலைப் பத்தி உங்கப்பா கிட்ட சொல்லியிருக்கலாம். இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு லவ் பண்ண வேண்டிய அவசியம் இருந்திருக்காது"

"அந்த மிலிட்டரிகிட்ட பேசறதா? வேற வினையே வேண்டாம். காதல்னாலே கடுப்பாவான் மனுஷன்"

"கேட்கறேன்னு தப்பா நினைக்காதே, பொண்டாட்டிக்கு துரோகம் பண்றோமோன்னு எப்பவாச்சும் தோனியிருக்கா?"

"அவளை நான் பொண்டாட்டியாவே நினைக்கலையே, அப்புறம் தானே துரோகம் பண்றோமா இல்லையான்னு யோசிக்கணும்?"

காட்சி 5:

"விஸ்வநாதன், உன் பையன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை. பொண்டாட்டிய வெச்சு ஒழுங்கா குடும்பம் நடத்தத் தெரியாதவனெல்லாம் என்ன ஆம்பளை? ஆறு மாசத்துலேயே என் பொண்ணு போதும் போதும்னு பிறந்த வீட்டுக்கு வந்துட்டா. ஐ ஆம் வெரி அப்செட்" என்று குமுறினார் திவ்யாவின் அப்பா ராமமூர்த்தி.

"அவங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னே தெரியலடா ராமு. ரெண்டு பேரும் ஏதோ பறிகொடுத்த மாதிரி தான் வாழறாங்க. நான் எவ்வளவோ பேச முயற்சி எடுத்தும் பிடி கொடுக்கவே மாட்டேங்கறாங்க."

"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே, வேற வழியே இல்லை, கோர்ட் படி ஏறித்தான் ஆகணும்"

காட்சி 6:

"என்ன, நான் சொன்ன மாதிரியே உங்கப்பா முன்னாடி செம பெர்பார்மன்ஸ் பண்ணிட்ட போலிருக்கு?" என்று போனில் சிரித்தபடியே கேட்டான் அஜய்.

"பின்னே, இப்போ நான் சேர்ந்து வாழறேன்னு சொன்னாலும் எங்கப்பா விடமாட்டார்" என்று சந்தோஷமாக கூறினாள் திவ்யா.

"அப்புறம் ஜீவனாம்சமா ஒரு நல்ல தொகையா கேளு. அப்போ தான் நம்ம லைப் நல்லா இருக்கும். என்ன சொல்றே?"

காட்சி 7:

"ஒரு 2 கோடி ஜீவனாம்சமா கேட்கலாமா?" என்று கணேஷிடம் போனில் கேட்டாள் தேவிகா.

"கேளு கேளு, ஏன்னா என் பொண்டாட்டி இப்போ தான் 1 கோடி கேட்டு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்கா.  நீ 2 கோடி கேட்டாத்தான் நமக்கு லாபம்" என்றான் கணேஷ்.

காட்சி 8:

சென்னையின் பிரபல பார்.

"இந்தா மச்சி, நாம பேசின படி உன் பங்கு 1.5C கார்ல வெச்சிருக்கேன்" என்று சூட்கேஸ் சாவியை கணேஷிடம் நீட்டினான் அஜய்.

"நம்ம அப்பன்காரங்க கிட்டேர்ந்து பணத்தைப் புடுங்கறதுக்கு எவ்ளோ பெரிய டிராமா போட வேண்டியிருக்கு பார்த்தியா? தலையெழுத்து!" என்று தலையில் அடித்துக் கொண்டான் கணேஷ்.

"நாம என்ன ஸ்டார் ப்ளேயரா மச்சி? விளம்பரம், அது இதுன்னு  கோடிக்கணக்குல சம்பாதிக்கறதுக்கு? எப்பவோ ஒரு டூர்ல சான்ஸ் கிடைக்குது. லோக்கல் டோர்னமென்ட் ஆடறதுனால கொஞ்சம் காசு வருது. அதையும் இந்த அப்பாக்கள் வாங்கி வெச்சுக்கறாங்க. சொன்ன நம்ப மாட்டே, எங்கப்பன் கிரெடிட் கார்ட் பில்லைக் கூட செக் பண்ணி கணக்குக் கேட்கறாண்டா" என்று குமுறினான் அஜய்.

"சரி விடு, அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சுல்ல, ஒரு ஆறு மாசம் சோக கீதம் வாசிச்சிட்டு அப்புறம் நாம இஷ்டப்படி நம்ம காதலிகளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். பாவம் பையன்னு இந்த பெரிசுங்களும் சம்மதிச்சுடும்"

அஜய், "அது சரி, திவ்யாவோட இவ்ளோ நாள் இருந்திருக்கியே, எதுவும் கசமுசா?.."

"என்ன மச்சி சந்தேகப்படறியா? நம்மள்து ஜென்டில்மேன் அக்ரீமெண்ட் மச்சி"

"சாரி, ஒரு சின்ன டவுட்டு, அதான்"

"இட்ஸ் ஓகே, லெட்ஸ் என்ஜாய், சியர்ஸ்"

 .
.
.
.
.
.


காட்சி 9:...

"இந்தாடி, நாம பேசின படி உன் பங்கு ஒரு கோடி.."என்று சூட்கேஸ் சாவியை தேவிகாவிடம் நீட்டினாள் திவ்யா.

"தேங்க்ஸ், ஆமாம் உன் பங்கு?"

"அதை நான் ஏற்கனவே எடுத்துக்கிட்டேன். ஆனால் இந்த புருஷனுங்க கிட்டேர்ந்து துட்டை கறக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. என்னல்லாம் நாடகம் போட வேண்டியிருக்கு" என்று சலித்துக் கொண்டாள் திவ்யா.

"எவ்ளோ செலவு பண்ணி நம்ம அப்பாக்கள் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. இவனுங்க இவங்க அப்பாகிட்டேர்ந்து நேரடியா காசு கேட்கறதுக்கு துப்பில்லாம நம்மளை யூஸ் பண்ணுவாங்களாம், நமக்கு எதுவுமே தெரியாதாம் - லூசுப்பசங்க"

எங்கப்பாகிட்டேர்ந்து வரதட்சிணையா வாங்கின காசைத் தானே எனக்கு ஜீவனாம்சமா குடுத்தான். நியாயப்படி அது நம்ம பணம் தானே?

"சரியாச் சொன்னே"

" நானும் என் ப்ரெண்டும் சேர்ந்து பேஷன் டிசைன் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்னு சொன்னேன், முதல்ல தேவையில்லாம நூறு கேள்வி கேட்டான். ஆனாலும் கடைசியில் பணம் குடுத்துட்டான்"

"எல்லாம் ஓகே, நாளைக்கு பேஷன் கம்பெனி எங்கேன்னு கேட்டா?"

"கம்பெனி கண்டிப்பா ஆரம்பிக்கத்தான் போறோம். உங்கப்பாவும் எங்கப்பாவும் தான் நடத்தப் போறாங்க. கம்பெனி ஓடிச்சுன்னா இதுங்களுக்கு லாபம்னு சொல்லி ஒரு சின்ன தொகையை கணக்கு காட்டிட வேண்டியது தான். இல்லேன்னா காந்தி கணக்கு தான். இதையெல்லாம் பார்க்கறதுக்கு இதுங்களுக்கு எங்கடி நேரம்?"

"ஆனா நான் இவன் கிட்ட பணம் கேட்டப்போ என் மாமனார் ஒண்ணுமே சொல்லலை, அதான் ஆச்சர்யம்"

"எப்படி கேட்பாரு?, ஏற்கனவே ஒரு தடவை ஸ்ட்ரிக்டா இருந்ததுனால தான் பையன் இப்படி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கற மாதிரி ஆயிடுச்சோன்னு குற்ற உணர்ச்சி இருக்கும்ல"

"ஆளுக்கு 1.5 கோடி ஆச்சே? ஒரு கோடி தான் நமக்கு வந்திருக்கு. மிச்சம் 50 லட்சம்?

"அது ஏதோ கவுன்டி மேட்ச் ஆடப் போகணுமாம், அது போக செலெக்ஷன் கமிட்டி ஆளுங்களை கவனிக்கணுமாம், அப்போ தான் வெளி நாட்டு டூர்ல எடுப்பாங்களாம். ஒழிஞ்சுபோன்னு குடுத்துட்டேன்"

"இவனும் அதே கதையை தான் என்கிட்டே சொன்னான், ஒரு வேளை மறுபடியும் தில்லாலங்கடி வேலை எதுவும்.."

"போகட்டும் விடு . ஆயிரந்தான் இருந்தாலும் புருஷனாச்சே. என்ஜாய் பண்ணட்டும்" என்று கூறி இருவரும் சிரித்தனர்.

 .
.
.
.
.
.
.
இவ்ளோ கேவலமான கதையில முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்னு கேட்கறீங்களா? கருத்து சொல்லாம போவோமா?

நீதி 1 - காதலும் கக்கூசும் ஒண்ணு. உள்ளே ப்ரெஷர் வந்தா உடனே வெளிய தள்ளிடணும். இல்லேன்னா இப்படித்தான் நாறிப்போய் ஊரே மணக்கும்.

நீதி 2 - பொண்டாட்டியை விட நீங்க புத்திசாலின்னு மறந்து போய்க் கூட நினைச்சுக்காதீங்க. நினைச்சா நீங்க தான் முட்டாள்.

(கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)


ஜெயராமன்

Monday, December 1, 2014

இன்னமும் நிறைய...



வணக்கம் அன்பர்களே,

"ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் எழுதும் பேறு கிடைத்த சந்தோஷத்தில்....

ஹோல்ட் ஆன்...அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லைங்க.சோம்பேறித்தனம் தாங்க இவ்ளோ நாளா எழுதாம இருந்ததுக்குக் காரணம். இப்போ மறுபடியும் தொல்லை பண்ண வந்துட்டேன்.

இந்த இடைப்பட்ட 7-8 மாசத்துல பலானது பலானது நடந்து போச்சு.

பில் ஹியூசின் மரணம்,

ஸ்ரீனிவாசனைப் பிடித்திருக்கும் சூதாட்டம் என்கிற கண்டக சனி

"ஒரு பிட்ச்சும் இரண்டு கிரீசும்" , அட அதாங்க, நம்மூர்க்கார பய நண்பனோட பொண்டாட்டிய ஆட்டையப் போட்ட கதை,

"ஐ" படம் எப்போ வரும்,

லிங்கா ஹிட் ஆவுமா,

ரகுமான் மியூசிக் முன்னாடி மாதிரி மனசுல ஒட்டமாட்டேங்குதே!

 தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்னு சொல்லிக்கிட்டு மலையாளிங்களை மட்டுமே பாட வைக்கற விஜய் டிவி,

உலகம் சுற்றும் வாலிபனாக மாறிக்கிட்டு வர்ற நம்ம பிரதமர்,

முகநூல் மற்றும் ட்விட்டரின் மூலம் அரசை நடத்த அவர் எடுக்கும் பிரயத்தனம் 

வாரத்துக்கு 10 படங்களுக்குக் குறையாமல் ரிலீஸ் செய்து சாதனை படைத்து  வரும் தமிழ் சினிமா - (எவ்ளோ ஓடுதுன்னு கேட்காதீங்க)

பிச்சு உதறும் ஆன்லைன் வியாபாரம்

நம்பிக்கை நட்சத்திரமாக ஆரம்பித்து நலிந்து போன நோக்கியா தொழிற்சாலை

மீண்டும் முதலமைச்சரான(?) பன்னீர்செல்வம்

இன்னமும் புத்தகம் போட்டு அதிமுகவை கிழித்துக் கொண்டிருக்கும் கலைஞர்

"ஐயப்பா, எப்படியாவது முல்லைபெரியார் அணை உடையணுமேன்னு" தினமும் வேண்டும் கேரளா அரசியல்வாதிகள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுடும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மூர் கடற்படை

தேர்தலுக்காக 5 தமிழர்களை விடுதலை செய்த ராஜபக்சே

குஜராத்திகள் பாகிஸ்தானிடம் மாட்டினால் இந்திய மீனவர்கள் என்றும் இலங்கைப் படையினரிடம் மாட்டும் நம்மவர்களை தமிழக மீனவர்கள் என்றும் பிரித்துப் பார்க்கும் மத்திய அரசு மற்றும் இந்திய மீடியாக்கள்

முன்னைவிட அதிகமாகி வரும் பெண்களுக்கெதிரான கொடுமைகள், அதே நேரத்தில் வயதாகியும் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் அல்லாடும் சாதாரண ஆண்கள்

தண்டவாளம் வழி நெடுக வழிந்து கிடக்கும் மலக்கழிவையும்  குப்பைகளையும் மறந்துவிட்டு புல்லெட் ரயிலுக்கு சைனாவை வரவழைக்கும் மத்திய அரசு

மிகவும் துணிச்சலாக பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக சினிமாவில் பேசிய நடிகர் விஜய்.

இப்படி இன்னமும் நிறைய இருக்கும் "இன்னமும்". இனி வரும் வாரங்களில் முடிஞ்ச வரைக்கும் நகைச்சுவையா எழுத முயற்சி பண்றேன்.
நீங்களும் முடிஞ்சா சிரிங்க (ஒரு வாரம் கழிச்சு சிரிச்சாக் கூட ஓகே)

இனி வரும் நாட்களில் சந்திப்போம் ....

ஜெயராமன் 
 

Related Posts Plugin for WordPress, Blogger...