Tuesday, August 30, 2011

ரம்ஜான் ஸ்பெஷல்: தோனி & விஜயகாந்த் அட்டகாச சந்திப்புதோனி வரவேற்பறையில் உட்கார்ந்திருக்க, விஜயகாந்த் உள்ளிருந்து வருகிறார். "எப்படி இருக்கீங்க? கேப்டன் டிவி துவக்க விழா அன்னிக்கு பார்த்தது"

நல்லா இருக்கேங்க

அன்னிக்கே கேக்கணும்னு நினச்சேன், சிங்குன்னு சொல்றீங்க, ஆனா தலைப்பாவைக் காணோமே?

"எல்லா சிங்கும் தலைப்பா கட்டறதில்ல, தலைப்பா கட்டினவன் எல்லாரும் சிங் இல்லை"

"என்ன தம்பி, என்கிட்டயே பன்ச் அடிக்கறீங்க?" பாகிஸ்தான் தீவிரவாதிகளை பன்ச் அடிச்சே பரலோகம் அனுப்பினவன் நான், வல்லரசு, வாஞ்சிநாதன் பாக்கலியா நீங்க?"

"யார் சார் அவங்க?"

விஜயகாந்த் மனசுக்குள் "வடக்குப்பக்கம் நம்ம படத்தை எவனும் திருட்டு விசிடில கூட பாக்கறதில்ல போலிருக்கு, பேசாம சோனி டிவிக்கு எல்லாத்தையும் ப்ரீயா டப் பண்ணிக் குடுத்துட வேண்டியது தான் ", சரி அது போவட்டும், என்ன திடீர்னு சென்னை பக்கம்?

தோனி, "நம்ம பசங்க எல்லாரையும் புத்தூர்ல அட்மிட் பண்ணிட்டு வரேன், எல்லாரும் கை கால் உடைஞ்ச கேஸ் பாருங்க, அல்லோபதி எல்லாம் ஒண்ணும் சரிப்படல"

"அப்படீங்களா? சரி வராதவங்க வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க?"

"ஒண்ணும் வேணாம் சார்"

"என் வீட்டுக்கு வந்த யாரும் வெறும் வயிறோட திரும்பிப் போனதா சரித்திரமே கிடையாது தம்பி, நண்பர் ராவுத்தர் வீட்லேர்ந்து பிரியாணி வந்திருக்கு, பிரமாதமா இருக்கும், வாங்க சாப்பிட்டுகிட்டே பேசுவோம்"

Shift to Dining Table.

விஜயகாந்த், "ஆமாம், உங்களுக்கு ஏதோ கௌரவ டாக்டர் பட்டம் குடுத்தாங்களாமே? நிஜமாவே குடுத்தாங்களா, இல்ல உங்க மனைவி சிபாரிசுல வாங்கினீங்களா?

லெக் பீசை கடித்தவாறே, "சார், அப்படியெல்லாம் இல்லை, அவங்களா நான் ஏதோ பெரிய சாதனையாளன்னு நினைச்சுகிட்டு குடுத்தாங்க, டெஸ்ட் சீரிஸ்ல வாங்கின உதைக்கு அது கொஞ்சம் ஆறுதலா இருந்திச்சு, BTW, நீங்க கிரிக்கெட் பாப்பீங்களா? உங்களுக்கு கிரிக்கெட் பத்தி என்ன தெரியும்?"

"என்ன தம்பி அப்படி கேட்டுட்டீங்க?, நீங்க இதுவரைக்கும் ஆடியிருக்கும் மேட்ச் மொத்தம் 247, அதுல டெஸ்ட் 61 , ODI 186 . அடிச்ச ரன்கள் 9200 , டெஸ்ட்ல 3200, ODIல 6000, உங்க ஆவரேஜை விட ஸ்டிரைக் ரேட் அதிகம், நீங்க பிரமாதமா ஆடினது எல்லாமே கோபால் பல்பொடி நாடுகள்ல தான், அதாவது இந்தியா, இலங்கை பாகிஸ்தான். வெளியூர்ல நீங்க ஒரு மெகா சொதப்பல், எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் டெஸ்ட் மேட்சுக்கு நீங்க வேஸ்ட், ODI அண்ட் T20 தான் உங்களுக்கு பெஸ்ட்.

"தெரியாம கேட்டுட்டேன், இப்படி புள்ளி விவரம் சொல்லி மானத்தை வாங்கறீங்களே"

"இது மட்டுமா? இங்கிலாந்து டூர்ல நீங்க அடிச்சது..."

விஜயகாந்த் விஸ்வரூபம் எடுப்பதைக் கண்ட தோனி, பேச்சை மாற்றும் முயற்சியாக, "உங்களை வடிவேலு தேர்தல் பிரச்சாரத்துல அந்த கிழி கிழிச்சாரே, நிஜமாவே நீங்க ஒரு தண்ணி வண்டியா?"

கண்கள் சிவக்க "உண்மை என்னன்னு என் தமிழ் மக்களுக்குத் தெரியும், வடிவேலு சொன்னா சரியாப் போச்சா? அதுக்குத் தான் சிங்கமுத்துவை விட்டு கவுன்டர் அட்டாக் பண்ணினோம்ல, நீங்க கூடத் தான் மேக்டவுலுக்கு விளம்பரம் பண்றீங்க, அதுக்காக உங்களை குடிகாரன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?, "நான் மானஸ்தன் தம்பி, என் உடம்புல தமிழ் ரத்தம் ஓடுது"

"அமைதி அமைதி கேப்டன், அப்பா, அதுக்குள்ளே கண் இப்படி சிவந்து போச்சே உங்களுக்கு?"

"தமிழன்னா அப்படித்தான் ஒரு வேகத்தோட இருப்பான்"

"நீங்க அந்த அம்மாவோட எப்படி கூட்டணி வெச்சீங்க? அவங்க ரொம்ப அதிகாரம் பண்ணுவாங்கன்னு கேள்விபட்டேன்"

"மத்தவங்க அமைதியா செய்யறதை அந்த அம்மா ஓபனா செய்யறாங்க, அவ்ளோ தான், அவங்க கூட சேர்ந்ததினால தான் எனக்கு 27 சீட் கிடைச்சுது. என் கட்சியை நான் பலப்படுத்தணுமே, டீமே இல்லாம சும்மனாச்சுக்கும் கேப்டன்னு சொன்னா நல்லாவா இருக்கும்? வருத்தம் என்னன்னா எவ்வளவோ படத்துல நான் திமிர் பிடிச்ச ஹீரோயினை அடக்கியிருக்கேன், ஆனா இன்னிக்கு வீட்டுக்காகவும் கட்சிக்காகவும் அடங்கியிருக்க வேண்டியதா இருக்கு."

"கரெக்ட் தான்"

"நீங்க கூட அந்த அம்மாவோட கூட்டணி வெச்சுக்கோங்க, நாளைக்கே கிரிக்கெட்ல ஒரு பிரச்சினைன்னா அம்மா கிட்ட உதவி கேட்க வசதியா இருக்கும்"

"எனக்கு அரசியல்ல அவ்வளவா நாட்டமில்லைங்க"

"இப்படி சொல்றவங்க தான் முதல்ல நாமினேஷன் தாக்கல் பண்றாங்க"

இருவரும் சிரிக்கின்றனர்

விஜயகாந்த்,"நீங்க சாராய விளம்பரம் பண்றீங்களே, உங்களுக்காச்சும் நல்ல சரக்கு தருவாங்களா?

"கண்டிப்பா, ஏன்?"

"மல்லையா கிட்ட சொல்லி தமிழ் நாட்டுக்கு கொஞ்சம் நல்ல சரக்கு சப்ளை பண்ணச் சொல்லுங்க. டாஸ்மாக் சரக்கு வாயில வைக்க முடியல"

"நான் கூலிக்கு மாரடிக்கறவன் சார், அந்த அளவுக்கெல்லாம் செல்வாக்கு கிடையாது, எல்லாம் அவர் முடிவு பண்றது தான்"

"ஓகே, கர்நாடகம்னாலே தண்ணி தர மாட்டாங்க போல ”

தோனி, "ராதிகாவையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு எப்பவாச்சும் நினைச்சிருக்கீங்களா?"

"நிறைய தடவை, அப்படி மட்டும் பண்ணியிருந்தா அந்த அம்மா எடுக்கற சீரியல் எல்லாம் கேப்டன் டிவில போட்டு இந்நேரம் கேப்டன் டிவி பெரிய சேனலா ஆயிருக்கும், இன்னும் பெரிய ஆளா, சீக்கிரமா ஆயிருக்கலாம், என் நேரம் "

சுடச்சுட இஞ்சி டீ வருகிறது , இருவரும் அருந்துகின்றனர்.

விஜயகாந்த், "மீடியாக்காரங்க உங்களை போட்டுப் பாக்கறாங்களே, எப்படி சமாளிக்கறீங்க?"

தோனி, "உங்களுக்குத் தெரியாததா? கிரிக்கெட்டும் அரசியலும் ஒண்ணு, மக்கள் இன்னிக்கு திட்டுவாங்க, நாளைக்கு இதை விட பெரிசா எதாச்சும் நடந்தா பழசை மறந்துடுவாங்க, அப்புறம் பாராட்டுவாங்க, இப்படி மாறி மாறி வர்றது சகஜம் தானே"

"அடேங்கப்பா, அவ்ளோ தான் தம்பி அரசியல், நீங்க கட்டாயம் அரசியலுக்கு வரணும் தோனி, இளைஞர்கள் உங்க பக்கம் இருக்காங்க, ஒரு கூட்டணி போடுவோம், என்ன சொல்றீங்க?"
"
"மறுபடியும் சொல்றேன், எனக்கு சுத்தமா இன்டெரெஸ்ட் இல்லை சார்"

"அப்படியெல்லாம் இருக்ககூடாதுங்க, எவ்ளோ நாளைக்குத் தான் இப்படி ஊர் ஊரா அலைவீங்க கிரிக்கெட் விளையாட. 30௦ வயசு ஆயிடுச்சுல்ல, இனிமே லைப்ல செட்டில் ஆக முயற்சி பண்ணுங்க. அதான் நல்லா காசு பார்த்துட்டீங்கள்ள, இனிமே கொஞ்சம் சமூக சேவையில இறங்குங்க, அதான் ஏற்கனவே உங்க பொண்டாட்டி பேர்ல லண்டன்ல சேரிட்டி டின்னர் குடுத்தீங்களே, அப்படியே கண்டினியு பண்ணுங்க"

"சார், அது நிஜமாவே சேரிட்டிக்குத் தான் சார்"

"எல்லாரும் ஆரம்பத்துல அப்படி சொல்றது தான்"

தோனி, "நம்ம கையில என்ன சார் இருக்கு, எல்லாம் ஆண்டவன் முடிவு பண்ணனும்"

என்னப்பா, வர்ற வழியில என் நண்பர் ரஜினியைப் பார்த்துட்டு வர்றியா?

இந்த டாபிக்கை விடுங்க சார், நீங்க இந்த ஆட்சி பத்தி எதுவுமே சொல்லலியாமே இதுவரைக்கும். எல்லாரும் விஜயகாந்த் ஏன் இப்படி கப்சிப்னு இருக்கார்னு கேக்கறாங்க"

ஆட்சிக்கு வந்தே நாலு மாசம் தான் ஆவுது, அதுக்குள்ளே எப்படி சொல்ல முடியும்? அவங்க சொல்ற திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களுக்குப் போய் சேருதுன்னு பார்த்த பிறகு தான் எதுவும் சொல்ல முடியும்"

அப்போ தப்பு நடந்தா கண்டிப்பா பேசுவீங்க?"

"கண்டிப்பா, மக்களுக்கு யார் துரோகம் செஞ்சாலும், நான் பொறுக்க மாட்டேன்."

"கூல் கூல், மறுபடியும் கண்ணு சிவக்குது பாருங்க"

விஜயகாந்த் நார்மலாகிறார்,

தோனி, "சரி சார், நான் கிளம்பறேன், ப்ளைட்டுக்கு நேரமாச்சு"

"போயிட்டு வாங்க தோனி, சாரி, டாக்டர் தோனி"

"நீங்க வேற, சும்மா இருங்க சார்"

"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ஸ்ரீநிவாசன் கிட்ட சொல்லி CSK யூனிபார்ம் கலரை
மாத்த சொல்லுங்க,

"எதுக்கு சார்?"

"எதுக்கா? போன சீசன் வரைக்கும் தாத்தா ஆட்சி, அதனால அவருக்கு புடிச்ச மஞ்சள் கலர் டிரஸ் போட்டீங்க, இப்போ ஆட்சி மாறிடுச்சே, அம்மாவுக்கு புடிச்ச மாதிரி பச்சைக் கலர்ல டிரஸ் போடுங்க, அப்போ தான் தமிழ்நாட்டு டீம்னு தெரியும். ஏன்னா பச்சைத் தமிழன்னு தான் சொல்றோமே தவிர மஞ்சள் தமிழன்னு யாரும் சொல்றதில்ல.

முயற்சி பண்றேன்

பண்ணுங்க, இல்லேன்னா நாங்க மாத்த வேண்டியிருக்கும். நீங்க கிரிக்கெட் விளையாடறவங்க, நாங்க கிரிக்கெட்டோட விளையாடறவங்க.

நான் கிளம்பறேன்,

எதுக்கும் அந்த அரசியல் என்ட்ரி மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிங்க.

எதுக்கு சார்? உங்களை மாதிரி நானும் போண்டியாகவா?

என்ன தம்பி இப்படி சொல்றீங்க? ஹிந்தி இங்கிலீஷ் நல்லா பேசறீங்க, டாக்டர் ஆயிட்டீங்க, இளைஞர் கூட்டம் உங்களை நல்லா பாலோ பண்றாங்க இது போதாதா? என்னைக் கேட்டா நீங்க அமெரிக்காவுல கூட போய் அரசியல் பண்ணலாம். "ராஞ்சியார் அழைக்கிறார்" - எப்படி போஸ்டர்?

ஹலோ, ஹலோ தோனி, ஏன் ஓடறீங்க?

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...