Tuesday, September 27, 2011
தல மீட்ஸ் தல
தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் தோனியும், எவ்வளவு முறை தோற்றாலும் மீண்டு எழுந்து வரும் நம் தல அஜீத்தும் சந்தித்த போது:
"வணக்கம் Mr . தல, மங்காத்தா உங்களை தூக்கி நிறுத்திடுச்சு போலிருக்கு? செம குஷியா இருக்கீங்க போல?
"எல்லாப் படமும் ஓடணும்னு தான் உழைக்கறோம். அதுல சில படங்கள் காலை வாரிடுது. இட்ஸ் ஆல் இன் தி கேம். யங் டேலன்டோட எனக்கு எப்பவுமே நல்லா வொர்க் அவுட் ஆவுது. சூர்யாவோட வாலி, சரணோட பல படங்கள், விஜயோட கிரீடம், இப்போ வெங்கட்டோட மங்காத்தா"
"ஆமாம் அது என்ன தல? அஷ்வின் பத்ரி எல்லாம் என்னை அப்படித்தான் கூப்பிடறாங்க.
"தலன்னா ஹெட், ஐ மீன் லீடர்னு அர்த்தம்"
"ஓஹோ, நான் கூட இந்தப் பசங்க என்னை கலாய்க்கிறாங்க போலிருக்குன்னு நினைச்சேன்,ஆமாம் லீடர்னு சொல்றீங்களே, அப்படின்னா நீங்க எதாச்சும் கட்சி நடத்தறீங்களா?"
“என்னோட ஒரு படத்துல சாதாரணமா வந்த வசனம் அது, மக்கள் பிரியப்பட்டு அதை பெரிசு பண்ணிட்டாங்க, என்னை தேவையில்லாம அரசியலுக்கு இழுக்காதீங்க" பேச்சில் உஷ்ணம் கூடுகிறது.
"ஓகே ஓகே கூல்"
அஜித், "பட் ஒரு விஷயம், அடிக்கடி தலன்னு சொல்றாங்கன்னா கொஞ்சம் உஷாரா இருங்க, ஏன்னா தல தலன்னு சொல்லி காலை வாரி விடறதுக்கு ஒரு கும்பல் ரெடியா இருக்கு"
"சொந்த அனுபவமோ?"
"யெஸ்"
தோனி, "என்னைக்கூட அப்படித் தான் சார் கவுத்திட்டாங்க. ரொம்ப லக்கி லக்கின்னு சொல்லி இப்போ கடைசிக்கு சாம்பியன்ஸ் லீக்ல கூட தோல்வி தொடருது."
உங்களோட லக்கி நம்பர் ஏழு தானே ?
ஆமாம்,, ஆனா ஏழை விட ஏழரை பெரிசாச்சே! திருநள்ளாறு ஒரு ட்ரிப் அடிக்கலாமான்னு பாக்கறேன்"
"ரெகுலரா கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்றது அதைவிட முக்கியம். முயற்சி தான் திருவினையாக்கும், திருநள்ளாறு இல்லை"
"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதோ?"
"அதை விட ஜாஸ்தியா என் முயற்சியையும் நேர்மையையும் நம்பறேன். நான் வீட்ல இருந்ததை விட ஆஸ்பத்திரியில இருந்த நாட்கள் அதிகம். அந்த அளவுக்கு இஞ்சூர் ஆயிருக்கேன். சினிமாவுல சம்பாதிச்ச காசுல பாதியை பைக் மற்றும் கார் ரேசுல போட்டு கைய சுட்டுக்கிட்டேன். ஆனாலும் என்னிக்குமே துவண்டது கிடையாது, இன்னமும் முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்""
தோனி மனசுக்குள் "சிக்கி சீரழிஞ்சிருக்கேன்னு எவ்வளவு நாசூக்கா சொல்றாரு"
அஜீத், "என்ன தோனி?"
தோனி,"முயற்சியெல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு, ஆனாலும் எதுவும் நடக்க மாட்டேங்குது"
"நீங்க முதல் முறையா தோல்வியை சந்திக்கறீங்க, அதான் இப்படி புலம்பறீங்க. ஆனா நான் அதோட தோள்ல கைபோட்டு போறவன், அது ஒரு கறுப்பு சரித்திரம்"
"பர்ஸ்ட் டைம் எல்லாம் ஒண்ணும் இல்லை, இதுக்கு முன்னாடி நிறைய தோத்திருக்கேன்"
"ஆனா இப்படி எழுந்திருக்க முடியாதபடி தோத்திருக்கீங்களா?"
"இல்லை"
"அதைத் தான் சொன்னேன்"
"இருந்தாலும்..."
"இன்னொரு சீரீஸ் ஜெயிச்சுட்டா சரியா போகப்போவுது, இதுக்கு போய் இப்படி பீல் பண்றீங்க?"
"என்ன சார் இவ்ளோ அசால்ட்டா சொல்றீங்க?"
"இப்படி தொடர்ந்து தோத்ததால பிசிசிஐ உங்க சம்பளத்தைக் குறைச்சிட்டாங்களா?
"இல்லை"
"சீரீஸ் தோத்ததுனால லாஸ் ஆயிடுச்சு, அடுத்த சீரீஸ் உங்க செலவுல போய் ஆடிட்டு வாங்கன்னு பிசிசிஐ சொல்றாங்களா?"
"இல்லை"
"ஸ்பான்சர்ஸ் விளம்பரத்துல ப்ரீயா நடிச்சுத் தரச் சொல்றாங்களா?
"இல்லை"
"எதுவுமே இல்லை, அப்புறம் எதுக்கு வருத்தப்படறீங்க? மிஞ்சிமிஞ்சிப் போனா கேப்டன் பதவியை விட்டுத் தூக்குவாங்க. இதே என் படம் பிளாப் ஆச்சுன்னா அதே தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் ப்ரீயா அல்லது குறைஞ்ச சம்பளத்துல பண்ணிக் குடுக்கணும். கால்ஷீட் தாராளமா குடுக்கணும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கு தலைவரே"
"கேப்டன் பதவியை விட்டுத் தூக்கிட்டாங்கன்னா அவ்ளோ தான். அப்படியே டீமை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்"
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"ஏதோ நான் கேப்டனா இருக்கறதால தான் வரிசையா ஜெயிச்சிக்கிட்டு வர்றோம்னு எல்லாரும் நம்பறாங்க. இப்படி ஊத்திக்கிட்டே போச்சுன்னா ராஞ்சிக்குப் போய் பழையபடி டிக்கெட் கிழிக்க வேண்டியது தான்"
" அப்போ உங்க திறமை மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"
"இருக்கு. இருந்தாலும் என்னை விட சூப்பரா காடா சுத்தறதுக்கு ஏகப்பட்ட பேர் வந்துட்டானுங்க. போதாக்குறைக்கு பார்த்திவ் வேற நல்லா ஆடறான். மொத்ததுல ஆப்பு ரெடியா இருக்கு"
அப்படின்னா கிரிக்கெட்டுக்கு ஒரு பிரேக் குடுங்க. அந்த கேப்ல விளம்பரம் பண்ணப் போயிடாதீங்க. உங்க பயிற்சியை தீவிரப்படுத்துங்க. திறமையை கூர்மையாக்குங்க. பிரெஷா வாங்க. வந்து கலக்குங்க"
"பிரேக் எல்லாம் விட முடியாது சார். அப்புறம் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு போட்டி"
"நீங்க பிரேக் விடலேன்னா வாழ்க்கை உங்களுக்கு பிரேக் போட்டுடும். ஒண்ணு கேக்கறேன், கிரிக்கெட் விளையாடாட்டா அடுத்த நிமிஷம் தெருவுக்கு வந்திடுவீங்களா?
"அப்படியில்ல.."
"Then What?"
"ஒரு பயம்"
"உங்களுக்கா? நீங்க சிங்கம் தோனி"
"நீங்க வேற சும்மா சிங்கம் புலின்னு உசுப்பேத்தாதீங்க சார். நானும் மனுஷன் தான், நல்லாவே பயப்படுவேன் "
"வாழ்க்கையில பயம் இருக்கலாம், பயமே வாழ்க்கையாயிடக்கூடாது.
என்னவோ போங்க, அது சரி, நீங்க நடிச்ச பல படங்கள் சூப்பர் பிளாப் ஆயிருக்கே, அப்புறம் எப்படி உங்களை பாக்ஸ் ஆபீஸ் கிங்குன்னு சொல்றாங்க?"
"அதான் முன்னாடியே சொன்னேனே, காலை வாரற கும்பல் ஒண்ணு எப்பவும் இருக்கும்னு. அதனால வந்த வினை தான் அது. இருந்தாலும் ஒபெநிங் கலெக்ஷன் எப்பவுமே திருப்தியாத் தான் இருக்கும்".
"ஒபெநிங் சரியாய் இருந்தா போதுமாங்க? பினிஷிங் ஒழுங்கா இருக்க வேண்டாமா?"
என்னப்பா உள்குத்தா? சுத்தமா வேஸ்டுன்னா என்னை மாதிரி இண்டஸ்ட்ரில எந்தவிதமான சிபாரிசும் இல்லாத ஆளை வெச்சு யாராச்சும் படம் எடுப்பாங்களாப்பா?
"இல்லே சும்மா, ஒரு ஜாலிக்கு"
"அது'
அரசியல், மீடியான்னாலே உங்களுக்கு என்ன சார் அப்படி ஒரு அலெர்ஜி?
எனக்கு வளவளன்னு பேசறது பிடிக்காது. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கணும்னு நினைக்கறேன். எல்லார் மாதிரியும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ற ஒரு சாதாரண வாழ்க்கை வாழணும்னு நினைக்கறேன். அது சில பேருக்கு கடுப்பா இருக்கு. அதுவுமில்லாம மீடியாவுல பேசும்போது கொஞ்சம் பாலன்ஸ் பண்ணிப் பேசணும். எனக்கு அது இன்னும் தெரியல. வழக்கம் போல மனசில பட்டதை பேசிடறேன். இதை ஒரு குறையாக் கூட மக்கள் நினைக்கலாம். பட் அதான் நான். ஆனால் உங்களுக்கு அந்த பாலன்ஸ் நல்லாவே இருக்கு.
ஆனா இன்னிக்கு சினிமா போற போக்கைப் பார்த்தா சினிமாவை விட விளம்பரத்துக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே?
நீங்க சொல்றது உண்மை தான். முதல் மூணு நாள் ஹௌஸ்புல் ஆக்கறதுக்கு படாத பாடு பட வேண்டியிருக்கு. ஏன்னா நாலாவது நாள் திருட்டு vcd வந்துடுது.
"கஷ்டம் தான்"
"சொல்லப்போனா ஒவ்வொரு சினிமாவும் எங்களுக்கு மங்காத்தா தான். எப்ப உள்ளே எப்ப வெளியேன்னு தெரியவே தெரியாது"
தோனியின் போன் ஒலிக்கிறது. பேசி முடித்துவிட்டு, "சரி சார், நான் கிளம்பறேன், டீம் மீட்டிங் ஒண்ணு இருக்கு. போயாகணும்.
"சரிங்க, எனக்கும் ஷூட்டிங் போகணும். பில்லா பார்ட் 2 "
"அப்படியா? இந்த படத்துலயாவது இருட்டு ரூம்ல கூலிங் கிளாஸ் போட்டு ராம்ப் வாக் பண்ணாதீங்க சார். ரொம்ப கொடுமையா இருக்கு"
"முயற்சி பண்றேன்"
ஆனா அஷ்வின் சொன்ன மாதிரி உங்க கிட்ட பேசினது தெம்பா இருக்கு"
"அதான் மனித மனம். உங்களை விட எனக்கு காயங்களும் தோல்விகளும் அதிகம். என்கிட்டே பேசினதுக்குப் பிறகு உங்க பிரச்சினை இப்போ உங்களுக்குச் சின்னதா தெரியுது. அந்த வகையில எனக்கு சந்தோசம் தான், ஓடும்போது தவறி விழறது சகஜம், ஆனா மறுபடியும் எழுந்து ஓடாம இருக்கறது தான் குற்றம்"
Jayaraman
New Delhi
Labels:
Jai's Comedy Bazaar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment