Tuesday, May 24, 2011

கவுண்டர் Attacksநம்ம கௌண்டரை வழக்கம் போல பூ மிதிக்க வாங்கன்னு சொல்லி கூட்டிட்டுப் போய் கிரௌன்ட்ல அம்பைரா இறக்கிடறாங்க. அங்கே அவர் அடிக்கும் கூத்து (எந்த டீம் ஆடுதுன்னு கேக்காதீங்க, கவுண்டர் யாரை வேணா கலாய்ப்பார்):

சீர் லீடர்ஸ் ஆடுவதை பார்க்கிறார், "ஓ, வாட் எ யெங் beauties, ஹே, ஐ கம் யா"

சார், பேசாம பிட்சுக்கு போங்க.

எது, பிச்சைஎடுக்கப்போகவா? ஆரம்பமே சரியில்லையே!

after seeing the pitch, "கிரிக்கெட்னு சொன்னாங்க, எவனோ பாண்டி ஆடறதுக்கு கட்டம் போட்டு வெச்சிருக்கான்!"

இதாங்க பிட்ச். இந்த பாக்ஸ் தான் கிரீஸ்.

"கிரீஸ் பத்தி மட்டும் பேசாதே, ஏற்கனவே ஒரு வண்டுருட்டான் தலையான் கிரீஸ் டப்பாவை எட்டி உதைச்சு மூஞ்சில அப்பினது இன்னும் கறை போகாம இருக்கு "

ராகுல் ஷர்மா பௌலிங் போட வருகிறார்.

"டேய், டப்சா கண்ணா, உனக்கெல்லாம் எப்படிடா சான்ஸ் கிடச்சுது?

"இன்சல்ட் பண்ணாதீங்க, அப்புறம் சங்கத்தில சொல்லி உங்களைத் தூக்கிடுவேன்"

"ஐயோ, வேண்டாம்பா, நீ வந்த வேலையைப் பாரு"

தன் யூனிபார்மைப் பார்த்தபடி "கலரைப் பாரு, ஆரஞ்சு, சிவப்புன்னு, ஹோட்டல் சர்வர் மாதிரி"

முதல் ஓவர் முடிகிறது.

simon toufel comes to him "over up, we have to change positions"

"ஏன், இங்கயே இருந்து சொன்னா தெய்வக்குற்றம் ஆயிடுமா?" You go man ,

"ரொம்பப் பேசினீங்கன்னா தூக்கிடுவேன்"

"என்னங்கடா, ஆளாளுக்கு மிரட்டறீங்க, சரி போறேன்"

பக்கத்தில் கங்குலி இருப்பதைப் பார்த்து "என்ன தாத்தா, திடீர்னு இந்தப் பக்கம்? முதியோர் பென்ஷன் குடுக்கறாங்களா?"

"தாத்தா இல்லீங்க, தாதா, நான் டீம்ல இருக்கேங்க"

"35 வயசுக்கு மேல யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும். அப்போதான் என்னை மாதிரி இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்"

கங்குலி முறைக்கவே, "என்னடா லுக்கு, பந்தை ஒழுங்காப் புடி, இப்படி சும்மா கண்ணை சிமிட்டாதே, நீ கண் மூடி திறக்கறதுக்குள்ள மேட்ச் முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்குப் போயிடபோறாங்க"

Position change, Yuvraaj comes to bowling.

"பீர் ஊத்தி வைக்கற ஜக் மாதிரி இருக்குற, உன்னையெல்லாம் எப்படி கேப்டனா எடுத்தாங்க? சிபாரிசா?, ஆமாம், அது என்ன கண்ணாடி? திருவிழாவுல வித்தை காட்டறவன் மாதிரி, கழட்டு man "

“This is 5000rs, original Rayban”

5000rs கண்ணாடி போட வேண்டிய மூஞ்சி அல்ல இது, ரிடர்ன் ரிடர்ன்"

"நான் அழகா இருந்தா உங்களுக்குப் புடிக்காதே"

"(இதை நான் எங்கயோ கேட்டிருக்கேனே, ஒரு வேளை அவனா இருப்பானோ, நமக்கெதுக்கு வம்பு, பேசாம இருப்போம்)"

Pollard is batting, "டேய் ஆப்ரிக்கன் டயனோசர், தள்ளி நில்லுடா, stump மறைக்குது,

The ball hits his pad and everyone appeals for LBW.

"ஏம்பா, யாரெல்லாம் அவுட்டுன்னு நினைக்கறீங்களோ, கை தூக்குங்க."

All the 11 raises hands.

"யாரெல்லாம் அவுட் இல்லேன்னு நினைக்கறீங்களோ, கை தூக்குங்க.

the batsman and the runner raises hands.

"மெஜாரிட்டி அந்தப் பக்கம் தாம்பா, நீ அவுட்"

“this is ridiculous, i cant accept this”

"எங்க ஊர் பார்லிமன்ட்லையே இப்படித்தான் ஓட்டெடுப்பு நடத்துறாங்க, மூடிட்டு போடி"

Innings break.

Malinga comes into attack.

"சார், கொஞ்சம் தள்ளி நில்லுங்க, பௌலிங் போடும்போது கை பட்டு ஏடாகூடமா ஆயிடப்போவுது "

"அதையே தான் உனக்கும் சொல்றேன், மீறிப் பட்டிச்சின்னு வை, அறுப்புக்கு வந்த பன்னி மாதிரி உன்னை ஆக்கிடுவேன்"

But he still smashes kounder’s head while bowling.

"அடடா, அடிச்சிட்டானே காட்டுப்பய"

"சாரி சார்"

"இங்க வாடா, (மலிங்காவின் தலை முடியைப் பிடித்த படியே) அடுத்த ஓவர் போட வரும்போது சுத்தமா கிராப் வெச்சிக்கிட்டு வரணும். இல்லேன்னா எல்லா பாலும் நோ பால் தான்."

He changes his position and stand next to Harbhajan.

யோவ் சர்தார்ஜி, கொஞ்சம் தள்ளி நில்லு, காத்தே வரமாட்டேங்குது,

"இது என் ஏரியா, கேப்டன் சொன்னாத்தான் போவேன்"

"டேய் போடா"

"நான் போகமாட்டேன்"

"இனி பேசிப் பிரயோஜனம் இல்ல, யாருப்பா அங்க, இந்த ஆள் மேல பேட் ஸ்மெல் வருது, ஆல்கஹால் டெஸ்ட் பண்ணுங்க"

"சாரி சார், போயிடறேன்"

Again over change.

"என்னங்கடா இது, இங்கயும் அங்கயும் ஓட விடறானுங்க. முடியலடா சாமி"

In the mean time, Harsha speaks to Kounder over MIC:

“Hello, how are you doing man?”

"டேய், உன்னை நான் எங்கயோ பார்த்திருக்கேனே, ஹேய், remove தி விக், வாடி பார்த்தசாரதி, மொட்டைத்தலையில முடி முளைக்காதுன்னு சொல்வாங்க, ஆனா உன் தலையில ஒரு ஏக்கர் முளைச்சிருக்கே"

Oh! thats due to some treatment.

""ஆமாம், வெட்டிப்பசங்க குட்டி சுவத்துல உக்கார்ந்து கிண்டல் பண்ற மாதிரி கிரிக்கெட் ஆடறவங்களை கலாய்க்கரியே, இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?"

"Thats my Profession"

"படிச்சிருக்கியோ இல்லையோ, நல்ல இங்கிலீஷ் பேசறே, ஆனால் உன்ன மாதிரி ஆளுங்க இப்படித்தான் இருப்பாங்க"

"என்ன கிண்டலா?"

"இல்ல நக்கல்"

During the post match presentation, kounder makes a wild entry, takes all the awards and trying to leave. Ravi Shastri stops him “What are you doing”

இங்கயும் அங்கயுமா 40 ஓவர் ஓடியிருக்கோமே, நியாயமா எங்களுக்குத் தான் இந்த award எல்லாம் குடுக்கணும், அதான் எடுத்துட்டு போறேன், அப்புறம், இப்படி மைக்கப் புடிச்சிட்டு வர்றவன் போறவனை கேள்வி கேக்கறத இன்னியோட நிறுத்திக்கோ, நீ தான் full மேட்ச் ஓசில பார்த்தீல்ல, உனக்குத் தெரியாதா எப்படி தோத்தாங்கன்னு? Hei Simon, catch your trophy yaa, i leave ya, see you next match yaa.

Kounder takes the man of the match bike and starts kicking. Pollard comes and “hey, this is mine, I deserve it”

"உனக்கு 11 போடத் தெரியுமா?"

What?

"முதல்ல போய் அதை கத்துக்கிட்டு வா, அப்புறம் பாக்கலாம்"

Kounder just flies away.


Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...