Thursday, December 29, 2011

தோனியின் ராஜவேட்டை: இந்தியாவின் ஆஸ்திரேலியப் படையெடுப்பு (பாகம் 2)


வேதனை... அவமானம்.... வெட்கம்!

இப்படித்தானே நீங்க இப்ப பீல் பண்ணிக்கிட்டிருப்பீங்க? இப்பவே அடுத்த மேட்சுக்கு இவரை எடுக்கணும் அவரை தூக்கணும்னு எங்களை விட ஜாஸ்தியா கவலைப் பட்டுண்டிருப்பீங்களே? உங்க ஆராய்ச்சிக்குள்ள நான் வர விரும்பல. ஏன்னா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பீல்ட்ல எவன் இறங்குவான்றது தமிழ்நாட்டுல புயல் வர்ற மாதிரி. சென்னையைத் தாக்கப் போவுதுன்னு சொல்லுவாங்க. ஆனா நாகப்பட்டினம் போயிடும். இருந்தாலும் சில விஷயங்களை உங்ககிட்ட சொல்லியே ஆகணும்.

250க்கு மேல லீட் போயிட்டா இந்தியர்களால ஜெயிக்க முடியாதுன்னு பான்டிங் பேட்டியில சொன்னப்போ உங்களை மாதிரியே எனக்கும் ரத்தம் கொதிச்சுது. ரெண்டு நாள் கையில இருக்கு. இருநூறு முன்னூறு ரன்கள் அசால்ட்டா அடிக்கற பேட்ஸ்மேன்கள் நம்ம கிட்ட இருக்காங்க. 292ல்லாம் ஒரு ஸ்கோரா - அப்படித்தாங்க நாங்களும் நம்பிக்கையா இருந்தோம். ஆனா பாருங்க, மெகா சொதப்பலாயிடுச்சு. சரி விடுங்க, வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்.

"எங்க ஏரியா, உள்ளே வராதே" - எல்லாரும் அவங்கவங்க ஊர்ல நல்லாவே ஸீன் போடறாங்க. வீட்ல புலி வெளியில எலின்றது எழுதப்படாத விதி ஆயிடுச்சு. இதே ஆஸ்திரேலியா கொஞ்ச நாள் முன்னாடி சவுத் ஆப்ரிக்கா கிட்ட ஒரு டெஸ்ட் மேட்ச்ல தடவினதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவ்வளவு ஏன், போன வருஷம் இவங்க இந்தியா வந்தப்போ நம்ம கிட்ட அடி வாங்கினதை வரலாறு தெரிந்தவர்கள் நன்றாக அறிவர். அறிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. அறியாதவர்களுக்கு சொல்லிப் பயனில்லை (ஐயோ, கலைஞர் அறிக்கை மாதிரி இருக்கே!)

கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டு. அதுல சூரியன், சந்திரன், நட்சத்திரம்னு யாரும் கிடையாது - மெல்போர்ன் தோல்வி இதை மறுபடியும் நிரூபிக்குது. கோஹ்லி மாதிரி இள ரத்தமும், லக்ஷ்மன் மாதிரி அனுபவசாலிகளும் சரி சமமா சொதப்பறாங்கஅஷ்வின் ரெண்டு இன்னிங்க்சிலும் 30 ரன் அடிச்சிருக்கார். இஷாந்த் ஷர்மா சும்மா கன் மாதிரி நின்னு 70 பால் face பண்ணியிருக்கான். இவங்களால ஒரு பத்து ரன் கூட அடிக்க முடியலை - நியாயமான வாதம். மேல சொன்னது தான் இதுக்கு சரியான பதிலா இருக்கும். எல்லாரும் விளையாடினாத் தான் ஜெயிக்க முடியும். ஒன் மேன் ஷோ கதைக்கு உதவாது.

வழக்கம் போல நானும் சரியா ஆடலை. ஆங்கில நாடுன்னாலே பேட் ஒரு ஆங்கிள்ல போவுது - அடுத்த வருஷமாவது ஒழுங்கா ஆடணும்

நான் பேட்டியில சொன்ன மாதிரி நம்ம ஆரம்பம் எப்பவுமே கொஞ்சம் சிக்கலாத் தான் இருக்கும். ஆனா கண்டிப்பா இங்கிலாந்து டூரோட ரெண்டாம் பாகம் மாதிரி இந்த டூர் இருக்காதுன்னு திடமா நம்பறேன் - நம்பிக்கை, அதானே எல்லாம்!! (சத்தியமா கல்யாண் ஜுவல்லர்ஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை)

வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆன பிறகு நம்ம டீம் மேல எதிர்பார்ப்பு ரொம்ப எகிறியிருக்கு. அந்த கோப்பைக்கு நாம நிஜமாவே தகுதியானவங்க தான் அப்படின்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல ஆளாகியிருக்கோம்.வழக்கமா ஒரு டீம்ல நாலு பேர் நல்லா ஆடினா யாரை எடுக்கறதுன்னு குழப்பம் வரும். இங்க என்னடான்னா எவனை எடுத்தாலும் குளறுபடி பண்றான். இப்போ கோஹ்லி நல்லா ஆடலைன்னு அவனை அடுத்த டெஸ்ட் உட்கார வெச்சிட்டு வேற யாரையாச்சும் எடுத்தா "ஒரு மேட்ச்ல ஆடினதை வெச்சிக்கிட்டு நீங்க எப்படி அவரை ஜட்ஜ் பண்றீங்க? அவருக்கு இன்னொரு வாய்ப்பு குடுங்க"ன்னு சொல்லுவாங்க. ரெண்டாவது டெஸ்ட்ல கோஹ்லி ஆடிட்டா பரவால்ல. இல்லேன்னா "ரோஹித் இருக்கும்போது மறுபடியும் ஏம்பா கோஹ்லிய எடுத்தாங்க, பாலிடிக்ஸ் பண்றாங்க" அப்படின்னு இன்னொரு க்ரூப் சொல்லும்.இந்தத் தோல்வி சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட ஒரு அலாரம். டிராவிட், லக்ஷ்மன், சச்சினுக்கு அப்புறம் நாம் இன்னும் ஒரு நம்பிக்கையான டெஸ்ட் பிளேயரைக் கூட உருவாக்கலைன்னு தெளிவாத் தெரியுது - இவங்க மூணு பேர் இல்லாம ஒரு டெஸ்ட் விளையாடிப் பாக்கணும் (நினைச்சுப் பார்க்கவே திகிலா இருக்குல்ல?).

சுருக்கமாச் சொன்னா, இந்த அக்நீபத் சீரீஸ் இந்தியன் டீமுக்கு ஒரு அக்னிப் பரீட்சை. இதுல ஜெயிச்சு வெளிய வரப்போறோமா, இல்லை பஸ்மம் ஆகப் போறோமா - இனி வரும் நாட்கள் தான் பதில் சொல்லும்.

எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி - "இந்தியன் டீம் வெளிய பாக்கறதுக்கு Gross Salary மாதிரி பிரமாதமா இருக்கு. பீல்ட்ல இறங்கும்போது Net Salary மாதிரி சுருங்கிடுது" - இது உண்மையாயிடுச்சுன்னா அதை விட அசிங்கம் வேற எதுவும் இல்லை.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அடுத்து, சிட்னில டிக்கிலோனா!!

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...