Monday, December 1, 2014

இன்னமும் நிறைய...



வணக்கம் அன்பர்களே,

"ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் எழுதும் பேறு கிடைத்த சந்தோஷத்தில்....

ஹோல்ட் ஆன்...அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லைங்க.சோம்பேறித்தனம் தாங்க இவ்ளோ நாளா எழுதாம இருந்ததுக்குக் காரணம். இப்போ மறுபடியும் தொல்லை பண்ண வந்துட்டேன்.

இந்த இடைப்பட்ட 7-8 மாசத்துல பலானது பலானது நடந்து போச்சு.

பில் ஹியூசின் மரணம்,

ஸ்ரீனிவாசனைப் பிடித்திருக்கும் சூதாட்டம் என்கிற கண்டக சனி

"ஒரு பிட்ச்சும் இரண்டு கிரீசும்" , அட அதாங்க, நம்மூர்க்கார பய நண்பனோட பொண்டாட்டிய ஆட்டையப் போட்ட கதை,

"ஐ" படம் எப்போ வரும்,

லிங்கா ஹிட் ஆவுமா,

ரகுமான் மியூசிக் முன்னாடி மாதிரி மனசுல ஒட்டமாட்டேங்குதே!

 தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்னு சொல்லிக்கிட்டு மலையாளிங்களை மட்டுமே பாட வைக்கற விஜய் டிவி,

உலகம் சுற்றும் வாலிபனாக மாறிக்கிட்டு வர்ற நம்ம பிரதமர்,

முகநூல் மற்றும் ட்விட்டரின் மூலம் அரசை நடத்த அவர் எடுக்கும் பிரயத்தனம் 

வாரத்துக்கு 10 படங்களுக்குக் குறையாமல் ரிலீஸ் செய்து சாதனை படைத்து  வரும் தமிழ் சினிமா - (எவ்ளோ ஓடுதுன்னு கேட்காதீங்க)

பிச்சு உதறும் ஆன்லைன் வியாபாரம்

நம்பிக்கை நட்சத்திரமாக ஆரம்பித்து நலிந்து போன நோக்கியா தொழிற்சாலை

மீண்டும் முதலமைச்சரான(?) பன்னீர்செல்வம்

இன்னமும் புத்தகம் போட்டு அதிமுகவை கிழித்துக் கொண்டிருக்கும் கலைஞர்

"ஐயப்பா, எப்படியாவது முல்லைபெரியார் அணை உடையணுமேன்னு" தினமும் வேண்டும் கேரளா அரசியல்வாதிகள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுடும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மூர் கடற்படை

தேர்தலுக்காக 5 தமிழர்களை விடுதலை செய்த ராஜபக்சே

குஜராத்திகள் பாகிஸ்தானிடம் மாட்டினால் இந்திய மீனவர்கள் என்றும் இலங்கைப் படையினரிடம் மாட்டும் நம்மவர்களை தமிழக மீனவர்கள் என்றும் பிரித்துப் பார்க்கும் மத்திய அரசு மற்றும் இந்திய மீடியாக்கள்

முன்னைவிட அதிகமாகி வரும் பெண்களுக்கெதிரான கொடுமைகள், அதே நேரத்தில் வயதாகியும் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் அல்லாடும் சாதாரண ஆண்கள்

தண்டவாளம் வழி நெடுக வழிந்து கிடக்கும் மலக்கழிவையும்  குப்பைகளையும் மறந்துவிட்டு புல்லெட் ரயிலுக்கு சைனாவை வரவழைக்கும் மத்திய அரசு

மிகவும் துணிச்சலாக பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக சினிமாவில் பேசிய நடிகர் விஜய்.

இப்படி இன்னமும் நிறைய இருக்கும் "இன்னமும்". இனி வரும் வாரங்களில் முடிஞ்ச வரைக்கும் நகைச்சுவையா எழுத முயற்சி பண்றேன்.
நீங்களும் முடிஞ்சா சிரிங்க (ஒரு வாரம் கழிச்சு சிரிச்சாக் கூட ஓகே)

இனி வரும் நாட்களில் சந்திப்போம் ....

ஜெயராமன் 
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...