Tuesday, April 17, 2012

IPL 5: இரண்டாவது வாரம்



"சபாஷ்! சரியான போட்டி" - அப்படின்னு சொல்ற அளவுக்கு இரண்டாவது வாரத்திலேயே விறுவிறுப்பு கூடிடுச்சு. எல்லா டீமும் அரைவேக்காடா இருக்கறதுனால வெற்றி தோல்வின்னு மாறி மாறி வருது. இது மக்களுக்கு நல்லது. நிறைய த்ரில்லிங்கான மேட்சஸ் பாக்கறதுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மும்பை இந்தியன்ஸ்:
ஐய்யகோ! இரும்புக்கோட்டை மண் கோட்டை போல் ஆகிவிடும் போலிருக்கிறதே! அன்னிக்கு மேட்சில யார் ஆடப் போறாங்கன்னே பாவம் நம்ம ஹர்பஜனுக்குத் தெரியல. மைக் முன்னாடி யோசிக்கிறாரு. ஆனா அந்த டைனோசர் பொலார்ட் அடிச்ச 64 ரன் ரணகடூரம். த்வம்சம் பண்ணிட்டான். இருந்தாலும் ஒரு டீமா இன்னும் இவங்க சரியா ஷைன் ஆகலை. தலைவா, விரல்ல அடிபட்டதுக்கெல்லாம் ரெண்டு வார மெடிகல் லீவ் ரொம்ப ஓவர். சீக்கிரம் மைதானத்துல இறங்குங்க. உங்க ஆட்டத்தை விமர்சனம் பண்ணாம ஒரு மாதிரியா இருக்கு.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
உங்க டீம் ஊர் ஊராப் போய் அடி வாங்கறது பத்தாம சொந்த ஊர்லயும் அடி மேல அடி வாங்கிக்கிட்டு இருக்கு. உங்க முதலாளி என்னடான்னா அமெரிக்கா பல்கலைக்கழகத்துல சொற்பொழிவு ஆத்தறாரு. போதாகுறைக்கு அவரை விமான நிலையத்துல வெச்சு விசாரணை பண்ணினாங்கன்னு வழக்கம் போல பிலிம் காட்டறாரு. என்னத்தைச் சொல்ல!கம்பீர் சார், எவ்ளோ முக்கினாலும் முடிய மாட்டேங்குதே? என்ன சார் பிரச்சினை? பாலாஜி கூட நல்லாத்தான் போலிங் போடறாரு. வருஷா வருஷம் வீரர்கள் தான் இடம் மாறணுமா? ஒரு மாறுதலுக்கு கொல்கத்தா வீரர்கள் எல்லாரும் சேர்ந்து உங்க அணி முதலாளியை வேணா மாத்திப் பாருங்களேன்.



பஞ்சாப்:
அடேடே! நீங்க ஜெயிக்கக் கூட செய்வீங்களா? ப்ரீத்தி முகம் இப்ப தான் பாக்க நல்லா இருக்கு. தொடர்ந்து ஒரு ரெண்டு மூணு மேட்ச் ஜெயிங்கப்பா. அப்போ தான் டாப்ல இருக்கற டீமெல்லாம் கொஞ்சம் டர்ர் ஆகி ஒழுங்கா இருப்பாங்க. சென்னையை விட ஒரு மேட்ச் குறைவா ஆடி அவங்களுக்குச் சமமா இருக்கீங்க. ஆல் தி பெஸ்ட்.

டெல்லி:
கண்ணுபடப் போகுதய்யா சின்ன கேப்டனே! முதல் தடவையா உங்க ஆளுங்க எல்லாம் கொஞ்சம் ஒழுங்கா ஆடறாங்க போல. அதுலயும் நீங்க பத்து நிமிஷத்துக்கு மேல பிட்சில நிக்கறது எட்டாவது அதிசயம். இப்படியே மெயின்டைன் பண்ணுங்க. உங்க அக்கா டெல்லி முனிசிபல் எலெக்ஷன்ல ஜெயிச்சுட்டாங்களாமே? வாழ்த்துக்கள்.



டெக்கான் சார்ஜர்ஸ்:
ராயல்சுக்கு எதிரா 194 அடிச்சவுடனே நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் - எங்க ஜெயிச்சுடப் போறீங்களோன்னு. நல்ல வேளை, என் நம்பிக்கையைக் காப்பாத்திட்டீங்க. இன்னும் நிறைய மேட்ச் இருக்குன்னு சொல்றீங்களா? அதுவும் சரி தான். ஆனா இப்படியே இருந்தீங்க, வர்றவன் போறவன் எல்லாம் உங்களை பிரியாணி பண்ணிட்டுப் போயிடுவான். காயத்ரி மேடம், பசங்களுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க. இல்லேன்னா இன்னிக்கு வீடு வீடா புது பேப்பர் போடற உங்களை நாளைக்கு அதே வீடு வீடாப் போய் பழைய பேப்பர் பொறுக்கற நிலைமைக்குக் கொண்டு வந்துடுவாங்க.



சென்னை சூப்பர் கிங்க்ஸ்:
"முதல்ல யார் போறாங்கன்னு முக்கியம் இல்லை, லாஸ்ட்ல யாரு பர்ஸ்ட் வர்றாங்கறது தான் முக்கியம்" - கிட்டத் தட்ட இங்கிலாந்து டூர்லேர்ந்து இந்த பன்ச்சைத் தான் அடிச்சிக்கிட்டு இருக்கீங்க தோனி. ஆட்டத்துல தான் எந்த மாற்றமும் இல்லை. அட் லீஸ்ட் பன்ச்சையாவது மாத்தக் கூடாதா? இருந்தாலும் பெங்களூரு மேட்ச்ல மார்கல் அடிச்சது மரண அடி. மிஸ்டர் ராயினா, நீங்க ஒரு இருபது வயசு யூத்து தான், ஒத்துக்கறேன். அதுக்காக இருபதுக்கு மேல அடிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கறது நல்லால்லே. 20௦ தாண்டறதுக்குள்ள உங்களுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குதே, ஏன்? சுமாரா ஆடி சூப்பரா சொதப்புறதுல உங்களுக்கும் கல்கத்தாவுக்கும் கடும் போட்டி நிலவுது. சூதானமா விளையாடுங்க.

ராயல்ஸ்:
"ஒரு நாயகன் உதயமாகிறான்" - ரஹானேவைப் பத்தி எல்லாரும் இப்படித் தான் சொல்றாங்க. போன தடவை வல்தாட்டிக்கும் இதையே தான் சொன்னாங்க. அந்த ஆள் இருந்த இடம் தெரியாம போயிட்டான். சீனியர் ப்ளேயர்கள் பொறுப்பாக ஆடறதுனால சின்னப் பசங்க உற்சாகமா இருக்காங்க. எல்லாரும் என்ஜாய் பண்ணி ஆடறாங்கன்னு நல்லாத் தெரியுது. தோத்தாலும் ரொம்ப மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டு டிராமா பண்றதில்லை. பை தி பை, திராவிட் சார், வரவர உங்க பேச்சில லைட்டா திமிர் தெரியுதே? போஸ்ட்-மேட்ச் பேட்டிகளில் எங்க டீம்ல ஸ்டார் பேட்ஸ்மேன் இல்லை, காசு இல்லைன்னெல்லாம் ஏன் சார் சின்னப்புள்ளத்தனமா பேசறீங்க? அவையடக்கம் தான் சார் உங்க அடையாளம். லூஸ் டாக் பண்ணி கேரக்டரை டேமேஜ் பண்ணிக்காதீங்க.



பெங்களுரு:
ஒரு வழியாக கெயில் புயல் மையம் கொண்டுவிட்டது. ராகுல் ஷர்மாவுக்கு இன்னொரு கண்ணும் டேமேஜ் ஆகும் அளவுக்கு பிரிச்சு மேஞ்சிட்டாரு. திவாரியும் வாங்கின காசுக்கு வக்கணையா ஆடிட்டான். ஏம்பா டிவில்லியர்ஸ், எந்த பந்தையுமே நேரா அடிக்கமாட்டியா? அதென்ன விஜயகாந்த் மாதிரி திரும்பி நின்னு சுழட்டி சுழட்டி அடிக்கறே? ஏதாவது அதிசயம் நடந்தா மழை வரும்னு சொல்வாங்க. அதான் நீங்க பூனேவை ஜெயிச்ச உடனே மழை வந்திடுச்சு. சித்தார்த் சார், காசு மிச்சம் பண்றதுக்காக நீங்களே மாடலா நடிக்கப் போறீங்களாமே? உங்களுக்கா இந்த நிலைமை? என்ன கொடுமை சார் இது!



பூனே வாரியர்ஸ்:
அசோக் டிண்டா போலிங் பார்த்தப்போ "அடேடே, டொனால்ட் நல்லா கோச்சிங் குடுத்திருக்காரே" அப்படின்னு பாராட்டி வாயை மூடலை, அதுக்குள்ள நம்ம நெஹ்ரா சார் வேலையை காமிச்சிட்டாரு. அது சரி, அப்புறம் தொடர்ந்து தோத்துக்கிட்டே இருக்கற பெங்களுரு எப்பதான் ஜெயிக்கறது! கங்குலி ஐயா, பாக்கெட்ல ஏதோ பிட்டு பேப்பர் வெச்சு பார்த்துக்கிட்டே இருக்கீங்களே, என்ன சார் அது? அதுல நாலு வரி படிக்கறதுக்குள்ள நாற்பது தடவை கண் சிமிட்டறீங்க. எதுக்கும் மெட்ராஸ் பக்கம் போகும்போது வாசன் ஐ கேர்ல ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிடுங்க. சுப்பு சார், மாநாட்டுக்கு ஆள் பிடிக்கற மாதிரி மேட்ச் பாக்கறதுக்கு ஆள் பிடிக்கறீங்களா என்ன? பூனே கிரௌண்ட்ல கொள்ளை கூட்டமா இருக்கே சார்!!

பிசிசிஐக்கு:
கிரௌன்ட்ல கூட்டம் அள்ளுதே? வாழ்வு தான். இருந்தாலும் ஏற்கனவே ஐநூறும் அறுநூறும் குடுத்து உள்ள வர்றவன் கிட்ட அரை லிட்டர் பெப்சிக்கு நூறு ரூபாய் (மார்க்கெட்ல 25 ரூபாய்) வாங்கறது ரொம்ப அநியாயம் சார்! கொஞ்சம் பார்த்து செய்ங்க.

ஸ்பைடர் காமெரா:
அற்புதம்! அட்டகாசம்! பிரம்மாண்டம்! - இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். சேப்பாக்கமோ வான்கடேவோ, எந்த மைதானமா இருந்தாலும் அப்படியே கிரிவலம் வர்ற மாதிரி 360 டிகிரி சுத்தி லெப்ட் ரைட் சென்டர் எல்லாம் போய் டாப்ல நிக்குது. ஷங்கர் சார், உங்களோட அடுத்த படத்துல அவசியம் பயன்படுத்துங்க. அப்புறம் ஸ்லைஸ், ஷட்டர் இதுக்கெல்லாம் வேலையே இருக்காது.

ரத்தம் உறைய வைக்கும் செய்தி:
பவர் ஸ்டாரின் பவரை புரிந்து கொண்ட IPL அணிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்க போட்டாபோட்டி போட்டிக்கொண்டிருப்பதாகத் தகவல். சூப்பர் கிங்க்ஸ் முன்னணியில் இருப்பதாகப் பேச்சு.


Jayaraman
New Delhi

பின் குறிப்பு:
"ப்ளேயர்ஸ் போட்டோ மட்டும் தான் போடுவீங்களா, எங்க போட்டோவெல்லாம் போடமாட்டீங்களா, நாங்களும் தான் அவங்களுக்கு ஈக்குவலா ஆடறோம்" - அப்படின்னு சியர் லீடர்கள் தரப்பிலிருந்து செம கம்ப்ளைன்ட். அதனால இந்த வாரம் பெண்கள் வாரம் (தயவு செய்து கலைக் கண்ணோடு பார்க்கவும்).

2 comments:

  1. eppadi raasa unnala mattum ippadi kalaaikka mudiyudhu? Chumma vizhundu vizhundu sirichen. Vaazthukkal.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...