Wednesday, September 14, 2011

டெர்ரர் ராஜேந்தர் அட்டாக்ஸ்கமெண்டரி டீம் இந்தியன் டீமை ரொம்பவும் கிண்டல் பண்ணுவதால் ஸ்ரீகாந்த் நம்ம T ராஜேந்தரை லண்டனுக்கு அனுப்பி அவர்களுக்கு பதிலடி கொடுக்க நினைக்கிறார்:

கங்கூலி, “இங்க எதுக்கு வந்தீங்க?”

"கமெண்டரி பாக்ஸ்ல உக்காந்துகிட்டு ஆனந்த விகடன் மாதிரி எல்லாருக்கும் மார்க் போடறீங்கன்னு புகார், அதான் உங்களுக்கு மார்க் போடலாம்னு வந்திருக்கேன்"

"அதுக்கு?
இன்னிக்காவது ஷேவ் பண்ணிட்டு டீசென்டா வரக்கூடாது, இந்த மூஞ்சியை ஸ்டார் கிரிக்கெட்ல காட்ட முடியுமாய்யா?"

"நான் மனசை ஷேவ் பண்ணி சென்ட் அடிச்சு சுத்தமா வெச்சிருக்கேன், உங்களை மாதிரி மைதானத்துல இருக்கும்போது ஒரு பேச்சு, கமெண்டரிக்கு வந்தா ஒரு பேச்சுன்னு வெளி வேஷம் போடத் தெரியாது."

"என்னய்யா, ஆரம்பமே திமிரா?"

"தமிழன்டா, அதனால இந்த சிங்கம் கொஞ்சம் திமிரும்டா"

என்னது, டாவா?

"உன்னை எல்லாரும் தாதான்னு தானே கூப்பிடறாங்க, நான் "தா"வும் போடுவேன், "டா"வும் போடுவேன், ஆனா நீ பேசறதுக்குத் தடா மட்டும் போட மாட்டேன்"

அது போவட்டும், நீயெல்லாம் எப்படிய்யா சினிமாவுக்கு வந்தே?

"என்கிட்டே இருக்கு சரக்கு, அதுக்கு இன்னும் விலை இருக்கு, தமிழர்கள் மனசு வெள்ளை, நீ நல்லவனா இருந்தா உனக்காக அவங்க உள்ளம் போகும் கொள்ளை, துரோகம் பண்ண நினைச்சா உன் வீடே போகும் கொள்ளை"

நான் என்ன கேக்கறேன் நீங்க என்ன சொல்றீங்க?

அது தமிழ் தெரியாத குற்றம், மறக்கிறேன், ஆனா மன்னிக்க மாட்டேன்.

ரொம்ப ஆணவமோ?

இல்லை தன்னம்பிக்கை, எனக்கு பதினாறு மொழிகள் தெரியும், பெங்காலியும் புரியும். பேசறேன் கேக்கறியா?அமி தோமார் கே பாலோ பாஷி. எங்க, நீ இதை தமிழ்ல சொல்லு பாக்கலாம்?

யோவ், அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமாய்யா?

தெரியும்டா, நான் உன்னை காதலிக்கறேன்னு அர்த்தம். பொருள் தெரியாம பேசறது, பொருளே இல்லாம பேசறது, பொருள் வாங்கிட்டு பேசறது இதெல்லாம் நீங்க செய்யறது. நான் சிங்கக் குட்டி, நான் பெத்ததுங்களோ தங்கக் கட்டி.

ஆனா ஊர்ல வேற மாதிரி பேசறாங்களே?

"வேற மாதிரி பேசினாத்தான் ஊரு, என்னைப் பத்திப் பேச அவங்க யாரு, இவ்ளோ நேரம் என்னை நோண்டறியே, நீ கொஞ்ச நேரம் ஆறு. இப்ப நான் எப்படிப் பேசறேன் பாரு".

T R தலையை சில்லுப்பிக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார், கங்குலிக்கு ஜுரம் வரும் போல் இருக்கிறது. ஒட்டு மொத்த கமெண்டரி டீமும் திகிலுடன் பார்க்கிறது:

"டேய் தாதா, என்னைப் பொறுத்தவரைக்கும் நீ ஒரு சாதா, கிரிக்கேட்லேர்ந்து உன்னை தொரத்தினாரு சாப்பெல், நக்மா பின்னாடி நீ சுத்தினதுக்காக உன் பொண்டாட்டி கழட்டினாங்க அவங்க செப்பல்"

கங்கூலி நடுவில் புகுந்து, "என்னை இவ்ளோ கிண்டல் பண்றீங்களே, உங்களுக்கு கிரிக்கெட்ன்னா என்னன்னு தெரியுமா?

"அதை நான் சொல்ல மாட்டேன், 1990sல என் தம்பி மயில் சாமி என்னைப் பற்றி ஒரு கவிதை வாசிச்சிருக்கான் படிக்கறேன் கேளு:

"டேய், போடுறா ஆடறேன்,

டேய் கபிலு, இந்த அவுட்டுக்கு நோ அப்பீல் டா,

டேய் மார்ஷல், உன்னை வெஸ்ட் இண்டீசுக்கு பண்ணிடுவேன்டா பார்சல்,

பின்னி, உன் பாலை நான் காட்டுறேண்டா பின்னி, நான் குடிச்சிருக்கேன் பச்சைத் தண்ணி, என் பொண்டாட்டி தாண்டா உனக்கு அண்ணி."

அது மட்டும் இல்லை, என் பையன் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் ஆடினானே பாக்கலியா நீங்க? அவனுக்கு முழு கோச்சிங் நான் தான்.

மேலும் வெறியாகி, "இங்கிலாந்து டீம்ல இருக்குறான் குக்கு, அவன் ஆடறதைப் பார்த்து நம்ம பசங்க ஆயிட்டாங்க மக்கு, ஹர்ஷா போகலே வெச்சிருக்கான் விக்கு, டெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் மனசு அடிக்குது பக்கு பக்கு"

ஹர்ஷா போக்லே, " இத பாருங்க மிஸ்டர், கொஞ்சம் அடக்கி வாசிங்க, இப்படி கையை காலை ஆட்டாதீங்க, அப்புறம் மக்கள் கிங் காங் படம் ஓடுதுன்னு நினைச்சுக்கப் போறாங்க. ஏற்கனவே TRP ரேட்டிங் செம அடி.

"மிஸ்டர், என்கிட்டே உன் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசாதே, நான் M.A ஆங்கில இலக்கியம், இங்கிலீஷ் பேச ஆரம்பிச்சா உனக்குப் புடிக்கும் பைத்தியம், அப்புறம் பாக்கணும் ஏற்காட்டில உனக்கு வைத்தியம்."

ஒண்ணு தெரிஞ்சுக்க , T R = டெர்ரர் ராஜேந்தர், தெரியாமத் தான் கேக்கறேன், கிரிக்கெட்டே விளையாடாத நீ இங்க என்ன பண்றே?

சாஸ்திரி, "உங்களுக்கும் கங்குலிக்கும் தானே மீட்டிங் பிக்ஸ் பண்ணியிருந்தாங்க?"

"அவங்க யார்றா மீட்டிங் பிக்ஸ் பண்ண?, முதல்ல உங்களை பிக்ஸ் பண்ணனும்"

கவாஸ்கர், " வாட் டூ யு மீன்?"

"ஐ மீன் வாட் ஐ மீன், சொல்றேன் கேட்டுக்க, (டேபிளில் தாளம் போட்டவாறே) ஜுஜு ஜும் தா ஜுஜு ஜும் தா..."

ஹெல்ல்லோ, இது சூப்பர் சிங்கர் இல்லை.."

"குறுக்கப் பேசாதீங்க, நான் பேசறதை முதல்ல கேளுங்க", T R வீறு கொண்டு எழுகிறார்:

என்ன சொன்னீங்க? TRP ரேட்டிங் அடி வாங்குதா? TR வந்தாலே TRP எகிறும்னு எல்லாருக்கும் தெரியும் தம்பி, கமெண்டரி சொல்ற ஆளுங்களைப் பாருங்க, ஒருத்தன் தொடர்ந்து டக் அடிச்சவன், இன்னொருத்தன் 110 பாலுக்கு 40 ௦ ரன் அடிச்ச புண்ணியவான் - வடிவேலு பாணியில சொன்னா ஐயோ ஐயோ"

கங்கூலி மனசுக்குள் "அப்பாடா, நம்மளை எதுவும் சொல்லலை"

"டேய் கருங்காலி, நீ மனசுக்குள்ள என்ன நினைக்கறேன்னு தெரியும்டா, நீயும் அதே குட்டையில ஊறின மட்டை தாண்டா. கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளியும் வெக்கமில்லாம KKRல என்னை சேர்த்துக்கலைன்னு பொது மக்களை கிளப்பி விட்டு பேஸ்புக்ல அரசியல் பண்ணினவன் தானே நீ.

ஸ்ரீகாந்த் தமிழன், ஸ்ரீனிவாசன் தமிழன், அவங்களோட வளர்ச்சி உங்களுக்குப் பொறுக்கலை, தமிழன் வளர்ந்தா எவனுக்குமே புடிக்காது. WV ராமன், பத்ரிநாத், அபினவ் முகுந்த், இன்னும் எத்தனையோ......அதான் டீம் செலெக்ஷன் சரியில்ல, ஸ்ரீநிவாசன் தேவையில்லாம தலையிடறார்னு கிளப்பி விடறீங்க. தோனி கேப்டன்சி சரியில்லைன்னு புரளி பேசறீங்க, ஏன்னா அவன் CSKவுக்கு விளையாடறான்."

ஹர்ஷா போகலே, "இங்க நடக்கறதுக்கும் நீங்க பேசறதுக்கும் சம்பந்தமே இல்லீங்களே?"

"எல்லாத்துக்கும் சம்பந்தம் இருக்கு, டேய் கங்கூலி, ஒண்ணு மட்டும் சொல்லு, நீயும் டால்மியாவும் ஓருடல் ஈருயிரா இருந்தீங்க, உனக்கு வேண்டியதை நீ பண்ணிக்கிட்ட, அவருக்கு வேண்டியதை அவரு எடுத்துக்கிட்டாரு. அது மாதிரி ஸ்ரீனிவாசனும் தோனியும் இருக்காங்க, அதுல உனக்கு ஏண்டா வயிதெரிச்சல்?"

"யோவ், நான் எப்பய்யா தோனியைப் பத்தி தப்பா சொன்னேன்?

"நீ சொல்றது எல்லாமே தப்பு, ரொம்ப பேசினா வெச்சிடுவேன் ஒரே அப்பு"

கவாஸ்கர், "அப்படியே சொன்னாலும் என்ன தப்பு? இப்படியா கேவலமா தோப்பாங்க? எங்களுக்கு ரொம்ப அவமானமாப் போச்சு, நாசெர் ஹுசேன் எப்படி கிண்டல் பண்றான் தெரியுமா? கழுதைங்கன்னு சொல்றான்"

"கரெக்டா தான் சொல்றான்"

சாஸ்திரி "எப்படி?"

"இந்தியர்களை கிண்டல் பண்றான்னு தெரியுது, நீ உண்மையிலேயே சோத்துல உப்பு போட்டு சாப்பிடறவனா இருந்தா இந்நேரம் கமெண்டரியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு இந்தியாவுக்குப் போயிருக்கணுமே? ஏன் போகலை? அட் லீஸ்ட், அவன் மேல எதாச்சும் மான நஷ்ட வழக்காவது போட்டீங்களா? அதாவது இன்னமும் பறங்கித் தலையன் குதிரை ஏறுவான், நீங்க அவனுக்காக பேன்ட்டை கழட்டிட்டு......ஐ ஆம் சாரி, குனிஞ்சு குடுப்பீங்க"

"சார் நீங்க பேசறது சரியில்ல"

"உண்மை எப்பவுமே கசக்கும், மனசாட்சியை உதைக்கும். நான் சொல்றது அத்தனையும் உண்மை, கேட்டீங்கன்னா உங்களுக்கு உண்டு நன்மை, இல்லேன்னா என் பேச்சில் தெரியும் வன்மை"

"சரி சொல்லுங்க" (வேற வழி?)

"இப்போ இருக்கற டீமை குறை சொல்றதுக்கு உங்களுக்கு இல்லை தகுதி, நீங்க எல்லாரும் பேசறது ரொம்ப மிகுதி, மீறிப் பேசினா ஆக்கிடுவேன் உங்க கை கால் பகுதி பகுதி (தலையைக் கொத்தி விடுகிறார்).

"நீங்க ஸ்ரீநிவாசன் கிட்ட காசு வாங்கிட்டீங்களா? இப்படி சப்போர்ட் பண்றீங்க?"

"டேய் சாஸ்திரி, ரொம்பப் பேசினா உனக்கு போடுவேன் பிளாஸ்திரி. அதுல நான் மேஸ்திரி."

ஹர்ஷா கங்குலியிடம் 'இந்த ஆளை இப்பவே நிறுத்தினாத்தான் உண்டு, எதாவது செய்ங்க"

கங்கூலி, 'முடிவா என்ன தான் சொல்றீங்க?"

"நீங்க முடிவை சொல்லாதீங்கன்னு சொல்றேன், நீ என்ன பெரிய நாட்டாமையா?

"யோவ், நானும் பாக்கறேன், என்னையே கறை வெச்சு பங்கம் பண்றே, ஏன்?"

"என்னைப் போய் ஷேவ் பண்ணிட்டு வான்னு சொன்னியே, எனக்கு அடையாளமே என் தாடி தான், நான் எடுக்க மாட்டேன் தாடி, இந்த தாடிக்காகவே என் பின்னாடி சுத்தறாங்க மும்தாஜுன்னு சூப்பர் லேடி, நான் படம் எடுக்க செலவு பண்ண மாட்டேன் பல கோடி, ஏன்னா அப்புறம் நிக்கணும் தெருக்கோடி, நீ எங்க ஊர்ப்பக்கம் வாடி, வந்தீன்னா ஆயிடுவ டெட்பாடி.

கடைசியா ஒண்ணு சொல்றேன், உங்களுக்கெல்லாம் காசைக் காட்டினாத்தான் வரும் பேச்சு, எனக்கு அது தான் உயிர் மூச்சு. மூச்சிருக்கறவரைக்கும் என் பேச்சிருக்கும், நான் பேசற வரைக்கும் என் மூச்சிருக்கும். என் பேச்சைக்கேட்டு நீங்கல்லாம் ஆயிட்டீங்க சைலென்ட், நீங்க ரொம்பப் பேசினா நான் ஆயிடுவேன் வயலென்ட். குதிரைக்கு இன்னொரு பேரு போனி, உங்களுக்கெல்லாம் கூடிய சீக்கிரம் ஆப்பு வைப்பார் டாக்டர் தோனி!

யக்கா டும்டும்டும், ஆ.... டும்டும்டும்...

ஒட்டு மொத்த கமெண்டரி டீமும் T R போன பின்னரும் விக்கித்து நிற்கின்றனர்

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...