Wednesday, March 7, 2012

அக்னி நட்சத்திரம்



டைட்டில், போட்டோ எல்லாம் பார்த்து டென்ஷன் ஆயிடாதீங்க (எல்லாம் ஒரு வீணாப் போன விளம்பரம் தான்). கிரிக்கெட்ல லேட்டஸ்ட் தோனி-செஹ்வாக் உட்கட்சிப் பூசல் தான். அதைக் கொஞ்சம் சினிமாப்படுத்தியதில்...

ஷங்கர் ஸ்டைல் (அந்நியன் + இந்தியன் காம்பினேஷன்):


தோனி, "ஐம்பது ரன் அடிச்சா தப்பா?"

செஹ்வாக், "பெரிய தப்பு இல்லீங்க"

"அஞ்சு மேட்ச்ல சேர்த்து ஐம்பது ரன் அடிச்சா?"

"தப்பு மாதிரி தெரியுதுங்க"

"தொடர்ந்து அஞ்சு சீரிஸ் ஆடி மொத்தமே ஐம்பது ரன் அடிச்சா?"

"ரொம்ப தப்புங்க"

"அதைத் தாண்டா இவ்ளோ நாளா பண்ணிக்கிட்டிருக்கே"

"இது ஒரு பெரிய தப்பா? இதுக்குப் போய் டீமை விட்டு வெளிய தள்ளுவாங்களா?"

"இதுகெல்லாம் யாரு வெளிய தள்ளப் போறாங்கற தைரியத்துல தானே இப்படி ஆடறீங்க?"

செஹ்வாக், "நான் மட்டுமா கேவலமா ஆடினேன்? டீம்ல நிறைய பேரு கேவலமா ஆடினாங்க"

தோனி, "அவங்களெல்லாம்......பீல்டிங் செஞ்சு டயர்ட் ஆகினதால கேவலமா ஆடினாங்க. ஆனா நீ ஒண்ணுமே செய்யாம கேவலமா ஆடியிருக்கே"

செஹ்வாக், "பார்த்தா பெரியவரா இருக்கீங்க, நல்லவரா இருக்கீங்க - நிஜமாவே என்னை டீமை விட்டுத் தூக்கப் போறீங்களா? ஒரே ஒரு சந்தர்ப்பம் குடுங்க. பங்களாதேஷ் கூட ஆடி முன்னூறு ரன் அடிச்சு எல்லாத்தையும் சரி பண்ணிடறேன். எனக்கும் அவங்களுக்கும் நல்லா வொர்க் அவுட் ஆகும். ஜனங்களும் மறந்துடுவாங்க"

தோனி தீர்மானமாக, "நீங்க திருந்தவே மாட்டீங்கடா, உன்னை ஓரங்கட்டினதுல தப்பே இல்லை"

மாஸ் ஹீரோ ஸ்டைல்:


டேய் தோனி, டீமுக்கு வேணா நீ கேப்டனா இருக்கலாம். ஆனா என்னிக்கும் மக்கள் மனசுல நான் தான் நிரந்தர கேப்டன். உனக்கு பெரிய மனுஷங்க ஆதரவு இருக்கலாம். ஆனா பெருவாரியான மக்கள் என் பக்கம். ஒண்ணு ஞாபகம் வெச்சுக்க, பணக்காரங்க தயவு அவங்ககிட்ட இருக்கற பணம் மாதிரி - கருப்பு, வெள்ளைன்னு மாறிக்கிட்டே இருக்கும். ஆனா மக்களோட பாசம் விலைவாசி மாதிரி - ஏறிக்கிட்டே இருக்கும். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஆளுங்களை நகர்த்தறது உன்னோட ஸ்டைல்னா, எந்த சூழ்நிலையிலும் காலைக் கூட நகர்த்தாம ஆடறது என்னோட ஸ்டைல். நான் என்னிக்குமே பழசை மறக்கமாட்டேன். அப்படி மறந்தவங்களை என்னிக்குமே மன்னிக்கமாட்டேன். செல்லம், ரெடியா இரும்மா, அடுத்த சிக்சர் உன்னோட பந்துல தான்.

பாலா ஸ்டைல்:
இவர் ஸ்டைலில் வசனம் எழுதறது கொஞ்சம் கஷ்டம். ஒரு வேளை "அவன் இவன்" பாகம்-2 எடுத்தார்னா இவங்க ரெண்டு பேரையும் போடலாம்.

கலைஞர் ஸ்டைல்:



பேட்டிங்கில் பாண்டி ஆடுகிறேன், பீல்டிங்கில் பல்லாங்குழி ஆடுகிறேன் - இப்படியெல்லாம் என் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். கேவலமாக விளையாடியது யார் குற்றம்? வீரனின் குற்றமா? அல்லது வீரன் பார்மில் இல்லை என்று தெரிந்தும் அதை அலட்சியப்படுத்திய கேப்டனின் குற்றமா? ஓட முடியவில்லை என்கிறார்கள். யார் குற்றம்? காலின் குற்றமா? அல்லது விரைந்து ஓட முடியாமல் தடுக்கும் தொப்பையின் குற்றமா? ஆட்டத்தில் சக்தி இல்லை என்கிறார்கள். யார் குற்றம்? பேட்டின் குற்றமா? இல்லை அதைத் தாங்கிப் பிடித்திருக்கும் தோள்பட்டையின் குற்றமா? அதிகாரிகளாகப் பார்த்து முன்னெச்சரிக்கையாகத் தடுக்கா விடில் எல்லா வீரர்களும் என்னைப் போல் உருவாகி விடுவார்கள். இது போன்ற குற்றங்களும் நடந்து கொண்டே தான் இருக்கும்.

பார்த்திபன் - வடிவேலு ஸ்டைல்:



செஹ்வாக், "ஏம்பா என்னைத் தூக்கினே?"

தோனி, "நான் எங்க உன்னைத் தூக்கினேன்? நீ கல்லு மாதிரி நின்னுக்கிட்டு தானே இருக்கே"

"நான் அந்த தூக்கைப் பத்திக் கேக்கலை"

தோனி, "அப்புறம்? ஒஹ், நீ அந்தத் தூக்கைப் பத்திக் கேக்கறியா?"

"எந்தத் தூக்கு?"

"காலையில அஞ்சு மணிக்கு எழுப்பி மரண தண்டனைக் கைதிங்களைப் போடுவாங்களே?"

"அய்யய்யய்யே, உன்னோட பெரிய அக்கப்போரா இருக்கே, டீமை விட்டு என்னை ஏன் தூக்கினீங்க - அதாவது டீமை விட்டு என்னை ஏன் நீக்கினீர்கள் அப்படின்னு கேக்கறேன், போதுமா?"

"இப்படி தெளிவா முதல்லயே பேசியிருக்கலாம்ல? நீ ஆடலை, ஆனா ரொம்ப ஆடினே"

"ஏம்பா குழப்பறே? நான் ஆடினேனா ஆடலையா?"

"கிரௌன்ட்ல ஆடலை, ஆனா பிரஸ் மீட்ல எல்லார் முன்னாடியும் ரொம்ப ஆடினே, அதுக்குத் தான் தூக்கிட்டேன் - கிவ் அண்ட் டேக் பாலிசி"

"அப்படின்னா?"

"உன்னை ஆட விட்டு ஆப்பு வெச்சுட்டேன்ல"

"என்ன எழவு பாலிசியோ! இப்ப என்னால வெளிய தலை காட்ட முடியாதே? நான் என்ன பண்ணுவேன்?"

தோனி, "நீ காட்டினாலும் எவன் பார்ப்பான்? ச்சீ, தொப்பியைப் போடுய்யா, க்ளேர் அடிக்குது. யாராவது கேட்டா, "தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வெடுக்கிறேன்" அப்படின்னு மேனேஜரை விட்டு ஒரு அறிக்கை விட்டுக்கோ. IPL வேற வருதுல்ல. நமக்கெல்லாம் அது தான் முக்கியம். உடம்பைப் பார்த்துக்க. என்னை மாதிரி தினசரி பால் குடி"

செஹ்வாக் திரும்பி நடந்தவாறே, "நல்லதும் பண்றான், கெட்டதும் பண்றான். இவனைப் புரிஞ்சுக்க தனியா ஒரு மூளை ஆர்டர் பண்ணி வாங்கணும் போலிருக்கே. ஒரு விஷயம் நல்லா விளங்கிடுச்சு, இந்தப் பிரபஞ்சத்துல இவனைப் பகைச்சிக்கிட்டு கிரிக்கெட் விளையாடறது ரொம்பச் சிரமம்டா சாமி"

மணிரத்தினம் ஸ்டைல்:



தோனி, "என்ன வேணும்?"

செஹ்வாக், "ஏன்?"

"பிடிக்கல, சுத்தமா பிடிக்கல"

"எது? என்னோட சிகப்பு பனியனா?"

"இல்லை, ஆடாதது"

"ஒரு வேளை நான் மஞ்ச பனியன் போட்டிருந்தா?"

"எனக்கு பெர்பார்மன்ஸ் தான் முக்கியம்"

"அப்போ அவங்களை என்ன பண்ணப் போறே?"

"அவங்க உன்னை மாதிரி இல்லை"

"ஈச் பார் ஆல் அண்ட் ஆல் பார் ஈச்"

"சோஷலிசமா? பனியனோட நிறுத்திக்க, கொடி பிடிக்காதே"

"முல்தான், ODIல 200 - மறந்துட்டீங்க"

"வேர்ல்ட் கப், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - எதையும் மறக்கல"

"நல்லால்லே, இது நல்லால்லே"

"டீம் நல்லாயிருக்கணும்னா நாலு பேரைத் தூக்கறதுல தப்பில்லை"

விவேக் ஸ்டைல்:

எப்படி இருந்தவங்க....



இப்படி ஆயிட்டாங்க!!!!




Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...