Tuesday, April 24, 2012

IPL 5: மூன்றாவது வாரம்


கடவுள் வாழ்த்து!
கிரிக்கெட்டின் கடவுளான சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கறோம்.

ஒண்ணும் சரியில்லையே!? எல்லா டீமும் back-to-back விளையாடறாங்க. பேசி வெச்சா மாதிரி ஆளுக்கு ஒரு மேட்ச் ஜெயிச்சு பாயின்டைத் தேத்திக்கறாங்க. இது முதலாளிகளின் செட்டிங்கா அல்லது போட்டி விறுவிறுப்பாப் போகணும்னு பிசிசிஐ செய்யும் லீலையான்னு தெரியல. மீடியாலேர்ந்து யாராச்சும் ஒருத்தர் இதை நோண்டாமலா போகப் போறாங்க. அப்போ பார்த்துக்கலாம். இருந்தாலும் ஒவ்வொரு மேட்சின் முடிவும் புள்ளிகள் அட்டவணையை தலை கீழாகப் புரட்டிப் போடுவது மிகவும் சுவாரஸ்யம்.பூனே:
"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது" - பீட்டர்சன்னை அவுட் ஆக்கிட்டு (ஆனாலும் உலக மகா உருட்டல் பந்துங்க அது) ஓடினீங்களே ஒரு வெறித்தனமான ஓட்டம், இன்னும் கண்லயே நிக்குது. இந்த சீசனோட பெஸ்ட் மொமென்ட் அது தான் சார். உங்க டீம் ஆடற மேட்சுகளில் மைதானத்துல இருக்கற அத்தனை காமெராவும் உங்களைத் தான் சார் போகஸ் பண்ணுது. எந்த டீம் கப் ஜெயிச்சாலும் சரி, எவன் மேன் ஆப் தி மேட்ச் வாங்கினாலும் சரி, சந்தேகமில்லாம நீங்க தான் சார் ஹீரோ. கொஞ்சம் தலை முடியைப் பார்த்துக்கோங்க. அப்படியே தயவு செய்து ஆஷிஷ் நெஹ்ராவுக்குக் கட்டாய விடுமுறை குடுங்க. அவர் எப்படிப் போட்டாலும் அடிக்கறாங்க.


டெல்லி:
தோத்தாலும் ஜெயிச்சாலும் கவலைப் படாம உங்க நேச்சுரல் கேம் ஆடறீங்க பார்த்தீங்களா, அதான் சார் உங்க கிட்ட பிடிச்ச விஷயமே. பீட்டர்சன் பாதியில அத்துக்கிட்டுப் போயிடுவார்னு பேச்சு அடிபடுது. உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா வார்னர் வந்து சேர்ந்தாலும் சேரலாம். கணக்கு டாலி ஆயிடும். நாகர், நமன் ஓஜா மாதிரி சின்னப் பசங்களுக்கு பொறுப்பு குடுங்க. டீம் நல்லா இருக்கும். முடிஞ்சா இர்பான் பாய்க்கு ஓய்வு குடுங்க. அட் லீஸ்ட் போலிங் போடச் சொல்லாதீங்க. ஒரு ஓவர் ஒழுங்காப் போட்டார்னா அடுத்த ஓவர்ல வட்டியோட சேர்த்து கப்பம் கட்டறார்.


சூப்பர் கிங்க்ஸ்:
கடைசி பந்து வரைக்கும் மேட்சை இழுக்கறதுல அப்படி என்ன ஒரு குரூர சந்தோஷமோ? வர வர அதை ஒரு ஹாபியாவே செய்துகிட்டு வர்றீங்க. தோனி, வேர்ல்ட் கப் பைனல்ஸ்ல அடிச்ச வின்னிங் ஷாட் மாதிரியே ராயல்சுக்கு எதிராவும் ஒரு ஷாட் அடிச்சீங்க ஓகே, போஸும் அதே மாதிரி குடுக்கணுமா? ஒட்டு மொத்த டீமும் வெளிய வெயில்ல உக்காந்து சப்போர்ட் பண்ணுது. நீங்க மட்டும் AC ரூமை விட்டு வெளிய வரமாட்டேன்னு அடம் பிடிக்கறீங்களே, நல்லாவா இருக்கு? எதாச்சும் ஒரு வெள்ளைக்காரன் வருஷா வருஷம் உங்களை கை தூக்கி விட்டுடறான். அந்த வகையில லக்கி தான். ஏம்பா சுரேஷு, வழக்கமா நீ சர்கிள் உள்ளே தானே பீல்டிங் பண்ணுவே? இப்போ என்ன எங்கயோ போய் நிக்கறே? உடம்பைப் பாத்துக்கற போலிருக்கு!! அனு....உஷ்...அக்காவோட அட்வைசோ?


பெங்களுரு:
எப்படியோ அடிச்சு பிடிச்சு "நானும் ரவுடி தான்" அப்படின்னு பார்ம் ஆயிட்டீங்க. அனேகமா கெயில் இனிமே எவ்ளோ மேட்ச் ஆடுவார்னு தெரியல. அந்த அளவுக்கு சோர்ந்து போயிருக்காரு. மிஸ்டர் விராட், நீங்க முதல்ல ஆடினாலும் மூணாவதா ஆடினாலும் புடுங்கறது பூராவுமே தேவையில்லாத ஆணி தான். அதனால தேவையில்லாம முயற்சி செய்யாதீங்க. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், விளம்பரப் படத்துல நடிக்கறது எப்படின்னு தோனிகிட்ட கத்துக்கோங்க. உங்க புது செல்போன் விளம்பரம் படு கண்றாவி.


ராயல்ஸ்:
யார் கண்ணு பட்டுச்சோ, ரஹானே லைட்டா சொதப்ப ஆரம்பிச்சிருக்கார். ஆனா திராவிட் அதிரடியா ஆடறது எல்லாருக்கும் ஆச்சர்யம். தொடர்ந்து ரெண்டு தோல்விகள் ஆயிடுச்சு. அனேகமா செமையா மீண்டு வருவாங்கன்னு தாராளமா நம்பலாம். 41 வயசு இளைஞர் ஒருத்தர் என்னமா பீல்டிங் பண்றாரு! என்ன சார் சாப்பிடறீங்க?வயசுப் பசங்க எல்லாம் நோட் பண்ணுங்கப்பா!


பஞ்சாப்:
தயவு செய்து டேவிட் ஹஸ்ஸியையே கேப்டனா போடுங்கப்பா. டீம் கொஞ்சம் நல்லா ஆடுது. ஷான் மார்ஷ் பார்முக்கு வந்திருக்கறது ஒரு நல்ல அறிகுறி. அதுக்காக ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம். உங்க போலிங் படு வீக். யார் வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் உங்களுக்குப் பன்ச் குடுத்து ஆப்பு வெச்சுட்டு போயிடுவாங்க.


நைட் ரைடர்ஸ்:
எப்படியோ உங்க முதலாளி ப்ரீத்தி கூட செட் பண்ணி ஒரு மேட்ச் ஜெயிச்சுக் குடுத்துட்டாரு. அப்புறம் ஏமாந்த சோணகிரி டெக்கானையும் துவைச்சுட்டீங்க. ஆனாலும் 126 அடிக்கறதுக்குள்ள அஞ்சு விக்கெட் விட்டு, டைவ் அடிச்சு ரத்தகாயம் எல்லாம் ஆகறது ரொம்ப கொடுமைங்க. ஷாருக் சார். வெளிய தெரியக்கூடாதுங்கறதுக்காக பாட்டில் லேபிளை மறைச்சு மறைச்சுக் குடிக்கறீங்களே , என்னது சார் அது? கிரௌண்டுக்கு வரும்போது வழக்கம் போல மேக்கப் போட்டுக்கிட்டு வாங்க சார். உங்க லுக் தான் உங்களுக்கு சொத்து. எப்படி வந்தாலும் ஏத்துக்கறதுக்கு நீங்க ஒண்ணும் சூப்பர் ஸ்டார் இல்லை.


மும்பை இந்தியன்ஸ்:
நெம்ப கஷ்டம்!! பேட்ஸ்மேன்களின் காலை உடைக்கும் மலிங்கா இல்லாதது மும்பைக்கு கை உடைந்த மாதிரி ஆகிவிட்டது.  நம்ம தலை சச்சின் கூடிய சீக்கிரம் பார்முக்கு வந்து ஒரு காட்டு காட்டுவார்னு நம்பறோம். வெச்சா குடுமி சிரைச்சா மொட்டைங்கற மாதிரி ஆடினா எல்லாரும் அடிச்சு நொறுக்கறது, இல்லேன்னா வரிசையா "உள்ளேன் ஐயா" சொல்லிட்டுப் போறதுன்னு இருக்கறது சரியில்ல.


டெக்கான் சார்ஜர்ஸ்:
நீங்க ரொம்ப நல்லவங்க. எல்லார்கிட்டயும் அடி வாங்கறதால சொல்லலை.  நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். அதே மாதிரி எங்கே ஒரு பாயின்ட் கூட எடுக்க முடியாம போயிடுமோன்னு நீங்க கவலையா இருக்கும்போது மழை மூலமா உங்களுக்கு ஒரு ஆரம்பம் குடுத்திருக்கார் கடவுள். ரெட்டி காரு, வருண பகவானுக்கு ஒரு ஸ்ட்ராங் பூஜை போடுங்க. நீங்க போற இடமெல்லாம் மழை வந்து மேட்ச் கான்ஸல் ஆச்சுன்னா அப்படியே 11 பாயின்ட் ஒப்பேத்திடலாம்.

பிசிசிஐக்கு:
யாருங்க கிறுக்கு மாதிரி IPL அட்டவணை போட்டது? ஒரே வாரத்துல நாலு மேட்ச், இல்லேன்னா ஒரேயடியா ஒரு வாரத்துக்கு லீவு. இதுக்கு போர்ட் எக்ஸாமே பரவால்ல.


என்னது? கேப்டன்கள் வாரமா? அதுக்கு?.. உங்க போட்டோவையும் போடணுமா? இல்லேன்னா? சரி சரி, கோச்சுக்காதீங்க சார், கண்ணு ரெட் ஆவுது பாருங்க. அப்படியே ஒரு போஸ் குடுங்க....Jayaraman
New Delhi

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...