Thursday, December 15, 2011
சூப்பர் ஸ்டார்: 62ல் 26 - பிறந்த நாள் ஸ்பெஷல் (பாகம் 2)
தலைவருடனான நமது பெங்களூரு பயணம் தொடர்கிறது...
தலைவர், "புராணம் இதிகாசம் தொடங்கி இன்னிக்கு இருக்கற மாடர்ன் உலகம் வரைக்கும் எப்பவுமே இருக்கற ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வி "அறிவா இல்லே மனசா?, அஞ்ஞானமா இல்லே விஞ்ஞானமா? மனுஷனா இல்லே கடவுளா?" இதை பேஸ் பண்ணித் தான் கோச்சடையான் இருக்கப்போவுது”
நாம் சற்றே குழம்பிய நிலையில், "என்ன சார், இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க?"
"நீங்க ஒன் லைன் தானே கேட்டீங்க, அதான் சொன்னேன். See, இது ஒரு பிரம்மாண்டமான படம். எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டா அப்புறம் படம் பாக்கற இன்டெரெஸ்ட் போயிடும்"
"ஓகே சார்"
தலைவர், "அது சரி, இந்தப் படம் பத்திக் கேள்விப்பட்டதும் உங்களுக்கென்ன தோணிச்சு?"
"கிட்டத்தட்ட நீங்க சொன்ன மாதிரி தான். பட் இன்னும் நிறைய கற்பனை பண்ணியிருந்தோம்"
"எப்படி? கொஞ்சம் சொல்லுங்க"
"ஒரு பொக்கிஷம். ஆனா அதோட மதிப்பும் ஆபத்தும் தெரியாமலேயே ஒரு குடும்பம் அதை பாதுகாத்துக்கிட்டு வராங்க.அந்தப் பொக்கிஷத்தோட மதிப்பு தெரிஞ்ச, அதை வியாபாரமாக்கத் துடிக்கற ஒரு அறிவியல் க்ரூப்பும், அதோட வரலாறும் ஆபத்தும் தெரிஞ்ச ஒரு மாந்த்ரீக க்ரூப்பும் அந்தக் குடும்பத்துக்குள்ள கலக்கறாங்க. அதனால ஏற்படற திருப்பங்கள், பிரச்சினைகள் ஒரு பக்கம். இதுக்கு நடுவுல அந்தப் பொக்கிஷத்தையும் அந்தக் குடும்பத்தையும் ஒரு மாய மனிதன் சரியான நேரத்துல அப்பப்போ வந்து காக்கறார். ஒரு பிரம்மாண்டமான க்ளைமாக்ஸ். ஆனாலும் அந்தப் பொக்கிஷத்தை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்தாத்தான் அதோட ஆபத்து குறையும் - இங்கேர்ந்து ராணாவுக்கு லீட் எடுக்கலாம். அந்த மாய மனிதன், அறிவியல் க்ரூப், மாந்த்ரீக க்ரூப், அந்த அப்பாவிக் குடும்பம் - இதெல்லாம் பிளாஷ்பேக் மாதிரி வரிசையாக் காட்டாம முன்னும் பின்னுமாக் காட்டலாம்.
தலைவர், "நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் டெவெலப் பண்ணினா நல்லா வரும் போலிருக்கே, ரவி கிட்ட பேசறேன்"
“அந்த மாய மனிதன் தான் கோச்சடையான். அவருக்கும் ராணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு ஹிஸ்டாரிக் ட்ராக்ல மெயின் கதைக்கு இணையா கொண்டு போகலாம். கிட்டத்தட்ட மூணு கதை இணையா போவும் இந்தப் படத்துல. தமிழ சினிமாவுல யாரும் பண்ணாதது. இது வரைக்கும் வந்ததெல்லாம் மூணு கதையை ஒரு புள்ளியில இணைப்பாங்க. ஆனா எல்லாக் கதையம் தனித்தனியாத் தான் வரும். நம்ம சொல்றது கொஞ்சம் வித்யாசமா இருக்கும்"
"இண்டரெஸ்டிங், கண்டிப்பா ரவி கிட்ட பேசறேன்" அதற்குள் தலைவர் போன் ஒலிக்கிறது. காலர் டியூனாக தனுஷின் கொலைவெறி.
"ரவி, சொல்லுங்க, வந்துக்கிட்டே இருக்கேன், btw , வழியில சில புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. நமக்கு சில நல்ல பாயின்ட்சும் கிடைச்சிருக்கு. வி வில் டிஸ்கஸ்"
அவர் போன் பேசி முடித்ததும் நாம், "நீங்களும் கொலைவெறி ரசிகராயிட்டீங்களா?"
"ஐயோ அதை ஏன் கேக்கறீங்க, ரொம்ப நாள் கழிச்சு நான் ஒரு பாட்டை மறுபடி மறுபடி கேக்கறேன். தனுஷ்னால இல்லை, நிஜமாவே நல்ல சாங். வேர்ல்ட் பூரா பாப்புலராயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்"
"ஆமாம் சார். முதல்ல சாதாரணமாத் தான் ஸ்ப்ரெட் ஆச்சு. ஆனா தனுஷ் உங்க மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச பிறகு உங்களை மாதிரியே புல் ஸ்பீட்ல பரவிடுச்சு"
சிறிய வெட்கத்துடன், "எல்லாம் God's கிரேஸ்"
நாம் இறங்கும் இடம் வருவது தெரிந்தது. "நாங்க இறங்க வேண்டிய இடம் வரப்போவுது. கடைசியா ஒரு கேள்வி, இன்றைய தேதியில வாழ்க்கைன்னா என்ன சார்?"
"பெரிய பெரிய மகான்கள், ஆச்சார்யாக்கள் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. என்கிட்டே கேக்கறீங்களே?"
"கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நீங்க தான் சார் குரு. அதுவுமில்லாம அவங்க சொல்றது புரியாது. நீங்க சொல்றது புரியும்"
வழக்கமான யோசனைக்குப் பிறகு, " இன்னிக்கு, வாழ்க்கைன்னா, பீக் ட்ராபிக்ல கார் ஓட்டற மாதிரி. ரொம்ப ரிஸ்கி அண்ட் சாலெஞ்ஜிங். நீங்க ஒரு நல்ல டிரைவரா இருக்கணும், ரூல்ஸ் தெரிஞ்சிருக்கணும் - அதாவது ஆன்மா, புத்தி ரெண்டும் கிளீனா இருக்கணும். அப்புறம் வண்டி, அதாவது உங்க உடம்பு நல்ல கண்டீஷன்ல வெச்சுக்கணும் - மெயின்டைன் பண்ணி, தொடச்சு, ஆயில் போட்டு, சும்மா கன் மாதிரி. நீங்க ஓட்டும்போது பின்னாடிலேர்ந்து யாராச்சும் உங்க மேல மோதுவாங்க, ரோடு சரியிருக்காது, இல்லேன்னா உங்களுக்கு வழி தெரியாது - அதான் உங்க வாழ்க்கையில நடக்கற எதிர்பாராத சம்பவங்கள். அந்த மாதிரி நேரங்கள்ல தான் ஸ்டெடியா, நிலைகுலைஞ்சு போகாம பிரச்சினையை சமாளிச்சு, நாம் போக வேண்டிய இடத்துக்கு கரெக்டாப் போகணும். பென்ஸ்ல போறவன் பெரிய ஆள், மாருதில போறவன் சின்ன ஆள் - இதெல்லாம் நம்மளை நாமே அழிச்சிக்க உருவாக்கினது. கார் எதுவா இருந்தாலும் டயர்ல காத்தும் டாங்கில பெட்ரோலும் இருக்கற வரைக்கும் தான் மதிப்பு. இந்த உண்மையை நாம அடிக்கடி மறந்துடறோம். அது தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். எப்படியாவது சீக்கிரம் முன்னுக்குப் போயிடணும்னு சில பேர் போவாங்க. அவங்களை ட்ராபிக் இன்ஸ்பெக்டர், ஐ மீன் கடவுள் பாத்துப்பாரு."
எங்களை இறக்கி விட்டுவிட்டு சூப்பர் ஸ்டாரின் கார் விரைந்தது. இறங்கிய பிறகு தான் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மறந்து விட்டோம் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால் அவரை வாழ்த்த நமக்கு வயதில்லை, அவரை வணங்கினால் அவரை அன்னியப்படுத்துவது போல் ஆகிவிடும்.
"தலைவா" என்று வாய் அவரை அழைத்தாலும் மனம் அவரை ஒரு நண்பர் ஸ்தானத்தில் தான் வைத்திருகிறது. இப்பவும் துருதுருன்னு எனர்ஜெடிக்கா இருக்கறவரை எப்படிங்க பெரிசுன்னு சொல்ல முடியும்??
பின் குறிப்பு:
தலைவரின் அடுத்த வருட பிறந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதிலிருந்தே உற்சாகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. சும்மாவா? 12 -12 -12 ஆச்சே!!!
Jayaraman
New Delhi
Labels:
Jai's Comedy Bazaar,
Superstar Rajnikanth
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment