Tuesday, August 23, 2011

இந்தியாவின் England சுற்றுப் பயணம் - 6"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று முணுமுணுத்தபடியே ஸ்விம்மிங் பூல் பக்கம் வருகிறார் தோனி. மற்ற வீரர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கே வந்து இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர் (சரக்கு அடிக்கறாங்கன்னு எழுதினா நல்லாருக்காது பாருங்க, அதான் இப்படி)

தோனி கையில் புதிய தாயத்து பளபளப்பதைப் பார்த்ததும் சச்சின், "என்னய்யா, புதுசா இருக்கு?"

"ஆமாம், இன்னிக்கு காலையில தான் ஊர்லேர்ந்து வந்திச்சு, எந்த நாயோ நம்ம டீமுக்கு செய்வினை வெச்சிருப்பான் போல, அதான் ஸ்பெஷலா மந்திரிச்சு வரவழைச்சேன், இன்னும் ODI அண்ட் T20 வேற இருக்கே நமக்கு"

"மூதேவி, இதெல்லாம் கரெக்டா பண்ணு, டூர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வரவழைச்சிருக்கக் கூடாது? நானாச்சும் செஞ்சுரி அடிச்சிருப்பேன், இப்படி அல்பாயுசுல அவுட் ஆயிருக்க மாட்டேன்"

டிராவிட், "உன் தலைஎழுத்து அப்படி இருக்கு மாஸ்டர், நீ எவ்ளோ அடிச்சாலும் பிளாப் தான், நீ 10 ரன் அடிச்சா 50 அடிக்கணும்னு எதிர்பாக்கறாங்க, 50 அடிச்சா நூறு அடிக்கணும்னு எதிர்பாக்கறாங்க. 100 அடிச்சா 200 ௦௦, 300 அடிச்சா லாரா ரெகார்டை பீட் பண்ணணும்னு எதிர்ப்பாப்பாங்க. நீ அடிக்கலேன்னா வேஸ்ட்னு முத்திரை குத்திடுவாங்க."

சச்சின், "வாய்யா நல்லவனே, நீ சொல்றதும் நியாயம் தான்"

கம்பீர், "மீடியாக்காரங்க ஆனாலும் அநியாயத்துக்கு டவுசரை கிழிக்கறாங்க"

ராயினா, "பின்னே, கொஞ்சுவாங்களாக்கும்? வேர்ல்ட் கப் ஜெயிச்சப்போ முதல் பக்கத்துல போட்டு பாராட்டினாங்களே, அப்போ குளுகுளுன்னு இருந்திச்சில்ல? இப்போ மோசமா ஆடினதுக்கும் அதே முதல் பக்கத்துல போட்டு வறுக்கறாங்க, ரெண்டையும் அனுபவி ராஜா அனுபவி"

Sachin, "ஆமாம் சுரேஷ், அது எப்படி 30 பால் face பண்ணியும் உன்னால ஒரு ரன் கூட எடுக்க முடியல?" மிஸ்ரா பரவால்ல போலிருக்கே"

ராயினா, "சும்மா வெறுப்பேத்தாதீங்க சார், அதை நினைச்சாலே எனக்கு எரிச்சலா வருது, இப்படி ஒரு அசிங்கமான இன்னிங்க்ஸ் என் வாழ்க்கையில நான் ஆடினதே இல்ல, ODI எப்படி ஆடப் போறேனோ? ஒரே திகிலா இருக்கு"

பிரவின், "ப்ரீயா விடு ப்ரீயா விடு ப்ரீயா விடு மாமு, பார்முக்கு இல்லை காரன்டீ"

"ஏற்கனவே அவிஞ்சு போய் உக்காந்திருக்கேன், மேற்கொண்டு எரிச்சலை கிளப்பாதே"

முனாப், "இந்த கமெண்டேடேர்ஸ் வேற, அது சரியில்ல இது சரியில்லன்னு"

தோனி, "அவங்க சொன்னா, சரியாப் போச்சா? பிசிசிஐ schedule படியும் ஆடணும், நடுவுல franchise கேமும் பாக்கணும், விளம்பரத்திலையும் நடிக்கணும்னா சும்மாவா? , நாமெல்லாம் என்ன மெஷினா இல்லை மாடா? அதான் பாதிக்கு மேல இஞ்சுரி கேஸ், We are jaded you know"

அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

"யாருக்குத் தெரியும்? அடிக்கடி கமெண்டரில சொல்றாங்க, நானும் அடிச்சு விடறேன்"

டிராவிட், "இதுல நமக்குத் தானே அதிக நஷ்டம், நாட்டுக்காகவும் சரியா ஆட முடியல, காசுக்காகவும் சரியா ஆட முடியல, பேரும் கெடுது "

சச்சின், "பிசிசிஐ டார்கெட் சரியில்ல, இந்த வருஷம் இவ்ளோ காசு பண்ணணும்னு தான் அட்டவணை போடறாங்க, இந்த வருஷம் டீமை இந்த பொசிஷன்ல கொண்டு வரணும்னு அவங்க நினைக்கறதே இல்லை, பட் இனிமே நினைப்பாங்கன்னு நம்பறேன்"

கம்பீர், "முன்னாடியெல்லாம் டிவியில எப்படா மேட்ச் வரும்னு மக்கள் எதிர்பார்த்தாங்க, இப்போ ஏண்டா மேட்ச் வருதுன்னு ஆயிட்டாங்க, அந்த அளவுக்கு கிரிக்கெட் ஆடறோம்"

மிஸ்ரா, "இந்த செஹ்வாக் திரும்ப போயிட்டதால, மறுபடியும் ஒபெநிங் பிரச்சினை வந்திருக்கு நமக்கு"

தோனி, "அதெல்லாம் சமாளிச்சுக்கலாம், தயவு செஞ்சு யாரும் இஞ்சுரி மட்டும் ஆயிடாதீங்க, மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன், ஆஸ்பத்திரின்னாலே அலெர்ஜியா இருக்கு"

ராயினா, "நல்ல விஷயம் என்னன்னா சச்சின் 90 அடிச்சது தான் , அவர் பார்முக்கு வர்றது ரொம்ப நல்ல விஷயம், ODi சீரீஸ் கான்பிடேன்டா விளையாடலாம்"

பிரவின், "நல்ல வேளை, சச்சின் செஞ்சுரி அடிக்கலை, இல்லேன்னா அவர் செஞ்சுரி அடிச்சார் அதனால தான் இந்தியா தோத்துட்டாங்கன்னு சொல்லியிருப்பாங்க"

டிராவிட், "நான் கூடத் தான் மூணு டெஸ்ட்ல செஞ்சுரி அடிச்சேன், இருந்தும் தோத்துப்போனோம், அப்போ நானும் ராசியில்லாதவனா?, Btw, தோனி, இந்த லோக்கல் டீம் மேட்ச்ல என்னையும் சேர்த்துக்குங்க, அப்போ தான் ODi விளையாட ஈசியா இருக்கும், இல்லேன்னா நான் டெஸ்ட் சீரீஸ் நினைப்புல அங்க போய் மொக்கை போட்டுடுவேன்"

சச்சின், "அதுவும் சரி தான், என்னையும் சேர்த்துக்கப்பா"

தோனி, "லோக்கல் டீம் மேட்ச்ல எல்லாருக்கும் வாய்ப்பு கண்டிப்பா உண்டு. மறுபடியும் என்னால ப்ரசெண்டேஷன்ல வழிய முடியாது. எவ்ளோ தடவை தான் நானும் பிளான்னிங் சரியில்ல, ப்ரிபரேஷன் சரியில்லன்னு சொன்னதையே சொல்றது"

பிரவின், "ஆனாலும் இந்த பசங்க நல்லாத்தான் பௌலிங் போடறாங்க"

சச்சின் "உங்க ஊர்ல நீ போடமாட்டியா? அது மாதிரி அவங்க ஊர்ல அவன் ஷைன் பண்றான்"

ராயினா, "பட் இப்ப எல்லாரும் பிசிசிஐயைத் தான் குறை சொல்றாங்க. நாம பாவமாயிட்டோம்"

தோனி, "ரொம்ப சந்தோஷப்படாதே, சுத்தி சுத்தி கடைசில நம்ம கிட்ட தான் வரும், பிசிசிஐ நம்மள ஏறுவாங்க"

கம்பீர், "நாம என்ன தப்பு பண்ணினோம்? அவங்க சொல்றதைத் தான் செய்யறோம், ஆடுன்னா ஆடறோம், இஞ்சுரி ஆகி திரும்பி வான்னா திரும்பிப் போறோம்"

பிரவின், "அவங்க நம்மளை நேராவும் ஆட்டி வைக்கறாங்க, franchise மூலமா மறைமுகமாவும் ஆட்டி வைக்கறாங்க, நாமளும் வேற வழியில்லாம வயித்துப் பொழைப்புக்காக ரெண்டும் சைடும் ஆட வேண்டியிருக்கு"

தோனி,"வயித்துப்பொழைப்பா? இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?"

"ஏன், இல்லையா? எங்களுக்கும் வயசான அம்மா, வயசுக்கு வந்த தங்கச்சின்னு பொறுப்புகள் இருக்கு"

சச்சின், " சும்மா கலாயிக்காதீங்கப்பா அப்புறம் தோனி, கொஞ்சமாச்சும் பேட்டிங் இம்ப்ரூவ் பண்ணு, பேட்ல எவ்ளோ எஜ் உண்டோ அவ்ளோ எஜ்ஜிலும் வாங்கி அவுட் ஆயிட்டே"

"இதெல்லாம் தனியா சொல்லுங்க தலைவரே, பப்ளிக்கா போட்டு உடைக்காதீங்க"

"ஊரே சிரிக்குது, இதுல நான் சொன்னதால உனக்கு பெரிய அவமானம் ஆயிடுச்சா?"

கம்பீர், "நாங்க கிரிக்கெட் ஆட வந்ததே உங்களைப் பார்த்து தான், நீங்களே சொதப்பும்போது நாங்க சொதப்பறதுல ஒண்ணும் ஆச்சர்யம் இல்லை. ,

சச்சின் கடுப்பாவதைப் பார்த்த டிராவிட், " ஆனா உன் கேப்டன்சியும் சரியில்ல, முனாபை உக்காத்தி வெச்சிட்டு RP சிங்கை எடுக்கறே"

"அது வந்து, முனாப் ரம்ஜான் நோன்பு இருக்கான், அவனால ஆட முடியாது அதான்"

"இதெல்லாம் ஜோக்கா வேணா பிரசுரம் பண்ணலாம்"

ராயினா, "யோவ் முனாப், உக்காந்தது தான் உக்காந்தே, கொஞ்சம் உள்ளே உட்காரக்கூடாது? பால்கனில உக்காந்து தூங்கி வழியறே! கவாஸ்கரும் கங்குலியும் உன்னை வெச்சே டைம் பாஸ் பண்றாங்க"

முனாப், "அப்புறம் நானும் டீம்ல இருக்கேன்னு எப்படித்தான் ஊருக்குக் காட்டறது?"

கம்பீர், காலியான பாட்டிலைப் பார்த்தபடியே " சரக்கும் தீர்ந்திடுச்சு, No .1 பொசிஷனும் போயிடுச்சு, ரொம்ப கஷ்டம் தான்"

தோனி, " "ரெண்டுத்துக்கும் பதில் இருக்கு என்கிட்ட"

"என்னது?"

"Mcdowell Platinum No .1 "

டிராவிட் "இப்பத் தான்யா தெரியுது நாம ஏன் தோத்தோம்னு, ஒரு வார பிரேக்கில ப்ராக்டீஸ் பண்ணுவேன்னு நினைச்சா அதுக்குள்ளே விளம்பர ஷூட்டிங் புக் பண்ணிட்டியா?

"ஹிஹி, ரெண்டு நாள் தான் தலைவரே, இங்க பக்கத்துல தான்"

தோனியுடன் கம்பீரும் ராயினாவும் போவதைப் பார்த்து, "ஏய், நீங்க எங்கடா போறீங்க?"

"...நாங்களும்...கமிட் ஆயிட்டோம், வயித்துப் பொழைப்பாச்சே!"

நீங்க திருந்தவே மாட்டீங்கடா! ODI சீரீஸ் ரிசல்ட் இப்பவே லைட்டா பிளாஷ் ஆவுதே"

தொடரும்...

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...