Tuesday, October 11, 2011

குடிப்பதை நிறுத்தினால்.......



டாஸ்மாக் தமிழ்நாட்டின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில் "குடிமக்கள்" எல்லாம் இனிமேல் குடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தால் என்னாகும்?

முதல் நாள்:
வரலாறு காணாத சம்பவம் - தமிழகத்தில் இன்று ஒரு பாட்டில் மது கூட விற்பனையாகவில்லை. டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன

மூன்றாவது நாள்:
தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜீரோ விற்பனை. சைடு டிஷ் வியாபாரிகள் கவலை



ஐந்தாவது நாள்:
தமிழகத்தில் அமைதிப் புரட்சி நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து.

ஏழாவது நாள்:
குவார்ட்டர் வாங்கினால் பீர் இலவசம் - டாஸ்மாக் அதிரடி சலுகை!!

ஒன்பதாவது நாள்:
ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம், 500 ரூபாய்க்கு மேல் வாங்குவோருக்கு 20% தள்ளுபடி!

பதினோறாவது நாள்:
"முன்னாடியெல்லாம் போதையாகி ரோட்ல விழுந்து கிடப்பேன். அங்கேயே படுத்து பழகிட்டதால இப்போ வீட்ல தூக்கம் வரமாட்டேங்குது, ஆனாலும் நான் குடிக்கமாட்டேங்க" - எக்ஸ்-குடிகாரர் உறுதி



பதிமூன்றாவது நாள்:
டாஸ்மாக் மேலும் பல சலுகைகள் அறிவிப்பு - ரேஷன் அட்டைக்கேற்ப விலையில் சலுகை. - ரேஷன் கடைகளிலும் சரக்கு விற்பனை துவக்கம் - ரெண்டு கிலோ சர்க்கரை வாங்கினால் ஒரு half இலவசம்

15வது நாள்:
சைடு டிஷ் வியாபாரிகள் போராட்டம் - வியாபாரம் படுத்து விட்டதால் மாற்று வேலை வாய்ப்பு வழங்கக் கோரி வலியுறுத்தல்

20வது நாள்:
டாஸ்மாக் ஊழியர் தற்கொலை - 'மேற்படி' வருமானம் வராததால் பகீர் முடிவு - குடும்பத்தினர் கதறல் - அரசு ஆவன செய்யுமா?

30வது நாள்:
பழரசங்கள், இளநீர் அமோக விற்பனை - ஒரு இளநீர் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

40வது நாள்:
தமிழகம் முழுவதிலும் உள்ள தலப்பாக்கட்டு பிரயாணி கடைகள் இழுத்து மூடப்பட்டன - குடிகாரர்கள் வராததால் விற்பனை மந்தம்

50வது நாள்:
மதுவுக்கு முற்றுப்புள்ளி - பாண்டியிலும் எதிரொலி - தமிழகத்திலிருந்து மக்கள் வராததால் விற்பனை முற்றிலும் பாதிப்பு

60வது நாள்:
புதிய வரிகள் இன்று முதல் அமல் - பழரசம், இளநீருக்கு 10% கூடுதல் விற்பனை வரி - வருவாய் இழப்பை சரிகட்ட முயற்சி



70வது நாள்:
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் - வருமானமின்மையால் இது வரை 90 டாஸ்மாக் ஊழியர்கள் தற்கொலை - தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

100வது நாள்:
பணப் பற்றாகுறையால் அரசு வளர்ச்சிப்பணிகள் முடக்கம்- மேலும் பல வரிகள் விதிப்பு - பெட்ரோல் டீசல் மற்றும் காய்கறி விலைகள் கிடுகிடு உயர்வு

150வது நாள்:
"விலைவாசி ஏறிக்கிட்டே போகுது, தயவு செஞ்சு குடிங்க மாமா, இல்லேன்னா அரசாங்கம் வரி போட்டே நம்மள கொன்னுடுவாங்க" - தாலி கட்டிய மனைவியே கணவனிடம் கெஞ்சல்

கணவன், "அதெல்லாம் முடியாது, எனக்கு கொள்கை தான் முக்கியம்"

மனைவி, "அப்படின்னா நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன், என்னிக்கு நீங்க குடிக்க ஆரம்பிக்கறீங்களோ, அன்னிக்குத்தான் இந்த வீட்ல காலடி எடுத்து வைப்பேன்"


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"ச்சே, என்ன கொடுமை சார் இது? குடிக்காம இருந்தா எப்படியெல்லாம் டார்ச்சர் பண்றாங்க!! வாங்கய்யா, எல்லோரும் வழக்கம் போல ஒரு கட்டிங் போடுவோம். அட் லீஸ்ட் தலையாச்சும் கொஞ்ச நேரத்துக்கு சுத்தும். யம்மாடி, நாம குடிக்கலேன்னா நாட்டுல எவ்ளோ பிரச்சினைங்க வருது !"



குடிமகன்களுக்குத் தனியாக டாஸ்மாக் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் கூடுதலாக 10% வருமான வரி விலக்கு வழங்க அரசு உத்தரவு – தற்கொலை செய்துகொண்ட ஊழியர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த நஷ்ட ஈடு வழங்கவும் ஏற்பாடு.




பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக டாஸ்மாக் ஊழியர்கள், மதுபானத் தயாரிப்பாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.


""போச்சுடா, மறுபடியும் முதல்லேர்ந்தா?"

Jayaraman
New Delhi

2 comments:

  1. நல்லாத்தான் கற்பனை செய்து இருக்கீங்க :-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...