Wednesday, June 29, 2011

செய்திகள் வாசிப்பது..... கிரிக்கெட்As of now Kirukku Info, but you may be reading these in Cricinfo in future.

2012:

ஐபிஎல் போட்டிகளில் சிக்சர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் - தூரத்திற்கு ஏற்றார் போல் ரன்கள் வழங்கப்படும்:
80m - 6 runs
90m - 8 runs
100m - 10 runs
100௦ மீட்டருக்கு மேல் - 12 runs

2014:

IPL போட்டிகளில் மேலும் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன - Eastern Gladiators (UP & Bihar ) மற்றும் Srinagar Soldiers (காஷ்மீர்)

வழக்கம் போல CSK தான் வெற்றிபெறும் என்ற கருத்து நிலவுவதால் கிரிக்கெட் அரங்கங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 2010 முதல் CSK தொடர்ந்து IPL சாம்பியனாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு - அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2015:
உலகக் கோப்பை இன்று முதல் தொடக்கம். முதன் முறையாக நடுவர்களே இல்லாத உலகக் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. பிட்சின் அடியில் உயரிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நோ பால், வைடு, அனைத்தும் கணினி மூலம் கண்காணிக்கப்படும்.

இந்தியா உலகக்கோப்பையை வென்றது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் சாதனை.

மாநில அளவில் IPL போட்டிகள் நடத்த பிசிசிஐ ஒப்புதல்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் அடுத்த வருடம் ஆரம்பம். மதுரை, நெல்லை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் கிரிக்கெட் மைதானம் கட்ட முதலமைச்சர் அரசாணை பிறப்பித்தார்.

பிரபல தமிழ் சினிமா நடிகர்கள் மாவட்ட அணிகளை வாங்குவதில் ஆர்வம். தலை மற்றும் தளபதிக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

2016:
தோனி ஜார்கண்ட் மாநில முதல்வரானார். அவரது ராஞ்சி மக்கள் முன்னேற்ற கழக கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை.

உலகக்கோப்பையில் சீனா, வட கொரியா, தென் கொரியா அணிகள் புதிதாக சேர்ப்பு. இந்திய-பாகிஸ்தான் ஆட்டங்கள் சப்பென்று இருப்பதால் ICC இந்த முடிவு. ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பைத் தொடர்ந்து ICC பின்வாங்கியது.

நியூசீலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டன. தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாலும், விளம்பரதாரர்கள் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நாடுகளைச்சேர்ந்த வீரர்கள் இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளனர். IPL போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தங்கள் குடும்பம் ஒரு வேளை வயிறார கஞ்சி குடிக்கும் என கென்ய வீரர் ஒருவர் தெரிவித்தார்.2017:

பௌலர்களே இல்லாத IPL! - அனைத்து வீரர்களும் பந்தை அடித்து விளாசுவதால் பௌலர்களுக்குப் பதிலாக இயந்திரம் பந்து வீசும் முறை அமல்.


2018:
IPL போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கை 25ஆக உயர்வு. சினிமாவைப் போல தினசரி 4 ஆட்டங்கள் வீதம் தொடர்ந்து 100 நாட்கள் போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு.

டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு! குறைந்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள், காலி மைதானங்கள், நஷ்டத்தை நோக்கி IPL அணிகள் - ஒரு சிறப்புப் பார்வை!

2019:
உலகக் கோப்பை - போட்டிகள் எதுவும் நடைபெறாமலே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு. வேறு எந்த அணியும் போட்டிகளில் கலந்து கொள்ள முன் வராததால் இந்த முடிவு. வீரர்கள் அனைவரும் IPL போட்டிகளில் பங்கு பெறுவதே காரணம் என ICC குற்றச்சாட்டு.

பெரும்பாலான IPL அணிகள் கலைக்கப்பட்டன. உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, ஸ்பான்சர்ஸ் மற்றும் வருவாய் இல்லாமை, ஆகியவற்றின் எதிரொலி!

IPL அணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை! அணிக்கு ஆறு வீரர்களே இனி விளையாடுவர். இதனால் பல வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

2021:
கடந்த ஆறு மாதங்களாக உலகின் எந்த நாட்டிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. "வரலாறு காணாத சம்பவம்" - கிரிக்கெட் பார்வையாளர்கள் கருத்து!

குறைந்து வரும் கிரிக்கெட்! உயர்ந்து வரும் தொழில் மந்தம் - நிதி ஆலோசகர்கள் கவலை!! கிரிக்கெட் விளையாடுவது குறைந்துவிட்டதால் அது தொடர்பான தொழில் துறை அனைத்திலும் மந்த நிலை நிலவுகிறது.

வீரர்கள் சம்பள பாக்கி கேட்டு பிசிசிஐ அலுவலகம் முன் போராட்டம்! குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலை நாட்கள் நியமித்துத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்.

கிரிக்கெட் பேட் மற்றும் இதர பொருட்கள் தயாரிப்போர் இன்று டெல்லியில் உண்ணாவிரதம். வியாபாரம் படுத்துவிட்டதால் மானியம் வழங்கக் கோரி போராட்டம்.2022:
மேலும் ஒரு கிரிக்கெட் ரசிகர் தற்கொலை. நல்ல கிரிக்கெட்டைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் இந்த முடிவை மேற்கொண்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். இவரையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை 4376 கிரிக்கெட் ரசிகர்கள் இதே காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. அரசாங்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

2023:
Mr. கிரிக்கெட் இன்று காலமானார். அவருக்கு வயது 93. நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த சில வருடங்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை திடீரென சுவாசத் திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் உலகெங்கிலும் உள்ள அவரது புதல்வர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். ஒரு தலைமுறைக்கே சோறு போட்டு வாழ வைத்தவர் என்றும் இந்தியாவுக்கு இது ஒரு பேரிழப்பு என்றும் அவரது மகன்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ் கூறினார். வயதாகி வரும் அவரை தாங்கள் சரியாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாகவும் அது அவரது மனதில் நீண்ட காயத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி வருத்தத்துடன் கூறினர். இறுதிச்சடங்குகளை அவரது செல்ல மகன் சச்சின் டெண்டுல்கர் முன்னின்று செய்வார் என ஸ்ரீகாந்த் மற்றும் கவாஸ்கர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது உடல் சென்னை மரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், தமிழக அரசு சார்பில் அவரது பெயரில் நினைவகம், நூலகம் மற்றும் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

2024:
CCL has posted an article on "the reincarnation of cricket".

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...