Tuesday, August 2, 2011

இப்படி புலம்ப விட்டுடீங்களே டா...




"இவங்களுக்கெல்லாம் யாருங்க No .1 ராங்கிங் கொடுத்தது?"

"தோனி லக் factor வேலை செய்யலை, குலதெய்வம் கோவிலுக்கு பூஜை போடாம வந்திருப்பார் போல"

"செஹ்வாக், சாகிர் கான் இருந்திருந்தா ஜெயிச்சிருக்கலாம்"

"ஹர்பஜன் ஒரு தண்டக் கர்மாந்திரம் புடிச்சவன், அவனை எல்லாம் யாருங்க டீம்ல எடுத்தா?"

"எல்லாம் காசுக்கு விளையாடற நாய்ங்க, கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லீங்க"

"பிசிசிஐ பண்ற தப்புங்க. தொடர்ந்து கிரிக்கெட் வெச்சா பாவம் அவங்க என்ன தான் பண்ணுவாங்க?"

"தோனி என்னிக்கு மல்லையா கூட சேர்ந்தாரோ, அன்னிக்கே அவர் மதி மயங்கிடுச்சு"

"கட்டிட வேலை செய்யறவன் கூட பாதுகாப்பா வேலை செய்யறான், இவங்களுக்கு எல்லா வசதிகள் இருந்தும் எங்கேர்ந்து தான் அடிபடுதோ?"

டிராவிட் லக்ஷ்மன் பரவாயில்லை, டெண்டுல்கர் சுத்த வேஸ்ட், வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்திடுச்சு.

ஒரு முறையா தோக்க வேண்டாம்? இப்படியா கேவலமா தோப்பாங்க?

பிரவின் குமார், இஷாந்த் ஆடினது கூட நம்ம கேப்டன் ஆடலை,

“டீம் செலெக்ஷன் சரியில்லீங்க”



மேல சொன்னது சாம்பிள் தான், இன்னும் பச்சை பச்சையா நம்ம மக்கள் திட்டிக்கிட்டு இருக்காங்க

எவனாச்சும் ஒரு தப்பு பண்ணிட்டா போதும், அவனைத் திட்டித் தீர்க்கற சுகம் இருக்கே, அட அட அட!, அதெல்லாம் ஆராயக் கூடாது, அனுபவிக்கணும். அதுலயும் இந்தியன் கிரிக்கெட் டீம்னா இன்னும் விசேஷம். பதினாறு பேரையும் பாத்தி கட்டி அடிக்கறதில அப்படி ஒரு அலாதி ஆனந்தம் நமக்கு. அதாவது இவங்க திட்டினா அவங்க அடுத்த மேட்ச் ஒழுங்கா ஆடிடுவாங்கன்னு ஒரு நினைப்பு.

எல்லாம் இந்த ரேங்க் படுத்தும் பாடு. சின்ன வயசுல ஸ்கூலில் ரேங்க் எடுக்கணும், அப்புறம் காலேஜில மெடல் வாங்கணும், அப்புறம் வேலையில ப்ரோமோஷன். அதே மாதிரி கிரிக்கெட்லயும் எதிர்பாக்கறாங்க. இவரு BSc நாலு அரியர் வெச்சு பாஸ் பண்ணியிருப்பாரு, ஆனா பையன் இன்ஜினியரிங் கோல்ட் மெடல் வாங்கணும்.

போன டெஸ்ட்ல 90 மார்க் எடுத்த பையன் இந்த டெஸ்ட்ல fail ஆனா அவ்ளோதான். தர்ம அடி விழும். ஆனா கடைசி வரைக்கும் அவனுக்கு ஏன் மார்க் குறைஞ்சுதுன்னு யாரும் யோசிக்க மாட்டாங்க. அந்த மாதிரி ஒரு பெற்றோர் மனப்பான்மையில தான் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்காங்க. அதுக்காக அவங்களையும் தப்பு சொல்ல முடியாது, 'கோல் எடுத்தாத்தான் குரங்கு ஆடும்' , 'அடி உதை உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்" அப்படின்னு பழகிட்டாங்க.

"எனக்குத் தான் எந்த வசதியும் இல்லை, சரியா படிக்க முடியலை, அதனால என் பசங்களுக்கு நல்ல வசதி வாய்ப்புகள் செஞ்சு குடுத்தேன், ஆனாலும் தறுதலைங்க படிக்க மாட்டேங்குது" - படிக்கறதுக்கு வசதியை விட அறிவும் ஆர்வமும் முக்கியம் அய்யா! இதே பார்வை தான் நம்ம கிரிக்கெட் வீர்கள் மேலயும் இருக்கு. "கோடி கோடியா சம்பாதிக்கறாங்க, ஜட்டிலேர்ந்து சாராய புட்டி வரைக்கும் விளம்பரம் பண்றாங்க. அதனால எல்லா மேட்சும் செஞ்சுரி அடிக்கணும், எல்லா மேட்சும் ஜெயிக்கணும்" - என்ன ஒரு அநியாயமான எதிர்பார்ப்பு? அவங்களோட முந்தைய ஆட்டங்கள், பெர்சனாலிட்டி, டீம்ல இன்னும் எவ்ளோ நாள் இருப்பார் - இதெல்லாம் கூட்டி கழிச்சு தான் விளம்பர கம்பெனிகள் காசு குடுக்கறாங்க. சரியா விளையாடலைன்னா முதல்ல அடிக்கறதும் அவங்க தான்

அட இவங்க பரவால்லைங்க, கொஞ்சம் நாட்டுக்காக பீல் பண்ணிப் பேசறாங்க. அங்க கமெண்டரி பண்ற கூட்டம் அடிக்கற கூத்து இருக்கு பாருங்க, தாங்க முடியலை. திட்டறதுக்கு அவங்களுக்கு காசு வேற கிடைக்குது. இத்தனைக்கும் எல்லா பயலும் அதே கிரௌன்ட்ல முட்டையும் அஞ்சும் பத்தும் அடிச்சு கேவலமா அவுட் ஆன வெம்பிப் போன ஆளுங்க தான். ஆனா பேச்சு மட்டும் பெரியார் ரேஞ்சுக்கு பேசறாங்க - "நாங்கள்லாம் அந்த காலத்துல......."

இது போதாதுன்னு நம்ம இந்தியன் மீடியா அடிக்கற கூத்து - என்னமோ இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் சுதந்திரப் போராட்டம் நடக்கற மாதிரியும் அதுல இந்தியா தோத்துட்ட மாதிரியும் நாட்டுக்கு பெரிய அவமானம் நேர்ந்துட்ட மாதிரியும் ஒரு பில்ட் அப் குடுத்து உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளப்படுத்தறதே வேலையா போச்சு! (அங்கயும் வீணாப்போன முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கருத்து கந்தசாமியா அவதாரம் எடுப்பாங்க).

தோக்கறதே கேவலம், அதுல என்ன கேவலமா தோக்கறது? ஒரு ரன்ல தோத்தாலும், ஒரு இன்னின்க்ஸ்ல தோத்தாலும் ரெண்டும் கேவலம் தான்.

நல்லா நாக்கைப் புடிங்கிகிட்டு சாவற மாதிரி கேள்வி கேக்க வேண்டியது, அப்புறம் "எல்லாம் உன் மேல இருக்கற அக்கறையில தான் சொல்றேன்" அப்படின்னு பல்டி அடிக்கறது - எப்போ தான் திருந்தப் போறோம்?

சரி, பஞ்சாயத்து பண்ணியாச்சு, கிரேசி கிரிக்கெட் லவ்வரா இருந்துகிட்டு இந்த பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்லலேன்னா எப்படி?

முகுந்த்:
இவருக்கு உடனே தமிழ் நாடு மீல்ஸ் பார்சல் பண்ணி அனுப்புங்க. பாவம் பையன், WI அப்புறம் இங்கிலாந்துன்னு ஒரே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு ஹோம் சிக் ஆயிருப்பான்

கம்பீர், யுவராஜ், ராயினா:
உடனே கல்யாணம் பண்ணி வெச்சிடணும், கால் கட்டு போட்டா பொறுப்பாயிடுவாங்க.

லக்ஷ்மன்:
நீங்க தயவு செஞ்சு கௌரவமா வீட்டுக்குப் போயிடுங்க. ரெண்டு ரன் ஓடறதுக்குள்ள நாக்கு தள்ளுது.

டிராவிட்:
யாருமே ஆடாத டீம்ல இருந்துகிட்டு யாருக்காக இவ்ளோ நேர்மையா ஆடறீங்க? நீங்களே தடுமாறரீங்கன்னா இங்கிலாந்து பௌலிங் நிஜமாவே சூப்பர் தான்.

சச்சின்:
நீங்க இன்னும் ஜுரத்திலேர்ந்து முழுமையா குணமாகலை போலிருக்கு. கிரீசுக்கு வர்றதுக்கு முன்னாடி ரூம்ல பாட்டு கேட்டுக்கிட்டிருந்தீங்க, ஆனா கிரீசுக்கு வந்து இங்கிலாந்து பௌலிங்குக்கு இப்படி டான்சும் ஆடுவீங்கன்னு எதிர்பாக்கலை. எந்நேரமும் பேயறஞ்ச மாதிரியே இருக்கீங்களே? நூறாவது நூறைப் பத்தியே யோசிக்கறீங்க போலிருக்கு! ரெகார்ட் பத்தியெல்லாம் யோசிக்க மாட்டேன்னு சொல்றது எல்லாம் சும்மாவா?

பிரவின் & இஷாந்த்:
பாவம் ஓவர் டைம் பண்ணி ஓஞ்சு போயிருக்காங்க. அடுத்த இஞ்சுரி கேஸ் இவங்க தான்

ஸ்ரீசாந்த்:
பிரகாசமான வாய்ப்பு, அடுத்த ரெண்டு டெஸ்ட் மேட்ச்ல போட்டுத் தாக்கிடணும்.

சேவாக்:
ஆஸ்பத்திரிலேர்ந்து வர்றவன் கிட்ட என்னத்தை எதிர்பாக்கறது?. நீங்க வழக்கம் போல் ஆடுங்க. பட்டா பாக்கியம், படாட்டா லேகியம்

சாகிர் & ஹர்பஜன்:
நம்மளை விட்டா யாரும் இல்லேங்கிற ஆணவம் உங்க கண்களில் தெரியுது. ரொம்ப ஆபத்தான எண்ணம், உடனே மாத்திக்கோங்க. உங்களுக்கு நிஜமாவே அடிப்பட்டிருக்கா இல்லை, நாடகம் ஆடறீங்களான்னு சந்தேகம் வருது.

அமித் மிஸ்ரா & சாஹா:
ஒரு வேளை, வாய்ப்பு கிடைச்சா பயன்படுத்திக்கோங்க. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல. சண்டைக் காட்சியில ஹீரோவுக்கு டூப் போடற நடிகர்கள் மாதிரி ஆயிடுச்சு உங்க நிலைமை.

தோனி:
சாப்பாடு, குறிப்பா பால் எதுவும் ஒத்துக்கலையோ? மலச்சிக்கல் வந்த மாதிரியே இருக்கீங்களே? சரியான முன்னேற்பாடு இல்லாம டெஸ்ட், அதுவும் இங்கிலாந்து மாதிரி டீமோட ஆட வந்தது பெரிய குற்றம். அடுத்த ரெண்டு டெஸ்ட்லயும் உங்களை கதறக் கதற கற்பழிக்கத் தான் போறாங்க. ஏன்னா உங்க கிட்ட நம்பகமான ஆளுங்க யாருமே இல்ல. டிராவிட் ஒரு இன்னிங்க்ஸ் தான் நல்லா ஆடறார், டெண்டுல்கர் ஒரு இன்னிங்க்ஸ் கூட ஆடறதில்லை, உங்க பேட்டிங் அதுக்கு மேல, இதுல இஞ்சுரி கேசுங்க வேற எக்ஸ்ட்ரா பிட்டிங். ODI மற்றும் T20ல வேணா உங்க மானம் காத்துல போகாம இருக்க ஒரு சான்ஸ் இருக்கு. அடுத்த வருஷமாவது பிசிசிஐ கிட்ட பேசி அட்டவணையை ஒழுங்காப் போடச் சொல்லுங்க.

டங்கன் பிளட்சர்:
உங்களுக்கு இன்னும் இங்கிலாந்து கிரிக்கேட்லேர்ந்து ரிலீவிங் லெட்டர் கிடைக்கலை போலிருக்கு. பழக்க தோஷத்துல அவங்களுக்கு கோச்சிங் குடுத்துட்டீங்களா?

கிரிக்கெட் ரசிகனுக்கு:
வாழ்க ஒழிக கோஷம் போடறதை முதல்ல நிறுத்துங்க. கிரிக்கெட்டை விளையாட்டா பாருங்க. நம்ம ஊர்ல நாம ஜெயிக்கறோம், அவங்க ஊர்ல அவங்க ஜெயிக்கறாங்க. இதுல கேவலப்படறதுக்கு என்ன இருக்கு? நீங்க மட்டும் பார்ட்டிக்குப் போகலாம், குடிக்கலாம், பொண்ணுங்க பின்னாடி போகலாம், அவங்க போகக் கூடாதா? கிரிக்கெட் வீரர்கள் நம்மள விட கொஞ்சம் நல்லா கிரிக்கெட் ஆடத் தெரிஞ்ச மனிதர்கள். அவ்வளவு தான். அவங்களை கடவுள், சுவர், ஜன்னல்னு எல்லாம் சொல்லி தூக்கிப் போட்டு மிதிக்காதீங்க.

கிரிக்கெட்டுக்கு நல்ல ரசிகனா இருங்க, உண்மையான இந்தியனா இருங்க, ரெண்டையும் மிக்ஸ் பண்ணாதீங்க - பீர்ல விஸ்கி கலக்கற மாதிரி. குபுக்குன்னு தூக்கிடும், அப்புறம் தலைவலி தான்.


Jayaraman
New Delhi

(இப்படியெல்லாம் எழுதி என் மனசை ஆத்திக்கறேன், வேறென்ன செய்ய?, புறம்போக்குங்க, இப்படியா தோப்பாங்க?)

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...