Friday, May 13, 2011

Umpire விவேக்கின் கோணல் பார்வைஹாய் ஹாய் ஹாய், எல்லாரும் எப்படி இருக்கீங்க? நம்ம முகேஷும் ஸ்ரீனிவாசனும் என்கிட்டே ஒரு நாள் வந்து நீங்க கண்டிப்பா அடுத்த மேட்ச் umpiring பண்ணனும்னு கெஞ்சிகேட்டாங்க. சரி, நாமளும் livea match பார்த்த மாதிரி இருக்கும்னு போனேன். அங்க போனதுல பல மேட்டர் தெரிய வந்துச்சு. அதை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன்:

எவன் எங்க சண்டை போட்டாலும் நம்மாளுங்க வேடிக்கை பாக்க ரெடி ஆயிடறாங்க. 4 மணி மேட்சுக்கு 12 மணிக்கே வந்து உக்காந்துக்கறாங்க. இது கிரிக்கெட் வெறியா இல்லை பைத்தியக்காரத்தனமான்னு பாப்பையா தான் தீர்ப்பு சொல்லணும்.

உள்ளே போகும்போது ஒரு போன் குடுத்தாங்க, 3rd umpireyoda பேசறதுக்காம். நான் கூட ஏதோ நல்ல பிகரா இருக்கும், ஜாலியா கடலை போடலாம்னு நினைச்சேன், அப்புறம் பார்த்தா அது ஒரு 50 வயசு ஆசாமி.

முதல்ல morkel பௌலிங் போட வந்தாப்ல, "ரைட் arm ஓவர் தி விக்கெட்" அப்படின்னார்

"அப்படின்னா?"

"திஸ் இஸ் Guard "

"கடவுள் வாழ்த்தா? அதுக்கு ஏன் பீட்டர் விடுற? வெற்றிவேல் வீரவேல்னு தமிழ்ல சொல்லிப்போடு, 6 பாலுக்கு 12 விக்கெட் விழும்" - சரி சரி முறைக்காதே, போய் பந்தை ஒழுங்கா போடு, போ.

சச்சின் அண்ட் Blizzard ஒபெநிங் வந்தாங்க. சச்சின் கிட்ட நீங்க கண்டிப்பா century அடிக்கணும்னு சொன்னேன், என்ன தோணிச்சோ தெரியல, மேட்ச் முடியற வரைக்கும் முறைச்சிக்கிட்டே இருந்தார்.

என் கூட டிபன் அப்படின்னு ஒரு நடுவர் வந்தார். ஹி இஸ் from ஜிம்பாப்வே. இருண்ட கண்டத்துலேர்ந்து இப்படி ஒரு CFL பல்பு வரும்னு நான் எதிர்பாக்கலை

நம்ம அஷ்வின் சச்சினுக்கு பௌலிங் போட வந்தார். பந்து சச்சின் காலில் பட்டிடுச்சு, உடனே எல்லாம் கத்தினாங்க. "Howzaatt ?

"யோவ், அந்த ஆள் காலில் பட்டதுக்கு அவரே பேசாம இருக்காரு, நீங்க எதுக்குய்யா கத்தறீங்க?"

எல்லாரும் ரணகொடுரமா பார்த்தாங்க. நான் செஞ்சது தப்பாய்யா?ஒரு வழியா பிரேக் விட்டாங்க. நம்ம கூட வந்தவர்கிட்ட urgenta பாத்ரூம் போகணும்னு சொன்னேன், அவர் போயிட்டு 150 வினாடிகளில் வரணும்னு சொன்னார். பிட்ச்லேர்ந்து பௌண்டரி போறதுக்கே 2 nimisham ஆவுமே, அப்புறம் நான் எங்க போய், முடிச்சிட்டு திரும்பி வர்றது, அதுக்குள்ளே அடுத்த பிரேக் வந்துடும். நான் இங்கயே ஒரு ஓரமா குத்தவெச்சு உக்கந்துக்கறேன்னு சொன்னேன், கிரௌன்ட்ல 68 கேமரா இருக்கு, போதாக்குறைக்கு ultra motionla வேற டிராப் டிராப்பா காட்டிடுவாங்கன்னு பயமுறுத்தினார். அப்படியே கப்புன்னு அடங்கிப்போச்சு. பாவம் இந்த கிழட்டு நடுவர்கள் எல்லாம் எப்படித்தான் சமாளிக்கறாங்களோ?

ஒரு வழியா மும்பை இன்னிங்க்ஸ் முடிஞ்சு சென்னை இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் ஆச்சு. நடுவுல 20 நிமிஷம் கேப் விட்டாங்க. என் வேலையெல்லாம் முடிச்சிட்டு பிரெஷா வந்தேன்.

விஜய் கிட்ட இந்த மேட்ச்லயாவது அடிப்பீங்களான்னு கேட்டேன். இல்லேன்னா வீட்ல சொல்லி பேரை மாத்திக்கோங்கன்னு சொன்னேன் - சமீப காலமா அந்த பேர்ல ஏதோ வாஸ்து சரியில்லேன்னு நினைக்கறேன். நான் சொன்னது அவருக்கு புரிஞ்சுதான்னு தெரியல,

மலிங்கா டு ஹஸ்ஸி, நோ பால்.

நம்ம டிபன், கைய சுத்திக்காட்டினார். என்னன்னு கேட்டேன், "ப்ரீ ஹிட்"

அப்படின்னா?

"எங்க வேணா அடிக்கலாம், batsman அவுட் ஆக முடியாது"

"அடப்பாவிகளா, இதத்தான்யா எங்க ஊர்ல காலம்காலமா தர்ம அடின்னு சொல்லிக்கிட்டு திரியறோம். டேய் white people , இதைக்கூட எங்ககிட்டேர்ந்து காப்பி அடிச்சு எங்களுக்கே சொல்லித்தரீங்களா ?

திடீர்னு ஒரு ஆள் மைக்கை காதுல சொருகிட்டு "commentrylerndhu ஹர்ஷா போக்லே பேசுவார், உலகமே உங்க பேச்சை கேக்கபோவுதுன்னு உசுப்பேத்தி விட்டுட்டு poyittan

"Hey dude, How are you feeling man ? such an important match"

"பீலிங்காத்தான் இருக்கு, 6 மணி ஆயிடுச்சே"

"are you talking about the over rate?"

"சாவடிக்காதய்யா, லேட்டா போனா ரேட் ஓவரா ஆயிடும், ஸ்காட்ச் அடிக்கற உனக்கு இதெல்லாம் எங்க தெரியபோவுது? போன் கட் பண்ணு"

ஒரு வழியா மேட்ச் முடிஞ்சுது, வழக்கம் போல CSK ஜெயிச்சுட்டாங்க.


கருத்து கந்தசாமி பஞ்ச் வெக்காம போவாரா?

கிராமத்துல எங்கயாச்சும் திருட்டுத்தனமா ரெகார்ட் டான்ஸ் போட்டாலே போலிசோட போய் விரட்டி அடிப்பாங்க. இங்க Cheerleaders அப்படின்னு சொல்லிட்டு பப்ளிக்கா 4 பொண்ணுங்கள வேகாத வெயிலில் ஆட விட்டு வேடிக்கை பாக்கறாங்க. அம்மா மாதர் சங்கங்களே, கலாச்சார பாதுகாவலர்களே, இதெல்லாம் தட்டிக்கேக்க மாட்டீங்களா?

ஸ்டேடியம் உள்ளே இவ்ளோ லைட் போட்டிருக்கே, இந்த மின்சாரத்தைத் திருப்பி விட்டா சேபாக் தொகுதிக்கு ஒரு வாரம் supply பண்ணலாமே?

அரசியல்வாதிகளுக்கெல்லாம் IPL ஒரு வரப்ரசாதம். இங்க கட்சித்தாவல் ஒரு மேட்டரே இல்லை.

கொச்சின் புஷ்கர், சாரி, டஸ்கர் அப்படின்னு பேரு வெக்கறான், owner குஜராத்தி, ஆனா அகமதாபாத்ல ஒரு மேட்ச் கூட இல்லை.

வட இந்தியர்கள் மும்பைக்கு வரக்கூடாதுன்னு சொல்றாங்க. இங்க ஒருத்தர், உத்தர் பிரதேஷ்லேர்ந்து வந்து பூனே டீம் ஆரம்பிச்சிருக்கார். அதுக்கு ஒரு பஞ்சாபி கேப்டன். இதுக்கெல்லாம் நீங்க எதுவும் சொல்லமாட்டீங்களா? இப்ப எங்கய்யா போச்சு உங்க கொள்கை?


ரொம்ப ஓவரா பேசறேன்னு நினைக்கறேன், வீட்டுக்கு ஆட்டோ வர்றதுக்குள்ள I am எஸ்கேப். அம்மா வேற ஆட்சிக்கு வந்துட்டாங்க. கண்டிப்பா எதாச்சும் பாராட்டு விழா இருக்கும், போய் item ரெடி பண்ணனும்.

Jayaraman
New Delhi

(இது நிஜமல்ல, கட்டுக்கதை பாகம் 2)

2 comments:

  1. ippadi vayiru valikka sirichi romba naal aachu...
    thanks nanba...!!!

    ReplyDelete
  2. Romba nandri thalaiva. ungala madhiri nanbaragal thara urchagam dhaan

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...