Wednesday, August 15, 2012

கிலிம்பிக்ஸ் - பகுதி 2


லண்டன் ஒலிம்பிக்ஸ் பார்க்கச் சென்ற நம் நட்ச்சத்திரப் பட்டாளம் அனுப்பிய இறுதி ரிபோர்ட் இதோ:


சீனாவா, லண்டனா என்று வித்யாசம் தெரியாத அளவுக்கு எங்க பார்த்தாலும் ஒரே சப்பை மூக்கர்கள் மயம்.

மெடல் வாங்கலேன்னா ஜெயிலில் களி திங்க வேண்டியது தான் என்று சீன அரசாங்கம் தனது வீரர்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும் மிரட்டி வருவதாகக் கேள்வி.

இவ்வளவு மக்கள் இருந்தும் இந்தியா ஏன் அதிக வீரர்களை அனுப்புவதில்லை என ஒரு வெளிநாட்டவர் எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்க ஊர் நகைக் கடையில் இதை விட அதிக தங்கமும் வெள்ளியும் செய்கூலி இல்லாமல் மிகக் குறைந்த சேதாரத்தில் கிடைப்பதால் எங்களுக்கு இந்த மெடல்களில் அவ்வளவாக நாட்டமில்லை என்று கூறி சமாளித்தோம். அது மட்டுமில்லை, எந்த விருதாக இருந்தாலும் நமக்கு அதை "வாங்கித்"தான் பழக்கம்.

எந்த நோக்கத்திற்காக ஒலிம்பிக் போட்டிகள் விளையாட ஆரம்பிச்சாங்களோ, அதுக்கு இன்னமும் தேவை இருக்கா? உலகத்தை ஆட்டிப் படைக்கிற சீனா, அமெரிக்கா மற்றும் சில குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள் தான் எப்பவும் முதல் பத்து இடங்களில் வர்றாங்க.

ஒலிம்பிக்கில் நிறைய மெடல்கள் ஜெயிக்கறதினால அந்த நாட்டுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுது? இந்தியாவை விட சின்னச் சின்ன ஆப்பரிக்க நாடுகள் நிறைய ஜெயிக்கறாங்க. அவங்களுக்கெல்லாம் எதாச்சும் சொல்லிக்கற மாதிரி நன்மை நடந்திருக்கா? குறைந்த பட்சம் உலக வங்கி கிட்ட வாங்கின கடனையாச்சும் தள்ளுபடி பண்ணியிருக்காங்களா?

இந்தியா 50 பேரை அனுப்பி ஆறு மெடல்கள் வாங்கியுள்ளது. சீனா 400 பேரை அனுப்பி 88 மெடல்கள் வாங்கியுள்ளது. ஆனால் நம்மூரில் இந்த ஆறு பேருக்குக் கிடைத்த பாராட்டும் பணமுடிப்பும் அந்த 88 பேரில் எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை.

ஒலிம்பிக்கில் பங்கு பெற வேண்டி நமது வீரர்கள் அலுவலகம் அலுவலகமாக ஓடுகின்றனர். அங்கே அதிகாரிகள் அவர்களைப் டேபிளுக்குட் டேபிள் பந்தாடுகின்றனர். பார்மாலிடீஸ் என்ற பெயரில் பல தடைகளை அவர்கள் தாண்ட வேண்டியிருக்கிறது. இப்படி பங்கு பெறுவதற்கு முன்னரே ஒரு மினி ஒலிம்பிக்ஸ் விளையாடி சோர்ந்து போய் விடுவதால் ஒலிம்பிக் போட்டியில் பின் தங்கி விடுகின்றனர்.

சொந்த செலவில் லண்டன் சென்று வாருங்கள், நாங்கள் பிறகு பணம் தருகிறோம் என்று இந்திய ஒலிம்பிக் பெடரேஷன் பல திறமைசாலிகளை தட்டிக் கழித்ததில் கொஞ்சமும் நியாயமில்லை.

ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் டிவியில் கூட பெருவாரியான மக்கள் பார்க்கவில்லை. என்ன செய்ய, தினசரி வாழ்க்கையே ஒரு தடகளமாகிவிட்ட நிலையில் இதை யார் பார்ப்பது?

"குண்டு" எறிதல் போட்டியில் பாகிஸ்தான் பங்கு கொள்ளாதது ஆச்சர்யமே. ஒரு வேளை அவர்களின் திறமை வேறு குண்டில் மட்டும் தானா?

அடுத்த முறை பளு தூக்கும் போட்டியில் நம்மூர் சத்யராஜ், அர்ஜுன் மற்றும் சரத்குமார் ஆகியோரை அவசியம் அனுப்ப வேண்டும். குஷ்பூ, நமிதாவை அலாக்காகத் தூக்குபவர்களுக்கு இதெல்லாம் தூசு!

 கட்டி உருளாத குறையாக சண்டை போட்ட டென்னிஸ் வீரர்கள் அனைவரும் புறமுதுகிட்டு ஓடி வந்ததில் இந்தியர்களுக்கு சந்தோஷமே. தப்பித் தவறி யாரவது ஒருத்தர் மெடல் வாங்கியிருந்தா அவ்ளோ தான், அவங்க போடற சீனுக்கு அளவே இருந்திருக்காது. ஒற்றுமையா வாழ்ந்தால் தான் நன்மைன்னு இப்பவாச்சும் புரிஞ்சிக்கிட்டீங்களா?

இந்திய அணியினருடன் நடந்து வந்த "திடீர்" லேடி, சானியா கையில் இந்தியக் கொடி இல்லாதது, நிறைய போட்டிகளில் இந்தியா வெற்றி என்று அறிவித்து விட்டு பிறகு அதை மாற்றி அறிவித்தது - இப்படி ஏகப்பட்ட பேஸ்புக் நிறைக்கும் சமாச்சாரங்கள்.

ஆபீசர் பதவி குடுத்தாத்தான் தொடர்ந்து ராணுவத்தில் இருப்பேன்னு மிரட்டும் விஜய் அவர்களே, ராணுவம் ஒரு சேவைப் பிரிவு. நீங்க மிரட்டினா உடனே பதவி குடுக்கறதுக்கு அது ஒண்ணும் தனியார் நிறுவனம் இல்லை. ரொம்ப சவுண்டு விடாதீங்க, அப்புறம் உங்க மேல தேச ஒழுங்கு நடவடிக்கைன்னு எதாவது கேசைப் போட்டு மும்பை ஜெயிலில் கசாப்போட கறி திங்க வெச்சுடுவாங்க நம்மாளுங்க.

கூடிய சீக்கிரம் இந்தியாவில் ஒலிம்பிக் நடக்க பிரகாசமான வாய்ப்புள்ளது. போட்டி நடத்துவதன் மூலம் எப்படி நிறைய சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி சுரேஷ் கல்மாடி நெடு நேரம் ஒலிம்பிக் அமைப்பாளர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் சொன்ன டிப்சைக் கேட்டு வெள்ளையர்கள் ஆச்சர்யமும் உற்சாகமும் அடைந்ததாக பேச்சு.


அரசாங்கமே, நேஷனல் கேம்ஸ்னு ஒரு போட்டி இருக்குது, ஞாபகம் இருக்கா? நியாயமா ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கணும். தயவு செஞ்சு அதுக்கு முன்னுரிமை குடுங்க. அப்படியே கொஞ்சம் விளம்பரமும் குடுங்க. முடிஞ்சா பிசிசிஐ அதை தத்து எடுத்துக்கிட்டா நல்லாருக்கும். தோனி, சச்சின், விராட் மாதிரி ஆட்கள் நேஷனல் கேம்சுக்கு விளம்பரம் பண்ணினா நல்லாருக்கும். ஏழுமலையான் மனது வைப்பாரா? அதைப் பார்த்தாச்சும் மக்களுக்கு தடகளப் போட்டிகளின் மேல் கொஞ்சம் ஆர்வமும் விளம்பரதாரர்களுக்குக் கொஞ்சம் ஆசையும் வரட்டும்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...