Tuesday, March 13, 2012

ராகுல் டிராவிட் (என்கிற) மார்க்கண்டேயன்ஸ்கோர் கார்ட் பாக்கும்போதே டெரரா இருக்குமே? ஓபனிங் இறங்கி கலக்கற இந்த மனுஷனுக்கு இதுக்கு மேல ஒரு ஓபனிங் நம்மளால குடுக்க முடியாது. இனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அறிவித்திருக்கும் ராகுல் டிராவிட்டுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ் இண்டர்வியூ (நிஜமாவே எக்ஸ்க்ளுசிவ் தாங்க, இப்படி ஒரு பேட்டி குடுத்த விஷயம் இதைப் படிச்சாத்தான் அவருக்கே தெரிய வரும்!!)

"வணக்கம், என்ன சார், திடீர்னு இப்படி அறிக்கை வெளியிட்டு பரபரப்பு பண்ணிட்டீங்க?"

திராவிட், "ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருந்த விஷயம் தான். ஆஸ்திரேலியா டூர் போறதுக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும். டைமிங் மிஸ் ஆயிடுச்சு. இட்ஸ் ஓகே. பெட்டர் லேட் தான் நெவெர். நான் சொன்னது செய்தி, நீங்க அதுக்கு கண்ணு காது மூக்கு வெச்சு பரபரப்பாக்கிட்டீங்க"

"16 வருஷம் - எப்படி பீல் பண்றீங்க?"

"ரொம்ப நிறைவா இருக்கு. நிறைய சந்தோசம், கொஞ்சம் வருத்தம், சின்ன ஏமாற்றம் - பட் மொத்தத்துல நிம்மதியா இருக்கு"

"கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியமா?"

"ம்ம், சந்தோசம் - இந்திய அணிக்காக இவ்ளோ வருஷம் விளையாடினது; வருத்தம் - பினிஷிங் சரியா பண்ணலை; ஏமாற்றம் - ஒரு கேப்டனா என்னால எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க முடியலை;

"அப்போ நிம்மதி?"

"ரிடையர் ஆனது தான்" பலமாக சிரிக்கிறார்."உங்களைப் பற்றி பெருமையாப் பேச நிறைய புள்ளி விவரங்கள் இருக்கு. இருந்தாலும், எந்த விஷயத்தை அல்லது சாதனையை நீங்க பெருமையா நினைக்கறீங்க?"

"இஞ்சுரின்னு சொல்லிட்டு ரொம்ப ஜாஸ்தி நாள் நான் வீட்ல உட்காரலை. இது சாதனையான்னு தெரியாது. ஆனா நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது இந்த விஷயம் எனக்குக் கொஞ்சம் பளிச்சின்னு தெரியுது."

"இது தான் சார் சாதனை. அவனவன் ரெண்டு மேட்ச் ஆடினதும் சுண்டு விரல்ல சுளுக்குன்னு சொல்லிட்டு சிக் லீவ்ல போயிடறாங்க!"

ஒரு வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்க்கிறார்.

"பிராட்மேன் ஓரேஷன் - அதுக்கு நீங்க நிறைய தயார் பண்ணியிருந்தீங்கன்னு கேள்விப்பட்டோம். அதுக்கேத்த மாதிரி உங்க பேச்சிலும் ஊமைக்குத்து கொஞ்சம் தூக்கலாவே இருந்தது"

"ஊமைக்குத்தெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாம் நேர் குத்து தான்" சிறிய புன்னகைக்குப் பிறகு, "இந்திய அணி எந்த ஊர்ல ஆடினாலும் கூட்டம் வரும்னு இருந்த காலம் போய் உள்ளூர் மேட்ச்சுக்கே ஈயடிக்கற நிலைமை வந்திருக்கு. இங்கிலாந்து, அப்புறம் வெஸ்ட் இண்டீஸ் இந்தியா வந்தப்போ அந்த அளவுக்கு ஒண்ணும் பெரிய கூட்டம் இல்லை. அதையெல்லாம் பார்த்தப்போ எனக்குள்ள ஒரு அலாரம் அடிச்சது - எங்கயோ தப்பு நடக்குதுன்னு. ஆடியன்சை விட்டு நாம கொஞ்சம் கொஞ்சமா விலகிப் போறோம்னு தோணிச்சு. என்னதான் இங்கிலாந்து பிரீமியர் லீக் பெரிய ஈவன்டா இருந்தாலும் வேர்ல்ட் கப் புட்பால் தான் திருவிழா. ஆனா கிரிக்கெட்ல அது தலை கீழா மாறிக்கிட்டு வருதோன்னு எனக்குப் பட்டுச்சு. இப்படி எனக்குள்ள இருந்த பல ஆதங்கத்தைத் தான் அங்க கொட்டித் தீர்த்தேன்."

"ஆனா சில பேர் "ராகுலுக்கு வயசாயிடுச்சு, பொறாமையில பேசறான்" அப்படின்னு சொன்னாங்க"

"வயசாயிடுச்சு - உண்மை தான். பட் பொறாமை கிடையாது. யாரைப் பார்த்து நான் பொறாமைப்படணும்?""IPLல் உங்களால பெரிசா விளையாட முடியலை, எதுவும் சாதிக்க முடியலைன்னு எப்பவாச்சும் பீல் பண்ணியிருக்கீங்களா?"

"பண்ணியிருக்கேன். ஆனா 20௦-20௦ எனக்கு சூட் ஆகலைன்னு தெரிஞ்ச பிறகு அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன்"

"இந்தியன் டீம் கேப்டன் பதவி - அதைப் பத்திக் கொஞ்சம்..?"

"அது எனக்கு ஒரு நல்ல படிப்பினை. அணி வீரர்கள், கோச், செலக்டர்ஸ், பிசிசிஐ, ஸ்பான்சர்ஸ், ரசிகர்கள், இது எல்லாத்துக்கும் மேல பெர்பார்மன்ஸ் - இப்படி பல குதிரைகளை பாலன்ஸ் பண்ணி ஓட்டத்தெரிஞ்சவன் தான் கேப்டனா இருக்க முடியும். இந்த விஷயத்துல நான் பிளாப் தான்."

"அப்போ கங்கூலி,தோனி- யார் இந்தியாவின் சிறந்த கேப்டன்?"

"வை திஸ் கொலைவெறி மிஸ்டர்? என்னை ஏன் வம்புல மாட்டிவிடப் பாக்கறீங்க? இவர் சரி அவர் தப்புன்னெல்லாம் கட் அண்ட் ரைட்டா சொல்ல முடியாது. கங்கூலி போட்டது விதை. தோனி அந்த மரத்தை நல்லபடியா பராமரிச்சிக்கிட்டு வர்றார்."

நீங்க ரிடையர் ஆனது மற்ற சீனியர் வீரர்களுக்கு நெருக்கடியை உண்டு பண்ணும்னு நினைக்கறீங்களா?""அதென்ன சீனியர் வீரர்? சச்சின்னு நேரடியாவே சொல்லுங்களேன். எப்போ ரிடர்யர் ஆகணும்னு அவர் தான் முடிவு பண்ணணும். நூறாவது செஞ்சுரி அடிச்சதும் அவர் ரிடையர் ஆயிடுவார்னு சில பேர் சொல்றாங்க. அப்படி அடிச்சார்னா மொத்தம் 100 செஞ்சுரி ஆயிடும். ஆனா அவர் ODIல 48 செஞ்சுரி தான் அடிச்சிருக்கார். அப்புறம் அதுலயும் 50 செஞ்சுரி அடிக்கணும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. எல்லா ரிகார்டும் சச்சின் பேர்ல தான் இருக்கணும்னு எதிர்பார்க்கற அதே மக்கள் அவரை ரிகார்டுக்காக மட்டுமே விளையாடறவர்னு குற்றம் சொல்றது வேடிக்கையா இருக்கு" - ஒரு வருத்தம் கலந்த சிரிப்பு.

"நீங்க பார்த்து ஆச்சர்யப்படும் ஒரு கிரிக்கெட் வீரர்?""இன்றைய தேதியில் ஜாக்ஸ் காலிஸ். அது எப்படி ஒரு மனுஷனால பேட்டிங், பீல்டிங், பௌலிங், டெஸ்ட், ODI, T20, IPL - இப்படி எல்லாத்துலயும் தடம் பதிக்க முடியுதுன்னு நிறைய தடவை ஆச்சர்யப்பட்டிருக்கேன்"

"தற்போதைய இந்திய அணி பத்தி என்ன நினைக்கறீங்க?"

"எல்லோருமே திறமைசாலிகள். ஒருத்தர் இல்லேன்னா இன்னொருத்தர்னு நிறைய பேக்கப் இருக்கு"

"விராட் கொஹ்லி அடுத்த சச்சின்னு சில பேர் சொல்றாங்க......"
"லிட்டில் சூப்பர் ஸ்டாரெல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா?"
"ஆகா, என்ன சார், தமிழ் படம் எதாச்சும் பார்த்துட்டு வர்றீங்களா? இப்படி பஞ்சடிக்கறீங்க?"

சிரித்துக் கொண்டே, "உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னேன்"

"சரி சார், ரிடர்யர் ஆகிட்டீங்க, மேற்கொண்டு என்ன பண்ணப் போறீங்க?"

"எனக்குத் தெரிஞ்சது கிரிக்கெட் மட்டும் தான். அது சம்பந்தமா எதாச்சும் ஒரு வேலை பண்ணிக்கிட்டிருப்பேன். (கடிகாரத்தைப் பார்த்தவாறு) மேற்கொண்டு எதாவது கேள்விகள் இருக்கா? காலனில பசங்களோட கிரிக்கெட் விளையாட வரேன்னு சொல்லியிருந்தேன், லேட் ஆவுது."

கடைசியா ஒரு கேள்வி,உங்களை எல்லாரும் "தி வால்" அப்படின்னு குறிப்பிடறாங்க. இதுக்கு நீங்க ஏற்கனவே வேடிக்கையான ஒரு பதிலை சொல்லியிருக்கீங்க. இருந்தாலும் நீங்க எப்படி இதை எடுத்துக்கறீங்க?"

"ஜாலியா எடுத்துக்கறேன்"

"ஜாலியாவா?"

"அடைமொழியை எல்லாம் சீரியஸா எடுத்துக்கக் கூடாது. இன்னிக்கு வால்னு சொல்வாங்க. நாளைக்கு ஜன்னல்னு சொல்வாங்க. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.(மீண்டும் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு) தப்பா எடுத்துக்காதீங்க, நாம அப்புறம் மீட் பண்ணலாம்" என்று சொல்லிவிட்டு பேட்டை எடுத்துக்கொண்டு அவசரமாக ஓடுகிறார்.அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றிருக்கிறார் - கிரிக்கெட்டிலிருந்து அல்ல.

Jayaraman
New Delhi

3 comments:

  1. hmmmmm interesting. Pic looks good :)

    Sabya

    ReplyDelete
  2. I hope you meant the pics are interesting. I don't know if you read Tamil too :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...