ஓய்ந்து போயிருக்கும் தோனியைப் பார்த்தவாறே சேவாக், "என்னய்யா, தாடியெல்லாம் விட்டிருக்கே, புதுசா எதாச்சும் ஷேவிங் கிரீமுக்கு விளம்பரம் பண்றியா?"
"யோவ் வந்ததும் வராததுமா நக்கலா?", நானே எதைத் தின்னா பித்தம் தெளியும்னு குழம்பிப் போயிருக்கேன், நீ வேற நிலைமை புரியாம நோண்டாதே"
"என்னய்யா, இதுக்கெல்லாமா போய் அலட்டிக்கறது? ஜாலியா இரு"
"எப்படி இருக்கறது?" உடம்புல காயம் பட்டா ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம், ஆனா மனசில பட்ட காயம்?"
"அடடா, மெக்டோவல் கம்பெனி கூட டீலிங் வெச்சுக்காதேன்னு சொன்னேன், இப்ப பாரு, குடிக்காமலேயே தத்துவத்தை கொட்டறியே"
"ஆனா ஊனா அதையே கிண்டுங்க"
"பின்ன, அது நீ பண்ணின பெரிய தப்பு, நீ முடி வெச்சாலும் சரி எடுத்தாலும் சரி, உடனே அதைக் காப்பியடிக்க ஒரு கூட்டமே தயாராயிருக்கு, அப்படி இருக்கும்போது இப்படி பொறுப்பில்லாம இருக்கியே?" IPLல கூட அந்த ஆள் ஸ்பான்சர் பண்ணின டீம் எல்லாமே எப்படி ஊத்திக்கிச்சு பார்த்தீல்ல
இதற்கிடையே மற்ற வீரர்களும் அங்கே ஆஜராகின்றனர்
கம்பீர், "பெரிய தலைங்களுக்கெல்லாம் இது போராத காலம் போல - ஒபாமா, மன்மோகன் சிங், நீங்க"
லக்ஷ்மன், “நமக்கு கண்டீஷன்ஸ் சூட் ஆகரதுக்கே ரெண்டு டெஸ்ட் தேவைப்பட்டது, இதுல இன்னும் மூணு பேர் புதுசா வந்திருக்காங்க, அவனுங்க செட் ஆவறதுக்குள்ள சீரீஸ் முடிஞ்சிடும்
தோனி, 'உங்களுக்கென்ன, டெஸ்ட் முடிஞ்சவுடனே ஆட்டிக்கிட்டு போயிடுவீங்க, நான் தானே இருந்து மிச்சத்தையும் சமாளிக்கணும்"
டிராவிட், "நாங்க எடுக்காதீங்கன்னு சொன்னோமா?, எங்களுக்கு வயசாயிடுச்சு, ODI எல்லாம் ஆடமுடியாதுன்னு நீங்களாத்தானே ஒதுக்கி வெச்சீங்க”
சச்சின், "btw ஜாமீ, ஏன் திடீர்னு ரிடயர்மன்ட் அறிவிச்சீங்க?"
"உங்க தொல்லை தாங்கமுடியாமத்தான், (sachin smiles), போன ரெண்டு டெஸ்ட்ல செஞ்சுரி அடிச்சதுல கொஞ்சம் நல்ல பேர் வந்திருக்கு, அதை அப்படியே மெயின்டைன் பண்ணிக்கிட்டு வெளிய போயிடணும்னு முடிவு பண்ணினேன் அதான்
"ஒ அப்படியா?"
கம்பீர், "நீங்க கூட நூறாவது செஞ்சுரி அடிச்சதுக்கப்புறம் ரிடயர்மன்ட் அறிவிக்கப் போறீங்களாமே?
"இது நீ கேள்விப் பட்டதா இல்லை விருப்பமா?
கம்பீர் மனசுக்குள், "புரிஞ்சா சரி"
செஹ்வாக், "ஏம்பா தோனி உம்முன்னு இருக்கே? அதான் தலைக்கு மேல போயிடுச்சுல்ல, இனி ஜாண் போனா என்ன முழம் போனா என்ன!"
தோனி, "உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட பீலிங்கே இல்லையாப்பா?"
ராயினா, "எதுக்கு? நாங்களாச்சும் எதாச்சும் ஒரு இன்னின்க்ஸ்ல, அட் லீஸ்ட் பயிற்சி மேட்ச்லயாவது அடிச்சுடறோம், உங்களுக்கு பேட்டே பிடிக்கத் தெரியலையே தலை"
"ராயினா, நீயுமா?"
முகுந்த், "அவராச்சும் சாந்தமா சொல்றாரு, மிச்ச எல்லாரும் காறித் துப்பாத குறை தான்"
"டேய் என்னடா துள்றே?"
"எப்படியும் நான் இனிமே எந்த மேட்ச்லயும் ஆடப்போறதில்ல, அதுவுமில்லாம வந்ததுக்கு ஒரு செஞ்சுரியும் போட்டுட்டேன், அந்த தைரியம் தான்"
எல்லாம் உன் நேரம்டா"
சேவாக், "அட விடுங்கப்பா, இன்னிக்கு மேட்ச் எப்படி அப்ரோச் பண்றதுன்னு யோசிங்க"
தோனி, "அதை விட முக்கியம் இன்னிக்கு யாரெல்லாம் ஆடறதுன்னு முடிவு பண்ணனும், எந்த நாய் எப்ப காலை வாருதுன்னே தெரிய மாட்டேங்குது"
டிராவிட், "இதுல யோசிக்க என்ன இருக்கு? ஹர்பஜனுக்குப் பதிலா மிஸ்ரா, சகீருக்குப் பதிலா முனாப், யுவிக்குப் பதிலா கம்பீர், முகுந்துக்குப் பதிலா சேவாக்"
பிரவின் இஷாந்திடம் "வெளிய போற திமிரு, அதான் பெரிசு பொளக்குது"
தோனி, "என்னய்யா இவ்ளோ ஈசியா சொல்ல்லிட்டே?"
லக்ஷ்மன், "பின்னே, இதுக்கு சாமி முன்னாடி சீட்டு எழுதிப் போட்டா பாப்பாங்க?"
முனாப் "முதல்ல மேட்ச் நடக்குதான்னு பாருங்க , ஊரெல்லாம் ஒரே கலவரமாம்"
தோனி, " நடக்காம இருந்தா ரொம்ப க்ஷேமம் "
சச்சின், "ஏன், பேட் பிடிக்க கஷ்டமா இருக்கா?"
"ஹிஹி, கம்பனி சீக்ரட்டை வெளிய சொல்லாதீங்க சார்"
கம்பீர், "அது எப்படிங்க திடீர்னு இப்படி அட்டு மாதிரி ஆயிட்டீங்க?"
"எனக்கு நேரம் சரியில்லையாம் , இன்னும் 6 மாசத்துக்கு இப்படித் தானாம் "
Sehwag, “dont worry my dear friend, ஆனி போய் ஆடி போய் ஆவணியும் வரப்போவுதில்ல, நீங்க டாப்பா வருவீங்க,
மிஸ்ரா பிரவீனிடம் "இங்கிலாந்து இந்தியா வரும் போதும் நாம உதை வாங்கப் போறோம்னு தலை எப்படி சூசகமா சொல்லுது பாரு"
இஷாந்த் " ஏண்ணே, ஏற்கனவே எல்லாத்தையும் பிக்ஸ் பண்ணிட்டாங்களோ? நாம தான் உண்மை தெரியாம ரொம்ப சீரியஸா ஆடறோமா?"
பிரவீன் 'எவனுக்குத் தெரியும்?, நமக்கு நல்லா விக்கெட் விழுது, அந்த வரையில சந்தோசம் தான் "
மிஸ்ரா, "உங்களுக்கென்னப்பா, என் நிலைமையைப் பாரு, போட்டிக்கு எவனும் இல்லைன்னு நம்பி இருந்தேன், இந்த ஓஜா வந்துட்டான், போற போக்கைப் பார்த்தா நெட்ஸ்க்கு கூட கிரௌன்ட்ல கால் வெக்கவே முடியாது போலிருக்கு"
இந்நிலையில், கோச் டங்கன் உள்ளே நுழைகிறார் "என்னப்பா, எல்லாரும் ரிலாக்ஸ்டா இருக்கீங்க, ப்ராக்டீஸ் எதுவும் பண்ணலியா?
தோனி, "அதெல்லாம் உடம்பு நல்லா இருக்கறவங்க தான் பண்ணுவாங்க, இங்க எல்லாரும் எதாச்சும் ஒரு பார்ட் டேமேஜ் ஆகி உக்காந்திருக்கோம், ப்ராக்டீஸ் பண்ணினா இன்னும் நாசம் ஆயிடும்"
"என்னய்யா இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றே? நீ ஒரு கேப்டன்"
"நானா கேட்டேன், அவனுங்களா வேற யாருமில்லைன்னு என்னை கேப்டனா போட்டாங்க, ஜெயிக்கும்போது தலையில தூக்கி வெச்சு ஆடினாங்க, இப்ப ரெண்டு டெஸ்ட் தோத்த உடனே போட்டு மிதிக்கறாங்க, நான் பாட்டுக்கு ஜாலியா அக்கடான்னு சுத்திக்கிட்டு இருந்தேன், என்னைப்போய் பொறுப்பா இரு, பருப்பா இருன்னு சொன்னா.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!"
"என் கரியர்ல இப்படி ஒரு டீமை நான் பார்த்ததே இல்லை"
கம்பீர், "சரி இப்ப பார்த்துக்கோங்க,"
"ஷட் அப், ஒரு கோச் கேமை எப்படி அணுகறதுன்னு தான் சொல்லித் தருவான், basic பிட்நெஸ் கூடவா உங்களுக்கு சொல்லித் தரணும்? உங்க டீமே காமெடியா இருக்கு, டெஸ்ட் நல்லா ஆடத் தெரிஞ்சதே மூணு பேர், அவங்களுக்கு வயசாயிடுச்சு, மீதி இருக்கற 13 பேரும் சரியான ஈயம் பித்தாளை பேரிச்சம்பழம் கேசுங்க. இதுல திறமை வாய்ந்த இளைஞர் அணின்னு பெருமை பேசறீங்க. மூணாவது டெஸ்ட்லயும் எதாச்சும் ஏடாகூடமா ஆச்சு, அவ்ளோ தான், என் கிரிக்கெட் கரியருக்கு எண்டு கார்டு போட்டுட வேண்டியது தான். அனாவசியமா ஒரு கிழவனோட வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க. - என்று சொல்லிவிட்டு கடுப்புடன் வெளியேறுகிறார்
ராயினா, "என்னங்க இது, இப்படி எகிறுது பெரிசு?"
லக்ஷ்மன், " வேற ஒண்ணுமில்ல, ஜாயினிங் போனசா லம்பா ஒரு அமௌன்ட் கிடைச்சுது அந்தாளுக்கு, எல்லாத்தையும் ஷேர் மார்க்கெட்ல போட்டாரு, இப்ப மார்க்கெட் டான்ஸ் ஆடுது, அதான், அந்த கடுப்பை இங்க கட்டிட்டுப் போறாரு"
மிஸ்ரா "நான் கூட நிஜமாதான் திட்டறார் போலன்னு நினைச்சேன்"
தோனி, "இருந்தாலும் அவர் சொல்றதுலயும் நியாயம் இருக்கு, வேற எந்த டீம்லயாவது இந்த அளவுக்கு இஞ்சுரி கேஸ் இருக்கா?"
திடீர்ன்று சச்சின் செல்போன் ஒலிக்கிறது, எடுத்துப் பேசுகிறார், பேசப்பேச அவர் முகம் ரண கடூரமாகிறது.
செஹ்வாக், "என்னாச்சு சார்?"
"எவனோ ஒருத்தன் என் பெயர்ல 4 -5 ATM கார்டு வெச்சிருக்கானாம், போலீஸ் பிடிச்சிட்டாங்க, அதன் என்கிட்டே விசாரணை பண்றாங்க, அந்த கார்டு எல்லாம் என்னோடதா இல்லையான்னு"
ராயினா கம்பீரிடம் "அவ்ளோதான், இனிமே இந்த ஆள் மைண்ட்ல இதான் ஓடும், மேட்ச் அவ்ளோ தான்"
தோனி, "அதெல்லாம் கவலைப்படாதீங்க சார், எதாச்சும் சில்லறை கேசா இருக்கும்" பிறகு எல்லாரையும் பார்த்து "அப்புறம் என்னப்பா, டிராவிட் சொன்ன மாதிரி இன்னிக்கு டீம் வெச்சிக்குவோம், சாஹா, நீ ஆடறியா? நான் வேணா உக்காந்துக்கறேன், ராயினா கேப்டனா இருப்பான்"
ராயினா, "இது வரைக்கு வாங்கினதே போதும்ணே, இன்னும் கேப்டனா வேற அடி வாங்க சொல்றீங்களா?"
"கம்பீர் நீ என்னப்பா சொல்ற?"
"நான் என்ன சொல்றது தலைவரே, நீங்க தான் சூப்பர் கேப்டன், உங்களால முடியும் தலை, தைரியமா இருங்க"
தோனி மனசுக்குள் "எவனும் சிக்க மாட்டேங்கறானே, பெரிசுங்கள கேக்கலாம்னா எல்லாம் உஷார் பார்ட்டிங்க, பேசாம முகுந்தைப் போட்டுடலாம" என்று நினைத்தவாறே முகுந்தைப் பார்க்கிறார். முகுந்துக்கு தோனியின் பார்வையின் அர்த்தம் புரியவே, " என் கிரிக்கெட் வாழ்க்கைல விளக்கேத்தி வைக்கலேன்னாலும் பரவால்ல, இப்படி கொள்ளி வைக்காதீங்க"
அடுத்து எங்கே நம்மளைப் பார்ப்பாரோ என்ற பயத்தில் எல்லோரும் பிசியாவது போல் பாவ்லா செய்யவே,
தோனி, "சரி சரி ரொம்ப பயப்படாதீங்க சும்மா உங்கள எல்லாம் டெஸ்ட் பண்ணினேன், வழக்கம் போல நானே....நின்னு அடி வாங்கிக்கறேன் - எவ்வளவோ பண்ணிட்டேன், இதைப் பண்ண மாட்டேனா?"
Jayaraman
New Delhi
As ususal, Kalakkitteenga Jayaraman.
ReplyDelete