Wednesday, August 3, 2011

இந்தியாவின் England சுற்றுப் பயணம் - 3




England team discussing before their 2nd Innings at Notts.

குக், "ஏண்ணே, இந்த கண்டீஷன்ல ஆட முடியுமா? அவங்க வேற லீட் எடுத்திருக்காங்க"

ஸ்ட்ராஸ் "அட நீ வேற, 21 ரன்னுக்கு 5 விக்கெட் விடறாங்க. இதிலேர்ந்தே தெரியலை,அவங்க என்ன ரேஞ்ச்ல இருக்காங்கன்னு"

"அப்போ ஒரு 200 -300 ஸ்கோர் வரும்னு சொல்லுங்க"

"மேலேயே வரும், தைரியமா ஆடு"

பீட்டர்சன் "குக், 1st இன்னிங்க்ஸ் நீ சரியா ஆடலை, இந்த தடவை விட்டுடாதே"

பெல், "இருந்தாலும், இன்னும் கிட்டத்தட்ட மூணு நாள் இருக்கேண்ணே, அந்த பிரவின் பய வேற கொஞ்சம் நல்லா போடுறான்"

பிராட், "ஏம்பா கவலைப்படறே, நாம அவங்களுக்கு 50 ரன் டார்கெட் குடுத்தாலும் அவங்க 25ரன்னுக்கு அவுட் ஆயிடுவாங்க".

மோர்கன், "என்ன ஒரு நம்பிக்கை"

ஸ்ட்ராஸ், "அதான் மீடியா, நசீர் ஹுசைன் இவங்களை விட்டு அவங்களை மனதளவில சாவடிச்சிட்டோம்ல"

பிராட், "பின்ன, அவனுங்க மூஞ்சியப் பார்த்தியா? ஏதோ வழிதவறி கிரௌண்டுக்குள்ள வந்துட்ட மாதிரி இருக்காங்க"

Bresnan, "கடைசி 5 விக்கெட் தடாலடியா விழுந்தது அவங்களை ரொம்பவே பாதிச்சிருக்கும், இதான் சாக்குன்னு ஏறி மிதிக்க வேண்டியது தான்"

ஸ்ட்ராஸ், "சரி சரி, வாங்க டைம் ஆச்சு, குக், வா போய் அவங்களை கண்டம் பண்ணிட்டு வருவோம்"

குக் நாலாவது ஓவரில் அவுட் ஆகி திரும்புகிறார், பெல் ஸ்ட்ராசுடன் ஜோடி சேர்கிறார்

"ரொம்ப ஸ்விங் ஆவுதோ?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, அப்படியே edge ஆனாலும் கவலைப்படாதே, தோனி சத்தியமா பிடிக்கமாட்டான் .

Day 2 ends and Day 3 begins

ஓவருக்கு ஒரு 4 போவதைப் பார்த்து தோனி கடுப்பாகிறார்,

ஸ்ட்ராஸ், "என்னய்யா, எல்லா பயலும் பாதி சாப்பாட்டுல எழுந்து வந்த மாதிரி கடுப்பா இருக்கீங்க?"

தோனி, "உன் வேலையைப் பார்றா"

ஸ்ட்ராஸ் அவுட் ஆகிறார், போகும் முன் தோனியைப் பார்த்து, "ஏன்யா இதை மட்டும் பிடிச்சே? வழக்கம் போல விட வேண்டியது தானே? நூறு போடலாம்னு வந்தேனே!"

பிறகு பெல் பீட்டர்சன் ஜோடி இந்திய பௌலிங்கை நையப்புடைத்து எடுக்கின்றது.

நடுவே ஹர்பஜன் மனதிற்குள் "நேத்திக்கு நைட் பக்கெட் சிக்கன் சாப்பிட்டது தப்பாப் போச்சே, வயிறு கடமுடாங்குதே, இஞ்சுரின்னு பெரிசா எதாச்சும் பில்ட் அப் பண்ணி இங்கேர்ந்து கழண்டிக்க வேண்டியது தான், எப்படியெல்லாம் அடிக்கறாங்க, நம்மளால தாங்க முடியாதுப்பா, முதலுக்கே மோசம் ஆயிடும்"

ஸ்ரீ, குமார், இஷாந்த் மூவரும் மாறி மாறி பந்து வீசறாங்க, ஆனா ஒரு மண்ணும் நடக்கக் காணோம். நடுநடுவே யுவராஜும் ராயினாவும் கூட பௌலிங் போடறாங்க.

இஷாந்த் பந்து வீச வருகிறார், மோர்கன் பந்தை பௌண்டரிக்கு அடிக்க, 3 ரன் ஓடுகின்றனர். ஆனால் பிரவின் பந்தைத் தடுத்து தோனியிடம் வீசுகிறார், மைதானத்தில் ஒரே கூச்சல், குழப்பம். பெல் அவுட்னு 3rd அம்பயர் சொல்றார். ஒண்ணும் பிடிபடாத நிலையில் எல்லோரும் டீ பிரேக்குக்குப் போறாங்க.

பெல், "என்ன அநியாயமா இருக்கே?"

ஸ்ட்ராஸ் "பந்து எங்க இருக்குன்னு தெரியாமலே ஏதோ பார்க்ல வாக்கிங் போற மாதிரி அந்தப் பக்கம் போறே, அதான் அவன் எடுத்து அடிச்சுட்டான்"

பெல் " அப்படின்னா நிஜமாவே நான் அவுட் தானா?"

"சந்தேகமில்லாம, ஒரு வேளை தோனி மனசு வெச்சா நீ தப்பிக்கலாம், போய் பேசிப் பார்க்கறேன் "

ஸ்ட்ராஸ் தோனியிடம், "எப்படியும் உதை வாங்கப் போறீங்க, பேசாம பெல்லை ரீகால் பண்ணி கொஞ்சம் நல்ல பேர் வாங்கற வழியப் பாரு"

"அட, இது நல்ல மேட்டரா இருக்கே, அப்படியே பண்றேன்"


தோனி பெல்லை விளையாட வருமாறு அழைக்கிறார், எல்லோரும் தோனியைப் பாராட்டுகின்றனர், "அப்பாடா, இவ்ளோ அவமானத்துக்கு நடுவில ஒரு நல்ல பெயர் வாங்கியாச்சு"

முதல் பாலே பௌண்டரிக்குப் போகிறது. தோனி "ஆரம்பமே அலைக்கழிப்பா இருக்கே, இன்னிக்கு பொழுது இவங்க கூடத்தானா? ரொம்ப அடிப்பாங்களோ! ஹ்ம்ம்... இருந்து சமாளிப்போம்

Since the match has become one sided, we shift our focus to the commentary box.

இங்கிலாந்து அடித்து நொறுக்கிய பின் இந்தியாவை ஆட அழைக்கிறது. வழக்கம் போல எல்லோரும் அட்டெண்டன்ஸ் போட்டவண்ணம் வந்து செல்கின்றனர்

இதைக் காண சகிக்காமல் கங்குலி தன் கோட், டை எல்லாவற்றையும் கிழித்துக் கொள்கிறார். "அடப்பாவிகளா, நான் எவ்வளவோ உணர்ச்சி பூர்வமா நாட்வெஸ்ட் சீரீஸ் ஆடினேன், என் மானத்தை வாங்கறாங்களே, அதுவும் நான் வளர்த்த பசங்களே இப்படி பண்றாங்களே"

கங்கூலியைப் பார்த்து நாசீர் நக்கலாக "அன்னிக்கு நீயா பனியனை கழட்டினே, இன்னிக்கு எங்க டீம் உங்காளுங்க பனியன், பான்ட், ஜட்டி உள்பட எப்படி உருவறாங்க பாரு, பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம், ஹஹஹா"

ஹர்ஷா போக்லே, "கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது"

கவாஸ்கர், "பெரிய நாட்டாமை, வந்துட்டார், போயாங்க, மானம் கப்பலேறுது"

அக்ரம், "40 வருஷமா கிரிக்கெட் ஆடறீங்க, இன்னும் பாஸ்ட் பௌலிங் face பண்ண தெரியலையே உங்களுக்கு"

ஜெப்ரி, " இப்படித்தான் 1980ல என்ன ஆச்சுன்னா,..."

ரவி சாஸ்திரி , " உங்க திருவாயை மூடறீங்களா Mr. ரேடியோ வாயா"

இந்திய அணியின் விக்கெட் மள மளவென்று சரிகிறது. டெண்டுல்கர் மட்டும் கொஞ்சம் நின்று ஆட முயற்சிக்கிறார், அதைப் பார்த்து கவாஸ்கர், "இவரைப் பார்த்தா கண்டிப்பா இன்னிக்கு டபுள் செஞ்சுரி நிச்சயம், இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு"

நசீர், "யோவ் காமெடி பீஸ், டீம் டோட்டல் 200 வருதான்னு பாரு முதல்ல"

கங்கூலி, "ஹர்ஷா, இந்த ஆள் ரொம்ப நிறவெறியா பேசறான், சரியில்ல"

ஹர்ஷா, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார் (வாய் வார்த்தையாவே இருக்கே, கைகலப்பா இருந்தா நமக்கு இன்னும் நல்ல TRP ரேட்டிங் கிடைக்கும்)

யுவராஜ் களமிறங்குகிறார், "எப்படியும் அடிக்க முடியாது, பஜ்ஜி மாதிரி நாமளும் எதாச்சும் கோல்மால் பண்ணி எஸ்கேப் ஆயிடணும், இல்லேன்னா சீரீஸ் முழுக்க நம்மள தோல் உரிச்சு நிரந்தரமா வீட்ல உட்கார வெச்சிடுவாங்க:

Bresnan வீசும் பந்து யுவராஜ் கையை உரசிக்கொண்டு செல்கிறது. "ஐயா புண்ணியவானே, நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க, இதை வெச்சே எப்படி வீடு கட்டறேன்னு பாரு"

இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருந்த டெண்டுல்கரும் LBW ஆகி வெளியேறுகிறார்

அக்ரம் கவாஸ்கரைப் பார்த்து, "அப்புறம் என்ன, மங்களம் பாடிட வேண்டியது தானே"

கவாஸ்கர், "எனக்கு இன்னும் இஷாந்த் ஷர்மா மேல நம்பிக்கை இருக்கு"

கங்கூலி, "யோவ், உன் நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா? கொஞ்சமாச்சும் நியாயமா நடந்துக்கோ"

ஹர்ஷா ஹர்பஜன் ஆடுவதைப் பார்த்து, "இந்தியாவுல நடந்த மாதிரி இங்கயும் எதாவது மேஜிக் நடக்கலாம்"

ஜெப்ரி "யோவ் சோடாபுட்டி, அவங்களே கடுப்புல இருக்காங்க, நீ லீட் எடுத்துக் குடுத்து இன்னும் கோள் மூட்டறியா?"

நசீர், "விஜய், அஜீத், விஷால், தனுஷ் இவங்க நாலு பேரும் சூப்பர்மேன் மாதிரி வந்து ஆடினாக் கூட உங்களைக் காப்பாத்த முடியாது, ரஜினி வேணா ஒரு ட்ரை பண்ணலாம், பட் அவருக்கும் உடம்பு சரியில்ல"

கங்கூலி, "ஆஹா, தேங்கா மண்டையன் ரொம்ப இன்சல்ட் பண்றானே"

ரவி சாஸ்திரி, "இவங்க ஆடற வேகத்தைப் பார்த்தா ஏதோ கிளப்பல போய் போல் டான்ஸ் பாக்கப் போறாங்கன்னு நினைக்கறேன்"

அக்ரம், "அப்படியா, முடிஞ்சா நமக்கும் ரெண்டு பாஸ் வாங்கிடுப்பா"

"டோன்ட் வொர்ரி பாய், காலையிலேயே வாங்கிட்டேன்"

மேட்ச் முடிகிறது, பரிசளிப்பு விழாவில் தோனியை அழைக்கிறார் நசீர்:

ஒரு No .1 டீம் மாதிரி நீங்க ஆடலையே?

தோனி, "உனக்கு இதைத் தவிர வேற எந்தக் கேள்வியும் எழுதித் தரலையா? போன டெஸ்ட் மேட்ச்லயும் இதைத் தான் கேட்டே"

"நீங்களும் அதே மாதிரி தானே ஆடறீங்க, முன்னேற்றமே இல்லையே?"

"அது வந்து, எங்களுக்கு நேரம் சரியில்ல, அதனால தான் இப்படி கேவலமா ஆடறோம்"

நசீர் ரகசியமாக "இது எங்க ஏரியா தம்பி, உள்ளே வராதே"

தோனி, "இந்த மிரட்டல் அடியெல்லாம் நாங்க நிறைய பார்த்தாச்சு, நவம்பர்ல அங்க தான் வரணும், mind it"

சரி, அடுத்த டெஸ்டுக்கு எதாச்சும் விசேஷமா யோசிச்சிருக்கீங்களா?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை, பசங்க எல்லாம் திறமைசாலிங்க தான், ஸ்டார்டிங் ட்ரபுள், அவ்வளவு தான்

நசீரிடம் உதார் விட்டாலும் உள்ளுக்குள் "zaheer காயம்னு ஸ்ரீசாந்தை போட்டேன், கம்பீர் காயம்னு யுவராஜை போட்டேன், இப்போ அடுத்த டெஸ்டுக்கு யாரைப் போடறதுன்னே தெரியல, பேசாம நாம injure ஆயிடலாமா?" என்று யோசித்தவாறே கலக்கத்துடன் வெளியேறுகிறார்.

தொடரும்...

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...