Wednesday, April 27, 2011

IPL: ஒரு கோலிவுட் பார்வை



சினிமாக்காரங்க IPL பத்தி discuss பண்ணினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை:

வடிவேலு, "sss அப்பா, இப்பவே கண்ணை கட்டுதே, சித்திரை வெயில் சுட்டெரிக்குது, இந்த பசங்களுக்கு கிரிக்கெட் ரொம்ப அவசியமா விவேக்?"

"அதெல்லாம் யூத் culture, இன்சல்ட் பண்ணாதே, straightaa மேட்டருக்கு வா"

வெண்ணிற ஆடை மூர்த்தி, "அந்த முள்ளம்பன்னி தலையான், அதாம்பா RCB owner, தீபிகாவ எப்படி kiss அடிச்சான் பார்த்தியா?

விவேக், "யோவ், மேட்டருக்கு வான்னு சொன்னது தப்பாப்போச்சே, முதல்ல எந்த மேட்ச் பத்தி பேசறதுன்னு decide பண்ணுங்கப்பா"

"நம்ம சச்சின் கஷ்டப்பட்டு ஒரு 100 போட்டாரு, ஆனால் பாவம், ஏண்டா அடிச்சோம்னு மனுஷன பீல் பண்ண வெச்சுட்டாங்க நம்ம ஊரு அறிவு ஜீவிங்க. இந்த ஆள் ஆடினாலே விளங்காதுன்னு வரிஞ்சு கட்டி பேசறாங்க"



"அவங்கள எல்லாம் வரிசையா நிக்க வெச்சு மலிங்கா தம்பிய வுட்டு கால் மேலயே பௌலிங் போடச்சொல்லணும்"

"கங்குலி இல்லாத கல்கத்தா, background மியூசிக் இல்லாத ஷகிலா படம் மாதிரி எபெக்டே இல்லாம இருக்கு"

கமல், "நுனிப்புல் மேய்ந்ததில் MI , CSK, KKR தவிர யாரும் சிந்தனையோடு ஆடவில்லை. கொச்சின், புனே புதிதாக வந்த மருமகள்கள், தவறுகள் இருக்கத்தான் செய்யும். அந்த மண்குடம் பொன்குடமாக மாறும் என்கிற நம்பிக்கை எனக்குள் துளிர் விட்டுள்ளது"

விவேக் "நல்ல பேசறீங்க, அப்படியே ஒரு அகராதியும் குடுத்தீங்கன்னா தமிழ்ல translate பண்ணிக்குவேன்"

சந்தானம், "நம்பிக்கை துளிர் விடுதா? 5 ரன்னுக்கு 6 விக்கெட் போவுது, இந்த ஆள் மூஞ்சில வாட்டர் பாக்கெட் பீச்சி அடிங்கப்பா"

ஷண்முக சுந்தரம், "இந்த ஸ்ரீசாந்த் ரொம்ப பாவம்ணே, என்ன தப்பு பண்ணிச்சின்னு இப்படி போட்டு அடிக்கறாங்கன்னு தெரியல, இருந்து இருந்து ஒரு நல்ல பால் போட்டா, நடுவர் நோ பால் அப்படின்னு சொல்லிட்டார். - என்ன கொடுமைண்ணே இது? ஹ்ம்ம்... எல்லாம் அந்த மாரியாத்தா பண்ற வேலை.

வடிவேலு, " நம்ம டோனி தான் சூப்பர் கேப்டன், எப்படியெல்லாம் சமாளிக்கறாரு"

விஜயகாந்த், 'ஏய், அப்போ நான் யார்ரா?

வடிவேலு மனதுக்குள், "ஐயோ, இந்த ஆள் ஏன் என்ட்ரி ஆவுறான்? பல்க்கா அடிப்பானே, முருகா நான் என்ன செய்வேன்?"

சிங்கமுத்து, "சரி சரி சண்டைபோடாதீங்கப்பா, பிரசாரம் தான் முடிஞ்சிடுச்சே?

விஜயகாந்த், "தமிழ்நாட்டுக்கு தண்ணி தராத எந்த டீமும் ஜெயிக்ககூடாது, கொச்சின் கிட்ட தோத்ததுக்கு டோனி உடனே பதவி விலகியிருக்கணும்"

கவுண்டர், "இவன்ட்ட இருக்கற கெட்ட பழக்கமே இதாம்பா, ரொம்ப பேசுவானே"



சத்யராஜ், "ஒரு விஷயத்துல I am வெரி ஹேப்பி, நமக்குதான் வேலையில்லேன்னு நினச்சேன், ஹிந்திகாரங்களும் காஞ்சு போய்த்தான் இருக்காங்க. எல்லா பயலும் கிரௌன்ட்ல தானே குடித்தனம் பண்றானுங்க"

கவுண்டர், "இந்த cheerleader எல்லாம் யாருப்பா செலக்ட் பண்றாங்க, நல்ல இளசா, +2 படிச்சா பொண்ணா போடுங்கடான்னா கேக்கறாங்களா?"

விவேக்,"அதுலயும் CSK cheerleaders ரொம்ப மோசம், பனியன்ல "mansion ஹவுஸ்" எழுதிட்டு "ஆடாம" இருக்காங்கப்பா, சும்மா வாங்கிப்போட்டு குத்த வேண்டாமா?"

குஷ்பூ, "இது ரொம்பவே ஆணாதிக்க tournament , பெண்களுக்கும் இந்த மாதிரி ஒண்ணு வேணும். Actually IPL should be "இந்தியன் பெண்கள் League " யு நோ.

ரஜினி, "ஐயையோ, இந்த அம்மா நம்மள எங்கயாவது சேர்த்துட போவுது, எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்"

சரத் குமார் "சரி ரஜினி, யாரு ஜெயிப்பாங்கன்னு உங்க பாபாஜி கிட்ட கேட்டு சொல்ல முடியுமா?"

ரஜினி யோசிக்க ஆரம்பிக்க.. கௌண்டமணி "யப்பா சரத், இந்த ஆள் ரொம்ப யோசிப்பான், எப்பவுமே நீ தான் நாட்டாமை, நீயே சொல்லு"

சரத், "சந்தானம், நீ தான் லேட்டஸ்ட், உன் ஸ்டைலில் மிமிக்ரி பண்ணி சொல்லிடுப்பா"

MI = opening nallarukku, fnishing சொதப்பாம இருந்தா சரி.

RR = சரியான ரெண்டும்கெட்டான் டீம், ஏர்ல பூட்டின எருமை மாதிரி

RCB, KTK, DC = இதுல நான் விஜயகாந்த் கட்சி, (அப்புறம், நம்மள தமிழனே இல்லைன்னு சொல்லிடுவாங்க!!)

KKR = வரும்....ஆனா வராது

பஞ்சாப் = வெரி குட் டீம், ரொம்ப நல்ல அணி, chances are there, வாய்ப்பு இருக்கு.

டெல்லி = நம்ம government மாதிரி தான், தானும் படுக்க மாட்டாங்க, தள்ளியும் படுக்க மாட்டாங்க

புனே = 1700 Crores போட்டு கெஞ்சி கூத்தாடி சஹாரா டீம் வாங்கியிருக்காங்கப்பா, இப்படி சல்லி சல்லியா நொறுக்கறீங்களே,

So, CSK தான் ஜெயிச்சாகணும்.

எல்லோரும் புறப்பட தயாராகும்போது ரஜினி. "அது ஆண்டவன் கையில தான் இருக்கு" என்று சொல்ல,

"அப்பாடா, பினிஷிங் பஞ்ச் சொல்லிட்டாரு, தி மீட்டிங் இஸ் ஓவர்."


Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...