Thursday, December 8, 2011

சூப்பர் ஸ்டார்: 62ல் 26 - பிறந்த நாள் ஸ்பெஷல் (பாகம் 1)



சென்னை - பெங்களூரு ஹைவே.

அலுவலக விஷயமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தோம். இளைப்பாறுவதற்காக ஒரு டாபாவில் வண்டியை நிறுத்திவிட்டு டீ மற்றும் பக்கோடாவுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தோம். இரண்டு பெஞ்சு தள்ளி ஒருவர் மிகவும் நிதானமாக, ஸ்டைலாக டீ அருந்திக் கொண்டிருப்பதை கவனித்தோம். வயதான தோற்றம் ஆனால் வசீகரப் பார்வை. மிகவும் பரிச்சயமானவர் போலத் தோன்றவே உற்று நோக்கினோம். அட... நம்ம சூப்பர் ஸ்டார். உடனே அவர் அருகே சென்று "என்ன சார், நீங்க எப்படி இங்க? கனவு மாதிரி இருக்கு சார்"

தனக்கே உரித்தான புன்முறுவலுடன், "பிரெண்ட்ஸ், சத்தம் போடாதீங்க, அப்புறம் கூட்டம் கூடிடும். வெளியே என் வண்டி பக்கத்துல போய் நில்லுங்க. அங்கே பேசுவோம்".

தலைவர் பேச்சை தட்ட முடியுமா? காரை நோக்கி நகர்ந்தோம்.

அவர் டீ குடித்து முடித்தவுடன் கடைப் பையன் க்ளாசை எடுக்க வந்தான். அவனைப் பார்த்து, "என்னடா, படிக்கறியா இல்லை முழு நேரமும் இங்கயே வேலை செய்யறியா?"

அந்தப் பையன், "இங்கே சாயந்திரம் தான் வேலை செய்யறேன். நீங்க சொன்ன மாதிரி காலையில பள்ளிக்கூடம் தான் சார் போறேன்,"

ரஜினி, 'வெரி குட். லக்ஷ்மி தேவை. ஆனா அதைப் பாதுகாக்க சரஸ்வதி ரொம்ப முக்கியம். புரிஞ்சுதா!"

அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவர் யாரிடமோ பதற்றமாக போனில் பேசுவதை கவனித்தோம். விசாரித்ததில் அவர் குடும்பத்தில் யாருக்கோ உடம்பு சரியில்லையென்றும் அவர் உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றும் அறிந்தோம். ஒரு பக்கம் டிரைவர், இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் - என்ன செய்வது என்று யோசித்துகொண்டிருந்த போது தலைவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் எங்கள் மூவரையும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். பிறகு, "என்ன எதாச்சும் பிரச்சினையா? சொல்லுங்க, முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்" என்றார். அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். சற்றும் தயங்காமல் "நான் பெங்களூர் தான் போறேன். நீங்க வேணும்னா என் கூடவே வாங்களேன், உங்களை மாதிரி யூத் கூட பேசினா எனக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்க டிரைவர் அவர் வீட்டுக்குப் போகட்டும் - என்ன சொல்றீங்க?"

அவனவன் தலைவரைப் பாக்கறதுக்கு வீட்டு வாசலில் தவம் இருக்கான், கரும்பு தின்னக் கூலியா? உடனே தலையாட்டினோம். பேச்சு காரினுள் தொடர்கிறது. அவரே ஆரம்பித்தார்.

"நீங்க என்ன பண்றீங்க?"

நாம், "முழுநேரமா கிரேசி கிரிக்கெட் லவ்வர்னு ஒரு ப்ளாக்ல கிரிக்கெட் மற்றும் பல விஷயங்களைப் பத்தி அப்பப்போ எதாச்சும் எழுதுவோம். பகுதி நேரமா ஒரு கம்பெனியில வேலை பாக்கறோம்.

ரஜினி, "ஒஹ்! நானும் சச்சினும் சந்திக்கற மாதிரி ஒரு ஆர்டிகிள் எழுதினீங்களே, அதுவா?"

"நீங்க படிச்சிருக்கீங்களா?"

"முழுசா படிக்க முடியல, பட் சத்யா எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி வெச்சிருக்கார். இட் வாஸ் குட். அப்பப்போ இதோ, (ஐபேடைக் காட்டுகிறார்) இதுல ஸ்டோர் பண்ணி வெச்சிடுவான். எப்போ டைம் கிடைக்குதோ படிப்பேன்.

"நீங்க நிஜமாவே லேட்டஸ்ட் தான் சார்"

"ஐயோ அதெல்லாம் இல்லை. பட் இது ஆபரேட் பண்றது எப்படின்னு என் பேரன் தான் எனக்கு சொல்லித் தரான். ஹி இஸ் தி லேட்டஸ்ட்"

"இப்போ நீங்க முழுசா குணமாயிட்டீங்களா சார்? நீங்க ஆஸ்பத்திரியில இருக்கறப்போ என்னல்லாமோ வதந்தி SMS அனுப்பிச்சு கலவரம் பண்ணிட்டாங்க"

சிரித்துக் கொண்டே, "யா, அது ரொம்ப funny. In fact, நான் செத்துப் போயிட்டேன்னு எனக்கே ஒருத்தர் மெசெஜ் அனுப்பியிருந்தார், இது எப்படி இருக்கு? ஹஹஹா." அவரது ஸ்டைலான சிரிப்புக்குப் பிறகு அவரே தொடர்கிறார்.



"ஜோக்ஸ் அபார்ட், எந்திரன் வெற்றிக்கு வைத்த திருஷ்டிப் பொட்டுன்னு தான் அதை எடுத்துக்கணும். பட் இப்போ நான் முழுசா fit ஆயிட்டேன். கோச்சடையான்ல ரெண்டு மூணு ஹீரோயின் இருந்தாக் கூட டூயட் பாட நான் ரெடி. ஹஹஹா" - மீண்டும் அதே ஸ்டைல் சிரிப்பு.

உங்ககிட்ட நிறைய விஷயங்களைப் பற்றிக் கேக்கணும். கேக்கலாமா?

"ஷ்யூர் ஷ்யூர்"

ராணா ஏன் சார் டிராப் பண்ணிட்டீங்க?"

"சிறிது நேரம் யோசிக்கிறார். பிறகு தொடர்கிறார் "சொல்லப் போனா அது கொஞ்சம் பெரிய கதை - ஹனுமான் வால் மாதிரி. ஆக்சுவலா சுல்தான் எவ்வளவோ பிரமாதமா எடுத்தும் திருப்தி இல்லை. டயத்துக்கு முடியாம ரொம்ப இழுத்தடிச்சிடிச்சு. ரொம்ப கேப் விழுந்திடுமோன்னு நினைச்சு ராணா ஆரம்பிச்சோம். பட் முதல் நாளே எனக்கு உடம்பு சரியில்லாம போய், - உங்களுக்குத் தான் மீதிக்கதை தெரியுமே? அப்புறம், சிங்கப்பூர்ல நான் இருக்கும்போது ஒரு நாள் ரவி போன் பண்ணினார். "என்ன சார், முதல் நாளே இப்படி ஆயிடுச்சு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து எவ்ளோ ஹிட் குடுத்திருக்கோம், எப்பவும் இப்படி ஆனதில்ல, இது ஏதோ கடவுள் நமக்கு குடுக்கற எச்சரிக்கை மணி மாதிரி இருக்கு, நாம் இதை ஓரமா வெச்சுட்டு வேற ஒரு கதை பண்ணினா என்ன" அப்படின்னு சொன்னாரு. எனக்கு அது சரின்னு பட்டிச்சு. நீங்க ரெடி பண்ணி வைங்க. நான் வந்ததும் ஒரு ரஷ் பார்த்துட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொன்னேன். சென்னை வந்த பிறகு ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். கோச்சடையான் வொர்க் அவுட் ஆகும்னு கான்பிடென்ட்டா தோணிச்சு. ஸ்டார்ட் பண்ணிட்டோம். பட் ஆண்டவன் ஆசீர்வாதத்தோட ராணா கண்டிப்பா வரும்"

"எங்களுக்கென்னமோ அந்த தீபிகா படுகோனே ராசி சரியில்லையோன்னு தோணுது சார். பாருங்களேன், யுவராஜ் கூட சுத்தினாங்க, அவர் அழிஞ்சு போயிட்டார், ஹிந்தி நடிகர் ரன்பீர் கூட இருந்தாங்க. அவரும் ஏறக்குறைய அழியற மாதிரி ஆயிட்டார். அப்புறம் சித்தார்த் மால்யா கூட சேர்ந்தாங்க, கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் கடன்ல மூழ்கிடுச்சு. இப்போ ராணாவுல உங்க கூட அவங்க நடிக்கறதா இருந்திச்சு, நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிட்டீங்க. பார்த்து சார், ஜாக்கிரதையா இருங்க"

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, "இந்த மாதிரி நீங்க பேசலாம், நான் பேச முடியாது. அதுவுமில்லாம நல்ல நேரம் கெட்ட நேரம்னு எல்லாருக்கும் அவன் (வானை நோக்கி கை காட்டுகிறார்) டைம் டேபிள் போட்டு வெச்சிருக்கான். அது இவரால வந்திச்சு அவரால வந்திச்சுன்னு சொல்றதெல்லாம் சரியில்ல. மனுஷன் வெறும் கருவி தானே. சுவிட்ச் அவர் (கை மறுபடியும் மேலே) கையில இருக்கு"


"சரியா சொன்னீங்க சார். சரி சார், இப்போ தமிழ் சினிமா எப்படி இருக்குன்னு நினைக்கறீங்க?"

"ரொம்ப நல்லா இருக்கு. நிறைய நியூ faces, நியூ டைரக்டர்ஸ், ஸ்டோரி,..... நல்லாருக்கு. மைனா, ஆடுகளம், இப்போ ஏழாம் அறிவு - சந்தோஷமா இருக்கு"

"உங்களுக்கு அந்த மாதிரி எளிமையான படம் பண்ணனும்னு ஆசை இருக்கா சார்?"

"நிறைய இருக்கு, ஆனா எப்போன்னு தெரியல"

"இது எல்லாரும் கேக்கற கேள்வி தான். உங்களுக்கப்புறம் அடுத்த சூப்பர் ஸ்டார்னு நீங்க யாரை சார் நினைக்கறீங்க?"

"அதெல்லாம் மக்கள் நம்ம மேல இருக்கற அன்புல குடுக்கறது. வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது, போனாலும் தடுக்க முடியாது"

"சரி, கமலுக்கு அடுத்தபடியா யார் இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?"

"அதை கமல்ஜி தான் சொல்லணும். ஹஹஹா"

"இருந்தாலும் ஒரு சின்ன கெஸ்ஸ், சூர்யா, விக்ரம்..?

"ஸீ, சூர்யா விக்ரம் இவங்கல்லாம் அழகான எழுத்து, ஐ மீன் வேர்ட்ஸ். பட் கமல் வந்து.... என்ன சொல்றது...ஒரு டிக்ஷனரி மாதிரி. இந்த எல்லா எழுத்தும் அந்த டிக்ஷனரிக்குள்ள நீங்க பாக்கலாம். பட் நீங்க அவர்கிட்ட இந்த கேள்வி கேட்டீங்கன்னா அவர் சிவாஜியை டிக்ஷனரின்னு சொல்வார். தட் இஸ் கமல்"

முதல்லயே கேக்கணும்னு நினைச்சோம், நீங்க எப்படி சார் இந்தப் பக்கம்? பெங்களூருல கோச்சடையான் ஷூட்டிங்கா?"

"இல்ல, ஸ்டோரி டிஸ்கஷன்."

"படம் எப்படி சார் வந்துக்கிட்டிருக்கு?"

" இன்னும் முழு ஸ்கிரிப்ட் ரெடி ஆகல. பட் கான்செப்ட் நல்லா டெவெலப் ஆகியிருக்கு. நிறைய டெக்னிகல் விஷயங்கள் இருக்கறதால டைரக்டர் ஷங்கர் கிட்ட கூட நான் இதைப் பத்திப் பேசினேன். பிகாஸ் ஹி இஸ் வெரி குட் அட் இட் யு நோ. ரொம்ப பிரமாதமா இருக்கு சார். எந்திரன் பார்ட் 2 மாதிரியே இருக்குன்னு சொன்னார். ஐ ஆம் ஹாப்பி."



"எந்த மாதிரி கதையா இருக்கும் சார்?"

"எந்த மாதிரியா இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?"

"வித்யாசமா, வெரைட்டியா, லேட்டஸ்டா.."

"எல்லாமே உண்டு. லேட்டஸ்டா இருக்கும். ஆனா லேட் ஆகாது. "

"3Dல எடுக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?"

அதான் சொன்னேனே, லேட்டஸ்டா இருக்கும்னு, சினிமா நிறைய வளர்ந்திடுச்சு. முன்னாடி மாதிரி பூஜை போட்டோம், ஏவிஎம் இல்லேன்னா விஜயா ஸ்டூடியோவுல செட் போட்டோம்னு எடுக்கற சமாச்சாரம் இல்லை. சினிமா ஒரு டெக்னாலஜி மாதிரி ஆயிடுச்சு.

"இருந்தாலும் கதை ஒன் லைன் சொல்ல முடியுமா?

"சொல்லிட்டாப் போச்சு"

சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வரி..... அடுத்த வாரம்.

Jayaraman
New Delhi

2 comments:

  1. What a writer you are. Chaceless.

    ReplyDelete
  2. thanks Arul, please share it with your friends as good things need to be shared!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...