Friday, June 17, 2011

வரலாறு காணாத தண்டனைகள்நாட்டுல high profile குற்றவாளிங்க அதிகமாயிட்டே போறாங்க. அதுக்கேத்த மாதிரி நம்ம நாட்டு சட்டத்தையும் மாற்றியமைக்கணும். கீழ்க்கண்ட 10 தண்டனைகளை நாங்கள் இந்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்:10. தூர்தர்ஷன் செவ்வாய்க் கிழமை நாடகம்:
"அதோ, அவரே வந்துட்டாரே!" "என்னை மன்னிச்சிடுங்க", "என்ன சொல்றீங்க சம்பந்தி?" - இப்படி ஒரு 4 -5 வரிகளை வெச்சிக்கிட்டு ஒரு மணி நேரம் ஓட்டுவாங்க பாருங்க. சேனல் கூட மாத்தமுடியாம நாங்க பட்ட அவஸ்தை இருக்கே, அதை சொல்லி மாளாது. சேர்ந்தா மாதிரி 2 எபிசொட் பார்த்தா போதும், எப்பேர்ப்பட்ட குற்றவாளியும் மனமுடைந்து போவான்.9. வீராசாமி:
விளக்கம் தேவையில்லையென்று நினைக்கிறேன் - தமிழ் தெரியாத குற்றவாளிகள் பாதி படம் பார்த்தால் கூட போதும்.

8. சன் டிவி சப்தஸ்வரங்கள்:
நல்ல வாயை நாற வாய் கெடுத்த மாதிரி, நல்லா ஆரம்பிச்ச இந்த நிகழ்ச்சி கடைசில காறித் துப்பற ரேஞ்சுக்கு போனது பெரிய சோகம். அதுலயும் தாளம் மாறுது சுருதி மாறுது ராகம் மாறுதுன்னு ஒரு காமெடி நடக்கும் பாருங்க, என்ன மாறுது எங்க மாறுதுன்னு இசைஞானியால கூட கண்டுபிடிக்க முடியாது. back to back 4 எபிசோடு பாக்க வெக்கணும்.7. சன் டிவி மங்கை சீரியல்:
விவேக் ஒரு படத்துல சொல்ற மாதிரி "படி ஏறுவது ஒரு எபிசோடு, இறங்குவது ஒரு எபிசோடுன்னு சுமார் ஆயிரம் எபிசோடு கண்ட அபூர்வ மங்கை இவங்க. - சேர்ந்தா மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை பாக்க வெக்கணும். மதியம் 12 - 12 .30 சிறந்த நேரம்.6. ராஜ் டிவியில் தமிழ்ப்படம்:
மூன்று மணி நேர சினிமாவை 5 மணி நேரம் எப்படி ஓட்டணும்னு இவங்ககிட்ட தான் கத்துக்கணும். அணில் சேமியா, ராமலிங்கா ரவா மைதான்னு சரி ஒட்டு ஓட்டுவாங்க. அதுலயும் கர்ணன், இந்தியன் படம்னா இன்னும் விசேஷம். ஆறு மணி நேரம் உறுதி. - வாரம் ரெண்டு முறை பாக்க வெக்கணும்5. Traffic Constable:
சென்னை மாதிரியான பெருநகரங்களின் முக்கிய சந்திப்பில் காலை 9 to 11 அல்லது மாலை 6 to 8 போக்குவரத்து ஒழுங்கு பண்ணணும். முழி பிதுங்கி மூச்சடைச்சு வியர்க்க விறுவிறுக்க வேலை செய்ய வெக்கணும். இவங்க அங்கயும் லஞ்சம் வாங்கறாங்களா இல்லையான்னு CCTV வெச்சு கண்காணிக்கணும்.4. தூர்தர்ஷனின் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பு:
எங்கயோ நடக்கற மாட்சை டிவியில பார்த்து ஹிந்தியில கமெண்டரி சொல்லுவாங்க பாருங்க, கவாஸ்கர், சாஸ்த்ரி எல்லாம் பிச்சை வாங்கணும். "அவுட்" - ஆயிருக்கணும், ஆனால் பீல்டர் பந்தைத் தவறவிட்டார்னு 5 நிமிஷம் கழிச்சு சொல்லுவாங்க. அதுக்குள்ளே ஓவர் முடிஞ்சு விளம்பரம் வந்திடும். ௦ஹிந்தி தெரியாத குற்றவாளிகளை தொடர்ந்து அஞ்சு ODI பாக்க வெக்கணும்.3. சன் தயாரிப்பில் வெளிவரும் மொக்கைப் படங்கள்:
சீப்பா கிடைக்குதுன்னு நம்ம சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுற சில படங்கள் தாங்க முடியல. எங்கேயும் காதல், கண்டேன் காதலை, மாப்பிள்ளை, இப்படி நிறைய. அவங்களே ரிலீஸ் பண்ணி அவங்களும் அவங்க ஊழியர்களும் பாப்பாங்க போல. எதாச்சும் ரெண்டு படம் back2back பார்க்கணும்.2. பேரரசுவின் படங்கள்:
சிவகாசி, திருப்பதி, பழனி - கொடூரமான கொலைக்குற்றங்களையும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்குமான ஸ்பெஷல் தண்டனை. அதிலும் பழனி படத்தை தொடர்ந்து மூன்று முறை பார்க்க வைக்க வேண்டும். அதுக்கப்புறம் மனுஷன் பொண்டாட்டிய தொடறதுக்குக் கூட பயப்படுவான்.

1. ????


ரொம்ப யோசிக்காதீங்க, ப்ளாக்ல இந்த மாதிரி articles படிக்கறது தான் அதிகபட்ச தண்டனை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...