Wednesday, April 11, 2012

IPL5: முதல் ரவுண்டு - ஒரு பார்வைடெக்கன் சார்ஜர்ஸ்:
சார்ஜ் பண்ணாம விட்ட செல்போன் மாதிரி சீசனுக்கு சீசன் இவங்க பெர்பார்மன்ஸ் குறைஞ்சுகிட்டே வருது. இந்த வருஷமும் இவங்க தான் பஞ்சிங் பேக்கா இருப்பாங்க போல. கஷ்டப்பட்டு வீடு வீடா பேப்பர் வித்து சம்பாதிச்ச காசையெல்லாம் இந்த பசங்க காத்தில பறக்க விடறாங்களேன்னு ரெட்டி மேடம் புலம்பறதாக பேச்சு. ஏன் மேடம், பார்த்திவ் படேல் மாதிரி வெட்டி யானைங்களை வாங்கினதுக்குப் பதிலா டாட்டாவோட குட்டி யானையை வாங்கியிருக்கலாமே? மேல் திருப்பதிக்கும் கீழ் திருப்பதிக்கும் ட்ரிப் அடிச்சா காசோட கொஞ்சம் புண்ணியத்தையும் சம்பாதிக்கலாம்.பஞ்சாப்:
கடைசி இடத்தைப் பிடிப்பதில் டெக்கானுடன் போட்டிபோடும் அணி. வழக்கத்துக்கு மாறாக வறட்டி தட்டும் வல்தாட்டி, விட்டேத்தியாக இருக்கும் கேப்டன், தன்னை விட்டால் யாருமில்லை என்ற திமிருடன் ஆடும் பிரவீன் - பெண் பாவம் பொல்லாதது நண்பர்களே! சொல்லி சொல்லி ப்ரீத்தியின் மானத்தை பப்ளிக்காக வாங்குவதில் இவர்களுக்கு என்ன சந்தோஷமோ?. பை தி பை, யுவியைப் பார்த்து நலம் விசாரிச்சீங்களா மேடம்?ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:
இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை. ஆனா ஒரு நல்ல டீமா இருப்பாங்கன்னு தெரியுது. கிரௌன்ட்ல ரொம்ப தூம்தாம் பண்ணக் கூடாதுன்னு மல்லையா சார் நினைக்கறது ரொம்பவே தெளிவாத் தெரியுது. கிங்க்பிஷர் ஆளுங்க ரொம்பவே அடக்கி வாசிக்கறாங்க. சித்தார்த் சார், தீபிகாவைக் காணோமே? ராசியில்லைன்னு கழட்டி விட்டுட்டீங்களா?பூனே வாரியர்ஸ்:
"பார்த்தீங்களா தாதாவின் கேப்டன்சியை" அப்படின்னு ஒரு கும்பல் கொக்கரிச்சாலும் "தலைவரை பந்தைப் பார்த்து ஆடச் சொல்லுங்கப்பா" அப்படின்னு சக வீரர்கள் நக்கல் செய்து வருகின்றனர் - அந்த அளவுக்கு எட்ஜ் மயம். இவருக்கும் சுப்புவுக்கும் நிறைய ஒத்துப் போவதால் இந்த வருஷம் கொஞ்சம் நல்லாப் பண்ணுவாங்கன்னு நம்பலாம். கப் மட்டும் ஜெயிச்சுட்டாங்கன்னா அவ்வளவு தான், ஷாருக்கான் ஜென்மத்துக்கும் கல்கத்தாவில கால் வைக்க முடியாது.


ராஜஸ்தான் ராயல்ஸ்:
பரமசாது திராவிடின் தலைமையிலான இளைய டீம். நட்சத்திர வீரர்கள் என்று சொல்லும்படி யாரும் இல்லாத அணி. பயிற்சிக்கு லேட்டாக வந்தால் பிங்க் பொம்மையைக் கொடுத்து எச்சரிக்கை விடுக்கும் அணி. இந்த அணி வெற்றி பெற்றால் சில புதியவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும்.டெல்லி டேர்டெவில்ஸ்:
போன வருஷத்துக்கு இந்த வருஷம் பரவாயில்லை. ஜாம்பவான்கள் நிறைந்த அணி. அதனாலேயே யாரை எடுக்கறது, யாரை உக்காத்தி வைக்கறதுன்னு முடிவு பண்றது கஷ்டம். இந்த தடவையாச்சும் செமி பைனல்ஸ் வரைக்கும் வரணும். செஹ்வாக் சார், சென்னைக்கு எதிரான மேட்ச்ல ஜெயிச்சு தோனியை பகைச்சிக்கிட்டீங்களே? இனி நீங்க இந்தியன் டீம்ல ஆடறது சந்தேகம் தான்.கல்கத்தா நைட் ரைடர்ஸ்:
எல்லாம் இருந்தும் ஏதோ ஒண்ணு மிஸ் ஆவுது இவங்ககிட்ட. அதுக்கு ஷாருக்கான் தான் காரணமான்னு தெரியல. கம்பீர் இதை ஒரு பெரிய மானப் பிரச்சினையா எடுத்துக்கிட்டு ஆடற மாதிரி தெரியுது. எந்நேரமும் டென்ஷனாவே இருக்காரு. - ஷாருக் சார், வருஷா வருஷம் கிரௌன்ட்ல சிகரெட் பிடிச்சு மாட்டறீங்களே , உங்க டீம் எடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு இப்படி ஒரு கேவலமான விளம்பரம் தேவைதானா?


மும்பை இந்தியன்ஸ்:
இரும்புக்கோட்டை என்று வர்ணிக்கப்படும் டீம். அதனாலேயே எளிதாக உடைபடும் வாய்ப்பும் அதிகம். சென்னையை வீழ்த்தியவர்கள் சொந்த மண்ணில் பூனேயிடம் வீழ்ந்தது ஏனோ? ஹர்பஜன் நீதா அம்பானியிடம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவது ஆச்சர்யமாக உள்ளது. சச்சின் இல்லாவிட்டாலும் சமாளித்து விளையாடுவதற்கு வீரர்கள் உள்ளனர் என்பது நல்ல விஷயம். சச்சின் சார், பூனேவுக்கு எதிராக நீங்க ஆடாததற்கு காயம் காரணம் இல்லைன்னு சொல்றாங்களே, உண்மையா? ஒரு வேளை "அவர்" காரணமோ?" ராயல்சுக்கு எதிராகவாச்சும் ஆடுவீங்களா இல்லை அதுக்கும்...?


சென்னை சூப்பர் கிங்க்ஸ்:
சொதப்பல் கிங்க்சாக மாறி வருவது வேதனையிலும் வேதனை. "நீங்களே ஒருவரையொருவர் ரன் அவுட் ஆக்கினீங்கன்னா நாங்கல்லாம் எப்படித்தான் விக்கெட் எடுக்கறது?" என்று எதிரணி பௌலர்கள் எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு கேவலமான ரன் அவுட்டுகள். ஆனாலும் இவர்கள் கண்ணி வெடி மாதிரி, எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. டெக்கான், பஞ்சாப் அணிகளை வீழ்த்தி எப்படியும் எட்டு பாயிண்டுகள் வாங்கிடுவோம் என்கிறார் ஸ்டீபென் பிளெமிங். ஏழுமலையான் அருள் இருப்பதால் செமி பைனல் நிச்சயம். தோனி சார், திடீர்னு ஒரு சுத்து பெருத்து முகத்துல ஒரு பூரிப்பு தெரியுதே, வீட்ல எதாச்சும் "விசேஷமா"?

திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு:
தொடக்க விழாவை ஏதோ பிலிம்பேர் நிகழ்ச்சி மாதிரி நடத்த நினைச்சு கையை சுட்டுக்கிட்டீங்க போல. பிரியங்கா, கரீனா மாதிரி கிழவிங்களை யாரு சார் பார்க்கப் போறாங்க? அடுத்த தடவையாச்சும் தமிழ் நடிகர்களை கூப்பிடுங்க. சூப்பர் ஸ்டார், உலகநாயகன் இப்படி யாரையாச்சும் அழைங்க. அட் லீஸ்ட் நம்ம கேப்டனையாச்சும் கூப்பிடுங்க. அவருன் ஒரு நல்ல “ஆட்ட”க்காரர் தான். அப்போதான் களை கட்டும். என்னது, அடுத்த தடவை சென்னையில நடந்தாப் பாப்போம்னு சொல்றீங்களா? அதுவும் சரி தான், நம்ம டீம் ஆடறதைப் பார்த்தா அடுத்த தடவை சென்னையில மேட்ச் கூட வைக்க முடியாது போலிருக்கு.

அடுத்த அப்டேட் அடுத்த வாரம்...

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...