மேலிடத்துத் தொல்லை தாங்க முடியாததால் பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தேர்வுக் குழுவினர் லண்டன் விரைகின்றனர். அங்கே இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை கண்டு சந்தோசம் அடைகின்றனர்.
"என்னய்யா, ரொம்ப தீவிரமா பயிற்சி பண்றீங்க போலிருக்கே? கடைசி டெஸ்ட்லயாவது ஜெயிக்கணும் அப்படிங்கற வெறியா?
"அதில்லீங்க, ODI மற்றும் T20௦ல சொதப்பிடக்கூடாது பாருங்க அதுக்குத் தான்.
"நான் கேட்டிருக்கவே கூடாது, சரி சரி எல்லாரும் உள்ள வாங்க, கொஞ்சம் விசாரிக்கணும்"
Inside the enquiry room:
"ஏன்யா இவ்ளோ கேவலமா ஆடறீங்க?
"நல்ல பேட்ஸ்மேன் இல்லீங்க"
"நல்ல பௌலர்ஸ் இல்லீங்க"
"நல்ல பீல்டர்ஸ் இல்லீங்க"
"நல்ல கேப்டன் இல்லீங்க"
"நல்ல கோச் இல்லீங்க"
"ட்ரைனிங் பத்தலீங்க"
"டீம் செலெக்ஷன் சரியில்லீங்க"
ஸ்ரீகாந்த் கடுப்பாகி "அப்போ நீங்கல்லாம் யாருங்க?"
தோனி, "இதோ பாருங்க சார், வெற்றி தோல்வி எல்லாம் வந்து போறது தான், இதுக்கு முன்னாடியெல்லாம் சீரீஸ் தோத்ததே இல்லையா? என்னமோ முதல் தடவை தோக்கற மாதிரி எல்லாரும் பில்ட் அப் பண்றீங்க?"
"நான் ரிசல்ட் பத்தி கவலைப்படலை தோனி, நீங்க ஆடற விதம் பற்றி கவலைப்படறேன், யார் கிட்டயுமே ஒரு சக்தியே இல்லையே, எதையோ பறி கொடுத்த மாதிரியே ஆடறீங்களே?"
"அது கண்டீஷன் புதுசு, குளிர் வாட்டி எடுக்குது, போதாக்குறைக்கு எல்லாம் இஞ்சுரி வேற. என்ன பண்ண சொல்றீங்க? அவங்க மூணு பேரை நம்பி தான் டெஸ்ட் மேட்ச் இருக்கு, சொல்லி வெச்ச மாதிரி மூணு பேரும் சொதப்பறாங்க, மத்த யாரும் கவுன்டி டீம்ல கூட விளையாடினதில்ல"
டிராவிட் நடுவில் புகுந்து, ""எங்களை ஏம்பா குறை சொல்றீங்க? நாங்களும் முடிஞ்ச வரைக்கும் ஆடத்தான் செய்யறோம்"
கம்பீர், "எங்க ஆடறீங்க? எப்போ மொக்கை போடணுமோ அப்போ சீக்கிரமே அவுட் ஆயிட்டு போயிடறீங்க"
லக்ஷ்மன், "தம்பி, ரொம்ப துள்ளாதே, எங்களுக்குத் தான் வயசாயிடுச்சு, நீ சின்னப் பையன் தானே? நின்னு அடிக்க வேண்டியது தானே?"
இதற்கிடையில் இன்னொரு பிசிசிஐ அதிகாரி, "பிரவீன், பப்ளிக்ல எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? ஏற்கனவே மானம் போவுது, இதுல வெறும் வாய்க்கு அவல் மாதிரி நீ வேற நியூஸ் குடுக்கற "
"நான் என்ன செய்ய?" அவன் ரொம்ப அசிங்கமா பேசினான், அதான் ஒரு காட்டு காட்டினேன்"
"எல்லாருக்கும் மேட்ச் பிக்சிங் நடந்திருக்குமோன்னு சந்தேகம் வருதுப்பா , இந்த மேட்சாவது பார்த்து ஆடுங்க"
இஷாந்த், "அதெல்லாம் உங்களுக்குத் தெரியாம நடக்குமா சார்?"
பிசிசிஐ அதிகாரி முறைக்கவே, இஷாந்த் ஒளிந்து கொள்கிறார்
ராயினா, "கிரிக்கெட் வீரர்கள் கோடி கோடியா சம்பாதிக்கறாங்க, அந்த வயிதெரிச்சல் எல்லாருக்கும். எதுடா சாக்குன்னு பாக்கறாங்க கரிச்சு கொட்ட, எங்களைத் திட்டியே எல்லா பயலும் சம்பாதிக்கறாங்க"
ஸ்ரீகாந்த் சச்சினைப் பார்த்து, "ஐயா, இன்னிக்காவது அந்த பாழாப்போன செஞ்சுரியை அடிச்சுத் தொலைங்க"
சச்சின் கோபமாக, "ஏன் சார், இந்த டீமுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கேன், எனக்கு இவ்வளவு தான் மரியாதையா?"
டிராவிட், "இப்பவாவது புரிஞ்சுக்க மாஸ்டர், இவனுங்க எப்போ தலையில தூக்கி வெப்பாங்க, எப்ப விசிறிக் கடாசுவாங்கன்னு யாருக்கும் தெரியாது"
ஸ்ரீகாந்த், "அதாம்பா வாழ்க்கை, வயசான பெற்றோர்களை முதியோர் இல்லத்துல விடறதில்ல, அது மாதிரி, எங்களுக்கும் இதே கதி தான் நடந்திச்சு, So no hard feelings"
இதனிடையே ஒரு பிசிசிஐ அதிகாரி, "செஹ்வாக், இன்னிக்காவது ஒழுங்கா ஆடுவியா?"
செஹ்வாக், "இந்தியாவோ, இங்கிலாந்தோ, பிட்ச் எதுவா இருந்தாலும் ஐ வில் ப்ளே மை நாச்சுரல் கேம்"
முகுந்த், "12 வருஷமாச்சே, இந்த ஸ்டேட்மெண்டை மாத்திக்கக்கூடாதா?"
தோனி, "அவங்க டீம்ல கூட நிறைய பேருக்கு இஞ்சுரின்னு கேள்விப்பட்டேன், நீங்க வேணா கொஞ்சம் பேசி எதாவது கத்துக்குட்டி பௌலரை டீம்ல சேர்க்க சொல்லுங்க, எங்களுக்கு உதவியா இருக்கும்"
ஸ்ரீகாந்த், "அதெல்லாம் டூர்னமென்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பேசியாச்சு, ஒரு பாச்சாவும் பலிக்கலை, கை கால் உடைஞ்சே போனாலும் அவனுங்க தான் ஆடுவாங்களாம், அங்கேயாவது ஒண்ணு ரெண்டு தான் ஆஸ்பத்திரி கேஸ், இங்க ஒரு ஆஸ்பத்திரியே டீமா இருக்கு. போதாக்குறைக்கு பிரவின் கைய உடைச்சிக்கிட்டான், ஸ்ரீ கன்னாபின்னான்னு அடி வாங்கி உக்காந்திருக்கான், முனாப், RP சிங் இவங்களைப் போட்டுட வேண்டியது தான்.
மிஸ்ரா, "ஏன் சார், இந்த கவுன்டி டீம் மேட்செல்லாம் டெஸ்ட் மேட்சுக்கு அப்புறமா வெச்சிருக்கீங்களே, கொஞ்சம் முன்னாடி வெச்சிருக்கக்கூடாது? என்ன ப்ரோக்ராம் போட்டீங்களோ?"
"அதுக்கு இப்போ என்ன?"
"இப்போ என்னவா?, அவங்க கூட ஆடியிருந்தா கொஞ்சம் ப்ராக்டீஸ் ஆயிருக்கும், டெஸ்ட்ல சொதப்பியிருக்க மாட்டோம்"
"போற போக்கைப் பார்த்தா அந்த டீமுங்க கிட்டயும் தோத்துடுவோம் போலிருக்கு, கான்பிடன்ஸ் சுத்தமா இல்ல"
ஸ்ரீகாந்த், "சும்மா பேசி ஒரு பயனும் இல்லைப்பா, எல்லாருமே தப்பு பண்ணிட்டோம், டெஸ்ட் சீரீஸ் தோத்ததுக்கு பிசிசிஐ, நான், நீங்க, எல்லாருமே பொறுப்பு, இப்போ அதுலேர்ந்து எப்படி மீண்டு வர்றதுன்னு மட்டும் நாம யோசிப்போம்,
பிசிசிஐ அதிகாரி, "ஆமாம்பா, இந்த மேட்சாவது பார்த்து ஆடுங்க, கிரௌண்ட் பேரு ஓவல், அதுக்காக நீங்களும் அதையே போட்டுடாதீங்க, அப்புறம் வெளிய தலை காட்ட முடியாது"
ஸ்ரீகாந்த், "நல்ல பேட்டிங் பிட்ச் தான் போட்டிருக்காங்க, ஒழுங்கா ஆடற வழிய பாருங்க, ஒரு வேலை டாஸ் தோத்தாலும் பௌலிங் பீல்டிங் ஒழுங்கா பண்ணுங்க"
தோனி, "அப்படியே இந்த அம்பயரிங்குக்கும் எதாவது வழி பண்ணினீங்கன்னா நல்லாருக்கும், ஒரே சொதப்பல்"
பிசிசிஐ அதிகாரி, "நீ முதல்லா கையில வர்ற பந்தைப் ஒழுங்கா பிடிக்க பழகிக்க, அப்புறம் அடுத்தவங்களை குறை சொல்லலாம்"
ஸ்ரீகாந்த், சரிப்பா, டைம் ஆவுது, சுருக்கமா சொன்னா, உங்க வாழ்க்கையே இந்த டெஸ்ட் மேட்ச்ல தான் இருக்கு, இந்த டெஸ்ட் ரிசல்ட் நிறைய பேரோட கரியரை கண்டிப்பா அபெக்ட் பண்ணப் போவுது, அத மட்டும் நான் சொல்லிக்கறேன், அப்புறம் என் மேல குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. ஆல் தி பெஸ்ட்"
தோனி, "சார் இன்னிக்கு டீம்ல யாரைப் போடறதுன்னு ஒரு வாட்டி சொன்னீங்கன்னா ஈசியா இருக்கும்"
"எதுக்கு? தோத்துப் போனா என் மேல பழி போடறதுக்கா? நீ எவனை வேணா போடு, எனக்கு ரிசல்ட் வேணும், அதாவது உங்க பெர்பார்மன்ஸ்ல பாசிடிவ் ரிசல்ட் வேணும், முன்னேற்றம் தெரியணும், அவ்ளோ தான், இல்லேன்னா ODI டீம் முழுக்க மாத்திடுவேன், " and he leaves.
"ஏண்ணே, மெய்யாலுமே மாத்திடுவாரா?"
தோனி, "அட நீ வேற, யாரை வெச்சு மாத்துவாரு? நம்மள்ள பாதி பேரு கட்டு போட்டு உக்காந்திருக்கோம், வேற சாயீசே இல்லை,நம்மள விட அவர் தான் இப்போ பயங்கரமா லாக் ஆயிருக்கார், அந்த கடுப்பு, இதுக்கு போய் அலட்டிக்கலாமா? COOL BUDDY"
No comments:
Post a Comment