Thursday, November 3, 2011

ஐ, எனக்குக் கல்யாணம்.....



கவுதம் கம்பீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

எல்லோரும் கூடிக் குலாவிக் கொண்டிருக்க, யுவராஜ் மட்டும் "தனியே தன்னந்தனியே" என்று ஓரமாக ஒதுங்கியிருக்கிறார்.

ஸ்ரீசாந்த், "இங்க என்னய்யா பண்றே? அங்க எல்லாரும் உன்னை போட்டோ செஷனுக்காகத் தேடிக்கிட்டிருக்காங்க. ஆமாம், உன் மூஞ்சி ஏன் இப்படி வாடியிருக்கு? ஜாமீன் கிடைக்காத கனிமொழி மாதிரி"

"அட போய்யா, மனசே சரியில்ல"

"என்ன யுவி, என்ன ஆச்சு?"

"ஒரே வெறுப்பா இருக்கு, எதுவும் புடிக்கல"

ஸ்ரீசாந்த் புன்னகையுடன், "உனக்கும் கல்யாண ஆசை வந்திருச்சு போல. கவலையை விடு, ஒரு நல்ல புரோக்கர் இருக்கான். நாளைக்கு அவனைக் கூட்டிக்கிட்டு வரேன், நாம போய் பொண்ணு தேடுவோம். இப்போ எழுந்திருச்சு வா - கொஞ்சம் சிரிச்ச முகமா வா"

"ஹிஹிஹி"

"இதுக்கு சின்னக் கௌண்டர் மனோரமாவே பெட்டர்" "

Next day morning:
யுவி டிப் டாப்பாக டிரஸ் பண்ணிக் கொண்டு வீட்டு வாசலில் காத்திருக்கிறார். ஸ்ரீசாந்த் கார் அவர் அருகில் வந்து நிற்கிறது.

"ஏறு, வா போகலாம்"

யுவி காரில் யாரையோ தேடியவாறே, "யாரோ புரோக்கரைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னே, நீ மட்டும் வந்திருக்கே?"

ஸ்ரீசாந்த், "எல்லாருக்கும் அவங்களோட நெருங்கிய நண்பன் தான் முதல் புரோக்கர். அந்த வகையில் நான் தான் உனக்கு புரோக்கர். சீக்கிரம் ஏறு”

ஸ்ரீசாந்த் வண்டி ஒட்டியவாறே, "நீ பாட்டுக்கு பிக் அப், டிராப், எஸ்கேப்னு நல்லாத்தானே இருந்தே, திடீர்னு என்ன கல்யாண ஆசை?"

யுவி, "முன்ன மாதிரி எவளும் சரியா சிக்க மாட்டேங்கராளுங்க. கிரிக்கெட்லயும் எப்பவாச்சும் தான் சான்ஸ் கிடைக்குது, வயசு வேற ஏறிக்கிட்டே போகுது, அதான்"

"வயசு ஏறுதோ இல்லையோ, தொப்பை ஏறிக்கிட்டே போகுது, யுவி தொப்பையைக் குத்தியவாறே, "இங்க பாரு, உடம்பு டெல்லி வர்றதுக்கு முன்னாடி தொப்பை சிம்லாவுக்குப் போகுது"



"இன்னும் ரெண்டே மாசம் தான், அப்புறம் பாரு"

ஸ்ரீசாந்த், "என்ன குழந்தை டெலிவெரி பண்ணிடுவியா?"

"மொக்கை போடாதே, ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்கேன், எப்படி ஸ்லிம் ஆகறேன்னு பாரு. தினமும் ரெண்டு டேப்லட் revital சாப்பிடறேன்"

"அடப்பாவி, நீ வீணாப் போனதுக்குக் காரணமே அந்த மாத்திரை தான். என்னிக்கு அதுக்கு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சியோ அன்னிக்கு புடிச்சுது சனி உன்னை"

"எங்க ஊர் கம்பெனிப்பா. அது சரி, இப்ப நாம எங்க போறோம்?"

பொண்ணு பாக்க. சரி, உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?"

"அழகா, படிச்சவளா, புத்திசாலியா, குடும்பபாங்கா..."

ஸ்ரீசாந்த் இடைமறித்து, "உனக்கு ஒரு பொண்டாட்டி வேணுமா இல்லை 4 -5 எதிர்பாக்கறியா?"

"இப்போதைக்கு ஒண்ணு தான்"

"அப்போ இதுல எதாச்சும் ஒண்ணு தான் கிடைக்கும்". காரை ஒரு அபார்ட்மென்டில் நுழைத்து பார்க்கிங்கில் நிறுத்துகிறார்.

யுவி கலவரமாகி, 'டேய், இங்க ஏண்டா வந்தே, இங்க யார் இருக்காங்கன்னு தெரியும்ல?"

"தெரியும், எப்பவுமே தெரிஞ்சவங்ககிட்டேர்ந்து தான் ஆரம்பிக்கணும்"

ஸ்ரீசாந்த் காலிங் பெல்லை அழுத்தவும், கதவு திறக்கிறது - சித்தார்த் மால்யா நிற்கிறார்.

"நீங்க எங்க இங்க வந்தீங்க?"

"தீபிகாவைப் பார்க்க. கொஞ்சம் பெர்சனலாப் பேசணும்"

சித்தார்த், "தீபி, உன் முன்னாள் தோஸ்த் வந்திருக்கார், வந்து என்னன்னு கேளு"

யுவி ஸ்ரீயிடம், "என்னடா, இந்த முள்ளம்பன்னித் தலையன் இங்கயே டேரா போட்டிருக்கானா?

ஸ்ரீ, "அவன்கிட்ட முள்ளங்கி பத்தை மாதிரி கரென்சி இருக்கே மச்சி, அதான்"

அனைவரும் சோபாவில் அமர்கின்றனர்.

சித்தார்த் மனசுக்குள் "இவன் ஏன் இப்ப வந்திருக்கான்? இவன் கூட கனெக்ஷனை கட் பண்ணிட்டேன்னு தானே சொன்னா, எவளையும் நம்ப முடியலையே!"

யுவி மனசுக்குள், "அதான் அவளுக்கு கோடியைக் காட்டி என்னை தெருக்கோடிக்கு அனுப்பிட்டீல்ல, அப்புறம் ஏன் நடுக்கம்?'


ஸ்ரீசாந்த் மனசுக்குள் "ஒரு மொள்ளமாரிக்கும் முடிச்சவுக்கிக்கும் நடுவுல மாட்டிக்கிட்டேனே, ஒரு ஜோர்ல இங்க வந்துட்டேன், இப்போ லெக் ரொம்ப ஸ்லிப் ஆவுதே"

தீபிகா உள்ளேயிருந்து வருகிறார், "ஹாய் யுவி, எப்படியிருக்கே? பார்த்து ரொம்ப நாளாச்சு?"
சித்தார்த் மறுபடியும் மனசுக்குள் "அப்பாடா, கனெக்ஷன் நிஜமாவே கட் தான் போல"

யுவி, "ஒண்ணும் இல்லை, சும்மாதான்....."

ஸ்ரீசாந்த், "அதன் இவ்ளோ தூரம் வந்தாச்சுல்ல? அப்புறம் ஏன் இழுக்கற? அது வேற ஒண்ணும் இல்லை தீபிகா, யுவிக்கு பொண்ணு பாக்கறோம்"

சித்தார்த் நடுவில் புகுந்து "அதுக்கு?"



ஸ்ரீசாந்த், "தீபிகாவும் யுவியும் ஒரு காலத்துல நல்ல நண்பர்கள் ஆச்சே, ஒரு வேளை தீபிகாவுக்கு இன்னமும் யுவி மேல இண்டரெஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சிகிட்டுப் போகலாம்னு வந்தோம்"

சித்தார்த் கடுப்பாகி "ஒழுங்கு மரியாதையா ரெண்டு பெரும் வெளிய போயிடுங்க, இல்லேன்னா அசிங்கமாயிடும்"

யுவி, "ஏய், என்ன வாய் நீளுது? பேட் எடுத்து அடிச்சேன்னு வெச்சுக்கோ,அப்புறம் உன் பாடியை பெங்களூர்ல தான் பொறுக்க வேண்டியிருக்கும்"

சித்தார்த் கோபத்தில் யுவியின் சட்டையைப் பிடிக்கப் போக இருவரும் கை கலப்பில் ஈடுபடவே, தீபிகாவும் ஸ்ரீயும் நடுவில் புகுந்து இருவரையும் விலக்கி விடுகின்றனர்.

தீபிகா, "Guys, ரிலாக்ஸ். யுவி, உனக்கு என்ன வேணும்?"

யுவி, "நீ வேணும் தீபி, நீ வேணும்"

தீபிகா, "நீ என்ன பைத்தியமா? நா சித்துவோட செட்டில் ஆயிட்டேன்"

யுவி, "அவன் கிட்ட அவங்கப்பா சம்பாதிச்ச பணம் தான் இருக்கு. என்னை மாதிரி சுயமா உழைச்சு முன்னேறியிருக்கானா?"

தீபிகா, "யாரு, நீயா? உங்கப்பா முன்னாள் ப்ளேயர். அந்த சிபாரிசுல உனக்கு சான்ஸ் கிடைச்சுது. ஏதோ ஆரம்பத்துல கொஞ்சம் விளையாடினதால இவ்ளோ நாள் டீம்ல வந்து போற."

ஸ்ரீசாந்த் யுவியிடம் "யோவ் உணர்சிவசப்படாதேன்னா கேக்கறியா? இப்ப பாரு உன் குப்பையை அவ நோண்ட ஆரம்பிச்சிட்டா!"

யுவி, "நம்ம ஆஸ்திரேலியா டூரெல்லாம் மறந்துட்டியா?"

தீபிகா, "எப்படி மறக்க முடியும்? ஆறு மணிக்கு டிஸ்கோ வாடான்னா 9 மணிக்கு வருவே, உனக்காக காத்திருந்து காத்திருந்து என் கால் வலிச்சது தான் மிச்சம். அந்த கேப்ல தோனி யதேச்சையா வந்து என்கிட்டே பேச அதுக்கு என் மேல சந்தேகப்பட்டே"

ஸ்ரீ, "யுவி, வா கிளம்புவோம்"

யுவி, "இருடா, கொஞ்சம் பேசிப் பாக்கறேன்"

ஸ்ரீ, "ரெண்டு பாலுக்கு ரெண்டு விக்கெட் எடுத்துட்டா, ஹாட்ரிக் அடிக்கறதுக்குள்ள போயிரலாம் வா"



வெளியே வரும்போது, "என்ன யுவி இப்படி டென்ஷன் ஆயிட்ட? வழக்கமா நான் தான் சீக்கிரம் சூடாவேன், சொம்பு மாதிரி இருக்கற உனக்குள்ள ஒரு சிம்பு இருப்பான்னு நான் எதிர்பாக்கலை"

"யுவி, "அவளைப் பார்த்தாலே அப்படி ஆயிடறேன், சரி அவளை விடு. அடுத்தது யாரு?"

ஸ்ரீ, "கிம் ஷர்மா?"

"அவ எவனோ ஆப்பிரிக்கக்காரனோட குடும்பம் நடத்தறா. "

"உன்னோட இப்பத்தைய கேர்ல்பிரெண்ட் ஆஞ்சல்?"

"அவ சும்மா டைம் பாஸ்,

"டைம் பாஸா?"

"அவ என்னை டைம் பாஸுக்குன்னு வெச்சிருக்கா, எப்போ என்னை கழட்டி விட்டுட்டு அந்தத் தொழிலதிபர் பின்னாடி போகப் போறாளோ!"



"கிரேஸ், மினிஷா, இவங்கள்ல யாரையாச்சும் பாப்போமா?"

கிரேஸ் மறுபடியும் அந்த வீணாப்போன விவேக் ஓபராயோட சுத்தறதா கேள்விப்பட்டேன். மினிஷா சரியான தெத்துப்பல்லி"

ஸ்ரீசாந்த் யோசிக்கிறார்...

யுவி, "யாராச்சும் புதுசா சொல்லுடா? Homely , family , Simply "

நார்த் முழுக்க நாறிட்ட போலிருக்கு, சவுத் இந்தியா ஓகேவா?'



"யாரு யாரு, மீரா ஜாஸ்மினா?"

அட நாயே, பேரைக் கூட தெரிஞ்சு வெச்சிருக்க. ஆனால் அது வேண்டாம்பா"

"ஏன்?"

"ஏன்னா, நானும் அவளும்..."

"அடப்பாவி, சரி, த்ரிஷா?"

"நீ சிக்சர் அடிச்சு சம்பாதிக்கறதை அவ breezer அடிச்சே காலி பண்ணிடுவா. உனக்கு ஒரு கட்டிங் கூட கிடைக்காது"

"நயன்தாரா?"

"அதுக்கு நீ மூக்கு நுனி கால் கட்டை விரலைத் தொடற மாதிரி வளைஞ்சு டான்ஸ் ஆடணும், முடியுமா?"

"ம்ஹும், தொப்பை நிஜமாவே பிதுங்கி கீழே விழுந்துடும். அனுஷ்கா?"

"நல்ல மாதிரி தான். ஆனா ஏகப்பட்ட கிராக்கி"

"வேற யாருமே இல்லையா?"

"ஒரு குடும்பக் குத்து விளக்கு ஒண்ணு இருக்கு, ஓகேவா?"

"டபுள் ஓகே"

Over to Chennai.



நடிகை ஸ்னேஹாவின் தாயார் இருவரையும் வரவேற்று அமரச் செய்கிறார். சிரித்த முகத்துடன் ஸ்னேஹா என்ட்ரீ ஆகிறார்.

யுவி, "டேய் ஸ்ரீ, இவ்ளோ நாள் இவ எப்படி என் கண்ல படாம இருந்தா?"

ஸ்ரீ, "நீ போற பார் பப் இங்கெல்லாம் இவங்க வர மாட்டாங்க, அதனால தான்"

ஸ்னேஹா, "வாங்க வாங்க, என்னால நம்பவே முடியல, நீங்க எவ்ளோ பெரிய கிரிக்கெட் ஸ்டார், எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க!! என்ன சாப்பிடறீங்க?"

ஸ்ரீ, "ஆஷிர்வாத் மாவுல செஞ்ச ரொட்டியும், குலாப் ஜாமூனும் கொண்டு வாங்க"

ஸ்னேஹா சிரித்துக்கொண்டே, "பரவாயில்லையே, இதெல்லாம் நோட் பண்ணியிருக்கீங்களே?"

"பிகர்னு வந்துட்டா நாங்க எல்லாத்தையும் நோட் பண்றது வழக்கம்"

ஸ்னேஹா, "சரி என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

யுவி, "நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லலை, உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு சந்தோஷமா இருக்கு"

ஸ்னேஹாவின் அம்மா டென்ஷன் ஆகவே, "அம்மா, நீங்க உள்ள போங்க, நான் பேசிக்கறேன்"

ஸ்னேஹா "எந்த அடிப்படையில உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு எதிர்பாக்கறீங்க?"

யுவி, "என்னங்க, தெரியாத மாதிரி கேக்கறீங்க? இந்தியன் டீமுக்காக விளையாடறேன், நல்லா சம்பாதிக்கறேன், ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லாப் போயிக்கிட்டிருக்கு. கொஞ்சம் அப்படி இப்படி பொண்ணுங்களோட ஊர் சுத்தறதா செய்திகள் வந்திருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் அதெல்லாம் சுத்தமா கட் பண்ணிடுவேங்க. நான் குடிக்கற பீர் மேல சத்தியம். வேறென்ன எதிர்பாக்கறீங்க?"

"நீங்க சொன்ன எல்லாம் சரி, ஆனா இந்தியன் டீமுக்காக ஆடறேன்னு சொன்னது தப்பு. டீமுக்காக ஆடறவனா இருந்தா இங்கிலாந்து டூர்ல சுண்டு விரல்ல அடிபட்டிடுச்சுன்னு சொல்லி திரும்பி ஓடி வருவியா?

"அந்த டூர்ல நிறைய பேருக்கு அடிபட்டுதே!. கிரிக்கெட்ல அதெல்லாம் சகஜம்"

"என்னால அப்படி எடுத்துக்க முடியாது. நீங்க ஒரு பஞ்சாபியாச்சே, தைரியமா நின்னு போராட வேண்டாம்?, அதை விட்டுட்டு கோழை மாதிரி பாதியிலேயே திரும்பி வந்துட்டியே? இந்தியாவுல ஆடும்போது மட்டும் அந்த குதி குதிக்கறே, உன் பவுசு எல்லாம் உள்ளூர்ல தானா? வெளிய போனா உன் பருப்பு வேகாதா?"

"வேர்ல்ட் கப்ல நான் எல்லா மேட்சும் நல்லா ஆடினேனே?"

"உன்னால தான் வேர்ல்ட் கப் ஜெயிச்சோம்னு சொல்ல வர்றியா? உனக்கு இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?'

"அப்படியில்ல...."

"நீ ஆடற IPL டீமும் ஒரு வெத்துவேட்டு டீம். உன் தாய் மண்ணான பஞ்சாப் டீமை விட்டுட்டு வட இந்தியர்களை ஓட ஓட விரட்டற மகாராஷ்டிரா டீம்ல பொய் சேர்ந்திருக்கே"

"அது தொழில், இது வாழ்க்கை"

"எனக்கு ரெண்டும் ஒண்ணு தான். உயிருக்கு உயிரா பழகின கிம் ஷர்மாவை உங்கம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக கழட்டி விட்டுட்டியே, நானும் சினிமாக்காரி தான், நாளைக்கு உங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு என்னையும் நடுத்தெருவுல நிறுத்தமட்டேன்னு என்ன நிச்சயம்?"

யுவி மௌனமாகவே, ஸ்ரீ "மேடம், இன்னும் எதாச்சும் பாக்கி இருக்கா?"

ஸ்ரீ, யுவியைப் பார்த்து, "யப்பா, நீ ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் தான் அடிச்சே, இவங்க அறுபது சிக்ஸ் அடிப்பாங்க போலிருக்கு, உனக்கு பால் போட்ட ஸ்டுவர்ட் பிராட் மாதிரி ஆயிடுச்சே உன் நிலைமை! வா கிளம்புவோம்"

வெளியே வந்தவுடன் யுவி, "என்ன ஸ்ரீ, குத்து விளக்குன்னு சொன்னே, இப்படி குடைஞ்சிட்டாங்க!"

"அதான் ஒரிஜினல் குத்து விளக்கு, குத்துற குத்துல எங்க எரியும்னு உனக்கே தெரியாது. பட் ஒண்ணும் பீல் பண்ணாதே, நம்பிக்கையே வாழ்க்கை"

யுவி, "சேச்சே, இதைவிட கேவலமா எல்லாம் திட்டியிருக்காங்க. ஆனாலும் அவங்க எனக்கு ஒரு நல்ல ஹின்ட் குடுத்திருக்காங்க"

"என்ன அது?"

"தாய் மண், பஞ்சாப் டீம்.."

"புரியலையே?"

"ப்ரீத்தி ஜின்டாடா"

ஸ்ரீ "அட்றா சக்கை, அட்றா சக்கை, அட்றா சக்கை. எனக்கு இப்பவே டான்ஸ் ஆடணும் போல தோணுதே!"

யுவி, "நான் போய் கேட்டு அவ முடியாதுன்னு சொல்லிட்டா? அந்த வாடியா வேற இருப்பானே?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. அவளும் உன் நினைவாத்தான் இருப்பான்னு எனக்குள்ள பட்சி சொல்லுது, நீ பார்த்தாலே போதும்"

"அப்படியா? இப்பவே போறேன்" வண்டியில் ஏறி சடாரெனக் கிளப்பிக் கொண்டு பறக்கிறார்.

ஸ்ரீ, "இவனாச்சும் வித்யாசமா இருப்பான்னு நினைச்சேன், இவனும் பிகர் கிடச்ச உடனே பிரெண்டை கட் பண்றவன் தான் போலிருக்கு"

யுவி சென்று ப்ரீத்தியைப் பார்க்கிறார். அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள். இதற்கு மேல் வார்த்தைகள் தேவையில்லை...





Jayaraman
New Delhi


(This article is 100% imaginery one)

3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...